Subscribe:Posts Comments

You Are Here: Home » Superstar Movie News » தலைவரின் அடுத்த படம் : டைட்டில் முதல் ஹீரோயின் வரை — நடப்பது என்ன? ஒரு முழு அலசல்!

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் ஹாரா அல்ல ராணா என்றும், இல்லை இல்லை இது வேறு ஒரு படம். ஹீரோயின் தீபிகா படுகோனே தான் என்று ஊடகமே பரபரப்பாக செய்திகளை குவித்துகொண்டிருக்கும் நிலையில் உங்களில் பலருக்கும், நமக்கும் மனதில் உள்ள சில கேள்விகளுடன் நாம் களமிறங்கினோம். விபரங்களை கடைசியில் தந்திருக்கிறேன். அதற்க்கு முன்பு, பரபரப்பான தீபிகா படுகோனே செய்தியை பற்றி இங்கு முதலில்.

இந்த செய்தி நேற்று காலை MUMBAI MIRROR நாளிதழின் இணையத்தில் வெளியானது. அடுத்து, இன்றைய டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழிலும் வெளியாகியுள்ளது. டைம்ஸ் குழுமத்தின் செய்தியாதலால், அப்படியே ஒதுக்கிவிட இயலாது.

முதலில் அந்த செய்தியை பார்ப்போம்…


——————————————————————
ரஜினியுடன் ஜோடி சேரும் தீபிகா?

ஷாருக்கானுடன் அறிமுகமாகி, அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துக்கொண்டிருக்கும் பாலிவுட்டின் இளவரசி தீபிகா படுகோனே தற்போது தென்னிந்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவிருக்கிறார். வேறொன்றுமில்லை, சூப்பர் ஸ்டாருடன் அவரது அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க தீபிகா அனுகப்பட்டிருக்கிறார்.

ஹரா / ராணா படத் தயாரிப்பாளர்களுடன் சென்ற வாரம் பேசிய தீபிகாவுக்கு படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும் தனது கால்ஷீட் டைரி ஃபுல்லாக இருப்பதால் தேதி கொடுக்க இயலாது தவிக்கிறார் தீப்ஸ். எனவே, ஏதாவது செய்து, தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொடுக்கமுடியுமா என்று யோசித்து வருகிறார். இந்த வாய்ப்பை தவற விட அவர் விரும்பவில்லை.

“தீபிகா இப்படத்திற்கு அணுகப்பட்டதும், சென்ற வாரம் தயாரிப்பாளர்களுடன் பேசியதும் உண்மை. படத்தில் ரஜினிக்கு டபுள்-ஆக்ஷன். மேலும் இந்த படத்திற்கு தீபிகா தான் பொருத்தமாக இருப்பார் என்று என்றும் தயாரிப்பு தரப்பு நம்புகிறது. இருப்பினும் இந்த வருடம் தீபிகாவின் கால்ஷீட் ஏற்கனவே வேறு படங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால், சற்று சிரமமாக இருக்கிறது. வேறொன்றுமில்லை.” என்று நமக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

தீபிகாவை தொடர்புகொண்டு கேட்டபோது, “ரஜினியுடன் நடிக்க என்னை அணுகியது உண்மையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்!” என்று குறிப்பிட்டார்.

தீபிகாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “எங்களை தொடர்பு கொண்டது உண்மை தன். எந்த வித முடிவும் எடுக்கப்படாத நிலையில் இப்போது அதைப் பற்றி பேசுவது சரியல்ல. தீபிகாவின் தேதிகள் ஆல்ரெடி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால், தேதிகளை ஒதுக்குவது சிரமம். அதே சமயம் இந்த வாய்ப்பையும் தவறவிட நாங்கள் விரும்பவில்லை. பார்க்கலாம்.” என்று கூறினார்.

——————————————————————

என்ன தான் நடக்குது?

நாம் களமிறங்கியதில் கிடைத்த தகவல்கள் இவை.

சில பல காரணங்களால் சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் உருவான அனிமேஷன் படமான சுல்தான் பாதி வளர்ந்த நிலையில் அப்படியே நிற்கிறது. ஏகப்பட்ட கோடிகள் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் — செட்டில்மென்ட் எல்லாம் செய்துவிட்டு — அப்படத்தை முடிக்கும் பொறுப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதலில் தயங்கிய ரவிகுமார், கதையையும் அதன் களத்தையும், நான் கூறுகிறபடி மாற்றினால், நான் படத்தை இயக்குகிறேன் என்று கூற, சூப்பர் ஸ்டாரும் அதற்க்கு ஒப்புக்கொள்ள, தலைவரும் ரவிக்குமாரும் சந்தித்து, டிஸ்கஸ் செய்து கதையை இறுதி செய்தனர்.

இதையடுத்து, படம் முன்ஜென்மத்தில் துவங்கி, தற்போது நவீன காலத்தில் தொடர்வது போல மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. (உ.ம். : மகதீரா). இதற்க்கு தான் தீபிகா அணுகப்பட்டிருக்க கூடும். தீபிகா போன்ற ஒரு ஆள் இந்தியன் கிரேஸ் உள்ள நட்சத்திரம் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாது போனால், அடுத்த சாய்ஸ் ‘அனுஷ்கா’ தான்.
(நமக்கு ரெண்டு பேர்ல யார் ஆக்ட் பண்ணாலும் ஒ.கே.! ஹி…ஹி…!!)

அனிமேஷன் பகுதியும், லைவ் பகுதியும் சேர்ந்து வரும் படமாதலால், ஒளிப்பதிவிற்கு ரத்னவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இசை… வேறு யார் ? ஏ.ஆர்.ரஹ்மான். அவர் அல்ரெடி அசத்தலான சில பாடல்களை போட்டு தந்திருக்கிறார்.

சுல்தான் என்ற பெயர் நிச்சயம் இப்போது கிடையாது. ஆனால், புதிய பெர்யர் ஹராவா அல்லது ராணாவா என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் ‘ராணா’ என்ற பெயர் ப்ரொட்யூசர் கௌன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் நிலையில், அனைத்து பணிகளும் முடிந்து, தீபாவளிக்கோ அல்லது 2012 பொங்கலுக்கோ வெளிவரும் வாய்ப்பிருக்கிறது.

இது தாங்க நமக்கு கிடைச்ச தகவல். எந்தளவு உண்மைன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

24 Responses to “தலைவரின் அடுத்த படம் : டைட்டில் முதல் ஹீரோயின் வரை — நடப்பது என்ன? ஒரு முழு அலசல்!”

 1. Mrs. Krishnan Mrs. Krishnan says:

  //முதலில் தயங்கிய ரவிகுமார்,

  கதையையும் அதன் களத்தையும்,

  நான் கூறுகிறபடி மாற்றினால்,

  நான் படத்தை இயக்குகிறேன்

  என்று கூற , //

  _

  இதுக்கு முந்தின படத்துல இந்த கண்டிஷனை போடாமல் விட்டதால பட்ட அடி இப்படி பேச கூற வைக்குதோ!? :-)

 2. Mrs. Krishnan Mrs. Krishnan says:

  சூப்பர் தகவல்கள் சுந்தர் அண்ணா. நன்றி.

  -

  /அனைத்து பணிகளும் முடிந்து,

  தீபாவளிக்கோ அல்லது 2012

  பொங்கலுக்கோ வெளிவரும்

  வாய்ப்பிருக்கிறது ./

  -

  இந்த தீபாவளி 'ஹராவளி' யாக மலரட்டும்.

 3. Anonymous says:

  எது எப்படியோ தலைவர் திரையில் வந்து , நமக்கெல்லாம் இன்னொரு "அதிரடி"-யை தர தயாராகி விட்டார் என்பது உண்மை….இப்பவே மனசுக்குள்ள கனவு வர ஆரம்பிச்சிருச்சு….எத்தனை தடவை பார்க்கலாம், எப்படி கொண்டாடலாம்-ன்னு

  …..தலைவா….சீக்கிரமே சொல்லிடுங்க அறிவிப்பை…..கட்டுப்படுத்த முடியல…..

  @சுந்தர் அண்ணா…

  -

  தீபிகா படுகோனே படத்தை பெருசா போட்ட மாதிரி, "அனுஷ்கா" படத்தையும் போட்டிருக்கலாம்….சின்னதா போட்டு ஏமாத்திட்டீங்களே

  ….ம்ஹூம்….விடுங்க(பெருமூச்சுடன்..)

  —-

  //கால்ஷீட் டைரி ஃபுல்லாக இருப்பதால் தேதி கொடுக்க இயலாது தவிக்கிறார் தீப்ஸ்.//

  அது என்ன தீப்ஸ்-ன்னு….செல்லப்பெயர்?,,,,,முடியல……….

  -

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 4. Prasanna Kumar Prasanna Kumar says:

  Thanks for the Clarification Sundarji, some of our friends were saying it's full fledged Thalaivar movie……!!!!

  அவர் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாது போனால், அடுத்த சாய்ஸ் ‘அனுஷ்கா’ தான்.

  Deepika Padukone illana Anushka endru neenga sollitinga next Gopi anna enna solla pogiraar endru paarpom…….!!!!!!!

 5. ganesh ganesh says:

  Hi sundar ji,

  any info on name of the producer?? is thalaivar producing it??

  even i thought the same.. it vl be on the lines of magadheera..we can use the sultan animation fights here..

 6. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  ஒரு நியூஸ் கிடைத்தால் அதில் உள்ள நம்பகத்தன்மை தெரிந்துக் கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சி இந்தப் பதிவிலும் தெரிகிறது, நன்றி சுந்தர்ஜி……..,

  //தீபிகா கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாது போனால், அடுத்த சாய்ஸ் ‘அனுஷ்கா’ தான்.
  (நமக்கு ரெண்டு பேர்ல யார் ஆக்ட் பண்ணாலும் ஒ.கே.! ஹி…ஹி…!!)//
  ஐய்யோ ஐய்யோ உங்க குறும்புக் குறைய மாட்டேங்குதுப் போல ? ஹி…ஹி…!!

 7. dr suneel dr suneel says:

  தயாரிப்பு யாரு ஜி ? க்லூட் நயன் அப்டின்னு சொல்லுறாங்க ?

 8. DEEN_UK DEEN_UK says:

  ///“ரஜினியுடன் நடிக்க என்னை அணுகியது உண்மையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்!”///

  இருக்காதா பின்ன!

  ''பிறவிப்பலன் அடைந்து விட்டார் சுந்தர்ஜியின் தீப்ஸ்!''

 9. SADIQUE SADIQUE says:

  மனசுல ரொம்ப நாளா இருந்த குழப்பத்துக்கு தற்காலிக விடை கிடைச்சிருச்சு! உங்களுக்கு,
  //*** "துப்பறியும் சுந்தர்"னு***// பட்டபெயர் கொடுக்கலாம்!
  —————————————————————————————
  ரசிகன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா,
  சாதிக் (மதுரை)

  ==========================================
  எல்லாம் ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஏற்கனவே இந்த கோபி என்னை கலாய்க்கிறதுக்கு 'சைக்கிள் கேப்' ஏதாவது கிடைக்குமான்னு பார்த்துகிட்டு இருக்கார். இது அவருக்கு தெரியவேண்டாம். ஓகே.?
  - சுந்தர்

 10. ss ss says:

  சுந்தர்,

  தயாரிப்பில் பஞ்சு அருணாசலமும் இருக்கிறாரா?. அவர் தயாரிப்பில், தலைவரின் அனைத்து படங்களும் வெற்றி வாகை சூடியவை..

  SPM இயக்கிய தலைவர் படங்களில் பெரும்பான்மையானவை பஞ்சு அருணாசலத்தின் திரைக்கதை, வசனத்தில் தான்

  பஞ்சு அருணாசலம் தயாரிப்பு என்றால் மகிழ்ச்சி. தலைவரும் அவருக்கு பிரதி உபகாரம் செய்த மகிழ்ச்சி அடைவார்.

 11. SADIQUE SADIQUE says:

  @ சுந்தர் ஜி: உண்மைய சொன்னேன்! உங்கள போயி கலாய்போமா…?

  —————————————————————————————
  ரசிகன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா,
  - சாதிக் (மதுரை)

 12. இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக சத்யா மூவீஸ் இருக்க வாய்ப்பு உள்ளது..

 13. Anonymous says:

  தீபாவளி அல்லது அடுத்த பொங்கலா!!!!!!!!!!! தலைவா அவ்வளவு காலம் இருக்குதா!!! பரவாஇல்லை!!! எந்திரனின் தரிசனத்திற்காக 3 வருடம் இருந்தோம்!!! எங்கள் "ராணா"விற்காக காத்திருப்போம்!!!!! இந்திய திரை உலகில் முதல் முறையாக ஒரு ஹீரோவை வைத்து அனிமேஷன் படம் எடுப்பது இதிவே முதல் முறையாகும்!!! அன்றும் இன்றும் என்றும் எங்கள் உலக சூப்பர் ஸ்டாரின் ரெகார்டை அவரே தான் முரியாடிப்பரே தவிர வேறு யாராலும் முடியாது!!!!!!

 14. karthik karthik says:

  Sundarji,

  Thanks for clarifying our doubts

 15. Shoaib Shoaib says:

  If it is Anushka then it's a poor choice. Superstar Rajini is a global phenomenon now and after Ash he has to pair with someone like Deepika or Katrina and certainly not a small time Southern heroine like Anushka or Trisha.

 16. Anonymous says:

  Good update சுந்தர்ஜி….

 17. R.Gopi R.Gopi says:

  // ஹரா / ராணா //

  படத்தோட டைட்டில் எதுவா இருந்தாலும் ஓகே… சுந்தர்ஜியின் மனம் கவர்ந்த பாலிவுட் கவர்ச்சி இளவரசி தீபிகா படுகோனே (ஓஹ்… சாரி தீப்ஸ்னு சொல்லலேன்னா சுந்தர் கோபித்து கொள்வார்!!) நடிச்சா அதுவே எனக்கு போதும்…

  அட்லீஸ்ட் தலைவர் சுந்தர் குருஜியை இப்படியும் சந்தோஷப்படுத்தறாரான்னு பார்ப்போம்….

  மஹராஜ் சுந்தர் குருஜிக்கு ஜே….

 18. napoleon napoleon says:

  ஹராவோ, ராணாவோ – அது மற்றுமொரு மாபெரும் வெற்றிப்படமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

 19. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

  thalaivarin padatirkaga kaathirupadhu thani sugam.

 20. RaJni-AnsAri RaJni-AnsAri says:

  "Pudhiya puyal" chinnammmmmm…….. Thenn paturukku,…… Eppadiyo..? Engalai kaaya vidamal, Adhigama idaiveli illamal seekirama karaiyai kadandha rasigargaluku magilchi…

 21. சாதிக் ஒரு சின்ன மாற்றம்
  ரஜினி ரசிகன் என்று சொல்லடா
  தலை நிமிர்ந்து நில்லடா
  என்று சொல்லலாம்
  என்ன தவம் செய்தேன் இப்படி ஒரு தலைவன் கிடைக்க
  ரமேஷ் , tirupur

 22. prabhu prabhu says:

  Great news sir. I just put a comment on that day and you replied me with a superb article. I will be the happiest person if the movie proves to be a full fledged thalaivar movie and animation is only a part of it….

 23. k s amarnath k s amarnath says:

  if any heroine in this generation tells I am Rajini Fan my blood boils off seriosuly they just say it for getting huge remuneration if they act with our thalaivar I am fed up of these statements from stupid heroines

 24. SADIQUE SADIQUE says:

  @ ரமேஷ் : அது சொல்லி தெரிய வேண்டியதில்லை! அதனால்தான் :)

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates