Subscribe:Posts Comments

You Are Here: Home » Featured, Happenings » வடிவேலு விவகாரத்தில் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ந்த தேர்தலில் பல அதிரடிகளை மேற்கொண்ட தேர்தல் கமிஷனால் கூட முற்றிலும் தடுக்க முடியாது போன ஒரு சில விஷயங்களில் தனி நபர் தாக்குதலும் அடங்கும்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பேதமின்றி பிரச்சாரத்தில் தனி நபர் தாக்குதல் அதிகமாக இருந்தது. பல தனியார் சாட்டிலைட் டி.வி.க்களின் புண்ணியத்தால் மக்கள் இந்த அருவருக்கத்தக்க விஷயங்களை திரும்ப திரும்ப பார்த்து தொலைக்க வேண்டியிருந்தது. குறிப்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது, கொள்கை ரீதியில் அல்லாமல் தனிப்பட்ட ரீதியில் நடிகர் வடிவேலு மேற்கொண்ட தாக்குதல். (இந்த தேர்தலில் வடிவேலு நட்சத்திர பேச்சாளராக கலக்கினாலும், அவர் பேச்சு எந்தளவு மக்களிடம் எடுப்பட்டது என்று மே 13 அன்று தெரியத் தானே போகிறது.)

நாளை ஒருவேளை சூப்பர் ஸ்டார் அரசியல் பிரவேசம் செய்ய நேர்ந்தாலும், இதே போன்று சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரலாம். எனவே ரசிகர்கள் இது போன்ற விஷயங்களை ஊக்குவிக்க கூடாது. அவற்றை ஆதரிக்கவும் கூடாது.

1996 இல் ‘தி.மு.க.-த.மா.கா’ கூட்டணிக்கு ஆதரவாக தலைவர் டெலிவிஷனில் தோன்றி பிரச்சாரம் செய்தபோது, என்ன செய்வதென்று தெரியாது கையை பிசைந்த அ.தி.மு.க. தலைமை, தைக்குலங்களிடம் புகழ் பெற்ற மனோரமாவை களமிறக்கியது. அவரது சொந்த பிரச்னைகள் சிலவற்றை முடித்துவைப்பதாக அவருக்கு வாக்குறுதிகள் அளித்து களமிறக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. தற்போது வடிவேலு, விஜயகாந்தை தாக்கி பேசியதைவிட, பன்மடங்கு கடுமையாக – தனிப்பட்ட – முறையில் மனோரமா பிரச்சார மேடைகளில் சூப்பர் ஸ்டாரை தாக்கி பேச, நம் ரசிகர்கள் அதிர்ந்துபோனார்கள். நமது படங்களில் பாசமிக்க தாயாகவே மனோரமாவை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு அவரது தாக்குதல்களை ஜீரணிப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் கண்டுகொள்ளவே இல்லை. ரியாக்ட் செய்யவும் இல்லை.

தேர்தலுக்கு பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, மனோரமாவின் நிலைமை மோசமானது. அவர் தோன்றிய மசாலா விளம்பரத்தில் இருந்துகூட அவர் அந்த நிறுவனத்தாலேயே நீக்கப்பட்டார். திரையுலக வாய்ப்புக்களும் வறண்டுபோனது. நட்டாற்றில் விடப்பட்டார் மனோரமா. இண்டஸ்ட்ரியின் மூத்த கலைஞரான அவருக்கு ஏற்பட்ட நிலைமை கண்டு வருந்திய சூப்பர் ஸ்டார், அவரை தமது ‘அருணாசலம்’ படத்தில் நல்ல தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.

அருணாச்சலம் பட விவாதத்தின் போது ஒருநாள், சுந்தர் சி. தலைவரிடம், “ஆச்சி உங்க கிட்டே மன்னிப்பு கேட்பது போல ஒரு காட்சி வைத்துவிடலாமா?” என்று கேட்க, சூப்பர் ஸ்டார் பதறிப்போய், “ஆச்சி ரொம்ப பெரியவங்க. சீனியர் ஆர்டிஸ்ட். அந்த மாதிரி ஏதாவது காட்சி வெச்சு அவங்க மனசை கஷ்ட்டப்படுத்திட வேண்டாம்” என்று பெருந்தன்மையாக கூறி, அந்த எண்ணத்திற்கே முற்றுப்புள்ளி வைத்தார். தலைவர் நிலையில், வேறு எந்த நடிகராவது இருந்திருந்தால், ஆச்சி அவர்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல கூட காட்சி வைத்திருப்பார்கள். ஆனால், தலைவர் தங்கமகன் அல்லவா…?

Back to Vadivelu….

ராணாவில் உள்ள காமெடி ரோலுக்கு இம்சை அரசனில் கலக்கிய வடிவேலுவை தான் ஒப்பந்தம் செய்வதாக இருந்தார்களாம். ஆனால் முகம் சுளிக்கும் வகையில் அமைந்த அவரின் தேர்தல் பேச்சால் அதிருப்தியுற்ற தலைவர் அவரை ஒப்பந்தம் செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டாராம். அவருக்கு பதில் அந்த இடத்தில் தற்போது கஞ்சா கறுப்பு இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளி காலை முதல்வரை சந்தித்துவிட்டு வந்த வடிவேலுவிடம் இது பற்றி கேட்டபோது, “ராணாவாவது… காணாவாவது. மே 13 க்கு பிறகு பாருங்க எல்லாம் தலைகீழா மாறும்…!!” என்று எதிர்பாராத வகையில் எகத்தாளமாக பதில் கூறினார். தொலைக்காட்சிகளில் இது FLASH செய்யப்பட, பார்த்துக்கொண்டிருந்த நம் ரசிகர்கள் கொதித்துப்போனார்கள். சிலர் FACEBOOK மற்றும் ஆர்க்குட்டில் வடிவேலுவுக்கு சிறப்பு அர்ச்சனை நடத்த துவங்கினர்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேதலில் இதே போன்று, அ.தி.மு.க.வை சேர்ந்த நடிகர் செந்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது செய்த மரியாதையற்ற தனிப்பட்ட விமர்சனங்களால் அதிருப்தியுற்ற தலைவர், செந்திலுடனான தனது நட்பையே துண்டித்துகொண்டார். (“தலையை வால் விமர்சிக்கலாம், வாலை தலை விமர்சிக்கலாம். ஆனால் வாலில் உள்ள முடியெல்லாம் தலையை விமர்சிக்கலாமா?” என்று 2006 ஆண்டு இறுதியில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் இதை தான் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.)

அதுவரை செந்தில் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் ரஜினி வைத்திருந்தார் என்பதும் ரஜினி வீட்டின் அனைத்து நிகழ்ச்சி மற்றும் விசேஷங்களில் செந்திலை பார்க்கமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2002 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ‘பாபா’ பட பூஜையில், படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் பூஜைக்கு வந்திருந்தார் செந்தில். நினைவிருக்கிறதா? அந்தளவு அவர் அப்போது நெருக்கமாக இருந்தார் தலைவருக்கு.

எனவே, இந்த விஷயத்தில் – கட்சி பேதமின்றி – கலைஞர்கள் யார் தவறு செய்தாலும் தலைவர் அதை விரும்புவதில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதே சமயம், வடிவேலுவின் இந்த கருத்தையோ விமர்சனத்தையோ தலைவர் ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டார். நாம் இங்கு வடிவேலு மீது குரோதத்தை வளர்த்துக்கொண்டிருக்க, நாளை வடிவேலுவோ தலைவரிடமே அடைக்கலம் புக வேண்டிய நிலை வரலாம். தலைவரும் அவரை மன்னித்து அரவணைக்கலாம். (ஏற்கனவே, காவிரிப் பிரச்னையில் வடிவேலு தலைவரை விமர்சித்தவர் தானே ? தலைவர் மன்னித்து சந்திரமுகியிலேயே அவரை சேர்த்துக்கொள்ளவில்லையா என்ன?)

எனவே, மனோரமா, மன்சூரலிகான், வரிசையில் ஒரு காமெடியன். அவ்வளவுதான். விட்டுத் தள்ளுங்கள் நண்பர்களே.

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

42 Responses to “வடிவேலு விவகாரத்தில் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?”

 1. v j ramkiran v j ramkiran says:

  கலக்கல் சுந்தர் ஜி !!!

 2. Anonymous says:

  வடிவேலுக்கு சந்திரமுகி போல ஒரு வாய்ப்பு வாழ்நாளில் இனி வாழ்நாளில் கிடைத்து விடுமா?சுந்தர்ஜி நீங்கள் சொல்வதைப்போல அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. நன்றி இல்லாத காமெடியன் அவ்வளவுதான்.

 3. Anonymous says:

  கட்டுரையை விட அதில் இருந்த புகைப்படம் மிக

  அழகு. சந்திரமுகி படத்தின் 804 விழாவில் பத்மஸ்ரீ

  கமலஹாசன் அவர்கள் கருப்பு உடையில் கலக்கலாக

  இருக்கிறார்.

  தலைவரும், கமலும் நல்ல நண்பர்கள் என்பதை

  திரை உலகில் இருக்கும் எல்லோரும் அறிந்தாலும்

  எங்கே இருக்கும் ஒரு சிலர் குறைப்படுகிரார்கள்.

  இந்த புகைப்படத்தை பார்த்தால் அவர்களுக்கு பல

  உண்மைகள் தெரியும்.

  அவர்கள் நட்பு உண்மையானது, ஆழமானது.

  -மிஸ்டர் paavalan

 4. dr suneel dr suneel says:

  மனோரமா திரை உலக பாராட்டு விழாவில் தலைவர் ஆற்றிய உரை கண்ணீர் வரவழைக்கும் .ஒரு முறை அரவணைத்த கை ஆச்சி நீங்கள் ஆயிரம் முறை அடித்தாலும் தாங்கி கொள்வேன் .

 5. kalyan kalyan says:

  Vadivelu words cannot be undermined easily . Even CM asked Thalaivar during his visit to the Hospital about why Vadivelu was replaced. Am sure vadivelu arrogance was shown bcs of the Hindustan today post Poll Survey. Hope May 13 will shut the movies door for vadivelu

 6. mettustreet k.muthu mettustreet k.muthu says:

  தலைவரை இகழ்ந்தோர் எல்லாம் மீண்டும் தலைவரால் தான் மறு வாழ்வுப் பெறமுடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, மலையின் ரசிகர்கள் இதை எல்லாம் கண்டுக்கொள்ளக் கூடாது……..!

 7. Arun Arun says:

  இந்த போஸ்ட் தலைவர் என்னை போல் உள்ள ரசிகர்களை அமைதியா இரு என்று சொன்னது போல் உள்ளது நன்றி சுந்தர்

 8. Mrs. Krishnan Mrs. Krishnan says:

  "ராணாவோ காணாவோ"

  'ராணா'வாக கலக்கப் போகிறார் – தலைவர்

  -

  'காணா'மல் போகப்போகிறார் – வடிவேலு

 9. Anonymous says:

  //எனவே, மனோரமா, மன்சூரலிகான், வரிசையில் ஒரு காமெடியன். அவ்வளவுதான். விட்டுத் தள்ளுங்கள் நண்பர்களே.//

  SO NO COMMENTS………..

  அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் ….!


  http://www.youtube.com/watch?v=6qdME5WTSqA&fe

  "உழைப்பாளி"யின் உண்மையான பக்தன்

  விஜய் ஆனந்த்

 10. Anonymous says:

  Kalyan//Even CM asked Thalaivar during his visit to the Hospital about why Vadivelu was replaced. //

  என்னமோ நீங்க பக்கத்தில டாக்டர் கிட்ட நின்னுக்கிட்டு

  இவங்க ரெண்டு பெரும் பேசினத கேட்ட மாதிரி

  அடிச்சு விடறீங்களே.. முதல்வர் அப்படி கேட்டார்னு

  ஏதாவது பத்திரிகைல, இல்ல, TV-ல போட்டாங்களா?

  உடம்பு விசாரிக்கப் போனவரை போய் ஏன் சார்

  இஷ்டத்துக்கு எதையோ எழுதுறீங்க?

  வடிவேலுவை நெஜமாவே கைப்புள்ள ஆக்க

  வேண்டியது தான் ரசிகர்கள் வேலை இனிமேல் !

  - மிஸ்டர் பாவலன்

 11. Shankar K R Shankar K R says:

  ஜி,

  வணக்கம். நீங்கள் பல முறை சொன்னாலும், சராசரி மனிதனாக நாங்கள்…. தலைவரும் நீங்களும் பண்பட்டு, பக்குவப்பட்டு இருக்குறீர்கள். அது தான் எதையும் தாங்கும் இதயமாக இருக்குறீர்கள். எங்களுக்கு பக்குவப்பட சிறிது காலங்கள் ஆகும். முயற்சி செய்து மாறிக்கொண்டு இருக்கிறோம். தலைவரை தரணி ஆள வைப்போம்….வெற்றி நிச்சயம்..இது வேத சத்தியம். கொள்கை வெல்வதே நாம் கொண்ட லட்சியம்…

  அன்புடன்

  சங்கர் கே ர

 12. Anonymous says:

  @Mrs. Krishnan

  அக்கா….என்ன கொஞ்ச நாளாகவே நீங்களும் , உங்க அதிரடியும் மிஸ் ஆகுதே……தினமும் ஆவலுடன் உங்க கமெண்ட்ஸ் எதிர்பார்க்கிறேன்……..!

  அக்கா-வின் "பாசமான" முரட்டு தம்பி

  விஜய் ஆனந்த்

 13. Anonymous says:

  சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்!!!!! நேரம் பார்த்து அடிப்பதில் சுந்தர் வல்லவர்…

 14. surya surya says:

  //“ராணா”-வின் ரணகள பக்தன்

  விஜய் ஆனந்த்

  பாட்ஷா-வின் பாசக்கார பக்தன்

  விஜய் ஆனந்த்

  உழைப்பாளி”யின் உண்மையான பக்தன்

  விஜய் ஆனந்த்

  அக்கா-வின் “பாசமான” முரட்டு தம்பி

  விஜய் ஆனந்த்//

  தம்பி விஜய் ஆனந்த். உங்களின் பாசம், முரட்டுத்தனம் எல்லாம் தெரிகிறது.. அதற்காக இப்படியெல்லாம் அடைமொழி தேவை தானா என்று ஒரு கணம் யோசித்து பாருங்களேன்.

  ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவரின் ‘உணர்ச்சிவசமிக்க ரசிகர்களாக’ .இருப்பது உண்மை.. ஆனால் அப்படியே இருக்கவேண்டுமா.. அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டாமா?.. பொறுப்புமிக்க, பக்குவமான ரசிகர்களை த்தான் தலைவர் பெருமையாக் நினைப்பார் என்பது தெரியும் தானே..

  இப்படி அடைமொழியை தவிர்த்து, நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களால் அறியப்பட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.. இது உங்களுக்கு மட்டுமல்ல.. எல்லோருக்கும் தான்..

  உணர்ச்சிக்குவியலாக வார்த்தைகளை வெளிப்படுத்துவதை தவிர்த்து, பொறுப்புமிக்க செயல்வீரர்களாக உருவெடுப்போம்.. நம்மால் சமூகத்திற்கு செய்யக்கூடிய நல்ல சிந்தனைகளை பகிர்ந்து கொள்வோம்.

  நம் தெருவிற்குள் நம்மால் ஒரு மாற்றம் உருவாக்க முடியும் என்றால அதை விட சிறந்த செயல் எதுவும் கிடையாது..

  அக்கம் பக்கத்து பொது தேவைகளை பார்ப்போம்.. சிந்திப்போம்… செயல்படுவோம். இங்கே பகிர்ந்து கொள்ளுவோம்.

  பொருளாதார சேவை என்றில்லை…வேறு எவ்வளவோ செய்ய முடியும்.. நல்ல சிந்தனைகள் தான் இன்றைய தேதியில் முதல் தேவை..

  நன்றி..

 15. B. Kannan B. Kannan says:

  மிக அருமையான கட்டுரை சுந்தர்..

  போடோஸ் கூட நல்ல சாய்ஸ்..

  @Mrs. கிருஷ்ணன்

  //“ராணாவோ காணாவோ”

  ‘ராணா’வாக கலக்கப் போகிறார் – தலைவர்

  -

  ‘காணா’மல் போகப்போகிறார் – வடிவேலு//

  சூப்பர் mam ..

  ராணா பூஜை அன்று நடந்த விஷயம் எல்லாம் மிக தெளிவாக வெளி இட்டு(ட்விட்டர் மூலம்) எங்கள் மன நிலையை குளிர்வித்த சுந்தருக்கு நன்றி..

  நண்பர் ஹரி சொன்னது போல தலைவர் மேலும் நம் படத்தின் மேலும் இருந்த திரிஷ்டி கழிந்தது என்று கொள்ள வேண்டும்..

  வடிவேலு விஷயத்தை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள வேண்டாம் நண்பர்களே..

  இனி நடக்க இருப்பது ராணாவின் ஆட்சி..

  சியர்ஸ்..

  பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,

  பா. கண்ணன்.

 16. R O S H A N R O S H A N says:

  செந்தில் அவர்கள் பற்றிய செய்தி புதிதாக உள்ளதே…..இதை பார்க்கும் பொது தலைவர் எப்படி ஒரு நடுநிலயாலர்னு தெரியுது……

 17. harisivaji harisivaji says:

  இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண

  நன்னயம் செய்து விடல்

  =====

  தலைவரால் வடிவேலுக்குஎதோ நல்லது நடக்க போகிறது

  =====

 18. Mrs. Krishnan Mrs. Krishnan says:

  @ விஜய்ஆனந்த்

  உங்க அன்பான விசாரிப்புக்கு நன்றி தம்பி. எங்கம்மாவுக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு மாசமா சில பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால் நான் கொஞ்சம் சோர்ந்திருப்பது நிஜம்தான். கூடிய சீக்கிரம் மீண்டு வர முயற்சிக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

 19. Priya Priya says:

  //எனவே, மனோரமா, மன்சூரலிகான், வரிசையில் ஒரு காமெடியன். அவ்வளவுதான். விட்டுத் தள்ளுங்கள் நண்பர்களே.//

  Recollect this comedy.
  http://www.youtube.com/watch?v=Syynji5nhys&fe
  ௦:14 to ௦:20 is really suit for this.

 20. selva selva says:

  sundar anna unga katturai padicha udaney thaan manasula iruntha valiyellam pochu…thanks sundar anna…

  —————————————
  இதுக்கே இப்படியா தம்பி…? நாளைக்கு தலைவர் அரசியலுக்கு வந்தா இன்னும் எவ்வளவோ பார்க்கவேண்டியிருக்கும. விஜயகாந்த்தை விட தலைவர் நூறு மடங்கு சொல்லடி படுவார். எனவே, இதையெல்லாம் ஈசியா எடுத்துக்கிற பக்குவம் வேணும்.
  - சுந்தர்

 21. அற்புதம் ஜி..
  என் தந்தை இரண்டு வாரங்களுக்கு முன் தவறி விட்டார் அதனால் பின்னூட்டமிட இயலவில்லை…

  ——————————-
  Very sad to hear. My deepest condolences. I would meet you personally soon.
  - Sundar

 22. Anonymous says:

  @surya :

  உண்மை தான் ஜி….சில சமயம் நான் உணர்ச்சிவசப் படுவதுண்டு…..ஆனால் அடைமொழி எல்லாம் சும்மா ஒரு விளையாட்டுக்குத் தான் ………நான் உணர்ச்சிவசப் படும்போதெல்லாம் என் தவறுகளை சுந்தர் அண்ணா சுட்டிக்காட்டி, அதை சரி செய்த பிறகே தளத்தில் அனுமத்திருக்கிறார்…..பல சமயங்களில் இது நடந்திருக்கிறது….! அதனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் …..!

  //அடைமொழியை தவிர்த்து, நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களால் அறியப்பட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்..//

  உண்மை தான் சார்……தலைவர் வழியில் நானும் நன்மைகளை செய்து கொண்டு தான் வருகிறேன்..எனது ஊரில் எனது அம்மா பெயரில் "அம்மா-உதவும் கரங்கள் " என்ற அமைப்பை ஏற்படுத்தி, எனது ஊரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்…இன்றளவும் அது தொடர்கிறது…….தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் தவறாமல் சென்று நலம் விசாரித்து விடுவேன்……நம் தளம் பால் ஈர்க்கப்பட்டு, நல்ல விசயங்களை செய்வதோடு மட்டுமல்லாமல், பிறருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் , என் அமைப்பின் பெயரில் இணையதளம் ஒன்றையும் நடத்தி வருகிறேன்….இந்த நேரத்தில் சுந்தர் அண்ணாவிற்கு நன்றிகளை சொல்லி கொள்கிறேன்…""நன்றி அண்ணா"" …….அவரின் செயல் தான் என்னை இணையதளம் ஆரம்பிக்க தூண்டியது….தற்போது அந்த தளம் மூலம் நிறைய பேர் உதவ முன்வந்திருக்கிறார்கள் ….. என் நண்பர்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்….அதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதியில் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு பாட நோட்டுகள் வழங்கப் பட உள்ளது….இது வரும் காலங்களில் தொடரும்……மேலும் எனது இந்த அமைப்பின் மூலம் இன்னும் பல உதவிகள் செய்ய வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு…!

  "ஈரமில்லாத நிலமும், ஈரமில்லாத மனமும் எதற்கும் பயன்படாது " — சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 23. Anonymous says:

  @Mrs. Krishnan :

  கவலைப்பட வேண்டாம் அக்கா…..இறைவன் உங்களுக்கு எப்பவும் துணை இருப்பான்………அம்மா விரைவில் குணமடைவார்கள்……………………………!

  இறைவா…….சக்தி கொடு…….!

  தம்பி விஜய் ஆனந்த்

 24. Anonymous says:

  எதிரியை கூட மன்னித்து விடலாம்..

  ஆனால் துரோகிக்கு மன்னிப்பு கிடையாது.

  மன்னிப்பு கேட்கும் வரை – வடிவேலுவின் புது

  படங்களை தியேட்டரில் பார்ப்பதில்லை என

  நான் முடிவு எடுத்திருக்கிறேன்.

  -மிஸ்டர் பாவலன்

 25. G.Udhay(RAJINIROX) G.Udhay(RAJINIROX) says:

  தலைவர் யை VIMARCHITHA ANTHA COMEDY PIECE i NINAITHAL KOBAM THAN வருகிறது…

 26. G.Udhay(RAJINIROX) G.Udhay(RAJINIROX) says:

  NANDRI ILLATHA COMEDY PIECE… BE CAREFUL…

 27. surya surya says:

  //மேலும் எனது இந்த அமைப்பின் மூலம் இன்னும் பல உதவிகள் செய்ய வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு…//

  வாழ்த்துக்கள் விஜ்ய் ஆனந்த்… உங்கள் நல்ல முயற்சி கண்டிப்பாக முழுமையாக நிறைவேறும்..

  இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை அவ்வப்போது தெரியப்படுத்துங்கள்.. மற்றவர்களுக்கு தூண்டுதலாக இருக்கும்.. மேலும் நீங்களும் இன்னும் உந்தப்படுவீர்கள்..

  உங்களின் பதில் மிகவும் மன நிறைவை தருகிறது.. நன்றி.

 28. Anonymous says:

  @surya

  //உங்கள் நல்ல முயற்சி கண்டிப்பாக முழுமையாக நிறைவேறும்..//

  நன்றி சார்……!

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 29. Rajagopalan Rajagopalan says:

  ராணாவோ காணாவோ”

  ‘ராணா’வாக கலக்கப் போகிறார் – தலைவர்

  -

  ‘காணா’மல் போகப்போகிறார் – வடிவேலு

  Its True…

  Another Truth

  இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண

  நன்னயம் செய்து விடல்

  =====

  தலைவரால் வடிவேலுக்குஎதோ நல்லது நடக்க போகிறது

 30. Rajagopalan Rajagopalan says:

  Enthiramurthy
  என் தந்தை இரண்டு வாரங்களுக்கு முன் தவறி விட்டார் அதனால் பின்னூட்டமிட இயலவில்லை…

  Our Deepest Condelences to Mr Enthiramurthy…

 31. Rajagopalan Rajagopalan says:

  Mrs. Krishnan

  says:

  May 1, 2011 at 8:47 pm @ விஜய்ஆனந்த்

  உங்க அன்பான விசாரிப்புக்கு நன்றி தம்பி. எங்கம்மாவுக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு மாசமா சில பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால் நான் கொஞ்சம் சோர்ந்திருப்பது நிஜம்தான். கூடிய சீக்கிரம் மீண்டு வர முயற்சிக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

  We are praying for your mother to recover soon…

 32. selva selva says:

  வடிவேலு தன்ன வளத்து விட்ட விஜயகாந்த் பத்தி தப்ப பேசினது ரொம்ப தப்பு அத விட தலைவர் படத்த பத்தி கமெண்ட் அடிக்கிறது ரொம்ப பெரிய தப்பு. அரசியலுக்கு அப்பார் பட்டு எல்லாரும் சக நடிகர்கள்ன்னு நெனைக்கிற மனப்பான்மை ஏன் இந்த மாதிரி ஒரு சில நடிகர்களுக்கு வர மாட்டிகுதுன்னு புரியல.

  ——————————–
  //வடிவேலு தன்ன வளத்து விட்ட விஜயகாந்த்//
  Who said you this?
  It is Rajkiran who brought up Vadivelu.
  - Sundar

 33. SVR SVR says:

  மனோரமா திரை உலக பாராட்டு விழாவில் தலைவர் ஆற்றிய உரை கண்ணீர் வரவழைக்கும் .ஒரு முறை அரவணைத்த கை ஆச்சி நீங்கள் ஆயிரம் முறை அடித்தாலும் தாங்கி கொள்வேன் .

 34. Balaji_Dubai Balaji_Dubai says:

  @ Mr.Enthiramurthy
  My Deepest Condolence to Mr Enthiramurthy…

  @ Mrs.Krishnan,
  i prayed for your mother also, she will get recover soon.

  At the same time, iam praying for Thalaivar & all others also.
  God bless.
  Cheers,
  Balaji .V

 35. jiaudeen jiaudeen says:

  வடிவேலு ஒரு டம்மி பீசு, தலைவர விமர்சிக்கற அளவுக்கு ஒன்னும் கிடையாது. இதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும்

 36. Ananth Ananth says:

  சின்ன்னப்பய

  காலம் பதில் சொல்லும்.

 37. sadique sadique says:

  first of all my hearty condolences to mr.enthiramurthy. we pray for ur dads soul to settle in peace.

  Mrs.krishnan ur mom will recover soon and will b healthier than b4, we pray almighty.

  Dear vijay anandh sir hats off 2 u, u r silently doing gud things for the needful in our thalaivars way.

  Sundar anna, migavum avasiyamana pathivu ithu. Pala rasigarhal kondhalipathil thavaru illai, aanal kobathai katupaduthinalthan namaku vetri. Athaithan thalaivar namaku katru koduthu kondirukirar. Pinbatra muyarchipom. 'andavan nallavangala sothipaan aana kai vida mattan'
  ———-
  Ungalil oruvan,
  Sadique (Madurai)

 38. Sharath Sharath says:

  ///Mrs. Krishnan

  May 1, 2011 at 1:13 pm

  “ராணாவோ காணாவோ”

  ‘ராணா’வாக கலக்கப் போகிறார் – தலைவர்

  -

  ‘காணா’மல் போகப்போகிறார் – வடிவேலு////

  Super comment! Had always liked to read your comments … but this one … am sure … even Parthipan could not have got it :)

 39. makkal makkal says:

  அவருக்கு வருங்கலத்தின் மீது இருந்த பயத்தில் உளறி இருக்கிறார் ..இதை எல்லாம் பெருதுபடுத்தி …நேரத்தை வீணாக்க வேண்டாம் …chandramukhi ஸ்டில் பார்த்தனான அவனுக்கே அவன் மேல அசிங்கம இருக்கும் ….தலைவர் படத்தின் வெற்றியை …நட்பை ….அவன் தலையை கோதி பகிர்ந்துக்கும் அழகே அழகு …

  அது வளர்ந்த கலாச்சாரம் ……விடுங்க …

 40. bab bab says:

  Dear Sundar

  What happen to Janakaraj, he acted many movies with our thalaivar (from annamalai to arunachalam).. i expected him atleast in this movie….

 41. Raja Raja says:

  இதை தான் நான் சொல்ல நினைத்தேன் வடிவேல் லம் ஒரு ஆளுன்னு நாம அவர பத்தி பேசி நம்ம நேரத்த வீணாக்கலாமா

  தலைவர் சூரியன் ,இவர்கள் சூரியனை சுற்றும் கிரகங்கள் ,சூரியன் அங்கே தான் இருக்கும் இவர்கள் தான் சுத்தி கோனே இருப்பார்கள்

 42. kannan paiya kannan paiya says:

  your life your hand friend

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates