Subscribe:Posts Comments

You Are Here: Home » Fans' Corner, Featured » “தலைவருக்கு பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன?” தலைவரை பல முறை சந்தித்துள்ள ரசிகை கவுரி பட்டியலிடும் சுவாரஸ்யமான தகவல்கள்!

க்கள் திலகத்தையடுத்து தாய்க்குலங்களிடம் அதிக செல்வாக்கு பெற்றவர் சூப்பர் ஸ்டார் ஒருவரே. ஆகையால் இயல்பிலேயே அவருக்கு மற்றவர்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு பெண் ரசிகர்கள் மிக அதிகம் உண்டு. அதிலும் அவர் மேல் தீவிர பற்றும் பாசமும் வைத்திருக்கும் ரசிகைகள் எண்ணற்றோர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் சென்னையை சாலிகிராமத்தை  சேர்ந்த கவுரி.

நம் ரசிகர் மன்றம் தொடர்பான விழாக்களில் நிகழ்ச்சிகளில் தவறாது இவரை பார்க்கலாம். மன்றங்களில் அமைப்பு ரீதியாக இவர் எந்த பொறுப்பும் வகிக்கவில்லை என்றாலும் இவருக்கு கிட்டியிருக்கும் இந்த கௌரவம் இவர் தலைவர் மீது பல ஆண்டுகாலமாக வைத்திருக்கும் அபரிமிதமான அன்பிற்கு கிடைத்த வெகுமதி என்றால் மிகையாகாது.

தலைவர் உடல் நலம் குன்றியிருந்த சமயம் அவர் குணம் பெற உலகம் முழுதும் எண்ணற்ற ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். தற்போது அவர் நலம்பெற்று திரும்பியுள்ளதையடுத்து அவர்கள் தத்தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். திருமதி கவுரி தமது சார்பாக தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, சென்னை வடபழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

“தலைவர் பூரண குணம் அடைந்தால், வடபழனி முருகன் கோவிலில் தனது முடியை காணிக்கை தருகிறேன்” என்று வேண்டுதல் வைத்தார். இவர் குசேலன் படத்தில் கூட “சினிமா சினிமா’ பாடல் காட்சியிலும் படத்தின் சில காட்சிகளிலும் தோன்றியிருக்கிறார். இவர் தனது கையில், ‘ரஜினிகாந்த் கடவுள்’ என்று பச்சை குத்தியுள்ளார். சென்னை சாலிகிராமம், விஜயராகபுரத்தில் வசித்து வருகிறார். இவர் டப்பிங் கலைஞர் என்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உட்பட பல மொழிகள் இவருக்கு தெரியும்.

சூப்பர் ஸ்டார் பூரண குணம் அடைந்ததையொட்டி, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை 16/07/2011 காலை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு தனது நீளமான கூந்தல் முடியை இழந்து, மொட்டை போட்டுக்கொண்டார். கவுரியுடன் சேர்ந்து, அவரது மகன் கோபிராஜ் (19), கொடுங்கையூரைச் சேர்ந்த அமுதா (39), மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஹேமராஜ் (10), குடியாத்தத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் (78) ஆகியோரும் மொட்டை போட்டனர்.

நமது தளத்திற்காக திருமதி.கவுரி அவர்களை தொடர்புகொண்டு பேசியபோது அவர் கூறியதாவது :

“தினசரிகளில் நான் கூறியதாக வெளிவந்த கருத்துக்கள் சில, தவறாக திரிந்து வெளிவந்துவிட்டன. அவற்றை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக இதை கருதுகிறேன். நான், சினிமா ‘டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ ஆக பணியாற்றி வருகிறேன். 8 வயதில் இருந்தே சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகை. அவர் நடித்த அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்துவிடுவேன். நான் ஏன் அவரது ரசிகையாக மாறினேன் என்பது இன்றுவரை எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. அவர் பிறந்தநாள் அன்று ஏழை பெண்களுக்கு புடவை வாங்கிக்கொடுத்து, அன்னதானமும் செய்வேன். அவரை நான் நேரில் பலமுறை சந்தித்து உள்ளேன். அப்போதெல்லாம் அவர் ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது என்று சொல்லுவார். என்னைப் பொறுத்தவரை அவரை நான் கடவுளாக தான் பார்க்கிறேன். அப்படிப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே அவர் பூரண குணம் அடைந்தால் வடபழனி முருகன் கோவிலில் மொட்டை போடுவதாக வேண்டினேன்.

http://onlysuperstar.com/wp-content/uploads/2010/12/Rajini_Latha-1.jpg

தற்போது குணமடைந்துவிட்டதால், இப்போது மொட்டை போட்டு நேர்த்தி கடனை நிறைவேற்றி உள்ளேன். அவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். எனது மகள் லாவண்யாவுக்கும், ராஜசேகர் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. தலைவர் ரஜினி தலைமையில்தான் எனது மகள் திருமணம் நடைபெற வேண்டும் என்பது என் நீண்ட நாள் வேண்டுதல். அவர் தேதி கொடுக்கும்வரை நான் காத்திருப்பேன். எத்துனை வருடங்கள் ஆனாலும்.” இவ்வாறு கவுரி கூறினார்.

“ரஜினி அவர்கள் தான் இந்த திருமணத்தை நடத்திவைக்கவேண்டும் என்று உறுதியாக இருப்பது ஏன்? நீங்கள் அவரது ரசிகை என்பதாலா? ஏனெனில் பல ரசிகர்கள் இதே போல கூறுகிறார்களே…” – என்று நாம் கேட்டோம்.

அதற்கு “அது மட்டுமே காரணம் அல்ல. எத்துனையோ பேர் திரையுலகில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், ஒரு ‘உதாரண ஜோடி’யாக வாழ்ந்து வருபவர் தலைவரும் லதா அம்மாவும் தான். ஒரு குடும்பத் தலைவன் எந்தளவு பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்கு தலைவரை தவிர சிறந்த உதாரணத்தை பார்க்கமுடியாது. மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக, பிள்ளைகளுக்கு பண்புள்ள அப்பாவாக, பேரக் குழந்தைகளுக்கு பாசமிகு தாத்தாவாக, ரசிகர்களுக்கு சுயநலமற்ற தலைவனாக அவர் திகழும் காரணத்தால் தான் எனக்கு அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்து என் மகளின் திருமணத்தை நடத்திவைக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனது எண்ணம் நிச்சயம் நிறைவேறும்” என்று கூறுகிறார் கவுரி. அவரது குரலில் நம்பிக்கை தெரிந்தது.

உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் கவுரி.

நமது தளத்திற்காக கவுரி அவர்கள் தலைவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கேட்டோம். வெளியூரில் இருந்தபடியால் அவரால் சில புகைப்படங்களை தான் அனுப்ப முடிந்தது. இருப்பினும் அவையே டாப் கிளாஸ் தான்.

மேற்காணும் புகைப்படம் தான் நான் தலைவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம். 2008 ஆம் ஆண்டு தலைவர் ரசிகர்களை சந்தித்தபோது எனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அது.

அடுத்த, புகைப்படம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியின்போது எடுத்தது.

கடைசி புகைப்படம் தான் என்னால் மறக்கமுடியாதது. தலைவர், ஏ.வி.எம்.மில் ‘சந்திரமுகி’ படத்துக்காக ‘அண்ணனோட பாட்டு’ ஸாங் ஷூட்டிங்கில் இருந்தபோது, எடுத்தப் படம் இது. தலைவர் கையில் இருக்கும் ‘மஹாவதார் பாபாஜி’ படம் நான் ரிஷிகேஷில் உள்ள பாபாஜி ஆஸ்ரமத்துக்கு சென்றிருந்தபோது அங்கு வாங்கியப் படம். இரண்டு படங்கள் வாங்கிவந்தேன். சென்னையில் அவற்றை லேமினேட் செய்தேன். ஒன்றை தலைவருக்கு கொடுத்தேன். மற்றொன்றை வீட்டில் வைத்து பூஜித்து வருகிறேன். தலைவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டார்.

தலைவரை கவுரி அவர்கள் பல முறை சினிமா நிகழ்ச்சிகளிலும், மண்டபத்திலும், ரசிகர்கள் சந்திப்பிலும் நேரில் சந்தித்திருக்கிறார்.

தலைவரை பற்றி மேலும் ஏதாவது சுவாரஸ்யமான விஷயங்களை நம் தள வாசகர்களுக்காக சொல்லுங்களேன் என்று நாம் கேட்டபோது, கவரி அவர்கள் தலைவருக்கு, பிடித்தது, பிடிக்காதது என்று ஒரு பட்டியலையே வெளியிட்டார்.

தலைவருக்கு பிடிக்காதது :

* அனாவசியமாக பேசுவது, அவரிடம் அரசியல் பேசுவது, அதிகம் பேசுவது, அடுத்தவர்களை குறை கூறுவது, மரியாதையின்றி பிறரை விளிப்பது, சுய தம்பட்டம் அடிப்பது, இதெல்லாம் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

தலைவருக்கு பிடிச்ச விஷயங்கள்:

* நிறைய நூல்கள் படிக்கவேண்டும். பொது அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டவேண்டும். அவற்றை தெரிந்துகொள்ள முனையவேண்டும். தியானம் செய்யவேண்டும். அட்லீஸ்ட் அந்த உந்துதல் இருக்கவேண்டும் என்று விரும்புவார். கற்றது கையளவு. கல்லாது கடலளவு என்பதை உறுதியாக நம்புபவர் அவர். அவரவர் அவரவர்க்கென்று உள்ள கடமையை தவறாது செய்யவேண்டும் என்று நினைப்பவர் அவர்.

* யாரையும் எந்த சூழ்நிலையிலும் புண்படுத்தக்கூடாது; அவரால் யாரும் நஷ்டப் படக்கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்.

* ஆத்திரத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் தன்மையாக போய்விட்டால் உலகத்தையே வெல்லலாம் என்பது அவர் பாலிஸி.

* அதேபோல, முக்கியமான யாரிடமாவது பேசும்போது செல்லை சுவிச் ஆப் செய்யக்கூடாது. அதற்க்கு பதில் அதை சைலன்ட்டில் வைத்துவிட்டு, பின்னர் வந்த கால்களை ரெஸ்பான்ஸ் செய்யவேண்டும்.

“பல முறை தலைவரை சந்தித்திருக்கிறீர்களே… தலைவர் கையால் ஏதாவது பரிசு பெற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டபோது…

“ஓ.. உண்டு. .. ராகவேந்திரா மண்டபத்தில் குருபூர்ணிமா நிகழ்ச்சி ஒரு வாரம் நடைபெற்றபோது, அதில் ஒரு நாள், தமது குருமார்கள் ஃபோட்டோ ஒன்றை எனக்கு கொடுத்தார். எனது வீட்டு பூஜையறையை அது தற்போது அலங்கரித்து வருகிறது.” என்று கூறும் கவுரியின் வார்த்தைகளில் பெருமிதம் தெரிகிறது.

நம் வாசகர்களுக்காக ரசிகர்களுக்காக இத்துனை சிறப்பான தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு அவருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

10 Responses to ““தலைவருக்கு பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன?” தலைவரை பல முறை சந்தித்துள்ள ரசிகை கவுரி பட்டியலிடும் சுவாரஸ்யமான தகவல்கள்!”

 1. vasi.rajni vasi.rajni says:

  சகோதரி கவுரி அவர்களின் உண்மையான அன்பிற்கு தலை வணங்குகிறேன். சகோதரியின் கனவு மெய்பட வேண்டும் . இவரின் புதல்வியின் திருமணம் இனிதே நடைபெற இறைவனை பிராத்திப்போம்.
  .
  கண்டிப்பாக சகோதரியின் விட்டு திருமண விழாவில் தலைவர் கலந்துகொள்ள வேண்டும் என்ற அசை நமக்கும் உண்டு. அப்படி தலைவரால் கலந்துகொள்ள இயலாவிட்டால் சகோதரி பெருந்தன்மையாக எடுத்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
  .
  rajni will rule tamil nadu

 2. Jude Jude says:

  குரு பூர்ணிமா நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படம், no words, geththu………….

 3. Ramarajan.R-Madurai Ramarajan.R-Madurai says:

  Yesterday Gowri mam shown in vijay tv super singer Rajini special. Avarathu magalin thirumanamThalaivar nadatha vazthukal.

 4. B. Kannan B. Kannan says:

  கௌரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  தலைவரை பற்றி சில புதிய தகவல்கள் தந்ததற்கு நன்றி..

 5. RAJA RAJA says:

  கண்டிப்பாக திருமதி கௌரி அவர்களின் மகளின் திருமணத்தை தலைவர் நடத்தி வைப்பார்.

  வாழ்த்துக்கள் …………..

 6. napoleon napoleon says:

  அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள். உங்கள் மகள் திருமணம் தலைவரின் தலைமையில் கண்டிப்பாக நடக்கும்.

 7. harisivaji harisivaji says:

  இவரது இந்த அன்பு தான் விஜய் டிவி வரை கொண்டு சேர்த்து இன்று உலகறிய செய்துள்ளது

  சுந்தர் நேற்று விஜய் டிவி இல் சூப்பர் சிங்கர் நிகளிசியில்
  ஒரு ஒருவரிடமும்
  திரு கோபி அவர்கள் உங்களுழு ரஜினி யார்
  என்ற கேள்வியை வைத்தார்
  அதற்கு திரு ஸ்ரீநிவாஸ் சொனது "தெய்வம் " ஒரு திரை துறையில் இருக்கும் ஒருவர் இப்படி கூறி நான் பார்த்ததில்லை
  இதற்கு காரணம் என்னவாக இருக்கும்
  அதேபோல் பல சுவாரசியமான செய்தியகளை இந்த நிகழ்ச்சி மூலம் தெரியவந்தது
  அதில் மனோ கூறிய அம்பாசடார் கார் breakdown
  super

 8. Anonymous says:

  கௌரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்….தலைவருக்கு பிடிச்ச விசயங்களை பட்டியலிட்டது அருமை..ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது…அதிலும் குறிப்பாக "ஆத்திரத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் தன்மையாக போய்விட்டால் உலகத்தையே வெல்லலாம்'' என்ற வரிகள் நமக்கொரு பாடம்….எல்லோரும் இதனை பின்பற்ற ஆரம்பித்தால் உலகமே அமைதிப்பட்டு விடும்…நினைத்தாலே இனிக்கிறது…

  "யாரையும் எந்த சூழ்நிலையிலும் புண்படுத்தக்கூடாது; அவரால் யாரும் நஷ்டப் படக்கூடாது " — அதனால் தான் தலைவா நீங்கள் எதிரிகளாலும் நேசிக்கப்படுகிறீர்கள்…!

  "கடமையை செய் ; பலனை எதிர்பார் "

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 9. Anonymous says:

  கௌரி அக்காவின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும்!!! நேட்ட்று விஜய் டிவியில் பார்த்தேன்… தனது கைகளை காட்டினார் "MY GOD RAJINIKANTH" என்று பச்சை குத்தபட்டிருன்தது!!!!!! தலைவருக்கு தாய் குளங்கள் எத்தனை பேர் ரசிகர்கள் என்று கணக்கு போடா முடியாத அளவிற்கு இருக்கிறது!!!!

  தலைவரின் போட்டோ விட்டார்.. அதுவும் பல முறை.. சூப்பர் சூப்பர்!!!!!

  தலைவர் பின் பற்ற சொன்ன விஷயங்கள் அருமை.. கண்டிப்பாக ரசிகர்கள் அனைவும் பின்பற்ற வேண்டும்!!

  Rajini will rule Tamilnadu

 10. Sudhagar_US Sudhagar_US says:

  கண்டிப்பாக சகோதரி கௌரி அவர்களின் விருபத்திற்கு தலைவர் செவி சாய்ப்பார் என நம்புவோம்.

  உயிர் ரசிகனின் இல்ல திருமணத்தில் தலைவர் கால் பட்டால் நமக்கெல்லாம் பேரானந்தம் தானே!

  அருமையான தகவல்கள் சுந்தர்.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates