Subscribe:Posts Comments

You Are Here: Home » Rajini Lead » உடல் நிலை சீரான பின்பும் சூப்பர் ஸ்டார் தன் ரசிகர்களுக்கு இன்னும் முகம் காட்டாதது ஏன்?

சூப்பர் ஸ்டார் சிங்கபூரிலிருந்து சென்னை திரும்பியபிறகு, ஏதாவது நிகழ்ச்சிகளில் தோன்றுவார். அவரை எப்படியும் பார்த்துவிடலாம் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், அவர் பொது நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

தமது தோற்றத்தின் இமேஜை பற்றிய பயமோ கவலையோ அவருக்கு என்றுமே இருந்ததில்லை. அப்படி இருந்தும் அவர் ஏன் இன்னும் பகிரங்கமாக வெளிப்படவில்லை என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ஒரு போர்வீரனின் வைராக்கியமாகத் தான் இதை எடுத்துக்கொள்ளவேண்டும். இன்னும் ஓரிரு வாரங்களில் அடிச்சி தூள் கிளப்பிகிட்டு ஒரு புயல் போல ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் தோன்றப்போகிறார். அட்டகாச உரை ஒன்று நிகழ்த்தப் போகிறார். அப்போது புரியும் உங்களுக்கு அவர் ஏன் இத்துனை நாள் காத்திருந்தார் என்று.

இப்போது அவர் வெளியே வர வில்லை என்றாலும் தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி, வாக்கிங், நண்பர்களிடம் கலந்துரையாடல், ராணா டிஸ்கஷன் என பாசிட்டிவான விஷயங்களில் கவனம் செலுத்தி தமது உடல்நிலையை முன்னை காட்டிலும் சிறப்பாக கொண்டு வருவதற்கு  முயற்சி செய்துகொண்டிருக்கிறார். (நோய் நீங்கினாலும், அது பிடித்த பிடிப்பு இன்னும் ஆங்காங்கே தெரிகிறது என்று வைரமுத்து சமீபத்திய குமுதம் கட்டுரையில் கூறியதை நினைவில் கொள்க!)

சில விஷயங்களை தலைவர் நேரடியாக அவரே செயலில் இறங்கி புரியவைப்பார். சில விஷயங்களை மற்றவர்களை வைத்து புரியவைப்பார். தாம் வெளியே வராமல் இருப்பதால், கவலைகொள்ள தேவையில்லை; அஞ்சுவதற்கு தமக்கு ஒன்றுமில்லை என்று தமது உடல் நிலை முன்னேற்றத்தை பற்றியும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மனதில் நம்பிக்கை விதைகளை தூவ  சூப்பர் ஸ்டார் விரும்பியதன் பின்னணி தான் குமுதத்தில் வெளியான வைரமுத்துவின் கட்டுரை. சரியான நேரத்தில் சரியான முறையில் வெளியானது அக்கட்டுரை.

ராணா எப்போது ?

இந்நிலையில், ‘ராணா’ படத்தை மீண்டும் துவக்குவதற்கான பணிகள் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளன. ஏற்கனவே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு மூன்று பாடல்களுக்கு இசையமைத்து தந்திருக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்புக்கு ரஜினி அவர்கள்  வேகமாக தயாராகி வருவதாகவும் வரும் நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளிமனோகர் தெரிவித்ததாக இன்றைய தந்தி கூறுகிறது.

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

23 Responses to “உடல் நிலை சீரான பின்பும் சூப்பர் ஸ்டார் தன் ரசிகர்களுக்கு இன்னும் முகம் காட்டாதது ஏன்?”

 1. Anonymous says:

  //மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்

  மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா.//

  //நான் எப்பவருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது…ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்….///

  .

  இருந்தாலும் தலைவரை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது.

  .

  மாரீஸ் கண்ணன்

 2. s.vasanthan s.vasanthan says:

  புலி பதுங்குவது பயத்தல் அல்ல பாய்வதற்கு .என்தி ரனுக்கு பிறகு தலைவர் எவ்வளவு இளமையா இருந்தாரு ,யாரு கண்பட்டுதோ ,அன்ன கடவுளோட ஆசி பெற்ற நம் தலைவருக்கு இளமை என்னக்கும் போகாது ,சுந்தர் சொன்னது போல வெகு விரைவில தலைவர் பழையபடி அடிச்சு துள் பண்ணுவார் .

 3. selman selman says:

  இத இத இததான் எதிர்பார்த்தேன் சுந்தர் அண்ணா! மிக்க நன்றி !!

  தலைவர் வாழ்க!!

 4. harisivaji harisivaji says:

  சாதரண புயலுக்கு முன்பு எப்போதும் அமைதி இருக்கும்

  தலைவர் சுனாமி போல் …. அதான் இந்த அமைதி

  கொஞ்சகாலம் சில போடிசுங்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்கிறார்

  என்ன பண்றது தலைவர் வெளியே வந்தால் அந்த நிழலின் அதிர்வில் இவனுன்கலாம் காணமல் போய்டுவாங்களே

 5. Anonymous says:

  எது எப்படியோ தலைவர் நலமுடன் இருப்பது சந்தோசமாக இருக்கிறது ! தலைவரை பாக்கணும் போல இருக்கு ! தலைவரோட பேச்ச கேட்காம கஷ்டமா இருக்கு ! எல்லா ஆசைகளையும் தேக்கி வச்சுக்கோங்க ! தலைவரைப் பார்த்தவுடன் சேர்த்து வச்சு கொண்டாடுவோம் !

  //இன்னும் ஓரிரு வாரங்களில் அடிச்சி தூள் கிளப்பிகிட்டு ஒரு புயல் போல ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் தோன்றப்போகிறார். அட்டகாச உரை ஒன்று நிகழ்த்தப் போகிறார்.//

  ஆயிரம் வாலா "சரவெடி" !

  "மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு "

  "கடமையைச் செய்; பலனை எதிர்பார்"

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்

  விஜய் ஆனந்த்

 6. Anonymous says:

  பிரமாதமான தொகுப்பு!!! படிக்கும் போதே சோர்வு நீங்கி ஆர்வம் பொங்குகிறது!!!! இன்ன டா இது தலைவர் வெளிய வர மாற்றார் என்று நினைத்து கொண்டிருந்தேன்!!! இப்போது முழு தெம்புடன் இருக்கிறேன்!!!

  "இன்னும் ஓரிரு வாரங்களில் அடிச்சி தூள் கிளப்பிகிட்டு ஒரு புயல் போல ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் தோன்றப்போகிறார். அட்டகாச உரை ஒன்று நிகழ்த்தப் போகிறார்"

  அண்ணா இது இது தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்!!!! கூடிய சீக்கிரம் நடக்க போகிறது!!!

 7. Anonymous says:

  எல்லாப் பாடல்களும் வைரமுத்தா, இல்லை,

  வாலி சாருக்கு எதுவும் பாடல்கள் உண்டா?

  (சுல்தானுக்கு வைரமுத்து எல்லாப் பாடல்களும்

  எழுதியதாக நினைவு. )

  -=== மிஸ்டர் பாவலன் ===

 8. sankaranarayanan sankaranarayanan says:

  //இன்னும் ஓரிரு வாரங்களில் அடிச்சி தூள் கிளப்பிகிட்டு ஒரு புயல் போல ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் தோன்றப்போகிறார். அட்டகாச உரை ஒன்று நிகழ்த்தப் போகிறார்.//

  சூப்பர் சுந்தர்ஜி. இந்த தகவலுக்குதான் இத்தனை நாள் காத்துகொண்டிருந்தோம். நன்றி ஜி.

  தலைவரை காண துடிக்கும் கோடானகோடி ரசிக கண்மணிகளில் ஒன்றான

  சங்கரநாராயணன்

 9. kumaran kumaran says:

  புயல் போல வந்து தத்துவங்களை அள்ளி நமக்கு தருவார்

 10. raja raja says:

  தலைவா நீங்கள் பொறுமையாக வாருங்கள் பரவில்லை ,ஆனால் வரும் போது ஒரு சிங்கமாக அல்ல நூறு சிங்கத்தின் பலத்தோடு வாருங்கள்

 11. raja raja says:

  இன்றைய தினத்தந்தியில் இணை தயாரிப்பாளர் பெட்டி கொடுத்து உள்ளார் நவம்பர் மாதம் தொடங்கும் என்று

 12. Arujuna Arujuna says:

  எந்திரன் வெற்றி விழா எப்போ தலைவா ??

 13. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி சரியான நேரத்தில் சரியான பதிவு. ரசிகர்களின் மனநிலையை தாங்கள் மிக அழகாக பதிவு செய்துள்ளிர்கள். தலைவர் நாடு திரும்பி 2 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இன்று வரை தலைவரின் ஒரு புகைப்படத்தை கூட நாம் பார்க்க முடியவில்லை. கண்டிப்பாக நீங்கள் குறிபிட்டது போல, தலைவர் மிக உற்சாகமாக எதாவது ஒரு விழாவில் நாம் சந்திக்கலாம்.

  .

  தலைவர் நமது ரசிகர்களை கண்டிப்பாக சந்திப்பார் என்று எதிர்பார்கிறோம். ஆனால், கிளம்பிவாருங்கள் என்றால், பாதி தமிழகமே வந்துவிடும், அந்த அளவுக்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தலைவர் ரசிகர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதால் தான் சந்திக்க வேண்டும் என்று தோணும் பொழுதும், அதனை தவிர்க்கிறார் என்று நினைக்கிறன். தலைவர் எது செய்தாலும் அது நன்மைக்கு தான்.

  .

  rajni will rule tamil nadu

 14. naveen(kodambakkam) naveen(kodambakkam) says:

  hari sonnadhupol thalaivar tsunami taan,

  Aachrosamaga vandhu azhikum tsunami alla,

  pagaivarayum anbodu vaari anaikum tsunami.

  eppadiyo tsunami eccharikkai kuduta sundarjiku nandri.

  ———————————-

  சுனாமியோடு தலைவரை தயவு செய்து ஒப்பிட வேண்டாம். சுனாமி அழிவை குறிப்பது. ஆனால் தலைவருக்கோ எவரையும் வாழவைத்து தான் பழக்கம்.

  - சுந்தர்

 15. devaraj devaraj says:

  Thanks Sunder for this timely update.

  I am personally worried whether Rajini has fully recovered, even if he has recovered will he be fit enough to act.(doctors mentality).

  I sincerely hope God gives him enough enough strength and good health.

  Lets wait and watch.

  regards

  Dev.

 16. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

  நூறு சிங்கங்களின் கம்பீரத்தோடு …

  ஆயிரம் குதிரைகளின் பலத்தோடு நீ வரும் அழகை காண காத்திருக்கிறோம். ….

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 17. Gokul Gokul says:

  Sundarji,

  Many thanks for the updates.. Recently i watch BABA movie and Sivaji 175 days function speech which gives me different feelings and some of the situations might relate with present things happenning…

  I'm sure THALVIAR will come up with very SUCCESSFUL with all those struggles with all of our PRAYERS with GOD.

  Apart from the Cinema We need the Rajini sir as a wonderful Humanbeing….

  Thalviaaaaaaaaaa…. Pls take your time.. we want to hear your fastest Speech and Loudgly Laugh soonnnnnnn….

 18. Balaji_V Balaji_V says:

  I hope thalaivar will be good with god's grace and all fans prayers.

  My opinion, thalaivar first visit outside is may be any temple like Tirupathi or Kalikambal temple…After that only he will come and attend any public function or etc.,

  Cheers,

  Balaji .V

  Dubai

 19. pari pari says:

  ரானா வருவார் …..ரகளையாக வருவார் …

 20. R.Gopi R.Gopi says:

  //சுனாமியோடு தலைவரை தயவு செய்து ஒப்பிட வேண்டாம். சுனாமி அழிவை குறிப்பது. ஆனால் தலைவருக்கோ எவரையும் வாழவைத்து தான் பழக்கம்.

  - சுந்தர்//

  Super Sundar ji…. Well said….

 21. Padhu Padhu says:

  Guys, I guess it would be great if he meet fans/fans association leader/ Press first before appearing in public functions, you may thing why i am saying this.. I too know that none of the Rajini fans in this world did prayers for any personal benefit they also not expected anything back from Rajini but there exist a group which always try to exploit the situation, His press meet should be the one that would answer back this society about the relationship between him and us…

 22. dr suneel dr suneel says:

  நல்ல உடல்நிலையில் ,நல்லபடியாக அவர் வெளியில் வந்தால் போதும்,படமெல்லாம் அவரது தோது, அவர் நம்மோடு இருக்கிறார் என்பதே மிகப்பெரிய பலமாக உணர முடிகிறது

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates