Subscribe:Posts Comments

You Are Here: Home » Featured, Happenings » சூப்பர் ஸ்டார் அரங்கிற்கு வந்த அந்த தருணம் & பழமைக்கும், புதுமைக்கும் பாலமிட்ட ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா — COMPLETE REPORT WITH NEW PICS!!

———————————————————————————————–
Important Notice : As this post contains lots of pics, your browser may take some time to load all pics. So please give your browser some time to load fully.
———————————————————————————————–

* திருமதி லதா ரஜினிகாந்த் நிர்வகித்துவரும் ஆஷ்ரம் பள்ளியின் 21வது ஆண்டு விழா காமராஜர் அரங்கில் 2012 ஜனவரி 19 ஆம் தேதி மாலை நடைபெற்றது.

* ஆஷ்ரம் பள்ளியில் பணிபுரியும் மாணவர்களும் அவர்தம் பெற்றோர் மற்றும் உறவினர்களும் வந்திருந்தனர். அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் தான் அனுமதிக்கப்பட்டனர். அழைப்பிதழில் கூறியிருந்தபடி சரியாக மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கிவிட்டது.

* நம்முடன் நமது உறவினர் மற்றும் அவரது குழந்தை, நண்பர் கண்ணன், ரஜினி மனோஜ் ஆகியோர் வந்திருந்தனர். அனைவரும் அழைப்பிதழ் வைத்திருந்தோம்.

* வந்திருந்தவர்களை ஆஷ்ரம் பள்ளியின் நிருவன்ர் திருமதி. லதா ரஜினி அனைவரையும் வரவேற்ற பின்பு, விநாயகர் வணக்கத்துடன் மங்களகரமாக துவங்கியது நிகழ்ச்சி. ஆஷ்ரம் பள்ளி மாணவர்கள் “விநாயகனே வினை தீர்ப்பவனே” பாடலை பாடினார்கள். அதன் பிறகு வேறு சில பாடல்கள் பாடினர். நிகழ்ச்சிக்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது.

* பாடல்கள் முடிந்தவுடன், கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாணவரும் தனித் தனியே மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

* நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே, முக்கிய விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர். ஒவ்வொருவர் வரும்போதும், அமைப்பாளர்கள் மற்றும் ஆஷ்ரம் நிறுவன ஆசியர்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று அவரவர் இருக்கைகளில் அமரவைத்தனர்.

* அனைவரும் நிகழ்ச்சியை ரசித்தபடி இருக்க, நாங்கள் நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டே, விருந்தினர்கள் உள்ளே வரும் பக்கவாட்டு நுழைவாயிலை பார்த்தபடி இருந்தோம். ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் தலைவர் தான் வர்றாரோ என்று தோன்றும். கடைசியில், வேறு யாராவது வருவார்கள். ஒவ்வொரு முறையும் இப்படி ஏமாற்றமடைந்தோம். இருப்பினும் எதிர்பார்ப்பு வற்றவில்லை.

* ஒரு கட்டத்தில் நுழைவாயிலில் பரபரப்பு அதிகம் ஏற்பட்டது. நாங்கள் தலைவர் தான் வருகிறார் என்று பார்த்தால் வந்தது அவர் உயிர் தோழன் “ராஜ் பகதூர்”. அப்படியே தலைவர் போலவே வெள்ளை பைஜாமா குர்தாவுடன் வந்தார்.

* நம்முடன் வந்திருந்த கண்ணனும், ரஜினி மனோஜும் ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்தனர். “கடந்த சில ஆண்டுகள் தொடர்ச்சியாக தலைவர் இந்த (2011தவிர்த்து) விழாவுக்கு வந்துள்ளார். கவலைப்படாதீர்கள். நிச்சயம் வருவார்” என்று கூறினேன்.

* சரியாக 6.30 இருக்கும் வாயிலில் ஒரே பரபரப்பு. பரபரப்பு என்றால் சாதாரண பரபரப்பு அல்ல. உச்சகட்ட பரபரப்பு. செக்யூரிட்டிகள் அங்கும் இங்கு ஓட, அமைப்பாளர்கள் வாயில் நோக்கி ஓடினர். போலீசார் வேகமாக ஓடி சென்றனர், சில புகைப்படகாரர்கள் ‘பளிச்’ ‘பளிச்’ என்று  க்ளிக்கியபடியே ரிவர்சில் நடந்து வந்து கொண்டிருந்தனர். எல்லோருக்கும் புரிந்து விட்டது ‘கருப்பு மின்னல்’ வந்துவிட்டது என்று. மொத்த ஆடிட்டோரியமும் க்ளுக்கோஸ் குடித்தது போன்று ஒரு சுறுசுறுப்பிற்கு தாவியது. ஒரு சில வினாடிகளில் அவருக்கே உரிய மின்னல் வேக நடையுடன் தலைவர் உள்ளே பிரவேசித்தார். நம்மையறியாமல் எழுந்து நின்று கைதட்ட, ஓட்டு மொத்த ஆடிட்டோரியமும் அதைத் தான் செய்துகொண்டிருந்தது, நான் மறுபடியும் உட்காரும்போது தான் புரிந்தது. (நினைவில் வைத்து கொள்ளவும் : அங்கிருந்தவர்கள் முற்றிலும் வித்தியாசமான வேறு வகை ஆடியன்ஸ். அத்தனை பெரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் என்னைப் போன்ற சில இளைஞர்கள்[!] தான்.)

* தலைவர் அவருக்கே உரிய பாணியில் அனைவரை பார்த்தும் வணக்கம் கூறியபடி அவருக்கு உரிய இருக்கையில் போய் அமர்ந்தார். அமர்வதற்கு முன்பு, ஏற்கனவே அங்கு வந்து அமர்ந்துகொண்டிருந்த பி.வாசு, எஸ்.பி.முத்துராமன், வி.எஸ்.ராகவன்  உள்ளிட்டோருக்கு சென்று கைகுலுக்கிவிட்டு பின்னர் போய் தான் தன்  இருக்கையில் அமர்ந்தார்.

* மேடையில் திருமதி லதா பேசிக்கொண்டிருந்தார் அப்போது. தலைவர் உள்ளே வரும்போது, “எந்திரா… என் எந்திரா” என்று எந்திரனில் வரும் டைட்டில் பாடலின் வரிகளில் எஸ்.பி.பி.யின் சிம்மக்குரலில் பாடல் போடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

* எனக்கு பின்னாடி இருந்த குழந்தைகள் “ரஜினி அங்கிள்” “ரஜினி அங்கிள்” என்று உற்சாகமாக கத்தி கொண்டிருப்பதை கேட்டேன்.

* “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றி. அனைத்தும் இறைவனின் ஆசீர்வாதம் தான். ஆஷ்ரம் பள்ளியின் வளர்ச்சியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அதே போல, என் கணவரின் உடல்நலத்துக்காக பிரார்த்தித்த லட்சோப லட்சம் மக்களுக்கு என் நன்றி. அவரை நல்ல உடல் நலத்துடன் மீது கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றென்றும் எங்களின் நன்றி. ஒரு கடினமான காலகட்டத்தை உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும் நாங்கள் தாண்டி வந்தோம்…” – இவ்வாறு மேடம் பேசிக்கொண்டிருக்கும்போது தான் தலைவர் உள்ளே பிரவேசித்தார்.

* “என் கணவர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார். உங்கள் எல்லாருக்கும் தெரியும்… என்னுடைய பலமே அவர் தான். அவரின்றி நான் இந்த சாதனைகளை நிகழ்த்த இயலாது….” என்று பலத்த கரகோஷத்துக்கிடையே பூரிப்போடு கூறினார் திருமதி.லதா ரஜினி அவர்கள்.

* தலைவர் வந்து உட்கார்ந்தவுடன், ஆஷ்ரம் ஏற்பாடு செய்திருந்த ஃபோட்டோகிராபர்கள் வந்து காமிராக்களில் மின்னலென பிளாஷ் மழையை பாய்ச்சி புகைப்படமெடுத்தனர். தவிர, வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவரவர் மொபைல் மற்றும் கொண்டு வந்திருந்த காமிராக்களில் புகைப்படங்களாய் சுட்டுத் தள்ளினர். (உள்ளே காமிராக்கள் எடுத்து வரக்கூடாது! ஆனால் அந்த நிபந்தனையை யாரும் கண்டுகொள்ளவில்லை).

* நமக்கு அருகில் அமர்ந்திருந்த ஆஷ்ரம் மாணவனின் தந்தை ஒருவர் அங்கு நமக்கு நண்பராகிவிட, (அவரும் தலைவர் ஃபேனாம்!) அவர் தனது மொபைல் காமிராவில் எடுத்த சில படங்களை நமக்கு இ-மெயில் அனுப்பினார்.

* நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சமாக, பொதுமக்கள் தங்கள் சவாரியின் பொது ஆட்டோவில் தவறவிட்ட விலை உயர்ந்த பொருட்களை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த இரு வயதான ஆட்டோ ஓட்டுனர்களை மேடைக்கு அழைத்து அவர்களுக்கு பரிசும், பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதில் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, தலைவர் அமரிந்திருந்த முன் வரிசை நோக்கி சில அடிகள் வந்து, தலைவருக்கு கைகளை மேலே தூக்கி ஒரு ஸ்பெஷல் வணக்கம் போட்டுவிட்டு சென்றார். பார்வையாளர்கள் இதை கவனிக்க தவறவில்லை. அனைவரும் உடனடியாக கைகளை தட்டி அந்த ஆட்டோ டிரைவரை உற்சாகபடுத்தினர்.

(நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், கமிஷனர் அலுவலகத்தில் தொடர்புகொள்ளப்பட்டு இவர்களது விபரம் பெறப்பட்டது.)

* முதலில் குழந்தைகளின் பேஷன் ஷோ. ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் கை கோர்த்து நடந்து வருவது போல் அமைக்கப்பட்டிருந்தது இருந்தது. மிக பிரமாதமாக இருந்தது.

“ஆஷ்ரம் பள்ளியில் கல்விக்கு மட்டுமல்ல MARTIAL ARTS எனப்படும் தற்காப்பு கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்று கூறி, பின்னர் ஒவ்வொரு நாட்டுக்கும் உரித்த தற்காப்பு கலைகளை பற்றி கூறினார்.  சீனாவுக்கு  குங் ஃபூ, ஜப்பானுக்கு ஜூடோ & கராத்தே, கொரியாவுக்கு டேக் வான்டோ – அதுபோல நம் இந்தியாவிற்கே உரித்தேயான சிலம்பாட்டம் என்று கூறி, மாணவர்கள் சிலம்பத்தை வைத்து செய்யும் சாகசங்களை காட்டினர்.

* மாணவர்களின் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி நிறைவு பெரும் சமயத்திலும் ஒவ்வொரு சாதனையாளருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆகையால் நிகழ்ச்சி போரடிக்காது சுவாரஸ்யமாக சென்றது.

* ஆஷ்ரம் மாணவர்களின் பேட்டி அடங்கிய வீடியோ தொகுப்பு அவ்வப்போது திரையிடப்பட்டது. முன்னாள் மாணவர்களின் பேட்டியும் அவ்வப்போது காட்டப்பட்டது. அதில், ஐஸ்வர்யா தனுஷ் பேட்டி இடம்பெற்றது. தாம் ஆஷ்ரம் பள்ளியின் முதல் பேட்ச் ஸ்டூடன்ட் என்பதை பெருமையுடன் குறிப்பிட்டார் ஐஸ்வர்யா.

* வெளியே மட்டும் தான் ஸ்க்ரீன் வைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைக்கப்படவில்லை. ஆகையால் வீடியோவில் எப்போது தலைவரை க்ளோசப்பில் காட்டினார்கள், முன் வரிசையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.

* சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் அஸ்வின் ராம்குமார் ஆகியோர் வந்திருந்தனர். மேடையை பார்த்தவாருள்ள வலது புறம் முதல் வரிசையில் அவர்கள் அமர்ந்துகொண்டனர்.

* ஐஸ்வர்யா தனுஷ் வந்திருந்தார். ஆனால் அவரது கணவர் தனுஷ் வரவில்லை.

* ஆஷ்ரம் நிறுவனத்தில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களது கருத்துக்கள் அடங்கிய சிறு சிறு வீடியோ தொகுப்பு இடையிடையே காட்டப்பட்டது.

* ஷம்மி கபூர் மற்றும் ஆஷா பரேக் அவர்கள் நடித்த திரைப்படங்களின் பாடல் காட்சிகள் காட்டப்பட்டன.

* நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் போர்கால காட்சிகளும் தத்ரூபமாக மாணவர்களால் நடித்துகாட்டப்பட்டன. குதிரை வீரர்கள், மற்றும் வாள், ஈட்டி, கேடயம் உள்ளிட்ட ஆயுதங்களோடு மாணவர்கள் தத்ரூபமாக தோன்றினர். (குதிரை வீரர்கள் பொய்க்கால் குதிரை வேடமணிந்து வந்தனர்.)

* தற்காப்பு கலைகள் மற்றும் கல்விகளில் மட்டும் நாம் சிறந்து விளங்கவில்லை. எங்களுக்கு ஜிம்னாச்ட்டிக்சும் கைவந்த கலையாக்கும்… என்று ஜிம்னாசிட்க்ஸ் சாகசங்கள் செய்து அசத்தினர் மாணவர்கள். மாணவர்கள் இனைந்து பிரமிடு போன்ற வடிவத்தை ஜிம்னாச்டிக்க்சில் செய்தனர்.

* குட்டீஸ்கள் (ஐந்து அல்லது ஆறு வயது) மேடையில் தோன்றி பரவசப்படுத்தின. அதில் ஒரு சில குழந்தைகள் மற்ற குழந்தைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாது, சற்று திணறி செய்வதறியாது விழித்தன. ஆனாலும் அது கொள்ளை அழகு. அதில் கூலிங் கிளாஸ் அணிந்து வந்த ஒரு வாண்டு, தலைவரை பார்த்து தனியாக சல்யூட் அடிக்க ஒட்டு மொத்த அரங்கமும் கைதட்டியது.

* “நமது வாழ்க்கையில் கலாச்சாரத்தில் ஆன்மீகத்தை / இறைவனை நாம் மறக்கமுடியுமா?” என்று கூறி, “இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சில பகதிபாடல்களை மாணவர்கள் நடித்து கட்டுவார்கள் என்று லதா ரஜினி அவர்கள் கூறியவுடன், அடுத்து வந்த மாணவர்கள், “தாய் மூகாம்பிகை” படத்தில் இசைஞானி இளையராஜாவின் குரலில் வரும் அழியாப் புகழ் பெற்ற ஜனனி ஜனனி பாடலுக்கு நடனமாடினர். பின்னர் பக்தி பரவசமூட்டும் அம்மன் பாடல்களுக்கு நடனமாடினர். ஒவ்வொரு பாடலும் சில வரிகள் அந்தந்த கலைக்குழிவினரால் நடித்துக்கட்டப்பட்டன. பின்னர் அனைவரும் ஒருங்கே மேடையில் தோன்றி பரவசமூட்டினர்.

* மூத்த கலைஞர்களை பல்வேறு துறையை சேர்ந்த சாதனையாளர்களை இது போன்ற பள்ளி விழாக்களில் கௌரவிக்கும்போது, மாணவர்களுக்கு நன்றியுணர்வும், பெரியவர்களை மதிக்க வேண்டிய பண்பும் மனதில் ஆழ பதியும் என்றால் மிகையல்ல.

* மாணவர்கள் NATIONALISM (தேசிய ஒருமைப்பாடு) வளர ஒரு நடனம் ஆடினார்கள். அப்போது லதா மேடம் கூறியதாவது “எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் ஊடே, தேசப் பற்றும் தேசிய ஈடுபாடும் போதிக்கப்படுகிறது. என்னுடை கணவருக்கு தேசியத்தின் மீது எப்போதுமே ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.” என்று கூறியவர், இதை யாரும் தவறாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால், “இதனை அரசியலில் ஆர்வம் என்று யாரும் நினைத்து கொள்ள கூடாது. அரசியலுக்கு வருமாறு அவரை பலர் அழைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து தான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதில்லை. வராமல் கூட செய்யலாம்” என்று கூறினார். (அவர் வரவே மாட்டார் என்றெல்லாம் அவர் கூறவில்லை.)

* இயக்குனர் சிகரம் கே.பி. வந்தபோது, சூப்பர் ஸ்டார் எழுந்து ஓடிச் சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார். அப்போது மேடையில் ஒரு ஹிந்தி பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருன்தனர் மாணவர்கள். கே.பி. அவர்கள் அதை முழுமையாக பார்க்கவேண்டும் என்பதால் அது ரிபீட் செய்யப்பட்டது.

* முன்னதாக கே.பி. அவர்களை பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது. ‘புன்னகை மன்னன்’ படத்தில் இருந்து அருமையான ஒரு தீம் சாங் பேக்-க்ரவுண்ட்டில் ஒலிக்க திரையுலகில் அறிமுகப்படுத்திய கலைஞர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி, பத்ம ஸ்ரீ கமல் ஹாசன், சரிதா, சரத் பாபு, விவேக், சார்லி, ராதா ரவி, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குனர் வசந்த் மற்றும் பலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. தவிர அவரது எவர்க்ரீன் க்ளாசிக்ஸ் படங்களான நீர்க்குமிழி, பாமா விஜயம் உள்ளிட்ட படங்களிலிருந்து பாடல்காட்சிகள் சிறு சிறு கிளுப்பிங்குகலாக காண்பிக்கப்பட்டன.

* சூப்பர் ஸ்டாருடன் அவர் விழாக்களில் இருக்கும் படத்தை காட்டியபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.

* திரு.கே.பி.அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவித்தபோது, ஆஷ்ரம் குழந்தைகள் அவரை சூழ்ந்துகொண்டு, வாழ்த்து கூறினார். கே.பி. மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

* திரு.கே.பி. அவர்கள் மீது லதா ரஜினி அவர்கள் எந்தளவு மதிப்பு மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார்கள் என்பதை அவரது பாடி லாங்குவேஜ் அழகாக வெளிப்படுத்தியது. (அவரிடம் மட்டுமல்ல, விருது பெற வந்திருந்த சான்றோர்கள் அனைவரிடமும் லதா ரஜினி அவர்களின் ணுகுமுறை இப்படித் தான் இருந்தது. நிகழ்ச்சி முழுவதும் இப்படித் தான் அவர் இருந்தார். ஒரு இடத்தில் கூட தான் ஒரு பெரிய நட்சத்திரத்தின் மனைவி என்றோ, செல்வாக்குள்ள நபர்களில் ஒருவர் என்றோ அவர் காட்டிக்கொள்ளவில்லை. மேடையில் அவரிடம் நாங்கள் ஆட்டோகிராஃப் வாங்கும்போது இதை நன்கு உணர முடிந்தது. )

* தலைவரின் குரு திரு.கே.பாலச்சந்தர் அவர்களை கௌரவிக்க – மாணவர்கள் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பாடலுக்கு அழகாக ஆடிகொண்டே இருக்கும் போது – சூப்பர் ஸ்டாரை மேடைக்கு அழைத்து வந்தனர்.

* “இது போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்துவது என்பது எளிதல்ல. எத்துனை உழைப்பை நீ இதற்க்கு செலுத்தியிருக்கவேண்டும் என்பதை நானறிவேன் அம்மா…. உன்னுடைய டெடிகேஷனை கண்டு நான் வியக்கிறேன்.” என்று கூறி தனது வியப்பை வெளிப்படுத்தினார் இயக்குனர் சிகரம் கே.பி.

* கே.பி. அவர்கள் கூறியதை போல, மொத்த நிகழ்ச்சியும் மிக கச்சிதமாக நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி அனைத்து செம்மையாக நடைபெற்றது. ஒரு வித ஒழுங்கை அங்கு காண முடிந்தது. அனைவரும் சுதந்திரமாக இருந்தனர். அதே சமயம் அனைத்தும் ஒழுங்கும் இருந்தது. (ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது பொதுவாக).

* காமராஜர் அரங்கில் படியேறிய பின்பு வரும் விசாலமான வராண்டாவில் இருபுறமும் பெரிய ஸ்க்ரீன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டு அங்கு நூற்றுக்கணக்கில் சேர்கள் போடப்பட்டிருந்தன. தாமதமாக வந்தவர்கள் அங்கு அமர்ந்து நிகழ்ச்சியை மனம் கோணாமல் ரசித்தனர்.

* பக்கவாட்டில் கான்டீன் இருந்தது. அங்கு காபி, டீ வகைகள் மற்றும் ஸ்நேக்ஸ் வகைகள் கிடைத்தன. குழந்தைகளுடன் வந்தவர்கள் அங்கு சென்று பசியாறினர். கழிப்பிட வசதிகள் அனைத்தும் சுத்தமாக சுகாதாரமாக இருந்தது.

* கடைசியில் தலைவர் மேடையேறிய போது, அது வரை பொறுமையாக உட்கார்ந்திருந்த அனைவரும் அவரை பார்க்கும் ஆர்வத்தில் எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டனர். முன்னே நின்றவர்கள் அனைவரும் எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டதால் பின்னே அமர்ந்திருந்தவர்களும் நிர்கவேண்டியதாகி விட்டது. இப்படி ஒட்டு மொத்த ஆடிட்டோரியமும் நிற்கவேண்டியதாகிவிட்டது.

* தலைவர் பேசி முடித்தவுடன் வலதுபுறம் அவர் இறங்க எத்தனிக்க, செக்யூரிட்டிகள் அவரை இடது புறமாக இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர் இறங்கியவுடன், அப்படியே அவரை கவர் செய்து, காரில் கொண்டு போய் ஏற்றிவிட்டனர். இத்தனையும் ஒரு சில வினாடிகளில் நடந்துமுடிந்துவிட்டது.

* நிகழ்ச்சி நிறைவடைந்து தலைவர் கிளம்பியதும், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மேடைக்கு சென்று லதா அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பேசிக்கொண்டிருந்தனர். சில மாணவர்களும் அவர்களது பெற்றோரும் அவருடன் புகைப்படமெடுத்துக்கொண்டனர். நேரம் செல்ல செல்ல இப்படி வந்தவர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டபடியால் செக்யூரிட்டிகள் அவரை சுற்றி பாதுகாப்பு வளையும் அமைத்து அவரை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர்.

* மொத்தத்தில் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த இந்த விழா, ஆஷ்ரம் பள்ளி மாணவர்களின் பன்முகத் திறமையை நன்கு பறைசாற்றியது. வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமல்லாது மாறிவரும் சூழலுக்கேற்ப, மாணவர்கள் எதிர்கால உலகை வெற்றிகரமாக எதிர்கொள்ள என்ன தேவையோ அவையனைத்தும் கற்றுக்கொள்கிறார்கள் என்பது நன்கு புரிந்தது. மேலும் நமது நாட்டின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுக்களிலும் மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. கே.பி. அவர்கள் கூறியபடி “எத்துனை சாதனையாளர்கள், ரஜினிகாந்த்கள், ஐஸ்வர்யா ரைகள் இந்த மாணவர்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்று தெரியாது:

ஆஷ்ரம் பள்ளி சார்பாக விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

ரஜினிகாந்த் சாதனையாளர் விருது பெற்றவர்கள்

மறைந்த திரு.ஷம்மி கபூர்
(இந்திய திரையுலகில் அவர் ஆற்றிய பங்கிற்காக)

சௌ.ஆஷா பரேக்
(இந்திய திரையுலகில் நடிப்பில், நடனத்தில் அவர் ஆற்றிய பங்கிற்காக)

செவாலியே சிவாஜி கணேசன் மூத்த சாதனையாளர் விருது பெற்றவர்

கலைமாமணி ஸ்ரீ.வி.எஸ். ராகவன்
(மூத்த திரைப்பட நாடக நடிகர்)

பீஷ்மா விருது பெற்றவர்கள்


திரு. பிரம்ம ஸ்ரீ கல்யாண கிருஷ்ண சோமயாஜி (வேத பண்டிதர்)


அர்ஜூனா விருது பெற்ற வேணுகோபால் சந்திரசேகர் (டேபிள் டென்னிஸ் வீரர்)

திரு.ஏ.எல்.ராகவன் (மூத்த நடிகர் & பின்னணி பாடகர்)
திருமதி. எம்.என்.ராஜம் (பழம்பெரும் நடிகை)


திரு. ஃபிலிம்  நியூஸ் ஆனந்தன் (தமிழ் திரையுலகின் மூத்த பி.ஆர்.ஒ.)


திரு.விக்கு விநாயகம் (பிரபல மோர்ஸிங் மற்றும் கட வித்வான்)

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் பேசியதிலிருந்து :

“ரஜினியை போன்ற ஒப்பிட முடியாத குரு பக்தி கொண்டவர்களை பார்ப்பது அரிது. இந்தியா தயாரித்துள்ள மிகப் பெரிய நிகழ்வு அவர். (PHENOMENON). லதா ரஜினி அவர்கள் மிகவும் பாடுபட்டு இப்படி ஒரு அருமையான அற்புதமான விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் திட்டமிட்டு நிறைய உழைத்திருக்கிறார். அவரது அர்பணிப்பு என்னை வியக்க வைக்கிறது.”

சௌ.ஆஷா பரேக் பேசியதிலிருந்து :

நான் எனது திரையுலக பயணத்தை துவக்கிய ஷம்மி கபூர் அவர்களுடன் சேர்ந்து இந்த விருதை பெறுவதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். இந்த விருதுக்காக என்னை தேர்ந்தெடுத்த ஆஷ்ரம் பள்ளி நிர்வாகத்திற்கும், ரஜினி மற்றும் லத்தா தம்பதியினருக்கும் என் நன்றி.

திரு.வி.எஸ். ராகவன் பேசியதிலிருந்து :

எனது கலையுலக பயணத்தில் வாழ்க்கையில் நான் எத்தனையோ விருதுகளை பெற்றிருக்கிறேன். அவை யாவும் தந்த மகிழ்ச்சியைவிட இந்த கௌரவத்தை பெறுவதில் நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களுக்கு என்னுடைய நன்றியை எப்படி செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் இசைக் கலைஞன் என்றால் ஏதாவது இசைப்பேன் அல்லது பாடுவேன். நடனக் கலைஞன் என்றால் நடனம் ஆடுவேன். ஆனால் நான் ஒரு நாடக கலைஞன். எனவே, எனது நாடகத்திலிருந்து ஒரு சிறு வசனத்தை கூற விரும்புகிறேன். – (தொடர்ந்து ஒரு சரித்திர நாடகத்தின் வசனத்தை கூறினார்).

Full Gallery

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

18 Responses to “சூப்பர் ஸ்டார் அரங்கிற்கு வந்த அந்த தருணம் & பழமைக்கும், புதுமைக்கும் பாலமிட்ட ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா — COMPLETE REPORT WITH NEW PICS!!”

 1. BaluMahendran BaluMahendran says:

  so so so nice to see thalaivars close,fit and fine look after months,after all we waited for this.very well composed artical sundar gee.all i want to say is thalaivar just enjoying his holidays well. and i enjoyed your line "அவர் வரவே மாட்டார் என்றெல்லாம் அவர் கூறவில்லை" :) sundar's touch.seems you have noticed the entire event closely,feels me like i have attened the function.keep up your good work and keep us engaged :)

 2. Arun Arun says:

  fantastic article ……………….. no words to describe bro

  ——————————–
  Thank you buddy.
  - Sundar

 3. s.vasanthan s.vasanthan says:

  சுந்தர் அவர்கள் எங்களுக்காக நேரம் ஒதிக்கி கடுரையை அருமையாக தந்துள்ளிர்கள் ,

 4. s m mubarak nagore s m mubarak nagore says:

  சுந்தர் ஜி தலைவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று லதா அவர்கள் அடித்து சொன்னதற்கு உங்கள் கருத்து என்ன ?
  ஏன் அப்படி சொன்னார் அதற்கு தலைவர் ஏன் பதில் கூறாமல் இருந்தார் ப்ளீஸ் பதில்

  ——————————————-
  அது பற்றிய விளக்கம் இந்த பதிவிலேயே உள்ளது. முழுமையாக படிக்கவும்.
  - சுந்தர்

 5. muthu muthu says:

  சூப்பர் ..தலைவர் படம் அருமை..நன்றி சுந்தர் அண்ணா

 6. vasi.rajni vasi.rajni says:

  சுந்தர்ஜி விழாவை எந்த மீடியாவும் இந்த அளவுக்கு கவர் செய்யவில்லை. விருது பெற்றவர்களின் முகம் நமது ரசிகர்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த குறையை இப்பொழுது பறந்து விட்டது.

  .

  ஜி உண்மையை சொல்ல வேண்டும் என்றால், விழாவை காட்டிலும் விழாவில் லதா மேடம் தலைவரின் அரசியல் சம்மந்த பட்ட விஷயத்தை தெரிந்து கொள்ள தான் அதிகம் ஆர்வம் நம்மிடம் இருக்கிறது.

  .

  ஒரு மஞ்சள் பத்திரிக்கை இந்த செய்தியை பயங்கரமாக திரித்து எழுதியுள்ளது. என்ன செய்ய, அவர்களுக்கு எவரை பற்றியும் கவலை இல்லை. லாபத்திற்காக எதையும் செய்ய துணிவார்கள்.

  ,

  நிஜமாக நமது ரசிகர்களுக்கு இது வரலாறு காணத போறாத காலம். எந்திரனை முடித்து விட்டு உட்காந்து பேசி முடிவெடுப்போம் என்று தலைவர் சொன்னார். எந்திரன் வெளியானவுடன் சில மாதத்தில் அரசியல் களம் சூடு பிடித்தால், தலைவர் சற்று பொறுமை காத்தார். ஆனால், அதற்குள் தலைவர் நோய்வாய்பட்டு, இன்று வரை ஓய்வில் இருக்கிறார்.

  .

  ரசிகர்களின் மனநிலையை தலைவருக்கு நெருங்கியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பல காலகட்டத்தில் பல்வேறு அவமானங்கள், கேலிகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், விரக்தி, மன உளைச்சல் என நமது ரசிகர்கள் சக்தியே இன்று சோர்ந்து போய் உள்ளனர்.

  .

  நமது ரசிகர்களின் மனம் புண்படும் படி எதிர்காலத்தில் எந்த விஷயமும் நடக்க கூடாது என இறைவனை பிராத்திப்போம்.

  .

  .

  நீங்கள் எல்லாம் பெருமைப்படும்படி நான் நடந்துகொள்வேன் கண்ணா என்று தலைவர் கூறிய வார்த்தைகள் இன்னும் ரசிகர்களின் காதில் ஒலித்துகொண்டே உள்ளது. தலைவர் அதை மட்டும் செய்தல் போதும் ஜி.

  .

  rajni will rule tamil nadu

 7. rajni ramachandran rajni ramachandran says:

  கலக்கல் தலைவா,,வேறு எங்கும் கிடைக்காத பதிவு.
  நன்றிகள்,பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.(திரும்பவும் ஒரு நடிகர் வசூல் கிசூல் என்று ஆடிக்கொண்டிருக்கிறார்,ஒரு சவுக்கடியான பதிவு வேண்டும் சுந்தர்ஜி.)

  —————————————-
  அது நாம எதிர்பார்த்தது தான். இவனுங்களைஎல்லாம் ஒரு ஆளா மதிச்சி ரீயாக்ட் பண்ணனுமான்னு தான் யோசிச்சிக்கிட்டுருக்கேன்.
  - சுந்தர்

 8. SADIQUE SADIQUE says:

  மிக மிக நேர்த்தியாக விழாவை கவர் செய்து இங்கு பதிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்! உங்கள் பதிவு ஒவ்வொன்றும் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்கிறது! உங்களுடன் நாங்களும் அமர்ந்து விழாவை பார்ப்பது போன்று இருக்கிறது, ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது…!!! தலைவரது புகைப்படம் செம மாஸ்! உங்களுடன் வந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. தொடரட்டும் உங்கள் செம்மையான பணி!

  '''''''''''''''''''''''

  என்றும் நீங்கா அன்புடன்,

  சாதிக் (மதுரை)

 9. endhiraa endhiraa says:

  (திரும்பவும் ஒரு நடிகர் வசூல் கிசூல் என்று ஆடிக்கொண்டிருக்கிறார்,ஒரு சவுக்கடியான பதிவு வேண்டும் சுந்தர்ஜி.)

  —————————————-

  அது நாம எதிர்பார்த்தது தான். இவனுங்களைஎல்லாம் ஒரு ஆளா மதிச்சி ரீயாக்ட் பண்ணனுமான்னு தான் யோசிச்சிக்கிட்டுருக்கேன்.

  - சுந்தர்

  ஹஹா நான் கேட்க வேண்டும் என்ற கேள்வியை இவர் கேட்டிருக்கிறார் ! அனால் சுந்தர் ஜி வேறு பதில் தருவார் என்று நம்புகிறேன் !!

 10. Sankaranarayanan Sankaranarayanan says:

  சூப்பர் சுந்தர்ஜி……

  நேர்த்தியான kavarege அற்புதமான வரிகள். விழாவினை நேரில் பார்த்த பிரமிப்பு.

  ஒரு தலை சிறந்த பத்திரிக்கையாளர் பதிவுபோல் உள்ளது. கலக்குங்க.

  ப.சங்கரநாராயணன்

 11. R.Ramarajan R.Ramarajan says:

  Ungalodu sernthu partha unarvu. Thanks anna. That movie just released in 5 nearly half compared to ENTHIRAN theaters here. How they collect …

  ——————————————————
  It is usual publicity gimmicks. Just ignore it.
  You know the Tamil proverb ? "கேக்குறவன் ………………….. …………………. …………………….."
  - Sundar

 12. R.Ramarajan R.Ramarajan says:

  A fan chased Thalaivar's car in his bike. Thalaivar give advice to him. Do you read it?

  ————————————————-
  Ya… i read it in Tamilcinema.com
  - Sundar

 13. Ajas Ajas says:

  அருமையான பதிவு. நன்றி சுந்தர் அண்ணா.

 14. rajesh v rajesh v says:

  திரு. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (தமிழ் திரையுலகின் மூத்த பி.ஆர்.ஒ.)
  ——————————————————————————
  sundarji,

  i read some where that film news anandan spoke against thalaivar during one occassion.

  rajesh.v

  ——————————————
  Not one. In may occasions. (against Sivaji movie).
  Let’s ignore the past.
  (Thalaivar is apart from all these.)
  - Sundar

 15. R.Gopi R.Gopi says:

  // “இதனை அரசியலில் ஆர்வம் என்று யாரும் நினைத்து கொள்ள கூடாது. அரசியலுக்கு வருமாறு அவரை பலர் அழைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து தான் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதில்லை. வராமல் கூட செய்யலாம்” //

  வராமல் தான் செய்கிறார்…. வராமல் தான் செய்வார்… இது போதும்…. விடை கிடைத்து விட்டது….

 16. rajesh v rajesh v says:

  well written article sundarji

  rajesh.v

 17. Sudhagar_US Sudhagar_US says:

  Wonderful job Sundar….your hard work paid off!

  You made all of us sat in the auditorium & enjoyed the event. Thanks again for your sincere attempt.

 18. Shriram.T.K.L. Shriram.T.K.L. says:

  ரஜினி ரசிகர்களிடம் இருக்கும் ஒரு வினோதமான மனோபாவமே வசூல் வசூல் என்கின்ற ஒரு மாய கோட்டை தான். வசூல் படங்கள் என்பதை விட நல்ல படங்கள் தான் சமூகத்திற்கு தேவை..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates