Subscribe:Posts Comments

You Are Here: Home » Featured, Happenings » Tidbits # 65 : காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும் கோச்சடையானுக்கும் உள்ள தொடர்பு & எந்திரன் வசூல் சாதனை – மற்றுமொரு சான்று!

(PLEASE ALLOW THE BROWSER A FEW SECONDS TO LOAD THE PICTURES IN THE ARTICLE FULLY)

1) எந்திரன் வசூலை பறைசாற்றும் மற்றுமொரு சான்று!

2010 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் எந்திரன் அங்கிங்கெனாதபடி எங்கும் வசூல் மழையை அள்ளிக் கொட்டியது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் பாக்ஸ் ஆஃபீஸ் அதிர்ந்தது.

லட்சங்களை மட்டுமே எப்போதும் பார்த்து வரும் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் (2007 சிவாஜிக்கு பிறகு) மீண்டும் கோடிகளை பார்த்தனர்.

Please double-click the below image too ZOOM

பசிக்கு பால் கொடுத்த தாயின் மார்பையே அறுக்கும் கொடூரர்களைப் போல, நன்கு சம்பாதித்துவிட்டு கடைசியில் ‘நஷ்டம்’ என்று சில திரையரங்கு உரிமையாளர்கள் நாகூசாமல் சொல்லும் அவலமும் நடந்தது. (அதாவது வெள்ளைக் கணக்கில்!)

இந்நிலையில், ஹாலிவுட் vs பாலிவுட்டின் வசூல் புள்ளிவிபரங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.
எந்திரனின் வசூல் குறித்த புள்ளி விபரங்களை நீங்களே பாருங்கள்.

(வேறு எந்த தமிழ் திரைப்படமும் இந்த பட்டியலில் மருந்துக்கு கூட இல்லை!!!!!!!!!!)

2) ரகுவரன் மகனோட டின்னர் சாப்பிட விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சூப்பர் ஸ்டாரின் அன்புக்கு பாத்திரமானவர்களில் ஒருவர் காலம் சென்ற நடிகர் ரகுவரன். சூப்பர் ஸ்டாரும் இவரும் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் வெள்ளிவிழா படங்கள் தான். நடிகை ரோகினி இவரது மனைவி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். (கடைசி காலத்தில் இருவரும் பிரிந்திருந்தார்கள்).

ரோகிணியின் தற்போதைய ஒரே துணை அவரது மகன் ரிஷி தான். பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : “அப்பாவை பற்றி இப்போது பேசினாலும் உணர்ச்சி வசப்படுவான் ரிஷி. டீ.வி.யில் அவர் படம் போட்டால் மனதை அடக்கிக் கொண்டு படம் பார்க்கும் பக்குவம் இன்னும் வரவில்லை. ஒரு நிகழ்ச்சியின் ரஜினி சார் ரகுவை பற்றி நிறைய பேசினார். எந்நாளும் கட்டுப்படுத்த முடியலே. கலங்கிட்டேன். அப்புறம் ரஜினியே, “ரகு பையனை பார்க்கணும். ஒரு நாள் டின்னருக்கு கொட்டிட்டு வாங்க, அவனோட ஜாலிய பேசி அனுப்புறேன்’னு சொன்னார். கூட்டிட்டு போகணும்” என்றார், ரோகினி.

(சூப்பர் ஸ்டாரை பார்க்குறதே விருந்து தான். அவர் கூடவே விருந்து சாப்பிடுறதுன்னா?)

3) சூப்பர் ஸ்டாரின் படப் பெயர் வரிசையில் மற்றொரு படம்!

சூப்பர் ஸ்டாரின் படங்களின் பெயரை அவரது மருமகன் மட்டும் தான் பயன்படுத்தவேண்டுமா என்ன? நாங்களும் இருக்கோம்ல என்று அவ்வபோது சிலர் களத்தில் குதிப்பது வழக்கம்.

இது போன்று ரஜினி பட தலைப்புக்களை வேறு படங்களுக்கு வைப்பதை ரஜினி ரசிகர்கள் விரும்பவில்லை என்பது ஒரு புறமிருக்க, கதைக்கு பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் அவர் அந்த பெயர்களை வைப்பதில் தவறில்லை என்பது சிலரின் கருத்து. (ஆனா பில்டப் ஹீரோக்கள் விலகி நில்லுங்க ப்ளீஸ்!).

ஒரு படத்தின் தலைப்பில் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் தான் உரிமை உண்டு என்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதி. எனவே, ரஜினி பட தலைப்புக்களை தங்கள் படங்களுக்கு பிறர் வைப்பதை தடுக்க முடியாது. சில சமயம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் “நோ-அப்ஜெக்ஷன்” கடிதம் வாங்கி வரச் சொல்லுவார்கள்.

சமீபத்தில் அப்படி வந்திருக்கும் படம் தான் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கழுகு’. “ரஜினி சார் படத் தலைப்பு எங்களுக்கு பலம் தான். ஆனால், இந்த தலைப்பு தான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும்” என்று சொல்கிறார் ஹீரோ கிருஷ்ணா. கிடு கிடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலிருந்தும் விபத்தின் காரணமாகவோ, தற்கொலையினாலோ விழுந்து உயிர் துறப்பவர்களின் சடலங்களை மீட்டு வரும் ஒரு பாத்திரத்தில் கிருஷ்ணா நடித்திருக்கிறார். (உண்மையிலேயே வித்தியாசம் தாங்க!).

(ஹீரோயின் எப்படி? ! ஹி..ஹி..!!)

4) ‘கர்ணன்’ பார்த்துடீங்களா?

நடிகர் திலகத்தின் ‘கர்ணன்’ திரைப்படத்தை திட்டமிட்டபடி ஞாயிறு காலை ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கில் நண்பர்களுடன் கண்டுகளித்தோம். சூப்பர் ஸ்டாரின் படங்களை கைத்தட்டல்களுக்கிடையே திரையரங்கில் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு நடிகர் திலகத்தின் படத்தை அவ்வாறு பார்த்தது புதிய அனுபவம்.

ஏற்கனவே தொலைகாட்சிகளில், டி.வி.டி.க்களில் பலமுறை கர்ணனை பார்த்திருக்கிறேன் என்றாலும், வெள்ளித் திரையில் டிஜிட்டல் முறைப்படி மெருகூட்டப்பட்ட படத்தை பார்ப்பது ஒரு அசத்தல் அனுபவம்.

குழந்தைகளும், பெண்களும், இளைஞர்களும் படம் பார்க்க திரண்டு வந்திருந்தனர். 1964 ல் (அப்போ ஒரு டீ 0.06 பைசாவாம்! பக்கத்துல உட்கார்ந்திருந்தவர் சொன்னாரு!) வெளியான புராணப் படத்திற்கு 2012 ல் மறுவெளியீட்டில் பார்க்க இப்படி ஒரு கூட்டம் வருகிறதென்றால், அதை என்ன சொல்வது??? காலத்தால் அழியாத காவியம் என்பது இது தானோ????

நடிகர் திலகத்தின் பாதிப்பின்றி தமிழ் திரையுலகில் எவரும் நடித்துவிட முடியாது என்று ஒரு கூற்று உண்டு. படத்தை அகண்ட திரையில் பார்க்கும்போது (அவரின் சின்னச் சின்ன பாவங்களை கூட பார்த்து ரசிக்க முடிந்தது) அந்த கூற்று எந்தளவு உண்மையென்று புரிந்தது.

மொத்தத்தில் என் வாழ்க்கையில் பயனுள்ள வகையில் கழிந்த நேரங்களில் நேற்று ‘கர்ணன்’ படத்தை பார்த்த மணித்துளிகளும் அடங்கும்.

(படம் பார்க்கும்போது இடையே படத்தின் ரெஸ்பான்ஸ் குறித்து டுவீட் செய்தபடி இருந்தேன். உடனே நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. “இதென்ன நம்ம தலைவர் ரஜினி படமா? இதை இப்படி அப்டேட் பண்றீங்க?” என்று அதில் கேட்டிருந்தார். ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்! அவருக்கு பதில் எதுவும் சொல்லவில்லை!!!)

5) காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் ‘கோச்சடையான்’ சிற்பம் ?

கோச்சடையானுக்காக சூப்பர் ஸ்டார் கொடுத்த உக்கிரமான ருத்திர தாண்டவ போஸ் எது என்பதற்கான மூலத்தை கண்டுபிடித்தாகிவிட்டது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் காணப்பட்ட இந்த சிற்பத்தை புகைப்படம் எடுத்து நண்பர் ரவி என்பவர் அனுப்பியிருக்கிறார்.

சிற்பத்தில் உள்ளதை பார்க்கும்போது சிவபெருமான் குறித்து  யாரோ கடுந்தவம் செய்வது போலுள்ளது.

பாண்டிய மன்னனான கோச்சடையானின் சிற்பம் எப்படி பல்லவர்களின் தலைநகரான காஞ்சிக்கு வந்தது என்பது குறித்து, வரலாற்று ஆசியர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் விரிவான தகவல் வெளியிடப்படும்.

இடையே, சிற்பத்தை கண்டு ரசியுங்கள்.

(சென்ற ஆண்டு காஞ்சிபுரம் சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார். அப்போது அவர் இந்த சிற்பத்தை பார்த்திருக்ககூடும். அதில் கிடைத்த இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கலாம் மேற்படி ‘கோச்சடையான்’ போஸ்! கண்டுபிடிச்சிட்டோம்ல!!)

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

21 Responses to “Tidbits # 65 : காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும் கோச்சடையானுக்கும் உள்ள தொடர்பு & எந்திரன் வசூல் சாதனை – மற்றுமொரு சான்று!”

 1. sakthivel sakthivel says:

  Hats off your work.

  i want u to become a biggest shot in life and help the poor and needy people.

  this will sure happens ,if u r not selfish(i mean always think about thalaivar).

  Hurrayyy sundarrrrrrrrrrrrrrrr

 2. sakthivel sakthivel says:

  i want to add here one…..

  i will see ur blogspot and website minimum 5 times in office

  beleive it or not

  V(RAJINIFANS) willl do good things in future(i hope so)

 3. vasi.rajni vasi.rajni says:

  ரகுவரன் அவர்கள் நமது ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்த நடிகர். அவர் காலமாகி ஆண்டுகள் கழிந்தாலும் தலைவர் இன்னும் அவரை மறக்காமல் அவருடைய புதல்வரை பற்றி அக்கறை படுவது மிக பெரிய அச்சிரியத்தை தருகிறது.

  .

  தலைவரின் மனதில் என்ன உள்ளது என்பது என்பதை தெறித்து கொள்ள துடிக்காத ரசிகர்களே இல்லை எனலாம். தலைவர் என்றுமே பழசை மறப்பதில்லை.சமிபத்தில் சென்னை ரசிகர்கள் அடித்த போஸ்டர் பற்றி நினைக்கும் பொழுது பல விஷயங்கள் தோன்றுகிறது.

  .

  தன் மீது உள்ள அரசியல் எதிர்பர்பிற்க்கு ரசிகர்கள் மற்றும் காரணமில்லை என்று தலைவர் நன்கு உணர்ந்துள்ளார். தனக்கும் அதில் பெரிய பங்குள்ளது என்பதும் அவருக்கு தெரியும். இதை தான் அவர் 2008 ரசிகர் சந்திப்பில் நகைச்சுவையாக " சில நேரங்களில் நான் செய்வது கூட குழப்பமாகவே உள்ளது என்று" கூறினார்.

  .

  தலைவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்கு செல்லும் முன்பு கூட "உங்கள் அனைவரும் தலைநிமிர்ந்து வாழும் படி செய்வேன் கண்ணா " அன்று கூறியது அவர் சினிமாவில் சாதிப்பதை பற்றி கூறுகிறார் என்று எண்ணினால் அது முட்டல் தனம். தன்னை வாழவைத்த தமிழகத்தை காப்பாற்ற நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார்.

  .

  தற்பொழுது மாறிவரும் நிலை , புதிய அரசியலுக்கு தயாராகி வருகிறது. 1960 களில் தீண்டாமை, அறியாமை அகற்ற நாத்திக திராவிட அரசியலை பெரியார், அண்ணா மூலம் செயல்படுத்திய இறைவான். தற்பொழுது தெய்விக திராவிட அரசியலை நமது தலைவர் மூலம் செயல் படுத்த போகிறான். உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அரசியல் எழுச்சி தமிழகத்தில் தலைவர் மூலம் நடக்கும். நிச்சயம் நல்லவர்கள் வாக்கு பலிக்கும்.

  .

  rajnikanth will rule tamil nadu

 4. B. Kannan B. Kannan says:

  வழக்கம் போல் திட் பிட்ஸ் அருமை..

  நம் படம் 444 கோடிகள் வசூல் செய்தது என்று பல தளங்கள் kooriyadhu.. நம் சன் டிவி கூட 375 கோடிகள் என்று புள்ளி விவரம் சொன்னார்கள்..

  ஆனால் இந்த TOI யில் 250 கோடிகள் என்று கூறி உள்ளனர்..

  எது உண்மை சுந்தர்?

  //(படம் பார்க்கும்போது இடையே படத்தின் ரெஸ்பான்ஸ் குறித்து டுவீட் செய்தபடி இருந்தேன். உடனே நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. “இதென்ன நம்ம தலைவர் ரஜினி படமா? இதை இப்படி அப்டேட் பண்றீங்க?” என்று அதில் கேட்டிருந்தார். ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்! அவருக்கு பதில் எதுவும் சொல்லவில்லை!!!)//

  அது என்ன பழமொழி என்று சொல்ல முடியுமா சுந்தர்..

  சியர்ஸ்..

  பல கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,

  பா. கண்ணன்.

 5. GNANASEKAR GNANASEKAR says:

  உங்கள் ஆராய்சிக்கு எங்கள் மதுரை மாவட்ட மன்றம் சார்பாக எங்கள் வாழ்த்துகள் , திரையரங்கு உரிமையாளர்கள் நாகூசாமல் பேசிய வார்த்தைகளுக்கு சரியான பதிலடி.

 6. chithamparam chithamparam says:

  congratulations COLUMBUS]

  Can you clarify S.P.B sing the first song of KOCHADAIYAN

  We expect him for first song

  Its lucky for super star

  Can you tell to any one on the team

 7. chithamparam chithamparam says:

  சூப்பர் ஸ்டாரின் பன்ஞ், டயலாக்குகள் பகுதி 2
  http://vanavil7.blogspot.com/2012/03/2.html

 8. jayaramputtur jayaramputtur says:

  சூப்பர் …Tidbits ……….

 9. s.vasanthan s.vasanthan says:

  இந்த வரிசைப்படுத்தலில் தவறு உள்ளது ,என்திரன்,500 கோடி வரை வசூல் செய்தது , சிவாஜி 250 கோடிக்கு மேல் வசூல் பண்ணியது ,ஏன் நம்ம சந்திரமுகியே 150 கோடிக்குமேல வசூல் பண்ணிச்சு .

  ———————————
  In Bollywood, producers or exhibitors are always ready to give the statistics and collections. But here in TN, it is not an easy thing to milk information from them because of various reasons. So, it is natural that there will be a contradiction in statistics.

  Anyhow, our films securing place in such rankings itself a great news for us. So, just be contended with that.

  - Sundar

 10. Sankaranarayanan Sankaranarayanan says:

  சூப்பர் updates….. கலக்கல் செய்திகள். நன்றி சுந்தர்ஜி…….

 11. Anonymous says:

  எந்திரன் வசூல் சாதனை குறித்த TOI செய்தி எந்திரன் படத்திற்கு நிகராக வசூலித்ததாக சொன்ன படங்களுக்கு பேரிடி ….!……எப்பவுமே உண்மை தான் நிலைக்கும்…!

  சுந்தர் அண்ணாவுடன் கர்ணன் படத்தை ஸாரி காவியத்தை பார்த்தவர்களில் நானும் ஒருவன். படத்தை முதன் முதல் பார்க்கிறேன். ….பிரம்மித்துப் போய்விட்டேன்…தலைவர் படங்களை மட்டுமே விசிலடித்து பார்த்து எனக்கு/நமக்கு இது ஒரு புது அனுபவம்…!

  தலைவர் படங்கள் மட்டுமே ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியம் குறையாமல் இருக்கும்…..அந்த மாதிரி தான் கர்ணன் படமும்….ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியம், ஆச்சரியம், பிரம்மாண்டம்….! கர்ணனாய் வாழ்ந்த "நடிகர் திலகமாகட்டும்", கிருஷ்ணனை கண்முன் நிறுத்திய என்.டி ஆர் ஆகட்டும் ஒவ்வொருவரும் அற்புதம்….ஆச்சரியம்…! எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போல் "உள்ளத்தில் நல்ல உள்ளம் " பாடல் ……நெக்குருகிவிட்டேன் ஒரு கணம் ! மொத்தத்தில் என்றும் மின்னும் வைரம் – கர்ணன் ………!

  "கடமையைச் செய்; பலனை எதிர்பார் "

  உலக சூப்பர் ஸ்டாரின் முரட்டு பக்தன்
  விஜய் ஆனந்த்

 12. m nagendra rao m nagendra rao says:

  சூப்பர் !

 13. murugan murugan says:

  கோச்சடையானில் தலைவரின் ருத்ர தாண்டவத்தின் ரிஷி மூலத்தை அறிய உதவிய அந்த நண்பருக்கு எங்கள் நன்றிகள்!!!

  சுந்தர் ஜி எப்டி இப்டி ??? கலக்குங்க !!!

 14. seerethran seerethran says:

  ப்ளீஸ் நேசத் டைம் ற்றன்ச்லடே பண்ணுங்கே…ஏன் நண்பர்களுக்கு தமிழ் தெரியாது,…அவர்களும் ரஜினி சார் ரோடு திவிரே ரசிகர்கள்…எனளையும் ற்றன்ச்லடே பண்ணே கஷ்டமா இருக்கு…ப்ளீஸ்…நன்றி….்

 15. Praveen Praveen says:

  March 19 is an important day for thalaivar. It was on this day more than three decades ago Shivaji Rao Gaekwad, an aspiring actor, was renamed as Rajinikanth by mentor and ace director K Balachander.

 16. ARAN ARAN says:

  ஜி

  ரகுவரன் பற்றி கூறிய விஷயங்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது .தலைவரின் படங்களுக்கு ரகுவரன்,செந்தாமரை,நிழல்கள் ரவி ,சரத்பாபு ,ஜனகராஜ் போன்றவர்கள் என்றென்றும் மேருகேற்றியவர்கள் .குறிப்பாக Mark Antony இல்லாமல் பாட்ஷா இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

 17. dr suneel dr suneel says:

  கர்ணன் பார்த்துவிட்டு வருகிறேன்..

 18. manoj manoj says:

  Super article.

  Each section is explained in excellent ways.

  Tit bits has more more more news. for us !!!!

  Thalaiva

 19. Anonymous says:

  இந்த மாறி விஷயங்களை பார்க்கும் போது ஆச்சிரியமாகவும் ஆர்வமாகவும் உள்ளது!! தலைவருக்கு கணிப்பாக இதில் இருந்து தான் ஐடியா வந்திருக்கும்!! அப்படி இல்லை என்றாலும் இனிமேல் இந்த சிற்பத்திற்கு தனி மவுசு தான்!!! யாராவது கோச்சடையானுடன் போட்டோ எடுக்க விரும்பினால் இந்த கோவிலுக்கு சென்று எடுத்து கொள்ளுங்கள் :) :) :)

 20. PVIJAYSJEC PVIJAYSJEC says:

  இது ஒரு ஆரம்பம் தான்…

  தலைவரின் கோச்சடயான் திரைபடத்தின் சுவாரஸ்யமான பல தகவல்களை அறிய ஆவலாக உள்ளது …

  கண்டிப்பாக நமது தளத்தில் அதை நான் எதிர்பார்கிறேன் .

  என்றும் தலைவர் பக்தன்

  விஜய்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates