Subscribe:Posts Comments

You Are Here: Home » Superstar Movie News » ‘கோச்சடையான்’ – விழுப்புண்களும் போர்க்களத் தழும்புகளும் உருவாக்கிய பாடல்!

கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் பாடிய பாடல் எப்படியிருக்கும் என்பது குறித்து இப்போதே ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஆளாளுக்கு அது பற்றி விவாதித்தவண்ணமுள்ளனர்.

இதனிடையே, பாடல் பற்றி நாம் அளித்த முந்தைய பதிவு எந்தளவு உண்மை என்பது கவிஞர் வைரமுத்து கீழே கூறியிருப்பதை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த வார ஆனந்த விகடன் இதழில் கூறியிருப்பதாவது, “கூர்ந்த வாளும் தேர்ந்த மதியும் கொண்ட ஒரு போர் வீரன் உலகைப் பார்த்துப் பாடும் தத்துவப் பிரகடனமே அந்தப் பாடல். போர்க்கள விழுப்புண்களையும்  அனுபவ வடுக்களையும் சுமந்த மாவீரன் கோச்சடையான், தன் வாழ்வின் அனுபவங்களை தத்துவார்த்தமாக வெளிப்படுத்துகிறான். ஒரு சிறிய வட்டத்துக்குள் செதுக்கிய பாடல் அல்ல இது; வாழ்வின் கடைசி எல்லை வரை சென்று வார்த்து எது எடுத்த பாடல். மனைவி, மக்கள், வெற்றி, தோல்வி, நண்பன், எதிரி, ஜனனம், மரணம் என அனைத்தையும் உரைக்கும் பாடல் இது.”

பாடல் பதிவாகும் அந்தக் கணம் வரை சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாடவிருக்கும் விபரம் தெரியாதாம்.

ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கு இயக்குனர் சௌந்தர்யா, சூப்பர் ஸ்டார் மற்றும் வைரமுத்து ஆகியோர் சென்றதும், அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. ரஹ்மான் ஒரு மெல்லிய புன்சிரிப்போடு, “நீங்களே இதை பாடிடுங்க சார்” என்று இசைப்புயல் சொன்னபோது, ரஜினி அவர் ஏதோ தமாஷ் தான் செய்கிறார் என்று நினைத்தாராம்.

ரஜினி சற்று தயங்க, “நாங்க இருக்கோம். நீங்க ஜமாய்ங்க” என்ற அர்த்தத்துடன் ரஹ்மானும், வைரமுத்துவும் பார்க்க எந்த வித ரிகர்சலும் இல்லாமலேயே கணீரென்று பாடத் துவங்கிவிட்டார் கோச்சடையான்.

ஆக சூப்பர் ஸ்டாரிடமே அவரது மகள் நாடகம் ஒன்றை நடத்தி அதில் நடிக்கவும் வைத்துவிட்டார்.

“பாடல் சரித்திர காலத் இலக்கணத் தமிழில் அமைந்துள்ளது என்பதால், என்னை அருகிலேயே இருக்கச் சொன்னார் ரஜினி” என்கிறார் வைரமுத்து. அவர் கூறிய சிறு சிறு திருத்தங்களை ஒரு சிறு குழந்தைப் போல ஏற்றுக்கொண்டு பாடி முடித்தார் ரஜினி.

காலங்கள் மாறிவிட்டது. காட்சிகள் மாறிவிட்டது. திரையுலகம் மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டனர். ஏன் எல்லாமே மாறிவிட்டது.

மாறாதது ரஜினியும் அவரது தொழில் பக்தியும் தான். அபூர்வ ராகங்களில் ஆரம்பித்த இந்த அர்ப்பணிப்பு, கோச்சடையான் வரை தொடர்வதில் ஆச்சரியமில்லை.

——————————————————–
Also check…
சூப்பர் ஸ்டார் பாடிய பாடல் எப்படியிருக்கும்…? இப்படி இருக்கும்!!!
http://onlysuperstar.com/?p=14188
——————————————————–

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

7 Responses to “‘கோச்சடையான்’ – விழுப்புண்களும் போர்க்களத் தழும்புகளும் உருவாக்கிய பாடல்!”

 1. Anonymous says:

  நமது சுந்தர் அவர்கள் முன்பு எழுதியது போல் -

  எம்.ஜி.ஆருக்கு வாலி என்ற காலம் முன்பு இருந்தது.

  அது போல் ரஜினிக்கு ஏற்ற பாடல்கள் செதுக்க

  வைரமுத்து வல்லவர். செண்டிமெண்ட் காரணங்களுக்கு

  வாலி intro song எழுதினால் நலம். இந்தப் படத்துக்கு

  வாலி பாட்டு எழுதறாரா, என்ன, தெரியல.

  ரகுமான் அண்ணே – டைட்டில் சாங் பாலு சார் பாடட்டும்!

  thanks அண்ணே.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 2. Sharath Sharath says:

  http://www.youtube.com/watch?v=3FaDToxPYUY

  This is my guess on how the song will be. Ofcourse, there will be little change in the emotion. This song has valour. Kochadaiyan's song will be little mellowed down.

  ————————————-
  Class & Mass. Thanks Sharath.
  - Sundar

 3. RAJINIROX G.Udhay RAJINIROX G.Udhay says:

  //காலங்கள் மாறிவிட்டது. காட்சிகள் மாறிவிட்டது. திரையுலகம் மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டனர். ஏன் எல்லாமே மாறிவிட்டது.

  மாறாதது ரஜினியும் அவரது தொழில் பக்தியும் தான். அபூர்வ ராகங்களில் ஆரம்பித்த இந்த அர்ப்பணிப்பு, கோச்சடையான் வரை தொடர்வதில் ஆச்சரியமில்லை

  //

  அருமையான மற்றும் அழகான பதிவு….

  என்றும் தலைவர் வழியில் ரஜினிராக்ஸ் ஜி.உதய்..

 4. murugan murugan says:

  தலைவர் தலைவர் தான் !!!

 5. B. Kannan B. Kannan says:

  //ரஜினி சற்று தயங்க, “நாங்க இருக்கோம். நீங்க ஜமாய்ங்க” என்ற அர்த்தத்துடன் ரஹ்மானும், வைரமுத்துவும் பார்க்க எந்த வித ரிகர்சலும் இல்லாமலேயே கணீரென்று பாடத் துவங்கிவிட்டார் கோச்சடையான்.

  காலங்கள் மாறிவிட்டது. காட்சிகள் மாறிவிட்டது. திரையுலகம் மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டனர். ஏன் எல்லாமே மாறிவிட்டது.

  மாறாதது ரஜினியும் அவரது தொழில் பக்தியும் தான். அபூர்வ ராகங்களில் ஆரம்பித்த இந்த அர்ப்பணிப்பு, கோச்சடையான் வரை தொடர்வதில் ஆச்சரியமில்லை.//

  சூப்பர்.. இதற்க்கு மேல் அருமையாக சொல்ல முடியாது..

  இந்த அப்டேட் தந்ததற்கு நன்றி சுந்தர்..

  Global super star always rocks..

 6. gayatri gayatri says:

  எப்படி இவளவு அழாக இருகிங்க..

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates