Subscribe:Posts Comments

You Are Here: Home » Superstar Movie News » 80% வரலாறு; 20% நிகழ்காலம் – ‘கோச்சடையான்’ ஆச்சரிய தகவல்கள்!

‘கோச்சடையான்’ படத்துக்காக படத்தின் டீம் எந்தளவு ஒவ்வொரு விஷயத்திற்கும் மெனக்கெடுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

சூப்பர் ஸ்டாரின் கெட்டப், அவருக்கான மேக்கப், அவரது காஸ்ட்யூம், உடன் நடிக்கும் நடிகர்களின் காஸ்ட்யூம், அவர்களது மேக்கப் உள்ளிட்ட பல நுட்பமான விஷயங்களுக்கு கூட ஒரு மிகப் பெரிய ஹோம் வொர்க்கே சத்தமின்றி செய்துள்ளது கோச்சடையான் டீம்.

படத்தில் இடம்பெறும் போர்க்களக் காட்சிகளுக்காக தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான அத்துனை வரலாற்று திரைப்படங்களையும் தேடிப் பிடித்து போட்டு பார்த்து, குறிப்புகளை சேகரித்திருக்கிறார்கள். அது மட்டுமா, 80% வரலாற்று படமாக உருவாகும் கோச்சடையான் 20% நிகழ்காலத்தில் நடப்பது போலரயுக்குமாம். (மகதீரா போல). ரானாவுக்கும் இந்த கான்செப்ட் தான் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது ஒரு LIVELINESS வேண்டி கோச்சடையானுக்கும் அதே கான்செப்ட்டை கையாளவிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாருக்கு மொத்தம் இதில் மூன்று கெட்டப்புக்களாம். கேட்கவே குதூகலமாக இருக்கிறதல்லவா.

அதுமட்டுமா படத்தில் காமெடியன்களும் நிறைய பேர் உண்டாம். அதில் நாகேசுக்கு இரட்டை வேடமாம. தவிர கே.ஏ.தங்கவேலுவும் உண்டு. (மன்னார் & கம்பெனி புகழ்).

சரி… மொத்த விஷயத்தையும் சொன்னா எப்படி… கீழே கொடுத்திருக்கிற குங்குமம் வார இதழோட ஸ்கேனிங் பக்கங்களை படிங்க!!

DOUBLE CLICK THE IMAGES TO ZOOM & READ

Page 1

Page 2

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

9 Responses to “80% வரலாறு; 20% நிகழ்காலம் – ‘கோச்சடையான்’ ஆச்சரிய தகவல்கள்!”

 1. Mohamedamhar Mohamedamhar says:

  Wooo…wooo…super superstarna athu rajini mattumthan kochadayanin talaivar round katti adippar..

 2. Sudhagar_US Sudhagar_US says:

  இப்போவே சும்மா பல்ஸ் எகுறுதே….20% நிகழ்காலம் என்பது உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி ஏனென்றால் அவதாரும் சரி, மகதீரவும் சரி நிகழ்காலத்தோடு சேர்ந்து பயணித்ததால் தான் அதனுடைய உழைப்பை முழுமையாக பார்வையாளர்கள் உணர முடிந்தது. அத்தோடு motion capturing technology-யோடு நிகழ்காலமும் பயணித்தால் படம் நெடுக ரசிகனை அதே உற்சாகத்தோடு வைத்திருக்கலாம்.

 3. s.vasanthan s.vasanthan says:

  தலைவருக்கு நன்றாக தெரியும் தன்னை ரசிகர்கள் உட்பட எல்லோரும் எப்படி பார்க்க விரும்புகிறார்கள் என்று ,அதற்கேற்ப கண்டிப்பா அசத்துவார் ,சுதாகர் us ,எழுதியிருக்கும் கருத்து,நம் எல்லோரது எண்ணமும் அதே .

 4. murugan murugan says:

  என்ன சுந்தர் ஜி இப்பவே ஹார்ட் பீட்ட இப்டி எகுற வெக்கிரீங்க!!!

 5. KOCHADAIYAAN telugu rights got by Laxmi Ganapathi films with whopping record price . please tell the detail in kungumam scan image because i am not able to read it (using nokia 2626 via uc Browser)

 6. B. Kannan B. Kannan says:

  வாவ்.. படிக்கவே இப்படி என்றால் படத்தில் பார்க்க எப்படி இருக்கும்..

  எப்பா!!!!!! சூப்பர் ஸ்டார் ஸ்டைலில்

  "சும்மா அதிருதில்லே"..

 7. RAJA RAJA says:

  இதில் எது உண்மை எது பொய் என்று ஆராய்வதை விட வரு செய்திகளை எல்லாம் ரசித்து ருசிக்க வேண்டியது தான் தலைவா எப்பொழுது தீபாவளி வரும் என்று இருக்கிறது

 8. PREMANAND RAMARAJU PREMANAND RAMARAJU says:

  விஷயங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் குங்குமம் இதழை எந்த அளவிற்கு நம்புவது என்று தெரியவில்லை. விற்பனைக்காக தலைவர் நடிக்கப்போகும் படத்தைப்பற்றி இதற்கு முன்னாள் பலவாறு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். சுவாரஸ்யமாக இருக்கும், எனக்கு தெரிந்து 20 சதவிகிதம் கூட உண்மையாக இருக்காது.

 9. k. saravanan k. saravanan says:

  சூப்பர்

  தலைவர் இந்த படத்து மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க போறார் நண்பர்களே

  இது என் கற்பனையாக கூட இருக்கலாம். ஆனா அவர சுவாசிக்கும் ரசிகன் என்பதால் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

  நம்பர் ஒன்று தன பெண் ஆகிய சௌந்தர்யாவின் திறமைகளை இந்த உலகுக்கு காட்ட இது ஒரு தருனமாக யோசித்துள்ளார். உண்மையில் அனிமேஷன் படத்தை விட தலைவர நடித்து அதில் எக்ஸ்ட்ரா அனிமேஷன் என்று வரும்போது அது ஹிட் ஆகும் அதனால் அவர் யோசனை அருமையானது

  நம்பர் இரண்டு அவர் உடல் புத்துணர்ச்சி அடைந்தாலும் தான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது அதனால் ரசிகர் குடும்பம் எல்லோரையும் திருப்தி படுத்த விரைவான படம் மற்றும் மகளுக்கு வாய்ப்பு என செய்து உள்ளார்.

  நம்பர் மூன்று இது ஒரு முக்கியமான ஒன்று. தலைவருக்கு அரசியல் பிடிக்காது என்று நினைக்கிறோம் ஆனால் தலைவர் தனக்குள் ஒரு மிக உன்னதமான நேர்மையான துணிவான மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற மிக மிக எவரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு கற்பனை ஆனால் உண்மையான ஆவல் ஒன்று ஒளிந்து இருப்பதையும் அதை மன்னர் என்ற வடிவில் இந்த படத்தில் காட்டுவார் என்றும அனால் அது இந்த கால வாழ்கைக்கு ஒத்து வருமா என்பது மக்களுக்கே புரிந்து உணர்ந்து எது மன்னர் பதவி என்றும் இது தான் மன்னன் என்று உணர்த்தும் வாய்ப்பாக இதை பயன் படுத்துவார் என்றும் என்னோட நினைவில் தலைவரை நினைக்கிறேன்.

  இது கற்பனையாக இருக்கலாம் அனால் இதில் உண்மை கண்டிப்பாக இருக்கும் நாடோடி மன்னன் எம் ஜி ஆர் அவர்களுக்கு மக்கள் ஆட்சி பற்றி சொல்ல வாய்ப்பு கிடைத்தது போல் தலைவருக்கும் சரி நமக்கும் சரி இது வாய்ப்பாக இருக்கும் என்று கடவுள்ளை நினைக்கிறன்.

  சுந்தர் சார் ஓவரா பேசிட்டனா…

  ———————————————–
  பாசிட்டிவான நல்ல சிந்தனை. இது தான் உண்மையும் கூட.
  வாழ்த்துக்கள் & நன்றி!!
  - சுந்தர்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates