Subscribe:Posts Comments

You Are Here: Home » Featured, Superstar Movie News » பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பாட்ஷாவுக்கு கிடைத்த பட்டாசு வரவேற்பு – இசையமைப்பாளர் தேவா கூறும் ‘அடேங்கப்பா’ செய்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து 1995 இல் வெளியாகி தென்னிந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாட்ஷா’ திரைப்படம் இப்பொழுது இந்தியில் புதிய தொழில் நுட்பத்தில் டப்பிங் செய்யப்பட்டு ‘பாஷா’ என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தை பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிப்பில் பத்ரகாளி பிரசாத் என்பவர் தயாரிக்கின்றார்.

இத்திரைப்படத்திற்காக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் மேற்பார்வையில் தயாரிப்பாளர் பத்ரகாளி பிரசாத் அவர்கள் டிஜிட்டல் கலர் டெவலப்பிங் செய்து புதிய நெகட்டிவ் தயார் செய்துள்ளனர். (பிரிசம் அண்ட் பிக்சல்ஸ்).

இப்படத்தின் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள் மறுபடியும் புதியதாக புதிய தொழிற்நுட்பத்தில் இசையமைத்துள்ளார். பாட்ஷா திரைப்படம் ஸ்டீரியோ போனிக் 5-1 (Sterio Phone 5-1 Channel) தொழில்நுட்பத்தில் இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வசனகர்த்தா கோபால் ராம் இப்படத்தில் வசனம் எழுதியுள்ளார். இவர் 111 படத்திற்கு மேல் வசனம் எழுதியுள்ளார். பாடல்களை கோபால் ராம் மற்றும் இண்டீவர் எழுதியுள்ளனர். இதன் பாடல்களை ஜேசுதாஸ், SPB, உதித் நாராயன், சித்ரா, கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் ஷானு, பூர்ணிமா ஆகியோர்
பாடியுள்ளனர்.

இத்திரைப்படம் வட இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகிறது.

இத்துனை ஆண்டுகள் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து வெளியானாலும், இன்னும் பரபரப்பையும் மாபெரும் வரவேற்ப்பையும் இந்த படம் பெறுவது குறித்து படத்தின் இசையமைப்பாளர் தேவா அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு நமது தளத்திற்காக கேட்டோம்.

அதற்கு திரு.தேவா கூறியதாவது :

“ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம், பிரசாத் லேப்ல படத்தோட ட்ரெயிலர் லான்ச் நடந்துச்சு. என்னை சீஃப் கெஸ்டா கூப்பிட்ருந்தாங்க. 1995 இல் படம் ரிலீஸ் ஆனப்போ என்ன ரெஸ்பான்ஸ் இருந்திச்சோ அதே அளவு ரெஸ்பான்ஸ் இப்பவும் இருந்திச்சு என்பது மிகப் பெரிய அதிசயம்.”

“இத்தனைக்கும் வந்தவங்க யாரும் பப்ளிக் இல்லே. பெரும்பான்மையானவங்க பத்திரிக்கைகாரங்க மற்றும் டெலிவிஷன் நண்பர்கள் தான். ஆட்டோக்காரன் பாட்டுக்கு முதல் நாள் ரிலீசப்போ எப்படி இருந்ததோ அதே க்ளாப்ஸ் அதே விசில் இப்போவும் வந்தது. நான் மெய்மறந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டுருக்கேன். சூப்பர் ஸ்டார் எம்ப்ளம் காட்டும்போதும் சரி… ஆட்டோக்காரன் பாட்டுல அவரோட என்ட்ரியை காட்டும்போது சரி… அப்படி ஒரு ரெஸ்பான்ஸ் தியேட்டர் ஃபுல்லா. அதான் நான் ஒரு நிமிஷம் யோசிச்சேன். காலைல தான் பேப்பர் பார்த்தேன். “சூப்பர் ஸ்டார் நான் இல்லே. அமிதாப் பச்சான் தான் சூப்பர் ஸ்டார்” அப்படின்னு சொல்லியிருக்கிறாரே… ஆனா 17 வருஷம் முன்னாடி வந்த ஒஉர் படத்துக்கு இப்போ கூட இப்படி ஒரு ரெஸ்பான் இருந்தது எனக்கு ஆச்சரியம் இருந்திச்சி. இத்துணைக்கும் வந்தவங்க பப்ளிக் இல்லே. ஜஸ்ட் பிரஸ் தான்.  எப்படியும் இந்த படத்தை ஒவ்வொருத்தரும் நாலஞ்சு முறை பார்த்திருப்பாங்க. அப்படி இருந்தும் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்குதுன்னா… அவர் அமிதாப்பை சொன்னாலும் உண்மையிலேயே ரஜினி தான் சூப்பர் ஸ்டார். ரஜினி சார் பெருந்தன்மையில அப்படி சொல்லியிருக்கணும். ஆனா உண்மையில் இவர் தான் சூப்பர் ஸ்டார்.”

“இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?”

“ரஜினி தான். வேறென்ன இருக்க முடியும்? நான் நேத்து கூட பத்திரிக்கை நண்பர்கள் கிட்டே சொன்னேன்… இப்போ கூட யார் என்னை எங்கே பார்த்தலும் சரி… என்னை பார்த்தா APPRECIATE பண்ற படம் பாட்ஷா தான்.”

“அது உங்களோட அடையாளம் மாதிரி ஆயிடிச்சு சார்”

“ஆமாம்.. இதுவரைக்கும் சுமார் 400 படங்களுக்கும் மேல நான் பண்ணிட்டேன். எத்தனையோ பாட்டுக்கள் ஹிட் கொடுத்திருக்கேன். ஆனாலும் எல்லாரும் என்னை அட்ரஸ் பண்ற படம் பாட்ஷா தான்!”

“வெரி குட்.. வெரி குட் சார். கேட்கவே சந்தோஷமா இருக்கு சார்”

“ஆக்சுவலா படத்தோட ப்ரொட்யூசர் என்னை இந்த பங்க்ஷனுக்கு கூப்பிட்டார். சுரேஷ் கிருஷ்ணா சாரை கூட கூபிட்டிருந்தோம். ஆனா அவரால வரமுடியலே. நீங்க வந்து ட்ரெயிலரை ரிலீஸ் பண்ணனும்னு கேட்டுகிட்டார். எனக்கு வேர் ஒரு நிகழ்ச்சி இர்ந்திச்சு. அதை கான்சல் பண்ணிட்டு இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன் நான். காரணம்  எனக்கு முகவரி காட்டிய படம் இது. ரெண்டாவது… ஹிந்தி சிங்கர்ஸ்லாம் என்னோட மியூசிக்ல பாடியிருக்காங்க. நெகடிவ்வை புதுசா ரெடி பண்ணி, கலர் கரக்க்ஷன் பண்ணிருக்காங்க. தவிர டைட்டில் மியூசிக்கை புதுசா நான் ரெடி பண்ணி கொடுத்திருக்கேன். படம் ரொம்பா நல்ல வந்திருக்கு.”

படத்தை நண்பர்களோட பார்க்கவிருப்பதாக கூறினேன். சந்தோஷப்பட்டார் தேவா. நன்றி கூறி விடைபெற்றேன்.

FANTASTIC TRAILER OF BAASHAA – DON’T MISS

VIDEO

VIDEO URL :
http://www.youtube.com/watch?v=ONKXqPlDITc
———————————————
‘பாட்ஷா’ படைத்த வசூல் சாதனை என்ன?
விரைவில் ஒரு சூப்பர் ஸ்பெஷல் பதிவு!
———————————————

[END]

Share and Enjoy:
 • Print this article!
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks

6 Responses to “பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பாட்ஷாவுக்கு கிடைத்த பட்டாசு வரவேற்பு – இசையமைப்பாளர் தேவா கூறும் ‘அடேங்கப்பா’ செய்தி!”

 1. Mohamedamhar Mohamedamhar says:

  Batsa News superb.'kochadayan' patthi ennoda karutthu.suntar ji..

  “‘கோச்சடையான்’

  எல்லைகளை கடந்து சாதனை படைத்து உலக

  சினிமாவில் புதிய

  சரித்திரம் படைக்கும்!

  Rajini rocks..

  IT WILL BE REALLY BEATING

  RECORDS… COME ON

  THALAIVAAAAAAA… WE ARE

  ALL WAITING FOR YOU…. “LOVE

  YOU THALAIVAAAA…

  ALWAYS WITH YOUR WAY

  RAJINIROX.furter

  Thalaivar looking great…sure this

  gonna be to break all record

  and create new records beyond

  Sixers.

  Best of luck to kochadaiyan team.

  and I pray for the team.

  Thalaivar rockz always…

  We set Records and we Break

  Records..

  Thalaivar and his Lovely fans

  rocks forever.

  kochadayan movie win ascar award…classic award…filmfare award…nathional award…i sure thing.

  Good news Next movie ‘ Rana ‘

  intha technolagy use pannalam

  Thalaivarai Animatiom il athuvum

  kan munne 3D il parpathu puthu

  anupavamaga irukum. I like

  animation films Toystory, Ice age.

  But KOCHADAIYAAN will

  different genre

  kochadaiyaan.

  script nala panni irundhu …

  andha 3D and animated

  conversion …avatar levalukku

  irundha ..Padam sure success.

  thalaivar solra mathiri .periya

  task-a irukkum pola . ..screenplay

  …post production …double work

  irukkum pola irukku. praying for

  huge succes…

 2. Baashaa will rock like ROBOT. Mumbai don arrive soon

 3. seerethran seerethran says:

  மலேசியா got realease ah??

 4. RAJA RAJA says:

  அப்படி ஏ தமிழ் ளையும் கர்ணன் மாதிரி ,பாட்ஷா வ டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாதி ரீ ரிலீஸ் பண்ணுங்க தமிழ்நாட்டு சினிமா தியர் அதிபர்கள் பணம் பாத்து ரொம்ப நாள் ஆச்சாம்

 5. m.maanickavasagm m.maanickavasagm says:

  சுந்தர் சார் உங்க அப்டேட் சூப்பர் தலைவர் ஹிந்தி வேர்சின் சூப்பர் நன்றி ம.மாணிக்கவாசகம்

 6. kochadaiyaan kochadaiyaan says:

  அண்ணாமலை songs kooda soopera thaan irundhdhu !!:) deva justified in all his three movies …:claps: namma paya pullainga .."muthu" paattu arambathula kettuttu nalla illannu kallu ellam vittatha gnabagam :) ….they started comparing and complaining ..Deva alavukku illappa nnu :) …:D

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates