Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Photo Buzz 3: படப்பிடிப்பில் ரஜினியின் எளிமை

ganguvaamj 641x1024  Photo Buzz 3: படப்பிடிப்பில் ரஜினியின் எளிமைடப்பிடிப்பு தளங்களில் ரஜினியின் எளிமை ஊரறிந்த ஒன்று. வெளிப்புறப் படப்பிடிப்பானாலும் சரி, செட் போட்டு நடக்கும் படப்பிடிப்பானாலும் சரி, ரஜினி தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற எண்ணமின்றி மிகவும் எளிமையாக தான்  நடந்துகொள்வார்.

பல படப்பிடிப்புக்களில் சூப்பர் ஸ்டார் எந்தளவு எளிமையாக நடந்துகொண்டார் என்று நாம் பலமுறை படித்திருப்போம் கேள்விப்பட்டிருப்போம்.

இதோ, நமது பிரத்யேக புகைப்படத் தொகுப்பிலிருந்து ஒரு படம் உங்களுக்காக.

கோலிவுட்டில் சும்மா முகத்தை கர்சீப்பால் துடைப்பதற்கு கூட கேரவனுக்கோ அல்லது தனியறைக்கோ ஓடும் நட்சத்திரங்களுக்கு நடுவே, தமது மேக்கப்பை எத்துனை சிம்பிளாக சும்மா காரின் மீது உட்கார்ந்தே போட்டுக்கொள்கிறார் சூப்பர் ஸ்டார் பார்த்தீர்களா? (முழு மேக்கப்பும் இப்படி தான் போட்டுக்கொண்டார்). இதில் கூட தலைவர் என்ன ஸ்டைலாக இருக்கிறார் பார்த்தீர்களா? இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், அன்றிலிருந்து இன்றுவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்களில் அவர் அதே எளிமையுடன் தான் நடந்துகொள்கிறார் என்பது தான்.

‘சிவாஜி’ படப்பிடிப்பின் போது சுமனின் உதவியாளராக நடித்த போஸ் வெங்கட், தமக்கு நேர்ந்த அனுபவம் பற்றி கூறியிருந்ததையும், காஸ்ட்யூமை மாற்ற கேரவன் அது இதுவென்று ஓடாமல் ஜஸ்ட் ஓப்பனாக சூப்பர் ஸ்டார் தமது உடுப்புக்களை மாற்றிகொண்டதை பற்றியும் அவர் மற்றும் அவரது குடும்பத்தார் சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட பிரத்யேக புகைப்படங்களுடன் நாம் நமது Onlysuperstar.blogspot.com இல் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்தோம்.

http://onlysuperstar.blogspot.com/2008/06/when-superstar-changed-his-outfit-in.html

‘கங்குவா’ படப்பிடிப்பு

நீங்கள் மேலே காணும் படம் 1984 ஆம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்ற “கங்குவா” படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படமாகும். தமிழில் வெளியான “மலையூர் மம்பட்டியான்” படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இந்த கங்குவா. ஹிந்தியில் மிகப் பெரிய வெற்றியை குவித்த இப்படம் சுமார் 50 வாரங்கள் ஓடியது உங்களுக்கு தெரியுமா?. (அன்றைக்கே ஹிந்தியில் சாதனை படத்தைவர் தலைவர்! Mind it!!) இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தது புகழ் பெற்ற நடிகை ஷபனா ஆஸ்மி.
——————————————————————
Want to check Photo Buzz 2?
Here it is:
http://onlysuperstar.com/?p=4134
——————————————————————
[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

15 Responses to “Photo Buzz 3: படப்பிடிப்பில் ரஜினியின் எளிமை”

  1. endhiraa endhiraa says:

    கலக்குறீங்க சுந்தர் ஜீ !!

  2. BP BP says:

    Very nice picture.. with sytle…
    whatever he does – he is simply great

  3. murugan murugan says:

    தலைவர் எப்பொழுதுமே பணம், பட்டம், புகழ், பதவி இவைகளின் பின்னால் சென்றதில்லை – இவை அனைத்தும் தான் தலைவரை தேடி தாமாக வந்துகொண்டுஇருக்கின்றன – இதற்க்கு முக்கியக்காரணம் தலைவரின் எளிமையும் பொறுமையும் தான் – அவர் எப்பொழுதுமே யோசிக்காமல் பேசமாட்டார் பேசிய பிறகு யோசிக்கமாட்டார் – தலைவா உங்கள் ரசிகராய் இருப்பதே எங்கள் அனைவருக்கும் பெருமை – உங்கள் ஆணைக்காக காத்திருக்கிறோம் – என்றென்றும் உங்களுடன்

  4. போஸ் வெங்கட் போல, தலைவருடன் நடித்தவர்களின் கருத்தை இங்கே எதிபார்க்கிறேன்.

  5. tveraajesh tveraajesh says:

    கங்குவா தமிழ் மற்றும் தெலுகு பதிப்பை விட நன்றாக ஓடிய படம். தலைவர் இறக்கும் கிளைமாக்ஸ் காட்சி மனதை விட்டு நீங்காத ஒன்று.
    டைரக்டர் ராஜசேகர் ரஜினிக்கு நல்ல கெமிஸ்ட்ரி அவர் இயக்கிய தர்மதுரை படத்தின் நூறாவது நாளில் தான் அவர் இறந்தார். இன்று அவர் இருந்திருந்தால் ரஜினிக்கு பல வெற்றி படங்களை தந்திருப்பார்.

  6. kalidass kalidass says:

    கங்குவா இங்கு லட்சத்தில் ஒருவன் என்று வந்தது . தலைவர் பின்னிருப்பார் .

  7. Unmai Sudum Unmai Sudum says:

    அரசியல் அனாதை kalidass,

    லட்சத்தில் ஒருவன் — Mega Flop Movie.

    —————————————————
    திரு. உண்மை சுடும் அவர்களே, (காமராஜ், வீரமுரசு அவர்களே),

    உங்களுக்கான பதிலை நண்பர் TVE ராஜேஷ் கூறிவிட்டார். காளிதாஸ் அவர்கள் ஏதோ விபரம் தெரியாது கூறிய தகவலுக்கு, நீங்கள் ஏன் இத்துணை அலட்டிக்கொள்கிறீர்கள்?

    மேலும் தமிழக அரசியல் என்னும் தர்மயுத்தத்தில் தற்போது நடந்துகொண்டிருப்பவை காமெடி காட்சிகள். ஏதோ நீங்கள் இறுதி யுத்தத்தில் வெற்றிபெற்று கோட்டையை பிடித்தது போல பேசுகிறீர்கள்…

    சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவரின், பெயர் நினைவில் இல்லை, ஒரு வார பத்திரிகையில் கூறிய என்னை கவர்ந்த கேள்வி பதில் ஒன்றை கூறுகிறேன்.

    கேள்வி: நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என இரு டஜனுக்கு மேற்பட்டோர் தமிழகத்தில் வருங்கால முதல்வர் கனவில் மிதக்கிறார்கலே, அது நடக்காமல் போனால் எங்கு போவார்கள்?

    பதில்: வேறு எங்கே… கீழ்பாக்கத்துக்கு தான்!!

    (இவ்வுலகில் அனைத்தும் நிலையற்றது நண்பரே… அதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.)

    - சுந்தர்

  8. harisivaji harisivaji says:

    எனக்கு இது புதிது ரஜினி இப்படி ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருப்பது எனக்கு இது வரை தெரியாது ……
    அடுத்து நீங்க முன்பு போட்ட பதிவு போஸ் பற்றி சொல்லும் பதிவு
    கண்கலங்க வைத்துவிட்டது

  9. tveraajesh tveraajesh says:

    காளிதாஸ் அவர்களே டாகூ ஹசீனா என்ற ஹிந்தி படம் தான் லட்சத்தில் ஒருவன் என்ற பெயரில் வெளிவந்தது. கங்குவா நேரடி ஹிந்தி படம் தமிழ்கத்தில் மகத்தான வெற்றி பெற்றது. சென்னை, மதுரை, கோவை நகரில் வசூலை குவித்தது. மதுரை நகரில் (நடனா) என்று நினைகிறேன் படம் தொநூறு நாட்களுக்கு மேல் ஓடியதாக மதுரை ரசிகர்கள் சொன்னது.

  10. tveraajesh tveraajesh says:

    மிக்க நன்றி சுந்தர்.

  11. kalidass kalidass says:

    என்னுடைய தவறான தகவலுக்கு வருந்துகிறேன். எனக்காக திரு உண்மை சுடும் அவர்களுக்கு நீங்கள் அளித்த பதிலுக்கு நன்றி சுந்தர்.

  12. kalidass kalidass says:

    ஒரு சின்ன தகவல் , மேரி அதாலத் -வீட்டுக்கு ஒரு நல்லவன் , பகவான் தாதா -அக்னி கரங்கள் , தமாச்சா-ஏழை தோழன் , உத்தர் த்ச்சின்-செல்லபிள்ளை ,மகாகுரு -ராஜகுரு, கைர் கானூன்னி- ராக்கம்மா கையத்தட்டு , சால் பாஸ் – அழகேஸ்வரன் , ஆட்டங்ன் கி ஆட்டங் – ஆண்டவன் ( எனக்கு தெரிந்த வரை )இவை எல்லாம் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து வந்த தலைவர் படங்கள்.

  13. Prabhu Prabhu says:

    வெறித்தனம் போங்க

  14. sankar sankar says:

    wish you happy birthday thalaiva best wishes by
    yours rasigan sankar…

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates