Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

சூரியனோடு சில மணித் துளிகள் – சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்

ந்திரன் படப்பிடிப்பு நிகழ்வை பற்றி சில வாரங்களுக்கு முன்பு நாம் அளித்திருந்த ஒரு பதிவில் (ரஜினி கொடுத்த ‘உக்கிரமான’ போஸ்),  கருத்து தெரிவித்திருத்த நம் தள வாசகர் திரு. விக்நிஷ், சூப்பர் ஸ்டாரை தாம் சந்தித்த அனுபவத்தை விரைவில் நம்முடன் பகிர்ந்துகொள்வதாக கூறியிருந்தார். நாமும் ஆவலாக காத்திருப்பதாக கூறியிருந்தோம்.

http://onlysuperstar.com/?p=4216

சொன்னதைப் போலவே விக்நிஷ் கடந்த வாரம் நம்மை தொடர்புகொண்டார்.

இதோ சூரியனை சந்தித்த தன் அனுபவத்தை (அசத்தலான படங்களுடன்) விக்நிஷ் கூறுகிறார். அவர் நம்மிடம் எனது செல்பேசியில் கூறியதை உங்களுக்கு அப்படியே தருகிறேன்.

- சுந்தர்

——————————————————————————-
Onlysuperstar.com தள நண்பர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய வணக்கம்.  இந்த தளம் blogspot ஆக இருந்த காலம் முதலே நான் இதன் ரெகுலர் வாசகர். சிங்கப்பூரில் எனது தந்தைக்கு சொந்தமான ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் OPERATIONS பிரிவில் மேனஜராக பணிபுரிந்துவருகிறேன்.  தினமும் இரண்டு மூன்று முறையாவது இந்த தளத்தை செக் செய்வேன். ஒரு பதிவையும் விடமாட்டேன். முழுமையாக படித்துவிடுவேன். சூப்பர் ஸ்டாரைப் பற்றிய ஒரு பிரத்யேக தளம் என்பதால் இதை படிக்கும்போது என்னையே மறந்துவிடுவேன்.

vignish superstar1  சூரியனோடு சில மணித் துளிகள் – சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்

சமீபத்தில் நான் சூப்பர் ஸ்டாரை சந்தித்த எனது அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன். கடந்த ஏழு வருடங்களாக அவரை சந்திக்க முயன்று வருகிறேன். நடிகர் தனுஷ் மூலமாகவும் முயற்சித்தேன். ஆனால் “ரஜினி சாரின் மருமகனாக இருந்தாலும் இது போன்ற obligation கள் எதையும் அவர் முன் வைப்பதில்லை. சாரி சார்” என்று பணிவாக மறுத்துவிட்டார். இருப்பினும் அந்த பொன்னான வாய்ப்பிற்காக வேறு வகைகளில் முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

சந்தானம் மூலம் அடித்த அதிர்ஷ்டம்

அது என் நண்பர் நடிகர் சந்தானம் மூலமாக எனக்கு சமீபத்தில் வந்தது. சிங்கப்பூரில் ஒரு ஷோ நடத்தியதன் மூலம் சந்தானம் எனக்கு நண்பராக அறிமுகமானார்.

நமது தளத்தில் நான் படிக்கும் எந்திரன் சம்பந்தப்பட்ட செய்திகளை அவரிடம் அடிக்கடி கூறுவேன். “இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று ஆச்சரியமாக கேட்பார். எந்திரனில் சந்தானம் நடிப்பதால் அவர் மூலம் சூப்பர் ஸ்டாரை இம்முறை நிச்சயம் சந்தித்துவிடுவது என்று முடிவு செய்து, சந்தானத்திடம் கூறினேன். “அடுத்த முறை நீங்கள் சென்னை வரும்போது, புகைப்படம் என்ன ஷூட்டிங் பார்க்கவே நான் நிச்சயம் ஏற்பாடு செய்றேன்” என்று உறுதியளித்தார்.

நல்ல வேளையாக சென்ற மாதம் சென்னைக்கு  நான் வந்த சமயம் எந்திரனில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்துகொண்டிருந்தார்கள். சொன்னபடியே சந்தானம் என்னை எந்திரன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து சென்றார்.

படப்பிடிப்பு – என்னை கவர்ந்த நேர்த்தி

கொட்டிவாக்கத்தில் உள்ள சன் டைரக்ட் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. படப்பிடிப்பு தளம் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. படப்பிடிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு வித நேர்த்தி தெரிந்தது. ஷங்கர் சாரை, அவரது திட்டமிடலை நினைத்துகொண்டேன்.

தலைவருக்கு மேக்கப்

தலைவருக்கு மேக்கப் போட்டு கொண்டிருந்தார்கள். அவரின் உதவியாளரிடம் தலைவரை பார்க்கவேண்டும் என்று சந்தானம் கூற, மேல் தளத்தில் காத்திருக்குமாறும், மேக்கப் போட்டவுடன் அழைப்பதாகவும் பதிலளித்தார்.

நகத்தை கடித்தபடி சந்தானத்துடன் காத்திருந்தேன். ரஜினி சார் எங்களை அழைப்பதாக அவரது உதவியாளர் கூற, கீழே மேக்கப் ரூமுக்கு சென்றோம்.

நான் காண்பது கனவா இல்லை நினைவா….

எங்களைப் பார்த்தவுடன் எழுந்து நின்று வரவேற்றார். சந்தானம் என்னை தலைவரிடம் அறிமுகப் படுத்த எனக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. நாம் காண்பதெல்லாம் நிஜமா? கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு முறை ஜஸ்ட் ஒரே ஒரு முறை நேரில் பார்க்க துடிக்கும் சூப்பர் ஸ்டாரை நான் நேரில் பார்த்துகொண்டிருக்கிறேனா? என் பரவசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

என்னைப் பற்றியும் எனது குடும்பத்தினர் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார். பின்னர் தலைவருடன் கைகுலுக்கினேன். உடம்பில் ஒரு வித மின்சாரம் பாய்ந்தது. தலைவர் எந்திரன் படத்துக்கான மேக்கப்பில் இருந்தார். சும்மா சொல்லக்கூடாது ரொம்ப ஸ்மார்டாக வயதை பாதியாக குறைத்து இளமையாக இருந்தார் தலைவர். அந்த கெட்டப்பில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் அது முறையல்ல என்பதால் அமைதி காத்தேன்.

“சார் பாபா படத்துக்கப்புறம் நான் தினமும் மேடிடெட் பண்றேன்.” என்றேன்.

“வாவ்… குட்…” என்றார்.

vignish superstar2  சூரியனோடு சில மணித் துளிகள் – சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்

நூல் பரிசு

தயாராக வைத்திருந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை அவருக்கு பரிசளித்தேன்.

“பிரிச்சு பாருங்க சார்” என்றேன்.

பிரித்து பார்த்தவர், நூலை பார்த்தவுடன் முகம் மலர்ந்தார்.

“உங்களுக்கு ரொம்ப பிடித்த அரசியல் தலைவர் லீ குவான் யூ ன்னு கேள்விப்பட்டேன். அதான் சார் இதை கொடுக்குறேன் ”

“So… ஸ்வீட்… எங்கே படிச்சீங்க?” என்று கேட்டார்.

பதட்டத்தில் டக்கென்று நமது தளத்தின் பெயரை சொல்ல வரவில்லை. “ஒரு வெப்சைட்ல படிச்சேன் சார்…”

“குட்… குட்… என்ன ஒரு அற்புதமான அரசியல் தலைவர் அவர்…” என்று லீ குவான் யூ மீதான தமது மரியாதையை நம்மிடம் வெளிப்படுத்தினார்.

(சூப்பர் ஸ்டாரின் தூர்தர்ஷன் பேட்டி தொகுப்பை நாம் வெளியிட்டோம் அல்லவா? அதில் தான் மேற்படி செய்தி இடம்பெற்றிருந்தது)

http://onlysuperstar.com/?p=4140

“ஓ…. குட்… இப்போ மேக்கப்ல இருக்குறதுனால போட்டோ எடுக்க முடியாது. இருந்து கண்டிப்பா ஷூட்டிங் பார்த்துட்டு போங்க. மேக்கப்பை  ரிமூவ் பண்ணும்போது சொல்றேன். போட்டோ எடுத்துடலாம். அப்புறம் ஏதாவது சாப்பிடுறீங்களா? ” என்று வாஞ்சையுடன் கேட்டார். பிறகு விடைபெற்று ஷூட்டிங்கிர்க்கு சென்றுவிட்டார்.

அடுத்த நொடி முதல் சந்தானத்திடம் ரஜினி புராணம் தான். “என்ன சார் இது… இவ்ளோ சிம்பிளா இருக்காரு. கொஞ்சம் கூட பந்தா இல்லை. எத்தனை பணிவு… என்ன அடக்கம்…” என்று கூறிக்கொண்டே இருந்தேன். சந்தானம் என்னை ஒரு மாதிரி பார்த்தார். “இது ரஜினி effect வேற ஒண்ணுமில்லை” என்று மனதில் நினைத்தார் போல.

படப்பிடிப்பை பார்க்க சென்றோம். எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அங்கு நிலவிய சூழ்நிலைகளை குறித்து நான் சொல்லக்கூடாது. ஆகவே அவற்றை தவிர்த்துவிடுகிறேன் சுந்தர். மிச்சத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

எதை செய்தாலும் ஸ்டைல்

ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்து தலைவரின் ஒவ்வொரு அசைவையும் நான் ரசித்துகொண்டிருந்தேன். அவர் எதை செய்தாலும் ஸ்டைலாக இருந்தது. ஒவ்வொரு டேக் முடிந்தவுடன் “டேக் ஓகே வா?” என்று ஒரு மாணவனைப் போல ஷங்கர் சாரிடம் கேட்டுக்கொள்வார். சில காட்சிகளுக்கு பல டேக்குகள் எடுக்கவேண்டியிருந்தது. சிறிது கூட முகம் சுளிக்காமல் ஒரு புதுமுகத்தை போல ஷங்கர் சாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

படப்பிடிப்பு நடந்த விதமே ஒரு திரைப்படத்தை போல சுவாரஸ்யமாக இருந்தது என்றால் மிகையாகாது. ஏதோ ஒரு படத்தோட ஷூடின்ஞாலே வாயை பிளந்துகிட்டு பார்ப்போம் இல்லியா. ரஜினி சார் நடிக்கிற படம் அதுவும் அவர் இப்போ நடிச்சிக்கிட்டுருக்காருன்னா சுமாவா? எந்திரன் கெட்டப்பில் அசத்திவிட்டு இப்போ ரஜினி சார் எந்திரன் கெட்டபிலிருந்து விஞ்ஞானி கெட்டப்புக்கு மாறினார். பார்க்கக் அச்சு அசலாக ஒரு பக்கா விஞ்ஞானி போலவே இருந்தார். எந்திரன் கெட்டப்பிலும் சரி, இந்த விஞ்ஞானி கெட்டப்பிலும் சரி, தலைவர் ஒருவரை ஒருவரை மிஞ்சும் அழகில் இருந்தார்.

இடையே என்னை கவனித்தார். அந்த பரபரப்பிலும் “இருந்து வெயிட் பண்ணிட்டு போட்டோ எடுத்துட்டு போகலாம்” என்று சைகையில் கூறினார். அட, இதை விட வேறு என்ன வேணும்? தலைவரே சொல்லிவிட்டார்.

சுறுசுறுப்பு

இந்த வயதிலும் தலைவரின் சுறுசுறுப்பு … அப்பப்பா…. மின்னல் போல அவரது நடையும், மின்சாரம் போன்ற அவரது துடிதுடிப்பும்… காற்றை போன்ற அவரது வேகமும்.. படப்பிடிப்பு குழுவினருக்கு அவாது வேகத்திற்கு ஈடுகொடுப்பதே பெரும் சவாலாக இருந்தது.

vignish superstar3  சூரியனோடு சில மணித் துளிகள் – சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்

வெயிட் பண்ணுங்க…. இதோ வந்திடுறேன்

அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் ஆவலுடன் காத்திருப்பதை புரிந்துகொண்டு  “இருங்க மேக்கப்பை ரிமூவ் பண்ணிட்டு ஃபேஷ் வாஷ் பண்ணிட்டு வந்திடுறேன்…. நீங்க மேலே என் ரூம்ல வெயிட் பண்ணுங்க…” என்று கூறிவிட்டு சட்டென்று மறைந்துவிட்டார்.

அவரது ரூம் என்றால் ஏதோ ஃபைவ் ஸ்டார் சூட் போல இருக்கும் என்று நினைத்துகொண்டே சென்றேன். அவரது அறையை பார்த்தவுடன், இந்தியாவின் அதிக சம்பளம்  வாங்கும் நடிகர் தங்கும் அறை அது என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.  தயாரிப்பாளர்கள் மிக சொகுசான சகல வசதிகளுடன் கூடிய ஒரு அறையை ஒதுக்க முன்வந்தும் கூட “இதுவே எனக்கு போதும்” என்று கூறிவிட்டாராம் தலைவர். “தலைவர் எல்லா விஷயத்திலும் ரொம்ப சிம்பிள் தான்” என்று அதை ஆமோதிப்பது போல சந்தானம் கூறினார்.

சிறிது நேரத்தில் ரஜினி சார் முகத்தை சுத்தமாக கழுவி மேக்கப்பின் சுவடே இல்லாமல் வந்தார். “உள்ளே வாங்க…” என்று அழைத்தார்.

“ஷூட்டிங் பார்த்தீங்களா? Did you enjoy? என்ன சாப்ப்டீங்க?” அக்கறையாக விசாரித்தார்.

vignish superstar4 300x225  சூரியனோடு சில மணித் துளிகள் – சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்எண்ணத்தை புரிந்து அதற்கேற்றார்போல போஸ்

பிறகு அவருடன் நானும் சந்தானமும் தனித்தனியாக ஒன்றாக போட்டோ எடுத்துக்கொண்டோம். நாங்கள் எடுக்க நினைத்த பொசிஷன்களை அவரே புரிந்துகொண்டு அதற்க்கேற்றார்போல போஸ் கொடுத்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. நாம் மனதிற்குள் நினைத்தது எப்படி இவருக்கு புரிந்தது? என் வியப்பு அடங்கவே இல்லை.

தலைவர் காலில் வீழ்ந்து ஆசிபெற்றேன். தங்கத் தலைவர் என்னை தடுக்க முற்பட்டார்.

என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் இவை. இன்று வரை இதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

நான் போட்டோ எடுத்தவுடன், சந்தானத்தையும் அழைத்தார். “நீங்களும் எடுத்துக்குங்க சந்தானம்”.

பிறகு நாங்கள் இருவரும் அவருடன் இருப்பதை அவரது உதவியாளரை விட்டு எடுக்க சொன்னார்.

“ரொம்ப நன்றி சார். உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன்” என்று சொல்ல, “நோ….நோ… நத்திங். It’s my pleasure” என்றார் பணிவுடன்.

இது அன்பால் சேர்ந்த கூட்டத்தின் ஒரு துளி

அடுத்த நாள் அவருக்கு நன்றி தெரிவித்து அவரது வீட்டிற்கு ஒரு பூங்கொத்தை அனுப்பினேன். அதில் என்ன வாசகம் எழுதுவது என்று யோசித்து கடைசீயில் நமது தளத்தின் TAGLINE ஆன “இது அன்பால் சேர்ந்த கூட்டத்தின் ஒரு துளி” என்ற வாசகத்தை எழுதி என் கையெழுத்திட்டு அனுப்பினேன்.

அடுத்த நாள் ரஜினி சார் வீட்டிலிருந்த எனக்கு போன் வந்தது. “ரஜினி சார் உங்க கிஃப்டை பார்த்தாரு. உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்ல சொன்னார்.” என்று கூற நான் நெகிழ்ந்துபோனேன்.

சிங்கப்பூர் திரும்பியதும் என் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சூப்பர் ஸ்டாருடன் எனக்கு நேர்ந்த அனுபவத்தை திரும்ப திரும்ப சொல்ல சொல்லி கேட்டு மகிழ்ந்தார்கள். “இந்தக் கையால் தானே சார் அவரை தொட்டு கை குலுக்குனீங்க ” என்று கேட்டு என் கையை தொட்டுப் பார்த்தவர்கள் அநேகம். என்ன சொல்வது, ஏதோ ஒரு தூர டேசதிலேயே அவருக்கு இப்படி ஒரு ரசிகர்கள் என்றால் தமிழ் மண்ணில கேட்க்கவா வேண்டும்? ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. சமீபத்தில் நாணயம் விகடன் விகடன் இதழில் ஒருவர் கூறியதை போல அவர் ஆயிரத்தில் அல்ல, லட்சத்தில் அல்ல, கோடியில்  ஒருவர். வரம் வாங்கி இந்த வையகத்திற்கு வந்தவர். அந்த நல்லவருக்கு ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்வோம்!!

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

31 Responses to “சூரியனோடு சில மணித் துளிகள் – சூப்பர் ஸ்டாரை சமீபத்தில் சந்தித்த ஒரு ரசிகரின் பரவச அனுபவம்”

  1. Ram Ram says:

    please do not post these type of posts. I will DIE reading, hearing that everyone is gifted to see thalaivar in person and I am the cursed soul in this world is longing for the moment from the day i saw thalaivar on screen right from my childhood.

    —————————————–

    இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு.விக்நிஷ் தாம் கடந்த ஏழு வருடங்களாக தினமும் தியானப் பயிற்சி செய்து வந்ததாக கூறியிருக்கிறார். சூப்பர் ஸ்டாருடன் இவரை இணைத்த கோடு அது தான் என்று நான் கருதுகிறேன். தியானம் என்பத மனதை ஒருமுகப்படுத்தவும், ஆத்மா சுத்திக்காகவும் செய்யப்படுவது. இதற்க்கு இன, மொழி, மத எல்லைகள் கிடையாது. ஒவ்வொருவரும் இதை முயற்சித்தால் அனைவருக்கும் ஒரு நாள் இத்தகு வாய்ப்பு கிடைக்கும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இல்லையென்றாலும் வாழ்வில் நீங்கள் ஒரு உன்னத நிலையை அடைவீர்கள் என்பது திண்ணம்.

    - சுந்தர்

  2. Oh my God… நானே தலைவரை பார்த்து விட்டு வந்தது போல இருக்கு.

  3. kalidass kalidass says:

    தலைவரை சந்திக்கும் அந்த பொன்னான தருணத்துக்காக நானும் காத்துஇருக்கிறேன். என்று வருமோ அந்த நாள். உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள் .

  4. S.Vijay S.Vijay says:

    ஏதோ நானே போய் பேசி வந்தது போல் இருக்கு. நன்றி !! :d

  5. Sankar Sankar says:

    Really good article. This article express everey fan feeleings. I am also met Thalaivear in four times in his residence. First time I met Thalaivar take photos and chat with him in his personnel room (During Panakkaran Shooting period). Same day I went to Vahini studio, I saw Thalaivar in Women costume (Nooru Varusham Song). Within 15 mins he was changed his costme to White coat suit. That is Thalivar.
    —————————
    Wow… good. Can you pls send those photos to simplesundar@gmail.com and share your experience with our readers?
    Many thanks.
    - Sundar

  6. murugan murugan says:

    சுந்தர்ஜி என்ன ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவம் – இந்த பதிவை படிக்கும்போதே என் உடல் முழுவதும் சிலிர்ப்பதையும் உள்ளத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்ப்பட்டதையும் உணர முடிந்தது – படிக்கும் நமக்கே இப்படி என்றால் தலைவரை நேரில் சந்தித்த விக்னேஷிற்கு எப்படி இருந்திருக்கும் ? – நண்பர் விக்னேஷ் உண்மையிலேயே பாக்கியசாலி இது அவரது விடாமுயற்சிக்கும் தலைவர் மேல் கொண்ட பற்றிற்கும் கிடைத்த பரிசு – இந்த இனிய அனுபவத்தை நம் அனைவருக்கும் அளித்து யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என தொண்டாற்றும் சுந்தர் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் – இந்த வேலையில் இந்த நிகழ்வு எற்படக்காரனமாயிருந்த நண்பர் சந்தானம் அவர்களுக்கும் தலைவரின் ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் – தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை எனவே வணங்கி என்றென்றும் உங்களோடு இருப்போம்

  7. Ponraj Ponraj says:

    என் கண்களில் ஆனந்த கண்ணீர்….

  8. vasi.rajni vasi.rajni says:

    தலைவரை பார்க்க வேண்டும் என்று நான் என்றுமே ஆசை பட்டதில்லை , என்னை பொருத்தவரை எனக்கு கடவுளும் தலைவரும் ஒன்று தான். திரு விக்னேஷ் அவர்களின் அனுபவம் கேட்டு எனக்கே ஒரு கணம் அவரை நாம் சென்று சந்திப்போமா என்ற ஆசை மனதின் ஒரு மூலையில் உதிக்கிறது .அவரை சந்திக்கும் வாயப்பு கிடைதால் அவரின் அரசியல் பிரவேசத்தின் எதிர்பார்ப்பு அலை தமிழகத்தையும் தாண்டி மலேசியா வரை அது வந்துள்ளது என்று கூற எனக்கு ஆசை . என்னை போன்ற ரேண்டுகேட்டன் வெளி நாட்டு ரசிகர்களுக்கு தலைவரின் செய்திகளை மிகவும் தெளிவாக விளக்கும் சுந்தர்ஜி விநோஜி அவர்களை பற்றியும் கூறுவேன் . ஆனால் நான் அவரை சந்திக்கும் முன்பு அவர் நிச்சையம் தமிழ் நாட்டின் மிக உயரிய பதவியான முதல்வர் பதவியை ஆலங்கரிதிருப்பர் . அப்பொழுது துரதில் நின்று ஆவரை பார்தாலே போதும் ,அதுவே எனக்கு கோடி மகிழ்ச்சி .

    rajini will rule tamil nadu

  9. தேங்க்ஸ் SUNDAR

    RAJINI AVARGALAI NERIL PARTHADHU போல் FEELING SIR

  10. KADKAT KADKAT says:

    வாழ்த்துக்கள் விக்நிஷ், நன்றி சந்தானம் சார்.
    வழக்கம் போல் அசத்தல் பதிவு சுந்தர்…

  11. உண்மையிலே சிலிர்ப்பான அனுபவம். அதாவது உலகின் உச்சியில் நின்ற போதும் தொழிலையும் , தனது பொது வாழ்வையும் சரியாக எல்லை வகுத்து வாழும் உயர்ந்த மனிதருடன் பொன்னான தருணங்கள். உலகிற்கு சூரியன் கூட ஒன்று இல்லையாம் ஆனால் ஒன்று தானே நம் கண்களுக்கு தெரிகிறது இந்த சூரியனுக்கு இணை இனி வரும் காலத்தில் எத்தனை yuகங்கள் கழத்து வருமோ?!!!!!!!!!!!!!!!!
    இந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் வாழ்வதற்கே நாம் பெருமிதம் கொள்வோம். நன்றி சுந்தர் , விக்னேஷ்

  12. karthi karthi says:

    எனக்கு poramaya இருக்கு…..

  13. Sharath Sharath says:

    Thanks to Vignesh for sharing his experience with us. The narration was good. Like others, I too felt as if I was present when Vignesh and Santhanam met Superstar.

    Ram, apart from what Sundar had mentioned, you should also notice that Vignesh had kept trying to meet Superstar for last 7 years. This meeting is the fruits of his effort.

    I too feel very jealous when other fans get an oppurtunity to meet, no, even see Superstar in flesh from a distance. But, have to take it in the stride and feel happy for those who are lucky to see him.

  14. Narayan Narayan says:

    Dear Sundar

    Did u see the Happy News that Thalaivar film Sivaji has got National Award for the special effects ? Congrats to the team on behalf of Thalaivar fans.
    Surely Endhiran will rock the whole world and will fetch more awards.
    “Kedaikaruthu kedaikama irukathu , kedaikama irukathu kedaikavae kedaikathu”

  15. Skandamurthy Skandamurthy says:

    தலைவர் கழுத்தில் புதிதாக ஒரு தாயத்து!! ருட்ரக்ஷம் எங்கே தலைவா ??
    சூப்பர் பதிவு சுந்தர் ஜி….

  16. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி நீங்கள் தலைவருடன் சந்தித்த சந்திப்பை ஒரு பதிவாக தருவதாக கூறியிருந்திர்கள் , ஆது எப்பொழுது ? ஆவலாக உள்ளோம் ….. சிக்கிரம்

    rajini will rule tamil nadu.

    ——————————————————
    Soon. Please wait. i have reasons.
    - Sundar

  17. ஈ ரா ஈ ரா says:

    பகிர்வுக்கு நன்றி விக்னேஷ்…

    அசத்திட்டீங்க சுந்தர்ஜி

    ஈ ரா

  18. harisivaji harisivaji says:

    நாம நேரில பார்கமுடியலனாலும் நம் நண்பர்கள் பார்த்து அந்த சந்தோஷ தருணங்களை நம்மிடம் share பண்ணிருக்கும் விக்நேஷ்கும் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்த சுந்தர் கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  19. கிரி கிரி says:

    Wow! Excellent!

    விக்னேஷ் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..நீங்க பதட்டத்தில் நம்ம சுந்தர் தளத்தை குறிப்பிடாமல் இருந்தது எனக்கு சற்று ஏமாற்றமே! இருந்தாலும் உங்கள் நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது..பேச்சே வராத போது….இது சகஜமே.

    உங்கள் பகிர்வு எத்தனை பேரை மகிழ்ச்சி படுத்தி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.

    உங்க அனுபவத்தை எழுத்துக்களாக சுவாராசியமாக கொடுத்த சுந்தருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  20. Viswa Viswa says:

    விக்னேஷ் : வாழ்த்துக்கள்

    சுந்தர்ஜி : அசத்தல் பதிவு

  21. Leo Leo says:

    சுந்தர் சார் & விக்நிஷ் சார் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.

    “விக்னேஷ் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..நீங்க பதட்டத்தில் நம்ம சுந்தர் தளத்தை குறிப்பிடாமல் இருந்தது எனக்கு சற்று ஏமாற்றமே! இருந்தாலும் உங்கள் நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது..பேச்சே வராத போது….இது சகஜமே.”

    லியோ – கிரி சார், திரு விக்நிஷ் அவர்கள் பதட்டத்தில் சுந்தர் சார் website பற்றி சொல்லாமல் இருந்தாலும் , கண்டிப்பாக தலைவருக்கு இந்த website பற்றி தெரிந்துஇருக்கும் என்று நினைக்கிறேன்.

    இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு.விக்நிஷ் தாம் கடந்த ஏழு வருடங்களாக தினமும் தியானப் பயிற்சி செய்து வந்ததாக கூறியிருக்கிறார். சூப்பர் ஸ்டாருடன் இவரை இணைத்த கோடு அது தான் என்று நான் கருதுகிறேன். தியானம் என்பத மனதை ஒருமுகப்படுத்தவும், ஆத்மா சுத்திக்காகவும் செய்யப்படுவது. இதற்க்கு இன, மொழி, மத எல்லைகள் கிடையாது. ஒவ்வொருவரும் இதை முயற்சித்தால் அனைவருக்கும் ஒரு நாள் இத்தகு வாய்ப்பு கிடைக்கும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இல்லையென்றாலும் வாழ்வில் நீங்கள் ஒரு உன்னத நிலையை அடைவீர்கள் என்பது திண்ணம்.”

    லியோ- சுந்தர் சார், இதை நான் வழிமொழிகிறேன் , இந்த பதிவை
    நீங்கள் இடுவதற்க்கு முன்பே எனக்கும் இதை தான் சொன்னிர்கள்.
    உங்களுக்கு நியாபகம் இருக்கும் என்று நினைகிறேன்.

    onceagain tks for you and vignish.

  22. ANAND ANAND says:

    சுந்தர்ஜி,

    தலைவரை நான் குசேலன் சூடிங்க்ல நேர்ல பார்த்தேன்.

    சும்மா தலைவர் சூப்பர்.

    நான் போன அன்று கடைசி நாள் சூடிங்க்.( கிளைமாக்ஸ் சீன் )

    அமராவதி இராணுவ பள்ளியில் சூடிங்க்.

    கேமரா எல்லாம் எடுத்திட்டு போனேன். ஆனா போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை.

    சூடிங்க்ல தலைவர் கிட்டத்தட்ட சுமார் மூன்று மணி நேரம் நின்னுக்கிட்டே இருந்தார். நாங்கெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டே இருந்தோம்.

    “தலைவா நீ நிக்காதே எங்களுக்கு கால் வலிக்குது “.

    என்று கத்திகிட்டே இருந்தோம்.

    தலைவர் எங்களை அப்பப்ப பார்த்து கை அட்டி சிரிப்பார்.

    என் வாழ்க்கைல நான் தலைவர நேரில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை.

    கிளைமாக்ஸ் சீன்ல தலைவர் பேசும்போது சவுண்ட் இல்ல. ஆன பக்கத்துல நின்னு பாத்துட்டு இருந்த எனக்கு, தலைவர் வசனம் பேசுறது நல்ல தெரிந்தது. கடைசில தலைவர் அழுகும் போது உண்மையிலே நானும் அழுதிட்டேன்.

    ஆனந்த்
    பமாகோ, மாலி.

  23. thalaiva..i love you very much…u r my breath….my kind request is dont join in congress because all tamilians are on angry with them because of srilanka prob…..ungha style…”aarambicha thani katchi than”…valga thalaivar valarga….nanbargale,,,wat abt my comments is it true????

  24. வாழ்த்துக்கள் விக்நிஷ்…. இந்த தருணத்திற்காக ஏங்கிக்கிடக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். என்னுடைய சிறு வயதில் சூப்பர் ஸ்டாரை சந்தித்திருக்கிறேன் என்றாலும், இப்போது மீண்டும் ஒரு முறை அவரைப்பார்க்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்…

  25. Peraveen Peraveen says:

    Arumayana padhivu…

  26. Peraveen Peraveen says:

    Arumayana padhivu…

    Nan karaikal’lil padikum podhu (2007)
    SIVAJI shooting (thirunallar scene)
    nadakapodhu nu therinji enga college students ellam class’sa bunk pannitu thalaivara paarkalamnu ponom…

    But enga bad luck we had missed our thalaivar!
    Only shankar,shreya,
    raja & other artists only vandhanga…
    Oru vidha emaatrathudan shankar & raja kuda mattum photo eduthom…
    But thalaivarai paarkadhadhu miga periya emaatramae..
    irundhum thalaivarai oru muraiyavadhu naam naeril paarkamaatoma’nu engal muyarchi thodarndhu kondae irukiradhu…

    Vazhga thalaivar…

  27. ganesh ganesh says:

    hi sundar, thanks for the post…

    i literally cried after reading this… he is not human he is god…
    really proud to be his disciple…. wow.. the greatest human the world has ever seen.. thanks again for the wonderful work… whenever i read the articles in our website.. it is something like a boost to me…

  28. Ashwin Ashwin says:

    Hi Sundar, I would like to share my experience with our friends so let me send it along with the photo that i had taken with Super Star.

    —————————
    Yes. Please. thank you very much.
    Mail id: simplesundar@gmail.com

  29. Sankar Sankar says:

    Mr.Sundar

    I have laminated the photos. Will try to send you to your mail soon.

    Thanks.

    —————————————————
    Just demantle it safely and scan it in hi resolution and send me.
    - Sundar

  30. Saravanan Saravanan says:

    நல்லவருக்கு ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்வோம்!!

  31. Billa Billa says:

    இது அன்பால் சேர்ந்த கூட்டத்தின் ஒரு துளி — வாவ், மிக மிக உண்மை.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates