சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எல்லா ரசிகர்களுக்கும் இருக்கும். சிலருக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அது கிடைக்காது. அப்படி ஒரு அதிர்ஷ்டம் அடித்து சூப்பர் ஸ்டாரை சந்தித்தவர்கள் கூறும் அந்த இனிய அனுபவத்தை அவர்கள் சொல்ல நாம் கேட்டாலே நாமே சென்று வந்தது போன்ற ஒரு திருப்தி ஏற்படும்.
ரஜினி ரசிகர்களுக்குள் உள்ள பந்தம் வேறெங்கும் காணக்கிடைக்காதது.
இதோ நம் தளத்தின் நீண்ட நாள் வாசகர் அஷ்வின் சூப்பர் ஸ்டாரை தாம் சந்தித்த அனுபவத்தை கூறுகிறார்.
- சுந்தர், Onlysuperstar.com
———————————————————————————————-
Onlysuperstar.com வாசகர்களுக்கு வணக்கம். என் பெயர் அஸ்வின். இந்த தளத்தின் நீண்டகால வாசகர். இதை ஒரு தளம் என்று சொல்லுவதைவிட, ஒரு குடும்பம் என்று தான் கூறுவேன். இங்குள்ள அனைவரையும் என் குடும்பமாக தான் நான் பார்க்கிறேன். நான் சோர்வுற்று கலக்கத்தோடு இருந்த பல தருணங்களில் இந்த தளத்தை பார்த்து புத்துணர்வு பெற்றிருக்கிறேன். பல முறை பரவசமடைந்திருக்கிறேன். இங்கு வரும் முக்கிய உறுப்பினர்கள் அனைவரது கருத்துக்களையும் தவறாது படிப்பேன்.
சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் நான். சென்னையில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நான் தற்போது சொந்தமாக ஒரு சிறிய நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கடந்த மாதம் விக்நிஷ் என்ற ரசிகர் சூப்பர் ஸ்டாரை தாம் சந்தித்த அனுபவம் குறித்து புகைப்படத்துடன் இங்கு கூறியிருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கும் சூப்பர் ஸ்டாரை நான் சந்தித்த அனுபவம் குறித்து நம் தள நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. சூப்பர் ஸ்டார் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்துகொண்டிருந்த சமயம் அது. என் சித்தப்பா பிராசாத் லேப்பில் பணிபுரிந்து வந்தார். அந்த வகையில் ஸ்டூடியோக்கள் வட்டாரத்தில் அவருக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
நான் எந்தளவு ஒரு ரஜினி ரசிகன் என்று என் வீட்டில் அனைவருக்கும் தெரியும். அவரை நேரில் சந்திக்கவேண்டும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் கோடிக்கணக்கானோரில் நானும் ஒருவன். அத்தகைய வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் மட்டுமல்ல என் தங்கையும் தீவிர ரஜினி ரசிகை. அவளுக்கும் சூப்பர் ஸ்டாருடன் ஒரே ஒரு முறை போட்டோ எடுக்கவேண்டும் என்று ஆசை.
ஆந்திராவில் உள்ள என் உறவினர்கள் சிலர் சென்னைக்கு வரும்போதும், சினிமா ஷூட்டிங் பார்க்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால் உடனே என் சித்தப்பா அவர்களை ஸ்டூடியோக்களுக்கு அழைத்து செல்வார். அப்போது ஒரு முறை ஏ.வி.எம்.மில் நடைபெற்ற ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்கு என் தங்கையையும் அழைத்து சென்றார். ஷூட்டிங்கிர்க்கு பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷும், விஜயஷாந்தியும் வந்திருந்தனர். என் சித்தப்பா அவர்களுடன் புகைப்படமெடுக்க வேண்டுமா என்று கேட்க, “வேணாம்…எனக்கு ரஜினி அங்க்கிள் கூடத் தான் போட்டோ எடுக்கணும்” என்று என் தங்கை மறுத்துவிட்டாள். அவர்களுக்கு என்னவோ போலாகிவிட்டது. அந்தளவு என் தங்கைக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் கொள்ளை பிரியம்.
ஒரு நாள் மாலை என் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வந்த என் சித்தப்பா என்னையும் என் தங்கையையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்றார். “நாம ரஜினி சாரை பாக்கப் போறோம். இப்போ ஏ.வி.எம். ஸ்டூடியோவுல ‘மாப்பிள்ளை’ ஷூட்டிங்க்ள சார் இருக்காரு” என்று அவர் சொல்ல எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை.
“தலைவர் எப்படியிருப்பாரு… அவர் கிட்டே என்ன பேசலாம்… ஐ லவ் யூ so much ரஜினி அங்கிள்ன்னு சொல்லலாமா…” அப்படி இப்படியென்று பலவிதமாக கற்பனை செய்துகொண்டே சென்றேன்.
ஏ.வி.எம்.முக்குள் நுழைந்ததும் படபடப்பு என்னை தொற்றிக்கொண்டது. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த இடத்தை சுற்றி ஒரே கூட்டமாக இருந்தது. என் சித்தப்பாவிற்கு ‘மாப்பிள்ளை’ யூனிட்டிலும் ஏ.வி.எம்.மில் நண்பர்கள் இருந்தார்கள். கூட்டத்தை விளக்கி எங்களை உள்ளே அழைத்து சென்றனர் என் சித்தப்பாவின் நண்பர்கள்.
உள்ளே என் கண்கள் சூப்பர் ஸ்டாரை தேடின. ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார் சூப்பர் ஸ்டார். சிவப்பு கலர் டி.ஷர்ட், வெள்ளை ஜீன்ஸ், கருப்பு பெல்ட் என பிரமாதமான காஸ்ட்யூமில் அசத்தலாக இருந்தார் தலைவர்.
எங்களை அழைத்து சென்றவர், சூப்பர் ஸ்டாரிடம் போய், எங்களைப் பற்றி சொல்ல, உடனே எழுந்து நின்று வரவேற்றார் எங்களை. புன்னகைத்தபடி என்னிடம் கைகுலுக்கினார். கொடுத்த கையை எடுக்க எனக்கு மனமே வரவில்லை. என் சித்தப்பா என் கையை வலுக்கட்டாயமாக சூப்பர் ஸ்டாரிடமிருந்து பிடுங்கவேண்டியதாயிற்று.
சூப்பர் ஸ்டாரை பார்த்தவுடன் என்னவெல்லாமோ பேசவேண்டும் என்று கற்பனை செய்துகொண்டே சென்றேன். அத்தனையும் எனக்கு மறந்துவிட்டது. ஒரு கணம் நான் இந்த உலகத்திலேயே இல்லை. எங்கோ பறப்பது போல உணர்ந்தேன்.
என் சித்தப்பா புகைப்படமெடுக்க வேண்டும் என்று தலைவரிடம் சொல்ல, “ஓ.. எஸ்… வித் ப்ளஷர்,” என்று கூறி உடனே போட்டோக்ராபரை கூப்பிட்டு போஸ் கொடுத்தார் ரஜினி. அப்பா… என் வாழ்க்கையின் ஒரு பெரிய ஆசை நிறைவேறிவிட்டது. படப்பிடிப்பில் ஒரு சிறிய பிரேக்கில் அவரை சந்தித்ததால், அவரது நேரத்தை அதிகம் நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. நன்றி கூறி உடனே விடை பெற்று கிளம்பிவிட்டோம். ஆனால் எனக்கு அங்கிருந்து வர மனமே வரவில்லை. ஒரு வழியாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பெருமை பொங்க வெளியே வந்தேன்.
அன்று இரவு முழுதும் நான் தூங்கவேயில்லை. மறு நாள் என் தெருவில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் விஷயத்தை சொன்னேன். “போடா… நீ பொய் சொல்றே….” என்று நிறைய பேர் என்னை நம்ப மறுத்தார்கள். பள்ளியிலும் அதே தான். அடுத்த நாள் போட்டோவை பிரிண்ட் போட்டு என் மாமா கொண்டு வர, அதை போய் அனைவரிடமும் காண்பித்தபோது தான் நம்பினார்கள். “நீ கொடுத்து வெச்சவண்டா.. யூ ஆர் லக்கி” என்று நண்பர்கள் பாராட்டி தள்ளிவிட்டார்கள். “எங்களையும் கூட்டிகிட்டு போய் போட்டோ எடுக்கவைடா…” என்று ஏகப்பட்ட அப்ளிகேஷன்கள். “அட நீங்க வேற… நான் எடுத்ததே பெரிய விஷயம். சும்மா…. சும்மா என் சித்தப்பா கிட்டே போய் கேக்க முடியாது.” என்று கொஞ்சம் பந்தா செய்தேன். கிட்டத்தட்ட என் தெருவிலும் என் வகுப்பிலும் தலைவர் தயவில் நான் ஒரு ஹீரோவாகிவிட்டேன்.
சூப்பர் ஸ்டாருடன் நான் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை இன்றளவும் ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறேன்.
——————————————————————————-
உங்களிடமும் இது போன்ற புகைப்படம் உள்ளதா? சூப்பர் ஸ்டாரை நீங்கள் சந்தித்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்களா?
உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி மற்றும் பிற விபரங்களுடன் நமக்கு கீழ்கண்ட முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.
simplesundar@gmail.com
——————————————————————————-
[END]
RSS Feed
Twitter
October 3rd, 2009
support 






Posted in
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!



ஹலோ Sundar,
After a long gap i am back to our famly..
Since some of my personal commitments and marriage busy schedule’s i cant give comments regarding all the postings but i am atleast watching our site daily
and updating myself regarding our thalaivar..
Anyway all the postings are orcem and fantastic as usual…
Aparam அந்த aswin ரொம்ப kuduthu vachavar cha namakum ipaddi ஒரு
sandharpam kidaikadha என்று yengum pala kodi pergalil nanum oruvan..
Regards
P.Vijay
என்றும் Thalaivar Bakthan
அஸ்வின், நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி …என்னை போன்ற ரசிகர்கள் படித்து மகிழ்ச்சி அடைகிறோம்..நன்றி ..
நான் தலைவரை சந்திக்கவில்லை endralum அவரின் அறிஉரை என் வாழ்கையில் பின்பற்றி வருகின்றேன்..யோகா பயிற்சி தினமும் செய்கின்றேன்.என்னுள் பல மாற்றங்கள் …என்ன அற்புத சக்தியை தலைவர் பெற்று இருக்கிறார்!!!!.. நண்பர்களே தலைவர் புகழ் படுவது மட்டும் allamal இதையும் சிந்திப்போமா?அதுதான் தலைவருக்கு நாம் கொடுக்கின்ற ஒரு உயர்ந்த பரிசு..
நம்மால பார்க்க முடியல என்ற உணர்வு ஒரு பக்கம் இருந்தாலும்
நம்ம நண்பர்கள் பார்த்ததை படிக்கும் போது
நாமே போய் பார்த்துட்டு வந்த உணர்வு
எங்கள மாத்ரி சித்தப்பாவே இல்லாதவாங்க எங்க போறது
சுந்தர் அருமையான ஒரு ரசிகரின் மலரும் நினைவுகள். உங்கள் தளத்திருக்கு ஒரு பூச்செண்டு இது போன்ற செய்திகள் வெளியிடுவதால் உங்கள் தளம் இன்னும் பெருமை கொள்ளகிறது. உங்கள் பணீ சிறக்க மென்மேலும் வளர வாழ்த்துகள்.
அஷ்வினுக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா
நன்றிஅஷ்வின் அந்த போடோவில் தலைவரின் லுக் சும்மா சூப்பர்.அந்த நாளுக்கே என்னை கொண்டு சென்றது .மாப்பிள்ளையில் சும்மா அந்த சீனில் தலைவர் அசத்தி இருப்பாரு.மாப்பிள்ளை ரிலீஸ் ஆன நாளில் இருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் பத்து ஷோவும் பார்த்து தலைவரின் ஸ்டைலில் மயங்கி இருந்த காலம் இப்போதும்தான் .
Hello sundar,
I have been regularly following the website for our thalaivar onlysuperstar.com.
also i came to know that we are joining onto facebook and already i have become a fan of our thalaivar’s club.I just want to tell you that keep doing the good work and we’ll keep supporting you.
Thank you