முன்பெல்லாம் படப்பிடிப்பில் இருக்கும்பொழுது பிறந்த நாள் வந்தால் யூனிட்டாரின் அன்புக்கிணங்க அவர்களுடனேயே சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாடிவிடுவார்.
1983 ஆம் ஆண்டு ‘துடிக்கும் கரங்கள்’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் இருந்தபோது பிறந்த நாள் கொண்டாடிய காட்சி இது.
மறைந்த நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர், சூப்பர் ஸ்டார் மற்றும் அவரது துணைவியார் லதா ரஜினி ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.
சூப்பர் ஸ்டாரின் அந்த பழைய ஹேர் ஸ்டைல் என்னமாய் வசீகரிக்கிறது பார்த்தீர்களா?
சரி… அட்டகாசமான பழைய புகைப்படத்தை கொடுத்தாயிற்று… அதற்க்கு பொருத்தமான தகவல் ஏதாவது கொடுக்கவேண்டாமா என்று யோசித்தபோது கிடைத்த விஷயம் இது…
சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மை – ஏ.வி.எம்.முக்கு அவர் போட்ட கண்டிஷன்
சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் முரட்டுக்காளை. 1980 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூலில் சாதனை புரிந்ததோடு மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாரையும் பல படிகள் மேலே உயர்த்தியது.
அந்த படத்தில் வில்லனாக ஜெய்ஷங்கரை ஒப்பந்தம் செய்யும் திட்டத்தை தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணனும், இயக்குனர் எஸ்.பி.எம்.மும் ரகசியமாக வைத்திருந்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அடுத்து ஒரு பெரிய ஹீரோவாக கலக்கிவிட்டு தனது இரண்டாவது இன்னிங்க்ஸ்சுக்காக ஜெய் ஷங்கர் காத்துகொண்டிருந்த காலகட்டம் அது. இருப்பினும் ஜெய், பெருந்தன்மையுடன் அப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார். (இதே ஜெய் ஷங்கர், ரஜினி அதி பயங்கர வில்லனாக நடித்த ‘காயத்ரி’ படத்தில் ஹீரோவாக நடித்ததை நாம் மறந்துவிடக்கூடாது. )
ஜெய்ஷங்கரை வில்லனாக ஒப்பந்தம் செய்த விபரத்தை ரஜினியிடம் கடைசியில் இயக்குனரும் தயாரிப்பாளரும் சொன்னபோது, ரஜினி ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். “என்னங்க நீங்க… ஜெய் எவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட்… அவர் போய், என் படத்துல வில்லனா நடிக்கிறதாவது? வேண்டாம் ப்ளீஸ்” என்று எஸ்.பி.எம்.மும் சரவணனும் எவ்வளவோ சாமாதானப்படுத்தியும் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார்.
“இல்லை.. இல்லை… அந்த கேரக்டருக்கு ஜெய் தான் பொருத்தமாக இருப்பார். அவரிடம் பேசி, அவரது ஒப்புதல் பெற்று அவரது கால்ஷீட்டும் வாங்கியாகிவிட்டது. இந்த நிலையில் வேறொருவரை ஒப்பந்தம் செய்ய இயலாது” என்று எஸ்.பி.எம்.மும் திரு. சரவணனும் எடுத்துக் கூறி ஒரு வழியாக சூப்பர் ஸ்டார் இறங்கிவந்தார். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனையுடன்.
“சரி… நான் ‘முரட்டுக்காளை’யில் நடிக்கிறேன். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனைக்கு நீங்கள் ஒப்புக்கொள்வதானால்…. எனக்கு படத்தில் அளிக்க்கப்படும் அதே முக்கியத்துவம் ஜெய் சார் பாத்திரத்துக்கும் அளிக்கப்படவேண்டும். அவருக்கும் அதே ‘footage’ அளிக்கப்படவேண்டும். மேலும் படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் அவரின் படமும் இடம்பெறவேண்டும். சரியா?” என்று சூப்பர் ஸ்டார் கேட்க, அவரின் பெருந்தன்மையையும் தாராள மனதையும் வியந்து “அப்படியே செய்கிறோம்” என்று எஸ்.பி.எம். அவர்களும் திரு.சரவனுன்ம் ஒப்புக்கொண்ட பிறகே சூப்பர் ஸ்டார் தமது கால்ஷீட்டில் கையெழுத்திட்டார்.
சூப்பர் ஸ்டார் கேட்டுக்கொண்ட படி, ஜெய் ஷங்கருக்கும் படத்தின் அனைத்துவித பப்ளிசிட்டிக்களிலும் அவருக்கு இணையான முக்கியத்துவம் கடைசிவரை தரப்பட்டது.
- (ஏ.வி.எம். தந்த எஸ்.பி.எம். நூலில் திரு. எஸ்.பி.முத்துராமன் கூறியிருக்கும் தகவல் இது.)
[END]
RSS Feed
Twitter
November 6th, 2009
support 






Posted in
September 6, 2010 : எந்திரன் செப்டம்பர் ரிலீஸ் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
September 6, 2010 : மணமக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைக்க பரிசீலித்து வருகிறேன் – சூப்பர் ஸ்டார் அறிவிப்பு
September 5, 2010 : எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது – வைரமுத்து இல்ல விழாவில் சூப்பர் ஸ்டார் பேச்சு! News & Pics!!
September 5, 2010 : 1000 கோடி ஹீரோ ரஜினி – ‘தி சண்டே இந்தியன்’ இதழின் சூப்பர் ஸ்பெஷல் அலசல்!
September 4, 2010 : சௌந்தர்யா, அஸ்வின் திருமண வரவேற்பு – SNIPPETS FROM THE SPOT & Gallery!
September 3, 2010 : அஸ்வின்-சௌந்தர்யா திருமணம் இனிதே நடந்தது! வி.வி.ஐ.பி.க்களால் திணறிய திருமண மண்டபம்!!
September 3, 2010 : சௌந்தர்யா – அஸ்வின் திருமண வைபவம் துவங்கியது! களை கட்டிய மாப்பிள்ளை அழைப்பு!!
September 2, 2010 : சௌந்தர்யாவின் மெஹந்தி நிகழ்ச்சி – எம்.ஜி.ஆர். பாட்டை பாடி ஆடிய ரஜினி!
September 1, 2010 : சௌந்தர்யா திருமணம் – ரசிகர்களுக்கு தலைவர் வேண்டுகோள்!
September 1, 2010 : நக்கீரன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்! நக்கீரன் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பு!!



sir during which movie shooting is the picture is it thai veedu and I think rajini celebrated his birthday during billa and arunachalam shooting also am I right?
————————————-
It was Thudikkum Karangal 1983.
- Sundar
malarum ninaivugalai super photo
super news rajini avargalin perunthanmaikku ஒரு example
சுந்தர்ஜி,
//அப்போதெல்லாம் ஹீரோவாக ஜெய்ஷங்கர் கலக்கிகொண்டிருந்த காலகட்டம்.//
என் நினைவுக்கு தெரிந்த வரையில், அப்போதெல்லாம் ஜெய்ஷங்கருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இருந்ததாக தெரியவில்லை. முரட்டு காளை வெளியாகி அது மிக பெரிய வெற்றி பெற்ற பின்பு ஜெய் சங்கருக்கு இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பம் ஆயிற்று என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவருக்கு அப்போது மார்க்கெட் இல்லாவிடினும்கூட, அவருடைய சீனியாரிட்டி மற்றும் அவரின் கடந்த கால திரையுலக சாதனைகளை மதித்து, தலைவர் அவருக்கு தனக்கு சமமான விளம்பர மரியாதையை கொடுத்தது.
அன்புடன் அருண்
Thalaivar is Great!!!!!
நண்பர் அருண் சொன்னது உண்மைதான். முரட்டுக்காளை படத்திற்கு பிறகு ஜெய் படு பிஸியானார். பலதரப்பட்ட கதாபத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அந்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்களே இல்லை என கூறலாம். முரட்டுகாளை தொடங்கி, கர்ஜனை (1981), தனிக்காட்டு ராஜா (1982), பாயும் புலி (1983), துடிக்கும் கரங்கள் (1983), தாய் வீடு (1983), அடுத்த வாரிசு (1983), தங்க மகன் (1983), அன்புள்ள ரஜினிகாந்த் (1984), படிக்காதவன் (1985), மாவீரன் (1986), மாபிள்ளை (1989), நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி (1991), அருணாசலம் (1997) என நம் தலைவருடன் நடித்திருக்கிறார் ஜெய்.
மேலும் ஜெய் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல, பண்பட்ட நல்ல மனிதரும் கூட. நான் கேள்விப்பட்டது திரையுலகில் மட்டும் அல்ல வெளி உலகிலும் கூட பல உதவிகளை சமுதாயத்துக்கு செய்துஇருக்கிறார். தளபதி படத்தில் ரஜினி மற்றும் ஜெய் நடித்த காட்சி இன்றைக்கும் எனக்கு பிடித்தமான ஒன்று.
ஜெய்ஷங்கர் அருநாச்சலதில நடிச்சிருக்காரா ? எந்த ரோல்ல கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்!
———————————————-
சௌந்தர்யாவின் தந்தையாக.
- சுந்தர்
திரு.சுந்தர்,
தலைவரின் பின்னால் நின்று சிரித்து கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
——————————————————–
அவர் நடிகர் பிரதாப் சந்திரன். சூப்பர் ஸ்டாருடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.
- சுந்தர்
நண்பர்கள் சொன்ன இது போன்ற விசயங்கள் எனக்கு புதுசு! தலைவரை பற்றி செய்திகள் படிக்கும் போதும் பார்க்கும் போதும் எனக்கு சிலீர்க்கிறது. எனக்கு வயது 24 நான் தலைவரை பாட்ஷா வில் இருந்துதான் கவனித்தேன். அவர் கதையை தேர்ந்தெடுக்கும் விதம், அதிலும் கூட ஒழுக்கம் மக்களுக்கு நல்ல கருத்தை எடுத்து சொல்லும் விதம் இப்படி பல விசயங்கள் என்னை அவரை பற்றி ஆராச்சி செய்ய வைத்தது அந்த ஆராய்ச்சிதான் என் போன்ற ரசிகர்கள் உருவாக காரணம்.
-சுரேஷ் E.M
————————————————
மிக்க மகிழ்ச்சி.
- சுந்தர்
I became superstar big fan not just for his style and his acting and also for his character. What a gem character. B’coz of these things , i will tell sivaji punch dialogue million times.
சிக்சுக்கு அப்புறம் செவண்டா , சிவாஜிக்கு அப்புறம் எவண்டா !!!.
ஜெய்சங்கர் தமிழ் நாட்டின் முதல் ஜேம்ஸ்பாண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் . முரட்டுகாளை எடுத்த நேரத்தில் அவரது திரையுலக மார்க்கெட் கொஞ்சம் டல் என்பது உண்மைதான் என்ற போதிலும் எம்ஜியார், சிவாஜி க்கு அடுத்த பெரிய ஹீரோ ஜெய்சங்கர் தான்.
திரை உலகில் என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்த இருவர் எம்ஜியாரும்(மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் விதிவிலக்கு) நமது தலைவரும் மட்டும் தான். தலைவரின் நண்பர் கமல் கூட ஓரிரு வருடங்கள் ஒதுங்கி இருக்க வேண்டியிருந்தது.
அந்த வகையில் ஜெய்சங்கர் ஒரு மாபெரும் ஹீரோ என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது. அவர் தலைவரின் அன்புக்குரிய முக்கியமான நண்பர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
முரட்டுகாளை படபிடிப்பில் தலைவர் இரண்டாவது ஹீரோ போன்றே நடந்து கொண்டார். வெளிப்புற படபிடிப்பில் தான் தரையில் படுத்துக்கொண்டு ஜெய்சங்கரை கட்டிலில் படுக்க சொல்லி மரியாதை செய்தவர் நமது தலைவர்.
இன்றைய ரசிகர்கள் தலைவரின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது.
———————————
Welcome thinakar. Thanks for stunning infos.
- Sundar
தலைவர் எப்பொழுதுமே மூத்த தலைமுறை நடிகர்களுடன் நல்ல உறவும் மரியாதையும் வைத்து இருந்தார். (ஜெய், ரவி, சிவகுமார், சவ்கார், தேங்காய் சீனிவாசன், சோ மற்றும் பலர்)
இன்றைக்கும் நடிகர் திரு ரவிச்சந்திரனை பார்க்கப் போவது என்றால் போன் செய்துவிட்டு அவரது வீட்டுக்கு தானே சென்று பார்ப்பது தலைவரின் வழக்கம்.
தலைவருக்கு ஜெய் சார் நெருங்கிய நண்பர் . .பயங்கர மரியாதை உண்டு . அவர் நடித்த பழைய படமான பூவா தலையா எனக்கு ரொம்ப பிடிக்கும் .கமலுக்கும் ரஜினிக்கும் ஏதோ சிறு சலசலப்பு நடந்த பொது அவர் தான் சமாதானம் செய்தார் என்று கமல் ஒரு இடத்தில சொலிருந்த ஞாபகம் .
@சிம்பிள் ஸ்டார் of superஸ்டார்
அவர் ரஜினி இன் மாமனார் ஆகா நடித்திருப்பார், அதாவது சௌந்தர்யா வின் அப்பாவாக…… thanks to u mr.sundar..nice post
நண்பர் சுனில் குறிப்பிட்டு இருப்பது நூறு சதவிகிதம் உண்மை. மேல உள்ள என் பதிவில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அனால் அதை நண்பர் சுனில் சொன்னமைக்கு மிக்க நன்றி.
Sundarji, I think this birthday of Thalaivar is of the year 1982 because Thudikkum Karangal released in March1983. So, this shooting must have happened in December 12, 1982.
Thanks for interesting infos abt Thalaivar and his off-screen pics of the olden days. One more thing, that I read somewhere abt our Thala is that, while shooting for Oorkaavalan movie, Rajini did something similar to the one mentioned below.
For that movie, Thala requested the director to not have scenes which may potentially damage the hero-image of an upcoming actor like Pandian. (I think this was with respect to the scenes where Pandian gets beaten up by the villains or so).
See our Thalaivar is careful and is concerned abt the image of not just top-actors or senior like Jayshankar but also some upcoming actor who is much younger to him. That is our Thala. Consider this to present day stars (especially that self-boasting youth hero) who will be looking for an oppurtunity to dent other actor’s image.
———————————–
Thanks for the excellent information regarding thalaivar and actor Pandian.
- Sundar
Arun and friends,
You are right abt Jaishankar star-status during MGR-Sivaji era. He also had a substantial fan following after the two legends. I heard during those days, Jaishankar and Ravichandran were of one generation who had good following especially among the youth, urban audience. (Somewhat like what Karthik-Prabhu had during our Thala’s times). But their career hit a lean patch in the late 70s. Murattu kalai gave Jai a good break and started his second innings.
Even I heard Karthik’s career didnt go well a few years after his impressive debut. Thalaivar’s Nallavanukku Nallavan again brought him into limelight. After that Karthik became busy again and remained a popular star for quite a few years.
I dont know how far it is true, I heard even Prabhu acted with Thalaivar in Dharmathin Thalaivan because Prabhu’s career had not taken off as well as expected. So, Sivaji sir apparently asked Thala to cast Prabhu along with Rajini so as to give him a break. Thats why he acted with Thalaivar in two consecutive films Dharmathin Thalaivan and Gurusishyan in 1988. This really kickstarted his career and Agni Natchathiram came the same year. Then Prabhu became a star. See Thalaivar is such a lucky mascot for everyone. He had resurrected the careers of so many actors/producers in the industry. The list is quite long.
Sundarji,
The fact that Thalaivar is such a nice person is the reason he has so many fans like us and a super fan like you, Arunji, Gopiji, EERAA, DrSuneel, Mahesh and others. Lets all behave like him in real life
சுந்தர்,
அருமையான மலரும் நினைவுகள் if I remember right there was an article in kUmudam or av saying that SS has topped sivaji (in cutout’s) there was a huge cutout At drive in complex for thudikkum karangal with SS with that thing ( i am not able to remember the thing which he was having in his hand if I rember slang is undigol)
Jai had a good and steady market in films after murattukkalai for a long time . he is also famous for his style
Kamesh
I think Thalaivar did not attend Jai Sir’s funeral because He was so heart broken to bear the loss of Jai Sir. He liked and respected Jai Sir a lot and was really shaken by Jai Sir’s loss.
—————————
Later he attended condolence meeting and opened up his heart.
- Sundar
Nice bit of nostalgic information. Thanks to Sundar and others.
தலைவரின் இந்த பெருந்தன்மை திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக அக்கரையிலும் மேலோங்கி நிற்கிறது – எந்த செயலைச்செய்தாலும் அந்த செயல் மூலம் மற்றவரின் முன்னேற்றத்தை முக்கியமாகக்கருதும் குணம் இந்த கால கட்டத்தில் தலைவரைத்தவிர யாருக்கு வரும்
இப்படி ஒவ்வொரு விசயத்திலும் அடுத்தவரின் நலத்தை பெரிதும் எண்ணும் தலைவர் அவரை வாழ வைத்த நம் தமிழக மக்கள் மீது எத்துணை அக்கறை கொண்டிருப்பார் என்று சொல்லவும் வேண்டுமோ
காத்திருப்போம் காலம் கனிய
விஷ் யு ஹாப்பி பர்த்டே தலைவா பெஸ்ட் வாழ்த்துக்கள்
உங்கள் ரசிகன் சங்கர் ஜோர்டான்.
இந்தியாவின் சிறந்த சூப்பர் ஸ்டார்,
தமிழ்நாட்டின் சிறந்த தளபதி,
அண்ணன் தலைவா நீர் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும்
சஞ்சீவிராமன்
அண்ணாமலை ரசிகர் மன்றம் செயலாளர் திம்மியன் பேட்டை
காஞ்சிபுரம்.
இப்படி பெருந்தன்மயா இருக்றதலா தான் இன்னும் தலைவர் உயர்ந்து கொண்டே இருக்கார்.
i love thalaivar RAJNIKANTH and i like thalaivar fans.