Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் & குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்” – புகழ் பெற்ற பொன்மொழி இது. சூப்பர் ஸ்டாரின் இந்த இமாலயப் புகழுக்கும் வெற்றிக்கும் பின்னால் ’லதா’ என்னும் ஒரு பெண்ணின் உழைப்பும் அர்பணிப்பும் இருக்கிறது என்றால் மிகையாகாது.

ஆரம்ப காலகட்டங்களில் உணர்ச்சிக் குவியலாக ஒரு காட்டாறு போல இருந்த சூப்பர் ஸ்டாரை அணை வெள்ளமாக தேக்கி சாந்த சொருபீயாக மாற்றியதில் பெரும்பங்கு அவரது துணைவியார் லதாவுக்கு உண்டு.

thalaivar madamj  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

ஆக்ரோஷமான ஆர்பாட்டமான ஒரு ரஜினி இன்று அமைதியின் உருவாகவும் பொறுமையின் சிகரமாகாவும் மாறியிருக்கிறார் என்றால் அதற்க்கு திருமதி. லதாவும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சூப்பர் ஸ்டார் இரவு பகல் பாராது பிஸியாக நடித்துகொண்டிருந்த காலகட்டங்களில் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு குடும்பத்தை திறம்பட நடத்த உதவியவர் லதா. கணவருக்கு இருக்கும் புகழ் வெளிச்சமே தனக்கு போதும் என்று எண்ணாமல் தனக்கென ஒரு அடையாளம்  வேண்டி, கல்வி குறித்த தனது லட்சியங்களுக்கும் கனவுகளுக்கும் வடிகால் தேடி, அவர் துவக்கியது தான் ஆஷ்ரம் குழுமம். தரமான பள்ளிக்கல்வியை போதிக்கும் இந்நிறுவனம் மாணவர்களுக்கு வெறும் கல்வியை மாத்திரம் போதிப்பதோடு அல்லாமால் வாழ்வியல் முறைகளையும்  போதிக்கிறது. பல்வேறு அறப்பணிகளை தயா பவுண்டேஷன் மூலம் விளம்பரமின்றி செய்து வருகிறது. முற்றிலும் ஒரு வித்தியாசமான பாடத்திட்டத்தோடு இயங்கும் ஆஷ்ரம் பள்ளியின் கல்வித்திட்டம் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

நமது கல்வி முறைகள் பற்றியும் அதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் திருமதி.லதா ரஜினிக்கு ஆரம்பத்திலிருந்தே குமுறல்கள் உண்டு. பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டிக்காக விகடன் சார்பாக திரு.மதன் இவரை சந்தித்தபோது நமது கல்விமுறையில் தேவைப்படும் மாற்றம் பற்றிய இவரது ஆணித்தரமான, அவசியமான கருத்துக்களை பார்த்து வியந்துபோய், விகடனில் ஒரு தொடராகவே அதை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். விகடனில் திருமதி.லதா ரஜினி எழுதிய அந்த தொடரும் “அவர்கள் சின்னஞ் சிறு மனிதர்கள்” என்ற பெயரில் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்றது. (பின்னர் அது புத்தகமாகவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.) “லதா ரஜினி எழுதுகிறார் என்பதற்காக நீங்கள் இதை வெளியிடவில்லை என்பதை புரிந்துகொண்டோம். . உண்மையில் இந்த தொடரில் நாங்கள் அத்துணை விஷயங்களை கற்றுக்கொண்டோம். விகடனுக்கு நன்றி….!!” என்ற ரீதியில் அந்த தொடர் நிறைவுபெற்றபோது விகடனுக்கு வாசகர் கடிதங்கள் குவிந்ததே இதற்க்கு சாட்சி. நம் தளத்தில் இந்த செய்தியும் அந்த அடிப்படையில் தான் இடம்பெறுகிறது.

லதா, தாம் கனவு கண்ட லட்சியக் கல்விமுறைகளை தாம் நிர்வகிக்கும் ஆஷ்ரம் பள்ளிகளில் செயல்படுத்தி பாராட்டுக்களையும் குவித்து வருகிறார். சமீபத்தில் மழலைக் குழந்தைகளுக்கான “ஆனந்தவனா” என்னும் கல்விமுறையை துவக்கியிருக்கிறார்.

சென்ற வாரம் ஹிந்து நாளிதழில் வெளியான ஒரு சிறப்பு கட்டுரையின் மொழி பெயர்ப்பை இங்கு  உங்களுக்காக தருகிறேன். சூப்பர் ஸ்டாரை கட்டுரையின் கடைசியில் திருமதி.லதா கூறியிருக்கும் சில வார்த்தைகளை நமது Tidbits பகுதிக்காக கொடுக்கலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் கட்டுரையை முழுதும் படித்தபின்பு, அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்காக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு (Nov.14) ஒரு சிறப்பு பதிவாகவே தரலாம் என்று நினைத்தேன். புகைப்படம் உள்ளிட்ட பல விஷயங்களை நிறைய தயார் செய்யவேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.

- சுந்தர்
Onlysuperstar.com

————————————————————————————

latha madam m  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

Photograph courtesy - The Hindu

சிறிய குழந்தைகளுக்காக லதா ரஜினியின் பெரிய கனவுகள்
(ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறைகளில் ஒரு புதிய பரிமாணத்தை காண்பிக்க லதா ரஜினி தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளையும் போதித்த பண்டைய கால குருகுல முறை மீண்டும் திரும்புகிறது. லதா ரஜினியுடன் பேசியதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. கல்வி என்றாலே தளைகளை உடைப்பது தடைகளை தகர்ப்பது தான்.

கடினமான அட்டவணைகள், சகிப்புத்தன்மையற்ற கொள்கைகள், குறிக்கோளற்ற கல்வி முறைகள் – இந்தப் பிரச்னைகளை தீர்ப்பது பற்றிய சிந்தனை தான் லதா ரஜினியின் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அவர் இது குறித்து யோசித்ததன் விளைவு தான் “ஆனந்தவனா” – மழலைகளுக்கான கனவுப் பள்ளி.

போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் லதா ரஜினியை சந்தித்தோம். பழமையும் அதி நவீனமும் சரிவிகிதத்தில் கலந்து மிகவும் நேர்த்தியாக காணப்பட்ட அந்த அலுவலகமே அவரது வழிமுறையை நமக்கு கோடிட்டு காட்டிவிட்டது. “நம் புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் அனைத்தும் சரியாவே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எங்கோ தவறு நிகழ்ந்து அனைத்தும் தடம் மாறியிருக்கின்றன. அடுத்தடுத்து நடந்த அந்நிய கலாசார திணிப்புகளும் படையெடுப்புகளும் இதற்க்கு காரணமாக இருக்கலாம்.

latha rajinikanthm3  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

இன்று நன்றாக படித்த, பல பட்டங்கள் பெற்ற ஒருவருக்கு வாழ்க்கையை சரியாக வாழும் கலை தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். காரணம் துரதிர்ஷ்டவசமாக நமது கல்வி முறை நாம் செய்ய விரும்பும் தொழிலுக்கோ அல்லது பணிக்கோ தான் நம்மை தயார்படுத்துகிறதே தவிர நாம் சந்திக்கும் சவால்களை எதிர்க்கொள்ள அல்ல. இல்லையென்றால் ஏன் ஒரு என்ஜினீயர் தன்னை தானே சுட்டுகொள்ளவேண்டும்? அல்லது ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்? அல்லது இது போன்ற செய்திகளை நாம் ஏன் கேள்விப்படுகிறோம்?

எனக்கு புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் நாம் ஏன் குழந்தைகளை ஒரு பெரிய மனிதர்கள் போல நடத்தவேண்டும்? குழந்தைகளை குழந்தைகளாகவே ஏன் நடத்தகூடாது? சைதாப்பேட்டையில் உள்ள எங்களுடைய ஆனந்தவனாவில் “Just Be” என்று ஒரு வகுப்பு உண்டு. அதில், குழந்தைகள் அவர்கள் விரும்பியதை செய்யலாம். விரும்பியவாறு இருக்கலாம். பெயருக்கேற்றாற்போல ‘ஆனந்தவனா’ குழந்தைகளுக்கு ஆனந்தமாக இருக்கவேண்டும் என்பதால் (2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள்)  அந்தந்த குழந்தைகளுக்கு நன்கு பரிச்சயமான ஒருவர் அவர்களுடன் வகுப்பில் இருக்க அனுமதிக்கபடுகிறார். பள்ளிக்கு செல்லவேண்டும் என்றாலே குழந்தைகள் அழுவதை நிறுத்தவேண்டும். பள்ளிக்கூடத்தை பார்த்து குழந்தைகள் பயப்படக் கூடாது. இங்கு தினமும் மூன்று sessions உண்டு. குழந்தைகள் எப்பொழுது விரும்புகிறார்களோ அப்போது அவர்கள் வரலாம். இது ஒன்றும் அலுவலக சம்பிரதாயம் அல்ல. குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம். ஒவ்வொரு நாளும் குழந்தைகள் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள்.

latha rajinikanthm2  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

பெரியோர்கள் ஆசி எப்போதும் உண்டு

என் குடும்பத்தில் என் மீது ஆதரவும் அன்பும் இருப்பதால் தான் கல்விக்காக போராடுவது என்று முடிவு செய்து களமிறங்கியிருக்கிறேன். “என் பெற்றோர் தர்ம சீலர்கள். யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் எங்கள் வீட்டு கதவு திறந்திருக்கும். அது ஒரு பெரிய மகிழ்ச்சியான குடும்பம். அக்கம் பக்கத்திலுள்ளவர்களுடன் நாங்கள் மிகவும் நட்புறவு கொண்டிருந்தோம். இன்றைய குழந்தைகள் மனிதர்களுடன் பழகுவதில்லை. மாறாக எலக்ட்ரானிக் உபகரணங்களுடன் பழகிக்கொண்டிருக்கின்றனர். விலை உயர்ந்த விளையாட்டு சாமான்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கிறோம். அவர்களை காஸ்ட்லி ரெஸ்ட்டாரன்ட்டுகளுக்கு அழைத்து செல்கிறோம். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஒன்றே ஒன்று மிஸ்ஸிங். அது மனிதர்கள். அப்புறம் குழந்தைப் பருவத்திற்க்கே உரிய கலகலப்பு. பெரும்பாலான குழந்தைகள் கல்வி, மார்க், கிரேடு இவை தான் எல்லாமே என்று முடிவே கட்டிவிட்டார்கள். அவர்கள் இதனால் களைத்துப் போயிருக்கிறார்கள். சிரிப்பது என்ற ஒன்றையே  மறந்துவிட்டார்கள். இங்கு தான் பெற்றோர்கள் கவனிக்கவேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு “டைம்  மேனேஜ்மேன்ட்” அதாவது நேர மேலாண்மை பற்றி சொல்லித்தரவேண்டும். தவிர அவர்கள் விரும்புகிற விஷயங்களை செய்ய அவர்களை அனுமதிக்கவண்டும்.

தேர்வு நேரங்களில் தங்கள் குழந்தைகளை இசை வகுப்புகளுக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஒரு மணிநேரம் விளையாட்டுக்கோ அல்லது வேறு வகையான கலைகளுக்கோ குழந்தைகளை அனுப்பினால் அதனால் அவர்களின் தேர்வு எழுதும் திறன் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படாது. சொல்லப்போனால் அவர்கள் தேர்வை இன்னும் நன்றாக எழுதுவார்கள்.

பெற்றோர்களின் பொறுப்பு

தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதமளிக்க பெற்றோர்களால் மட்டுமே முடியும். “உங்கள் குழந்தைகளை கவனியுங்கள். அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து எதையும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுது கவனிக்கத் தவறி அமுங்கிப் போகிற விஷயங்கள் பிற்காலத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. அது அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும். இப்போதெல்லாம் நாம் உணர்வது குறைவு. சிந்திப்பது அதிகம். வருந்தத்தக்க ஒரு சூழ்நிலை இது.

latha rajinikanthm4  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

இன்றைய வேகமான உலகில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் இயந்திரத்தனமான  அடித்தளங்கள் ஆடிப் போக வாய்ப்புண்டு. எனவே  குழந்தைகளுக்கு பலமிக்க உணர்வு ரீதியிலான அடித்தளத்தை அமையுங்கள். அதை யாராலும் அசைக்க முடியாது.எத்தகைய சவால்களையும் சந்திக்கும் சக்தி அவர்களுக்கு இதன் மூலம் ஏற்படும்.

இதை தான் திருமதி.லதா ரஜினி தனது பள்ளிக்கூடங்களில் அமல்படுத்த விரும்புகிறார். அவருடைய பள்ளியில் பின்பற்றப்படும் (TASSC) கல்விமுறை இதை தான் செய்கிறது. அதன் நோக்கமே “சரியான வாழ்க்கைக்கு சரியான கல்வி” என்கிறார் லதா.

latha rajinikanthm5  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

திறமைக்கு அங்கீகாரம் எப்போதும் உண்டு

TASSC கல்வி முறை என்றால் என்ன?

The Ashram Specialized School Curriculum என்பதன் சுருக்கமே TASSC எனப்படுவது. பண்டைக் காலத்து குருகுல ஆஸ்ரம கல்வி முறைகளின் நவீன கலவையே இது.

கோகுலாஷ்ரமா – (7 முதல் 11 வயது வரை) , கோபாஷ்ரமா – (12 முதல் 15 வயது வரை), மதுராஷ்ரமா – (7 முதல் 11 வயது வரை) என்று மூன்று பிரிவுகளில் கற்பிக்கப்படும் இந்த கல்வி முறையில், வாழ்க்கைக்கு தேவையான கலைகள் , கைவினைகள் மற்றும் சுய முன்னேற்றம், என அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.

latha rajinikanthm6  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

குழந்தைகள் மேல் அளவற்ற அன்பு

இன்றைய குழந்தைகளுக்கு உள்ள பிரச்னைகள் பற்றி சுருங்கச் சொன்னால், “தேர்வுகள் மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வாகாது. காரணம் அது பாடத்திட்டத்தை தான் கவனிக்கிறது. வாழ்க்கையை அல்ல. நாம் புரிந்துகொள்ளவேண்டியது மூன்று விஷயங்களை தான். ‘ஒரு மாணவனின் தற்போதைய நிலை என்ன? அவன் என்னவாக விரும்புகிறான்? என்னவாக அவனுக்கு தகுதியிருக்கிறது…. திறமையிருக்கிறது?’ இவற்றைத் தான். எந்தக் குழந்தையையும் “Failure” என்று முத்திரை நமக்கு உரிமையில்லை. காரணம் நமது அளவுகோல்கள் தவறானவை. யாரோ எழுத, யாரோ திருத்த, யாரோ மார்க்  போடுகிறார்கள்.  அது எப்படி சரியாக இருக்கமுடியும்? குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆசரியர் குழந்தையின் Graph ல் எந்த இடத்திலும் காணப்படுவதில்லை. குழந்தைகளின் மனது புரிந்துகொள்ளமுடியாத ஒன்று. வளைந்துகொடுக்காத நமது கல்வி முறைகளால் எப்படி அதை புரிந்துகொள்ள இயலும்?

ஒரு வகுப்பில் 40 குழந்தைகளை சேர்த்துவிட்டு அவர்கள் அனைவரும் ஜெராக்ஸ் காப்பிகளாக இருக்கவேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவோம். அவர்களை கவனிப்போம். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வோம். ஏன்னில் – “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்”.

thalaivar madamm 300x221  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்“ரஜினி தன்னைத் தானே செதுக்கிகொண்ட ஒரு சிற்பி”

The ‘S’ Factors

Super Five
ஒரு சூப்பர்ஸ்டார் கணவர், இரண்டு பிரபல மகள்கள், ஒரு நட்சத்திர மருமகன். அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதம். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் பயணிக்கிறோம். இருப்பினும் ஒருவரையொருவர் மெச்சுகிறோம். பாராட்டுகிறோம். எங்கள் இல்லம் உயிர்ப்பான ஒரு இடம்.

Superstar
எங்கள் இல்லத்தில் அவர்தான் முதன்மையானவர். ஒரு சிறந்த LEARNER. சொல்லப்போனால் எனக்கு தெரிந்த மிகச் சிறந்த மனிதர். இந்த நிலைக்கு உயர்வதற்கு தன்னை தானே செதுக்கிகொண்டவர் அவர். நாங்கள் செய்யும் ஆன்மீக மற்றும் தர்ம காரியங்களை பகிர்ந்துகொள்கிறோம்.

latha rajinikanthm7  குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் &  குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்

அனைத்தும் இறைவன் ஆசி

Social Service
நாங்கள் அதை ‘சமூக சேவை’ என்று கூறுவதைவிட ‘சமூக அக்கறை’ என்றே அழைக்க விரும்புகிறோம். எங்களின் ‘தயா பவுண்டேஷன்’  மூலம்  குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான பல அறப்பணிகளை செய்துவருகிறோம். எங்களின் குறிக்கோள் “Care, Share and be Aware” என்பது தான். ‘தயா பவுண்டேஷன்’னின்  ‘ARM’ திட்டத்தின் மூலம், திறமையான் கைவினைஞர்களின் படைப்புக்களை ஒரே குடையின் கீழ் விற்பனைக்கு கொண்டுவருவது தான் இதன் நோக்கம்.

Spirituality
என்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆன்மிகம் தான் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. அதன் மீது எனக்குள்ள நம்பிக்கை தான் நான் இத்துணை ரோல்களை சிறப்பாக செய்ய எனக்கு உதவியிருக்கிறது. தொடர்ந்து இப்படியே இருக்க விரும்புகிறேன். வாழ்வை அது முழுமையானதாக ஆக்கியிருக்கிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் எனது முதலாளி.

http://www.hindu.com/mp/2009/11/07/stories/2009110751201300.htm

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

19 Responses to “குடும்பம், கணவர், குழந்தைகள், கனவுகள் & குறிக்கோள்கள் – மனம் திறக்கிறார் லதா ரஜினிகாந்த்”

  1. Rama Rama says:

    Vote for ENDHIRAN in **************.COM tamil movies category

    ————————————-
    Sorry i don’t want to encourage this type of votings (at present) which were purely meant to increase their hits.

    - Sundar

  2. R.Gopi R.Gopi says:

    சுந்தர்

    மிக மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரை இது… கூடவே நிறைய அட்டகாச புகைப்படங்கள்…

    உங்களின் உழைப்பு இந்த படைப்பின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது…

    உழைப்பே உயர்வு தரும்…. சிறிது தாமதமானால் கூட….

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர்…..

  3. tveraajesh tveraajesh says:

    சுந்தர் அற்புதமான பதிவு. என்னிடம் ஹிந்து பேப்பர் இருந்தும் அதை படிக்கமுடியவில்லை. உங்கள் தளத்தில் தம்ழில் படித்தவுடன் என் மகன், மகள் இருவரையும் ஆஷ்ரம் பள்ளியில் சேர்க்கலாம் என்ற ஆசை மனதில் தோன்றுகிறது. லதா அவர்களின் கல்வி சேவை மேலும் தொடர்ந்து வெற்றி பெற நம் வாழ்த்துக்கள். வாழ்க ரஜினி வளர்க அவரின் தொண்டு.

  4. சுந்தர் , அருமை அருமை இந்த பதிவு மிகவும் அருமை . திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களின் கல்வி குறித்த கருத்துக்கள் ஒவ்வொன்றும் அரசாங்கத்தாலும் கல்வியாளர்களாலும் கண்டிப்பாக நடைமுறைபடுத்தபட வேண்டியவை . ஒவ்வொரு குழந்தையின் வாழ்வியல் வெற்றிக்கு இது உதவும். சமீபகாலமாக நம் நாட்டின் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. கல்வி முறையை மாற்றி அமைக்கும் போது அந்த நிபுணர்கள் குழுவில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களையும் நியமித்து அவர்களது கருத்துக்களையும் இடம் பெற செய்வது நலம்.

    சுந்தர் உங்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன் ஏனெனில் இது ஹிந்து நாளிதழில் வெளியான ஒரு ஆங்கில கட்டுரையாக இருப்பினும் மிக தெளிவாக நேர்த்தியாக எளிய நடையில் மொழி பெயர்ப்பு செய்துள்ளீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  5. Manoharan Manoharan says:

    ஆஷ்ரம் பள்ளி பற்றி எப்போதுமே எனக்கு பெருமதிப்பு உண்டு. இயந்திரத்தனமான கல்விமுறைக்கு மத்தியில் பல ஆண்டுகளுக்கு முன்பே
    வாழ்க்கை முறை கல்வியை அறிமுகப்படுத்தியவர் லதாரஜினி. இதை அவர் சென்னையில் மட்டுமல்லாது பிற ஊர்களுக்கும் விரிவுபடுத்தினால் இதை விரும்புவோர் எல்லோரும் இதில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டு. கடைசியாக ஒரு கொசுறு கேள்வி..? சில நடிகர்களின் நட்சத்திர வாரிசுகளும் இங்கு தான் படித்தார்கள் என்பதை அவர்களது தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும்போது நம்பமுடியவில்லை. சரிதானே?

    ————————————————————————–
    பள்ளியை விட தன் பெற்றோரிடம் அந்த மாணவன் அதிகம் கற்றுக்கொண்டவனாக (??!!) இருக்கவேண்டும்.

    - சுந்தர்

  6. vasi.rajni vasi.rajni says:

    சுந்தர்ஜி , திருமதி லதா ரஜினி அவர்கள் கூறுவது போல கல்வி தான் ஒருவனை நெறிபடுத்தும் . இன்று தமிழ் நாட்டில் கல்வி முறை மிகவும் மோசமாக உள்ளது . சாதாரண பாலர் பள்ளிக்கே ஆயிரம் ஆயிரமாக மக்கள் செலவிடுகின்றனர் . பெருந்தலைவர் காமராஜரின் கல்வி முறை மீண்டும் செயல் படுத்த பட வேண்டும் . பல வளர்ச்சியடைந்த நாடுகளில் குடிமக்களுக்கு தரமான இலவச கல்வி முறை செயல்படுத்த படுகிறது.

    இங்கே மலேசியாவில் கூட 90% கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் இலவச அடிப்படை கல்வியை பெறுகின்றனர் .ஆனால் நான் கேள்விப்பட்ட வரை தமிழ் நாட்டில் மிக சிலரே அரசு பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் , பாமர மக்கள் கூட தரமான கல்வியை பெறவேண்டும். அரசு பள்ளியில் தரமான கல்வி முறை செயல் படுத்த வேண்டும். சீரான வளர்ச்சி தான் இந்தியாவை வல்லரசாக்கும் . சிவாஜியில் தலைவர் கூறுவது போல அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் . இல்லையேல் பாமரனுக்கும் படித்தவனுக்கு உள்ள இடைவெளி நாட்டையே ஆட்டிவிடும் .

    rajini will rule tamil nadu

  7. Venky Venky says:

    Nice one சுந்தர்….kalakitteeenga!!!

  8. harisivaji harisivaji says:

    எந்தக் குழந்தையையும் “Failure” என்று முத்திரை நமக்கு உரிமையில்லை. காரணம் நமது அளவுகோல்கள் தவறானவை. யாரோ எழுத, யாரோ திருத்த, யாரோ மார்க் போடுகிறார்கள். ///

    மறுக்கமுடியாத உண்மை என் மனதில் அடிகடி எழும் கேள்விகள் இவை
    ஒருவரின் திறமை அவரது memory power மட்டும் இல்லை சிந்திக்க தெரிந்தவனுக்கு அதை சொல்ல தெரியாமல் தடுமாறலாம் சிலருக்கு தெரிந்தும் கை எழுத்து அழகாக இருக்காது , சிலருக்கு வேகம் இருக்காது ,
    நம் கல்வி முறையில் மெமரி பவர் மற்றும் நல்ல கை எழுத்து இருந்தால் போதும் அவன் முதல் மாணவன் …
    இது எப்பொழுது ஒரு குழந்தை 5 வயது ஆனா அவளோதான்
    இதுல நீ பிரஸ்ட் நீ செகண்ட் நீ லாஸ்ட் ரேங்க் …இதுல கொடுமை fail வேற
    திறமைக்கு முதலில் அளவுகோல் கிடையாது …
    என்ன பொறுத்தவரை …
    அ) 1 to 5 th standard வரை எக்ஸாம் இருக்கலாம் பாஸ் பெயில் இருக்க கூடாது
    ஆ) வாத்தியாருக்கு வேலை பேப்பர் திருத்தி மார்க் போடுவது இல்லாமல் ஒரு குழந்தைக்கு இருக்குற திறமை என்ன என்பதை கண்டுபிடிக்கணும் ( அதும் தனிப்பட்ட திறமை அப்பொழுதுதான் அவர்களது மனதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எண்ணம் வராது )
    இ) அவனது திறமையை மெருகூட்ட பெற்றோரை அழைத்து பேசி அதற்கான சூலையும் ஏற்படுத்த வேண்டும்
    ஈ ) புக்ஸ் இருக்க கூடாது …..தேவையான ஒன்று இரண்டு தவிர

    இன்னும் …..
    மாற்றம் தேவை பார்க்கலாம் இப்பொழுது அமைச்சர் கபில்சிபல் அவர்கள் கல்விமுறை மாற்றத்தை பற்றி பெரிதும் பேசுறார் இவர் உண்மையாகவே மாற்றவேண்டும் என்றால் 10 th standard விட குழந்தை கல்விமுறை தான் முதலில் மாற்றனும் ….
    அப்படி மாறினால்
    இதற்கு முன்னோடியா லதா மேடம் நடத்தும் ஆஷ்ரம் இருக்கும்
    இருக்கனும் …
    அதற்கு ஒரே வழி தலைவர் ஆட்சிக்கு வரணும் …
    மேடம் கல்வி அமைச்சர் பொறுப்பு வகிகனும்
    அப்பொழுது இந்த கல்வி முறை மாற்றம் வரும்

    நம்பிக்கையுடன்
    குருவின் சிஷ்யன்
    ஹரி.சிவாஜி

  9. தற்போது தமிழகத்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் தினக் கூலிகளாக உள்ள பெற்றோர் மட்டுமே அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர். இதில் பெரும்பாலும் ஹரிஜன மக்களே. அவர்களும் தனியார் பள்ளிகளின் அதீத கட்டணத்தால் வேறுவழி இல்லாததால் தான் அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசு தனிக்கவனம் எடுத்து சீரிய முறையில் நல்ல திட்டங்களை வகுத்து அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்த வழி செய்யாவிடில், அரசுப்பள்ளிகள் நிலை மிகவும் மோசமாகிவிடும். அரசுக் கல்லூரிகளுக்கு(அதிலும் பொறியியற் கல்லூரிகள்) உள்ள Demand-ல் பாதி இருந்தால் கூட அரசுப் பள்ளிகள் எங்கோ போய்விடும். இதெல்லாம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு தோன்ற வேண்டுமே. குறைந்தது கல்வி அதிகாரிகளுக்காவது தோன்ற வேண்டும். நமக்குத் தோன்றி என்ன செய்வது? இது போல் Comment-ல் போட மட்டுமே முடியும்.

  10. சுந்தர்,

    நல்ல பதிவு.

    என்ன திரு லதா ரஜினிகாந்த் Ashram பள்ளி நடத்தினாலும் அங்கு சேரே விரும்புவோர் கொடுக்க வேண்டிய தொகை மிகவும் அதிகம் இது மறுக்க முடயாத ஒரு உண்மை.. அவர்கள் சொல்லிகொடுக்கும் முறை வித்தியாசமாக இருந்தாலும் அதில் ஒரு சராசரி இந்திய குடிமகன் கட்டுவது என்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

    காமேஷ்

  11. HARRIS HARRIS says:

    SIMPLY THE BEST சுந்தர். suuper keep it up…

  12. நல்லதை செய்ய பதவி தேவையில்லை மனசு இருந்தா போதும் என்கிற நல்ல கருத்து இந்த கட்டுரைல இருக்கிறது. திருமதி லதா ரஜினி அவர்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  13. vasi.rajni vasi.rajni says:

    நண்பர் ஹரி.சிவாஜி அவர்களே நீங்கள் கூறும் கருத்து அருமை . ஆனால் ஒரு விஷயத்தை தவிர . தலைவர் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி அவருக்கு தான் . இதில் சந்தேகம் இல்லை . ஆனால் தலைவர் நிச்சயம் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த பதவியும் தரமாட்டார் . இது வரை இருந்த அரசியல் கட்சியில் தலைவரின் கட்சி நிச்சயம் மாறுபட்டு இருக்கும் . படித்த திறமைசாலிளுக்கு அவர்களுக்கு தகுந்த பதவியை தருவார் . மற்ற அரசியவாதிகளைப் போல அவர் ‘திணிப்பு’ அரசியலை செய்ய மாட்டார். முழுவதும் தகுதி அடிப்படையில் தான் அவரது அரசியல் இருக்கும்.
    வாரிசு அரசியலும் , பண அரசியலும் தலைவருக்கு பிடிக்காது.

    rajini will rule tamil nadu

  14. harisivaji harisivaji says:

    vasi.rajni
    நீங்க சொல்றது சரிதான் ஆனால்…
    அதற்காக லதா மேடமின் திறமையை வீண் செய்திட கூடாதே
    இல்லையேல் ஆலோசகரா …
    எது எப்படியோ நல்லது நடக்கணும் …
    அது நல்லவங்க வந்தா தான் நடக்கும்..

    நம்பிக்கையுடன்
    குருவின் சிஷ்யன்
    ஹரி .சிவாஜி

  15. dr suneel dr suneel says:

    ஹரி sir
    உங்கள் observation அருமை . கல்வி என்பது வாழ்கையை எதிர் கொள்ள நமக்கு தேவையான அறிவு , எந்த சூழ்நிலையிலும் பகுத்து அறிந்து , நமக்குள் இருக்கும் ஜீவனின் சக்தியை வெளி கொனொர்ந்து , நாமும் ஆனந்தமாக நமை சுற்றி இருக்கும் உலகத்தை ஆனந்தமாக வேண்டும் .வாழ்கையை ரசித்து நம்பிகையுடன் வாழ கற்று கொடுக்காத கல்வி இருந்து என்ன பயன் ? இனியாவது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . லதா மேடம் போல ஒரு சிலர் முயன்று வந்தாலும் அது அனைவர்க்கும் சென்று அடைய வேண்டும்.

  16. ananth ananth says:

    Hi Sundar

    Ashram school seems to be different and interesting. I would like to know more about it . Is there any website? Google search failed to provide one. i found one review though. I have copied it here. you can either edit it or leave with just the link.

    Review from another website

    http://chennai.metromela.com/article/The+Ashram+School,+for+holistic+education/1001

    What you see – Everything about this school is bright and cheery. The bright orange gate on the Velachery Main Road announces The Ashram School in white lettering. The uniforms comprise a cheery orange top with checked skirt, shorts or trousers, as the case may be. And the school vans are white and yellow (they offer conveyance to all major localities from where the students come).

    What you get – For The Ashram School, fame was never difficult to bag. After all, it is owned by Latha Rajnikant, wife of South India’s biggest film star Rajnikant. Now however, it seems to have various other reasons for its fame as well. One of the reasons is that The Ashram School emphasizes on holistic learning instead of just academics. So kids here are encouraged to learn yoga, dramatics and the arts.

    The Ashram encourages self-expression and free thinking. This is most evident in the fact that though the Matriculation system of education is followed for the junior classes, once the child gets into the sixth grade, the parent has the option of switching him/her to the Indian Certificate of Secondary Education (ICSE) system or the Cambridge system that is the British O and A levels (helpful for those sure of going abroad for further studies) or even the Ashram Board’s own in-house system of education (though this certificate is not recognized in a lot of places, there are some takers for it).

    The Ashram even has a college along these lines, so someone taking these exams can continue for higher studies in this same system. Students can also choose to remain in the Matriculation system itself.

    In terms of the kind of facilities here, the school has well-ventilated class rooms. It provides everything from mineral water dispensers kept everywhere to morning/evening snack and lunch. There is no playground on the campus though. But the school authorities say that the children are taken out now and then to a nearby playground.

    The Ashram School has three campuses but the Velachery branch holds the administrative offices for all school purposes and correspondence. So if you are seeking admission for your child, then this is the office to go to.

    There are 30 to 40 students in each section here. On an approximate estimate, fees range from Rs. 10,000 to Rs. 18,000 depending on the classes – the higher the class, the higher the fees. This is a one-time fee for the whole academic year. They have classes right up to the twelfth grade.

    Our verdict – The co-educational school is known for its holistic approach towards learning. While the pluses also include the food and water facilities that it provides, lack of a playground needs to be looked into.

    Anytime between – 9.30 AM – 4 PM

    ——————————————————-
    thanks Ananth.

    Here it is:

    http://schools.papyrusclubs.com/AGS

    http://www.anandhavana.com

    - Sundar

  17. அறிவுபூர்ணமான கட்டுரை.அதை செயல் படுத்தும் திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  18. murugan murugan says:

    செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச்செல்வம் – அச்செல்வத்தை அனைவரும் அடையும்படி முக்கியமாக வருங்கால தலைமுறையினர் அந்த பயனை முழுவதுமாக பெற்று சிறந்த மனிதர்களாக திகழவேண்டும் என்ற நோக்கத்தோடு தொலை நோக்குடன் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆஷ்ரம் பள்ளியும் சமீபத்தில் சிறார்களுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்டிருக்கும் ஆனந்தவனா குருகுலத்திற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் – தலைவரின் துணைவியார் தமது பணியில் மென்மேலும் பல சாதனைகள் படைத்து தமது குறிக்கோளில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
    வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை கடந்து அச்சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி இன்று யாரும் எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் நமது தலைவருக்கு துணையாகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் மக்களுக்காக எந்நேரமும் உழைக்கத்துடிக்கும் ஒரு உத்தமரின் உடல் நலத்திற்கும் மன அமைதிக்கும் உறுதுணையாக இருக்கும் திருமதி லதா அவர்களுக்கு தலைவரின் ரசிகர்களாகிய நாம் அனைவரும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates