Flash News: Endhiran songs full relay in Suriyan FM (93.5) on 30th July, Friday. Don't miss it!

எந்திரன்: டப்பிங் பணிகள் துவங்கியது – Current Status Report

எந்திரன் – டப்பிங் பேசினார் ரஜினி

பக்கா ப்ளானிங்கோடு போய்க் கொண்டிருக்கிறது எந்திரன். நேரத்தை துளி கூட வீணாக்காது பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறது ஷங்கரின் டீம். சூப்பர் ஸ்டாரும் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறார்.

endhiran goap32  எந்திரன்: டப்பிங் பணிகள் துவங்கியது – Current Status Report

படத்தின் டாக்கி போர்ஷன்கள் அநேகமாக முடிந்தே விட்டன என்று சொல்லலாம். பாக்கியிருப்பது பாடல்கள் மட்டும் தான். எப்படியும் டிசம்பருக்குள் (அதிகபட்சம் பொங்கல் திருநாள்) அனைத்தையும் முடித்து, இறுதிகட்ட பணிகளுள் நுழைய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘எந்திரன்’ படத்தை பொறுத்தவரை நேரத்தை மிச்சப்படுத்த, எடிட்டிங் உட்பட படத்தின் பெரும்பாலான POST-PRODUCTION பணிகள் உடனுக்குடன் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளும் துவங்கிவிட்டன. கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமை இரு தினமும் பிரசாத் ஸ்டூடியோவில் சூப்பர் ஸ்டார் எந்திரன் படத்துக்கான முதல் கட்ட ‘டப்பிங்’ பேசினார். (திரையில் காட்சி ஓட, அதற்கேற்றார்போல வசனத்தை உச்சரிப்பது தான் டப்பிங்.)  மேலும் விபரங்கள் விரைவில்.

resool endhiranm 243x300  எந்திரன்: டப்பிங் பணிகள் துவங்கியது – Current Status Reportஅடுத்து ஒரு விசிலடிக்க வைக்கும் செய்தி

ஒரு படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று SOUND. சரியான ஒலிப்பதிவு என்பது ஒரு தரமான படத்திற்கு இன்றியமையாதது. அதுவும் சூப்பர் ஸ்டார் நடிக்க உலகத் தரத்தோடு தயாராகும் ஒரு படத்திற்கு – அதுவும் இசைப் புயல் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் படத்திற்கு… “ஒலிப்பதிவு” என்பது எத்துனை முக்கியம்? அதனால் தான் இயக்குனர் ஷங்கர் உலகத் தரத்திற்கேற்ப ஒரு ஒலிப்பதிவாளரை எந்திரன் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

சிறந்த ஒலிப்பதிவிற்க்காக ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி எந்திரன் படத்தின் ஒலிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். ‘SLUMDOG MILLINAIRE’ படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை – Best Sound Mixing ஆஸ்கார் விருதை ரசூல் பூக்குட்டி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி… எந்திரன் படத்தில் பணிபுரிவது பற்றி கேட்டால், “இது வரை நீங்கள் பார்க்காத ரஜினியை பார்ப்பீர்கள்” என்று மட்டும் சொல்கிறார் ரசூல். (இது ஒன்னு போதும் ரசூல் சார்….!)

கலக்குங்க ரசூல்… உங்க ‘ஒலி’ விருந்தை கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

எந்திரனில் சூப்பர் ஸ்டாருக்கு மூன்று வேடமா?

எந்திரனில் சூப்பர் ஸ்டார் மூன்று வேடங்கள் ஏற்றிருப்பதாக செய்தி ஒன்று கசிந்திருக்கிறது. நம் நண்பர்கள் கூட அதை உறுதி செய்து வெளியிடுமாறு என்னை கேட்டுக்கொண்டார்கள்.

நாம் விசாரித்தவரை அந்த செய்தியில் உண்மையில்லை. எந்திரனை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாருக்கு இரண்டே வேடம் தான். ஒன்று விஞ்ஞானி. ஒன்று எந்திர மனிதன். சும்மா ஒரு fanstasy க்காக வேடங்களை திணிப்பவரல்ல ஷங்கர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய ஷங்கரின் படங்களில் கேரக்டர்களின் திணிப்பு இருக்காது. அருமையாக பேக்கேஜ் செய்யப்பட்ட ஒரு பக்கா திரைக்கதையில், படத்தின் பெரும் பகுதியை இரண்டு ரஜினிக்களும் ஆக்கிரமித்துள்ள போது மூன்றாவதாக ஒருவருக்கு இடம் எப்படியிருக்க முடியும்? எனவே இது தொடர்பான செய்திகளில் உண்மை எதுவும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை.

எந்திரன் எப்போ ரிலீஸ்?

அனைவரின் கேள்வியும் இது தான்.

எப்படியாவது படத்தை ஏப்ரல் 14 க்கு ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் எந்திரன் குழுவினர். படத்தின் டாக்கி போர்ஷன்கள் முடிந்து டப்பிங் துவங்கிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள பாடல் காட்சிகளை  டிசம்பருக்குள் ஷூட் செய்துவிட்டு படத்தை ஏப்ரலில் விடுவது தான் இப்போதைய திட்டம்.  இருப்பினும் CG பணிகள் (Computer Graphics) நிறைய செய்ய வேண்டி இருப்பதால் ரிலீஸ் தேதியை இறுதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பூனாவில் ஒரு காட்சி எடுக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.

(குறிப்பு: கூடுமானவரை தீர விசாரித்து நம்பகமான செய்திகளை மட்டுமே நாம் இங்கு அளிக்கிறோம். அதையும் மீறி சில சமயங்களில் சில செய்திகள் தவறாகிவிட வாய்ப்புக்கள் உண்டு. மிகப்பெரிய மீடியா சக்திகளுக்கே ‘எந்திரன்’ செய்திகள் சவாலான விஷயம் என்பதையும் – நான் பத்திரிக்கையாளன் அல்ல என்பதையும் – ரசிகன்  என்பதையும் நினைவில் கொள்ளவேண்டுகிறேன். எந்திரன் செய்திகளுக்கு மட்டுமல்ல மற்ற செய்திகளுக்கும் இது பொருந்தும்.

தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!!

- சுந்தர் )

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

31 Responses to “எந்திரன்: டப்பிங் பணிகள் துவங்கியது – Current Status Report”

  1. prakash prakash says:

    Thanks Sundar for Endhiran scoop news.

  2. tveraajesh tveraajesh says:

    சுந்தர் ஒரு சின்ன திருத்தும். ரசூல் இந்த படத்தின் ஒளிபதிவாளர் அல்லது ஒலிபதிவாளர. அப்போது ரத்தினவேலு என்ன ஆனார். மேலும் நம் தலைவர் டெல்லி சினிமா மாநாட்டில் கலந்துகொள்ளவில்லையா?

    ———————————————-
    நான் தான் தெளிவா சொல்லியிருக்கேனே… ரசூல் இந்த படத்துக்கு சவுண்ட் எடிட்டர்னு… ரத்னவேலு ஒளிப்பதிவாளர். ரசூல் ஒலிப்பதிவாளர். போதுமா?

    இன்னும் ஒரு நாள் நிகழ்ச்சி பாக்கியிருக்கிறது. தலைவர் ஏன் இந்த FICCI கருத்தரங்கில் கலந்துகொள்ளவில்லை என்று தெரியவில்லை. இத்துனைக்கும் அவரது பெயர் போட்டு ஹிந்துவில் இந்நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் வெளியாகியிருந்தது. ஒரு வேளை சும்மா சும்மா முதல்வருடன் மேடையில் தோன்றவேண்டாம் என்று நினைத்திருக்கக்கூடும். அல்லது எந்திரனில் பிசியாக இருக்கக்கூடும்.

    (கலந்துகிட்டவங்க கோட் சூட்டோட வந்திருக்குறதை பார்த்து, தலைவரும் இப்படி கோட் சூட் போட்டு வந்திருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன்… வாவ்…)

    தலைவர் கடைசீயா கோட் சூட்டோடு வந்த விழா எதுன்னு யாருக்காவது தெரியுமா? (எனக்கு தெரியுமே…!! ஹி..ஹி..!!!)

    - சுந்தர்

  3. endhiraa endhiraa says:

    கலக்கிட்டீங்க சுந்தர் ji !

  4. Rajesh J Rajesh J says:

    HI Sundar, enakku thriyumey. The last time Superstar featured in suit coat is singapore and malaysia kalai nigalchi programme. Is it right????

    Thanks
    Rajesh J

    —————————-
    Right.
    - Sundar

  5. Rama Rama says:

    Thankyou for the updates sir. I am really very happy to read. Thalaivar last a eppa coat pottar nu theriya arvama irukku.

  6. kalidass kalidass says:

    அருமையான பதிவு. எந்திரன் பற்றிய ஒவ்வொரு துளி செய்திகளும் நமக்கு தேன் துளிகளுக்கு சமம். நன்றி சுந்தர்.

  7. bala bala says:

    hopefully we can see thalaivar by april….but i wonder to not that dubbing still exists in tamil cinema….

    i think thalaivar last came in a suit for a function might be is marriage recep////

    bala

  8. Kamal Kamal says:

    சுந்தர் அது எப்பனு சொல்லுங்க கொஞ்சம் plz அப்புடியே photo இருந்த publish பண்ணுங்க

  9. harisivaji harisivaji says:

    - Current Status Report-
    கிர்றுனு இருக்கு ….

    “இது வரை நீங்கள் பார்க்காத ரஜினியை பார்ப்பீர்கள்” என்று மட்டும் சொல்கிறார் ரசூல்….

    இதுல இவருமா ஏற்கனவே சுந்தர் கொடுகிற எந்திரன் செய்தால ஒழுங்கா வேல பாக்க முடியல எப்ப பார்த்தாலும் இதே நினைப்பாவே இருக்கு …இப்ப இவரு சொல்றது கேக்றப்பா சீட்ல உட்காரக்கூட முடியல சீக்கிரம் …ஒரு இரண்டு மூன்று ஸ்டில் ஆவது ரிலீஸ் பன்னுங்கையா …( அது ஒரு மாசத்துக்கு தாங்கும் )
    இவர்கள் எல்லோரும் வேற படம் பண்றப்ப நான் அந்த மாத்ரி பனிருகேன் இந்த மாத்ரி பண்ணிருக்கேன் என்று தன department பத்தி தான் சொல்லுவாங்க ..ஆனா இப்ப பாருங்க எல்லோரும் ரஜினி பத்தி தான் அவர் தான் மையப்பொருள் …(he is the Gravitional Power)

    நம்பிக்கையுடன்
    குருவின்.சிஷ்யன்
    ஹரி.சிவாஜி

  10. anbuaran anbuaran says:

    தலைவர் கடைசீயா கோட் சூட்டோடு வந்த விழா தலைவரின்(நடிகர் சங்க நிகழ்ச்சி அல்ல ) சிங்கப்பூர்,மலேசியா கலை நிகழ்ச்சிதான் என்று நினைக்கிறேன்.சரியா?இதுக்கு எனக்கு என்ன பரிசு தருவீர்கள் சுந்தர்ஜி ?
    இன்றைய எந்திரன் செய்திகள் எல்லாமே ச்சும்மா சரவெடி.ஆகவே இன்று முதல் உங்களுக்கு சரவெடி சுந்தர் என்றும் அழைக்கிறோம்.மற்றபடி உங்கள் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம் நீங்க சும்மா கொளுத்தி போடுங்க நாங்க பார்த்து ரசிக்க நாங்களிருக்கிறோம்.என்னவென்று தெரியவில்லை எந்திரன் ரிலீஸ் நெருங்க நெருங்க சும்மா மனசுக்குள் மத்தாப்புதான்.நன்றி சுந்தர்ஜி .

    ———————————
    You are right. Kudos to you and rajesh j.
    - Sundar

  11. ஈரா ஈரா says:

    //சிறந்த ஒலிப்பதிவிற்க்காக ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி எந்திரன் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். //

    ராஜேஷ் இந்த எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டி உள்ளார் என்று நினைக்கிறேன் ஜி

    ஈரா

  12. கிரி கிரி says:

    சுந்தர் சூப்பர் செய்தி! கலக்கலா கொடுத்து இருக்கீங்க :-)

    “சிறந்த ஒலிப்பதிவிற்க்காக ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி எந்திரன் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார்.”

    ****ஒலிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார்****

    தமிழ் ஏன் இன்றும் பல நூறு ஆண்டு கடந்தும் சிறப்பை இழக்காமல் இருக்கிறது என்பதற்கு இதை போன்ற மெல்லிய வேறுபாடுகளும் (முக்கிய) காரணம் :-)

    ரசூல் பூக்குட்டி விருது பெற்றதற்கு (ஸ்லம் டாக் மில்லியனர்) முக்கிய காரணம் சத்தத்தில் செயற்கை இல்லாமையே ..அதாவது ஒரு காட்சியின் போது இயல்பா என்ன சத்தம் வருமோ அது இருந்தது, அதுவே ஒரு படத்தை இயல்பாக காட்டும்.

    எடுத்துக்காட்டாக ரயில் நிலையம் என்றால் காஃபி விற்பவரின் சத்தம், ரயில் சத்தம், போர்ட்டர்கள் சத்தம், பொதுமக்கள் பேச்சு, சினிமா பாடல் இவையே. ஒரு சில படத்தில் பார்த்தால் கதாநாயகன் கதாநாயகி பேசும் சத்தம் மட்டும் கேட்கும், இது செயற்கையாக இருக்கும். இது ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் அருமையாக எடுக்கப்பட்டு இருக்கும், கவனித்தவர்களுக்கு தெரியும். இதை அவசியம் தேவை என்று அந்த பட இயக்குனர் கேட்டு இருந்ததாக ரசூல் கூறி இருந்தார்.

    இதை போல எந்திரன் படத்திலும் இருந்தால் அருமையாக இருக்கும், இதுவே படத்தை வேறுபடுத்தி காட்டாமல் நம்முடன் ஒன்றி போகச்செய்ய முக்கியமான காரணி இதை நமது ஒரு சில இயக்குனர்கள் தவிர யாரும் உணர்ந்ததா தெரியலை.

    ஏப்ரல் மாதம் Twenty-20 வருகிறது எனவே எந்திரன் படம் தேதி மாற்றப்படலாம்.

    எந்திரன் நிச்சயம் சாதிக்கும் அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. குசேலன் சமயத்தில் பேசியவர்களின் வாயை… ;-)

    —————————————
    Corrected. thanks.

    - Sundar

  13. naren naren says:

    Thannadaka sigamani SUNDAR valga.

  14. R.Gopi R.Gopi says:

    Sundar

    Rajesh is asking that question to you because in one place, you have reported wrongly. i.e. instead of ஒலிப்பதிவாளர், you mentioned there as ஒளிப்பதிவாளர்…

    So, the confusion… But, a single word spelling mistake has changed the entire content..

    Rajesh… ippo clearaa??

  15. tveraajesh tveraajesh says:

    எஸ் இப்ப கிளியர். நன்றி திரு சுந்தர்.

  16. Hats off to you sunder ji

  17. dr suneel dr suneel says:

    welcome rasool ,
    himalaya vasool

    ippavae kanna katuthe, enthiran fever vandhuruchu boss

  18. veera veera says:

    கலக்கல் நியூஸ் சார்,,எந்திரனுக்காக காத்திக்கிட்டு இருக்கிறேன்

  19. ஹாய் sundar, suda suda seidhi tharum thangaluku mikka நன்றி.

  20. vasi.rajni vasi.rajni says:

    அருமையான செய்தி சுந்தர்ஜி ,இன்னும் இரண்டு பாடல்கள் இருப்பதாக நினைக்கிறேன் . அந்த படபிடிப்பும் நல்ல முறையில் நடைபெற ஆண்டவனை பிராத்திப்போம்

    சுந்தர்ஜி எனக்கு தெரிந்து 2002 நடைபெற்ற மலேசியா கலை நிகழ்ச்சிக்கு தலைவர் சிவப்பு டி ஷர்ட் அணிந்து வந்தாக ஞாபகம் . சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் தலைவர் வெள்ளை வெட்டி வெள்ளை சட்டையுடன் இருந்தார் என்று நினைக்கிறேன் .தவறாக இருந்தால் மன்னிக்கவும் .

    rajini will rule tamil nadu

  21. Venky Venky says:

    Rasool got another Oscar……
    Saravedi sundar…sooper title ma :-)

  22. Sharath Sharath says:

    Thanx a ton for the updates !!!

  23. சுந்தர்,

    மகிழ்ச்சிகரமான செய்தி தலைவரை மீண்டும் ஒரு முறை எந்திரன் பட கெட்டப்புகளில் பார்த்து மகிழ்ந்தேன் பாப்போம் காலம் கை கூடினால் எந்திரன் பார்பதற்கு ஆல்பர்ட் வருகிறேன்

    காமேஷ்

  24. சிவாஜி படத்தின் ரிலீஸ் சமயத்தில் தனது ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வரவழைத்து விருந்து கொடுத்து அனுப்பினார் ரஜினி. கூடவே, வழக்கம் போலவே ஏக்கத்துடன் கேட்ட ரசிகர்களிடம் நான் வருவது என் கையில் இல்லை என்று சொல்லி ஏகத்துக்கும் உசுப்பேத்தி விட்டார்.

    எந்திரன் ரிலீசுக்கு முன்னாடியும் அதே மாதிரி விருந்தும், உசுப்பேத்தலும் உண்டு. அதற்கான அறிகுறிகள் தென்படுகிறது ராகவேந்திராவில்.

    ————————————————————————
    உங்களுக்கு பதிலை, அருமை நண்பர் வஸி, Tidbits 31 பதிவில் கமென்ட் பகுதியில் கூறியிருப்பதையே பதிலாக தருகிறேன். படித்து பார்த்து தெளிவு பெறவும்.

    - சுந்தர்

  25. ஹாய் sundarji
    தேங்க்ஸ் a lot for super updates.

  26. shoaib shoaib says:

    One of the reasons as to why Superstar Rajinikanth is the Superstar of Indian Cinema is because his reach, appeal and fan following goes way beyond the boundaries of Tamils and those who can understand, read and write Tamil.

    Those SS fanatics like myself who cannot read Tamil are basically shut out from this great website because 98% of the content ihere s in Tamil and Tamil only. While I don’t expect Sundar to give an English translation for every SS article or news item that appears on this site I would make a humble plea to Sundar to at least make sure that any news about SS’s movies has at the very least a brief English translation.

    Sundar has enough on his plate so even if another SS fan here who is well versed in both Tamil and English can provide us with an English translation of news regarding up coming Superstar films and so on, I would be most grateful.

    Many Thanks in advance,
    Shoaib

  27. murugan murugan says:

    எந்திரன் வேகம் நம்மை பிரமிக்கவைக்கிறது – விரைவில் வெள்ளித்திரையில் நமது தலைவரை தரிசிக்க தயாராகுங்கள் – ஒரு சாதனையே மற்றுமொரு சாதனையை நிகழ்த்தவிருக்கும் அதிசயத்தை கண்டு ஆனந்தத்தில் நீந்தித்திலைக்க தயாராகுங்கள்

  28. Pucca message Mr.Sundar. Thank you

  29. Raja Raja says:

    அப்போ எந்திரன் படத்துக்கு நிறைய அவார்ட் இருக்குனு சொல்லுங்க.எனக்கு மட்டும் இல்ல மொத்த ரசிகர்களுக்கும் ஒரு குறை அது தலைவர் கு இன்னும் தேசிய விருது கிடைக்காமல் இருபது, அது கண்டிப்பா எந்திரன் படம் மூலமா நிறைவேற கடவுளை பிராத்திப்போம்.

  30. manigopal manigopal says:

    ஜஸ்ட் சென் மீ தி உப்டடேஸ் டு மி இ-மெயில் mani_anif@yahoo.co.in

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates