Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

Tidbits 31: சூப்பர் ஸ்டார் படித்த முதல் தமிழ் நாவல் & “ரஜினியை எண்ணி வியக்கிறேன்” – அமிதாப்!!

1) ரஜினியின் ஒழுக்கத்தையும் அர்பணிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன் – அமிதாப் பச்சன்

பத்திரிக்கை பேட்டி, தனது ப்ளாக், ஷூட்டிங், மகன் மற்றும் மருமகளுடன் சினிமா விழாக்கள் என்று படு பிசியாக இருக்கிறார் அமிதாப் பச்சன்.

bigb rajnipj 239x300  Tidbits 31: சூப்பர் ஸ்டார்  படித்த முதல் தமிழ் நாவல் & “ரஜினியை எண்ணி வியக்கிறேன்” – அமிதாப்!!ப்ரோகெரியா என்னும் நோயால் பாதிக்கபட்டு இளைமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படும் 14 வயது சிறுவனாக இவர் நடித்துள்ள “பா” படம் தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன். இப்படத்திற்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா என்பது கூடுதல் தகவல்.

படம் குறித்தும் இதர விஷயங்கள் குறித்தும், Times of India வுக்கு அமிதாப்ஜி அளித்துள்ள பேட்டியில் சூப்பர் ஸ்டார் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். “ரஜினி கமல் இருவருடனும் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ரஜினி சிவாஜியை முடித்து ரிலீஸ் செய்த சமயத்தில், நாங்கள் மும்பையில் சந்தித்தோம். எனக்கு திரையிட்டு காண்பிப்பதற்காக சிவாஜி படச் சுருளை மும்பைக்கு கொண்டுவந்தார் ரஜினி. நான் அவருடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அவரது ஒழுக்கத்தையும் அர்பணிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருக்கென்று விஷேஷ தேவைகள் எதுவும் தேவைப்படாது. ஷூட்டிங்கிர்க்கு நன்றாக தயார் செய்து கொண்டு வந்து அவர் காட்சிகளை அனாயசமாக முடிப்பார். அது தான் ரஜினி. கமல்… அவர் கூட என் நெருங்கிய நண்பர் தான். சமீபத்தில் நடைபெற்ற கமல் – 50 பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் வரமுடியாது போய்விட்டது.”

tamanna j 269x300  Tidbits 31: சூப்பர் ஸ்டார்  படித்த முதல் தமிழ் நாவல் & “ரஜினியை எண்ணி வியக்கிறேன்” – அமிதாப்!!2) ரஜினியுடன் டூயட் – தமன்னாவின் லட்சியம்

தமிழ் சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் ஒரு லட்சியம்  இருக்கும் – சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்வது தான் அது. காரணம் ஒரே படத்தில் உலகப் புகழ், A B C என மூன்று சென்டர்களிலும் பாப்புலாரிட்டி இப்படி பல இருந்தாலும் முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாருடன் நடிக்காமல் அவர்களது திரையுலக வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை என்பது தான்.

தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் தமன்னா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படியாவது சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறதாம் இந்த தேவதைக்கு. “அது தாங்க எல்லா நடிகைகளோட லட்சியமா இருக்கும்” என்கிறார் அம்மணி. லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.

சூப்பர் ஸ்டாருக்கு கூட ஒரு நடிகை கூட நடிக்கிறதுன்னு ஒரு லட்சியம் இருக்கு. தெரியுமுங்களா? மீனாவுக்கு மகனா ஒரு படத்திலாவது நடிக்கனும்கிறது தான் அது. அட நெசமாத்தாங்க. ஒரு விழாவுலே தலைவரே சொன்னது இது… (உனக்கிருக்கும் இளமைக்கு மீனா என்ன ஸ்ரேயாவுக்கே மகனா நீங்க  நடிக்கலாம் தலைவா…!!)

ankit fadiaj 300x270  Tidbits 31: சூப்பர் ஸ்டார்  படித்த முதல் தமிழ் நாவல் & “ரஜினியை எண்ணி வியக்கிறேன்” – அமிதாப்!!3) “ரஜினியின் படங்கள் எதையும் நான் மிஸ் செய்வதில்லை” – Ethical Hacker அங்கித் ஃபாடியா

மென்பொருள் மற்றும் கணினித் துறையில் புகழ் பெற்ற ஒரு சொல் “Ethical Hacking”. இதை செய்பவர்களுக்கு பெயர் Ethical Hacker. இந்த துறையில் புகழ் பெற்றவர் தான்  அங்கித் ஃபாடியா என்னும் இந்த 24 வயது இளைஞர். MTv யில் What the hack என்ற இவர் நிகழ்ச்சி ரொம்ப பிரபலம். தவிர பல பெரிய கார்பரேட் கம்பெனிகளுக்கு Hacking செக்யூரிட்டி ஆலோசகராக உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்டட பல வழக்குகளில் போலீசாருக்கு இவர் மெயில்களை ட்ரேஸ் செய்ய உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சென்னை வந்த அங்கித் ஃபாடியா, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது, “எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடித்த ஒரு விஷயம் அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் படங்கள் ஒன்றை கூட நான் மிஸ் செய்ததில்லை. சிவாஜி தி பாஸ் உட்பட.” – (Source Deccan Chronicle)

யார் இந்த அங்கித் ஃபாடியா? இவர் ரஜினியை பத்தி ஏதோ ரெண்டு வார்த்தை பேசினதெல்லாம் ஒரு விஷயமா என்று எண்ண வேண்டாம். அங்கித் ஃபாடியா யார் என்பதையும் அவர் செய்யும் பணி, இருக்கும் துறை எத்தகையது என்பதையும் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டால், அப்பொழுது புரியும் இப்படி ஒருத்தர் நம்ம தலைவருக்கு ரசிகரா இருக்கிறது நமக்கு பெருமை என்று. (A B C என ALL CLASS MASS இருக்குறவராச்சே தலைவர்!!)
கொசுறு தகவல்: அங்கித் ஃபாடியா பிறந்தது நம்ம தமிழநாட்டில் - கோயமுத்தூரில் தாங்க.
4) சிறந்த நடிகர் விருது – ரஜினி வரும் 8 ஆம் தேதி பெறுகிறார்

தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகளில் அதிகபட்சமாக சிவாஜி திரைப்படம் பல்வேறு துறைகளில் ஆறு விருதுகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
awardmj  Tidbits 31: சூப்பர் ஸ்டார்  படித்த முதல் தமிழ் நாவல் & “ரஜினியை எண்ணி வியக்கிறேன்” – அமிதாப்!!
2005 ஆம் ஆண்டிற்கான “சிறந்த நடிகர்” விருதைப் பெரும் சூப்பர் ஸ்டார்
விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, செவ்வாய்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழ முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல்வேறு கலைஞர்கள் இதில் பங்கேற்று விருதுகளை பெறவுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு நான்கு நாட்கள் முன்னதாக நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் சூப்பர் ஸ்டாரின் உரையை கேட்டக்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

5) எந்திரன் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம் – Economic Times

தென்னிந்தியா திரைப்படங்களின் வருவாய் மற்றும்  வசூல் குறித்த அலசல் கட்டுரை ஒன்றை The Economic Times நாளிதழ் நேற்று முன் தினம் வெளியிட்டது. (தினத் தந்தியில் அதன் தமிழ் மொழி பெயர்ப்பு நேற்று வெளியானது.) அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

“மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் அசோக வனம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் எந்திரன் ஆகியவை இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. வர்த்தக ரீதியில் இந்த இரண்டு திரைப்படங்களும் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. புத்தாண்டில், தென் மாநிலங்களின் திரைப்பட துறைகள் ஈட்டும் மொத்த வருவாயில், இவ்விரண்டு திரைப்படங்களின் பங்களிப்பு யாரும் எதிர்பாராத அளவுக்கு இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.”

6) ரஜினி படித்த முதல் தமிழ் நாவல்

சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் இலக்கிய ஆர்வம் நாம் அனைவரும் அறிந்ததே. தமிழில் வெளியாகியுள்ள தலை சிறந்த படைப்புக்களை பெரும்பாலும் அவர் படித்திருப்பார். அந்தளவு அவர் ஒரு இலக்கிய ஆர்வலர். அமரர் கல்கியின் எழுத்திற்கு அவர் மிகப் பெரிய ரசிகர் என்பதை அவரே கூறியிருக்கிறார். அது சரி… சூப்பர் ஸ்டார் படித்த முதல் தமிழ் நாவல் எது தெரியுமா? தலைவர் படித்த முதல் தமிழ் நாவலா? கேக்கவே ஆர்வமா இருக்கிறதல்லவா?

இது நடந்தது 1978 ஆம் ஆண்டு.

சந்திரகாந்தம் என்னும் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஒரு முறை இம்பீரியல் ஓட்டலுக்கு உணவருந்த இயக்குனர் மகேந்திரனுடன் வந்தார் ரஜினி. மறுநாள் ரஜினி இருவரையும் தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்தார்.

இலக்கிய ஆர்வலரான மகேந்திரன் அப்போது ரஜினியிடம் கேட்டார், “ரஜினி, நீங்க தி.ஜானகிராமன் எழுதிய “அம்மா வந்தால்” நாவலை படித்திருக்கிறீர்களா?”
“இல்லே… இது வரை படிச்சதில்லே” என்று சொல்லிவிட்டு “அந்தப் புத்தகம் கிடைச்சா படிச்சி பாக்கிறேன்,” என்றார் தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி. இதைக்கேட்ட மகேந்திரனுடன் வந்த நண்பர் அடுத்த நாள் காலையே அந்த நாவலை கடையில் வாங்கி அதனை ஒரு தயாரிப்பு நிர்வாகி மூலம் ரஜினிக்கு கொடுத்தனுப்பினார்.

சில மாதங்கள் கழித்து மீண்டும் ரஜினியை சந்தித்தபோது, “சார்… தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை படிச்சி பார்த்தீங்களா?”

“கையில் கிடைச்சவுடன் படிச்சிட்டேன். நான் படிச்ச முதல் தமிழ் நாவலும் அது தான்” என்றார் முகமெல்லாம் மலர. தி.ஜானகிராமன் எழுதிய அந்த நாவல் தான் ரஜினிக்கு மேலும் பல தமிழ் நாவல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று கூறலாம். தி.ஜானகிராமனை பின்னர் ஒரு சமயத்தில்நண்பர் சந்தித்தபோது இதை கூற மிகவும் மகிழ்ந்தார் தி.ஜா. அப்போது ஜானகிராமன் அகில இந்திய வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  (‘அமுதசுரபி’ தீபாவளி மலரில் படித்தது இது.)

*More pictures to be added later in this post

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

20 Responses to “Tidbits 31: சூப்பர் ஸ்டார் படித்த முதல் தமிழ் நாவல் & “ரஜினியை எண்ணி வியக்கிறேன்” – அமிதாப்!!”

  1. Gokul Gokul says:

    2005 எந்த படத்திற்கு தலைவருக்கு விருது?

    ——————————–
    Chandramukhi.
    - Sundar

  2. Rama Rama says:

    Endhiran at a time hindi la release akutha sundar sir.

    ————————————–
    Yes.

  3. anbuaran anbuaran says:

    சுந்தர்ஜி
    தகவல்களுக்கு நன்றி .

  4. Guhan Guhan says:

    (உனக்கிருக்கும் இளமைக்கு மீனா என்ன ஸ்ரேயாவுக்கே மகனா நீங்க நடிக்கலாம் தலைவா…!!)

    சுந்தர்ஜி கலக்கல் கமெண்ட் :)

  5. harisivaji harisivaji says:

    Now this site becomes one click contact for only rajini news
    அங்க இங்க எங்க ரஜினி பத்தி வந்தாலும்
    அது இங்க(onlysuperstarஇல்) இருக்கும்
    உங்கள என்ன சொல்றதுனே தெரியல ….சுந்தர்
    நான் அமிதாப் இன் பா படத்தின் விளம்பரத்தை பார்த்தேன் பார்த்து வியந்தேன் ….அந்த மாத்ரி ஒரு ஜாம்பவான் நம் ரஜினியின் நண்பராக இருப்பது எல்லோருக்குமே பெருமையான ஒன்று
    —-
    அங்கித் ஃபாடியா பிரமிக்க வைக்கும் ஒரு நபர் hacking என்பது பெரும்பாலும் தவறான வழியில் செல்பவர்களுக்கான ஒரு துறை என்பதை உடைதெரின்தவர் ….அதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம் என்பதை நிருபிதுகாட்டியவர் இவரை போன்ற தனித்து நிற்க வேண்டும் என்று விருப்ப படுபவர்கள் கண்டிப்பா ரஜினி யை பிடிக்கும்
    Economics Times இல் வர கட்டுரைகள் மிகவும் இயல்பாக நேர்த்தியாக இருக்கும் சிவாஜி ரிலீஸ் அப்போ என்னை கவர்ந்தவைகள் இவை
    http://economictimes.indiatimes.com/News/News-By-Industry/Media/Entertainment-/Entertainment/Big-gets-bigger/articleshow/2093132.cms
    http://economictimes.indiatimes.com/News/News-By-Industry/Media/Entertainment-/Entertainment/Jhoom-Barabar-Jhoom-flops-Sivaji-is-box-office-boss/articleshow/2137553.cms
    http://economictimes.indiatimes.com/News/News-By-Industry/Media/Entertainment-/Entertainment/Shivaji-mania-Theatres-out-of-tickets/articleshow/2124355.சம்ஸ்

    birthday special speech imm…..waiting

    நம்பிக்கையுடன்
    குருவின்.சிஷ்யன்
    ஹரி.சிவாஜி

  6. tveraajesh tveraajesh says:

    சுந்தர் மேலே உள்ள அணைத்து செய்திகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்து ஆனந்த பரவசம் அடைந்தேன். அற்புதம், அபாரம், அருமை. பாராட்ட வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை.

  7. இவளவு அருமையான செய்திகளை கொடுத்த உங்கள் பணிக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

  8. tveraajesh tveraajesh says:

    நண்பர் கோகுல் சந்திரமுகிக்கு முன் நம் தலைவர் பல முறை தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். அதன் விவரம் இதோ:
    1978 – முள்ளும் மலரும் (சிறப்பு விருது)
    1982 – மூன்று முகம் (சிறப்பு விருது)
    1995 – முத்து
    1999 – படையப்பா
    2005 – சந்திரமுகி
    2007 – சிவாஜி

    இங்கே நம் தள நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மூன்று முகம் படத்திற்கு பிறகு வெளிவந்து நம் தலைவர் அந்த பத்திரமாகவே வாழ்ந்து காட்டிய நல்லவனுக்கு நல்லவன், மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் படத்திற்கு சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கவேண்டியது, ஆனால் அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் நோய் வாய் பட்டதினால் அன்றைய அரசு 1984-1987 வரை விருதுகளை நிறுத்திவைத்தது. இல்லையேல் முதல்வர் எம் ஜி ஆர் பார்த்து பாராட்டி பரவசம் அடைந்த இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கும். ஆனால் அந்த குறையை ஈடு செய்யும் வகையில் நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கு பிலிம்பேர்
    மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் படத்திற்கு சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது ஒரு ஆறுதல்.

  9. dr suneel dr suneel says:

    தி ஜா அவர்களின் எழுத்து அபாரமானது , அவரின் மரபசு எல்லாரும் படிக்கச் வேண்டிய முக்கியமான புத்தகம் .

    மீனாவுக்கு மகனாக வெகு விரைவில் நடிக்க வாய்ப்பு இருக்கு .

  10. Hi friends,

    Recently I met a young immigrant from Karnataka, shen I was inquiring about her Tamil lanugaguae skils. I understand tamil well though I could not speak because I love Tamil movies” She calimed many actors like Surya, Vikram, bharath, etc all her favourites. But the stunning answer came when I replied my fabourite actor is none other than “Super Star Rajinikanth”. Can you guess what is her reply?

    “Super star is my everytime favourite, no matter what.” that is the speciality of demigod Rajinikanth; he is everytime favourite/ ever fagreen favourite actor for all ages. Others are only considered as actor in from South India. I always hear npwadays hearing lot of Pakistani , north indians inquiring are linking me when they hear I am from Tamil Nadu born.

    —————————————-
    Grt. Thanks for sharing.
    - Sundar

  11. K. SARAVANAN K. SARAVANAN says:

    எந்த்ரன் பாத்திரத்தில் ரஜினி சார் டிப்ப்ரென்ட் ஸ்டைல் இருக்குமா அது எப்படி பட்ட ரஜினியாக இருப்பார். ஆளவந்தான் கமல் மாதிரி பாத்திரமா அந்த காரெக்டர் வில்லன் மாதிரியா வித்தியாசமான பாத்திரமா இருக்குமா தெரிந்தால் சொல்லுங்களேன் மிஸ்டர் சுந்தர்.

    —————————————————–
    50% Comedy + 50% serious (Villain) = Endhiran

    - Sundar

  12. elango elango says:

    //மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் அசோக வனம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் எந்திரன் ஆகியவை இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.//

    இந்த வார்த்தைகள் என்னை சிரிக்க வைத்தன. தலைவரின் எந்திரன் குறித்த தகவல் உலகம் அறிந்த உண்மை. அசோகா வனம் குறித்த செய்தி சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வரவில்லை. இந்த செய்தி படிக்கும் பொது தான் எனக்கு அந்த படம் பற்றிய நீனைபே வருது.

  13. vasi.rajni vasi.rajni says:

    தலைவரின் தரிசனத்தை மீண்டும் ஒரு முறை காண வாய்ப்பு வந்துள்ளது . தலைவருக்கு விருது வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி.

    எந்திரன் தற்பொழுது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது என்று அறிந்தவுடன் மனதிற்குள் பூரிப்பு தங்க முடியவில்லை . ஒவ்வொரு ரஜினி ரசிகனின் வாழ்கையிலும் பாட்ஷாவிற்கு பிறகு மறக்க முடியாத படமாக எந்திரன் திகழும் . என்டிரனுக்கு பிறகு தலைவரின் அவதாரம் எதுவாக இருக்கும் என்று நினைக்கும் பொழுது உடலே சிலிர்கிறது . சுந்தர்ஜி நீங்கள் குமுதம் இதழில் கூறியது போல தலைவர் என்றுமே சுயநலமாக எந்த ஒரு முடிவையும் எடுத்ததில்லை . நம் தலைவரை பற்றி மற்றவர்களை விட நமக்கு அதிகம் தெரியும் . தனது ரசிகர்களின் நலனுக்காக தனது செல்வாக்கையும் துச்சமாக என்னும் தெய்வம் அவர் . அவருடைய அடுத்த அவதாரம் எதுவாக இருக்கும் என்று பலர் பல யுகங்களை கூறிவருகின்றனர் . ஆனால் தலைவரின் அடுத்த பயணம் எதுவாக இருக்கும் என்று என்னும்பொழுது என்னுடைய மனதில் ஓடிய வரிகள் இதோ…

    ” முடிவெடுத்த பின்னல் நான் தடுமாற மாட்டேன் , முன் வாய்த்த காலை நன் பின்வைக்க மாட்டேன் , எனைநம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் , வெறும் ஏணியை நான் இருந்து ஏமாற மாட்டேன் , உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் , நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் , ஓடி விடமாட்டேன் . கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் , காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் !!!!

    இந்த வரிகள் வெறும் ஒரு சாதாரண வரிகள் அல்ல, நம் தலைவர் பாபா படத்தில் படித்த வரிகள் . ஒவ்வொரு ரஜினி ரசிகனும் நித்தம் நித்தம் யாசிக்கும் வரிகள் . இந்த வரிகளின் வலிமையை எதிர்காலம் எழுதி வைக்கும் . அது வரை பொறுமையுடன் காத்திருப்போம் .

    ஆண்டவன் நம் பக்கம் இருக்கிறான்

    rajini wil rule tamil nadu

  14. Kalyan Kalyan says:

    Good Article sundar

    Another small note to
    @Simple fan of Superstar
    Please correct your statement, there is no Immigrants coming from karnataka, The word described is “native”, since immigrant word totally gives a different meaning..: FYI i am not an immgirant from tamilnadu in Bangalore :)

  15. R.Gopi R.Gopi says:

    நண்பர் இளங்கோ அவர்கள் மணிரத்னம் அவர்களின் “ராவண்’ / ”அசோகவனம்” பற்றி ஒரு ரசிக்கத்தகாத முறையில் கமெண்ட் அளித்துள்ளார். சுந்தரோ அல்லது மற்ற நண்பர்களோ அது குறித்து எதுவும் கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது…

    அசோகவனம் / ராவண், இந்தியாவின் மிக பிரபலமான டைரக்டர் மணிரத்னம் அவர்களால் இயக்கப்படும் ஒரு பெரிய பட்ஜெட் மற்றும் அட்டகாசமான பிரபலங்கள் அடங்கிய ஒரு படம்… அதற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்று நீங்கள் சொன்னால், உங்களுக்கு இந்திய சினிமாவை பற்றி நிறைய தெரியாதோ என்று எண்ண தோன்றுகிறது…

    ரஜினியை நமக்கு பிடிக்கும். அதனாலேயே மற்றவர்களை தூற்ற வேண்டாமே… இதுதான் முறையா, பண்பா? உடனே, மற்றவர்கள் ரஜினியை அப்படி/இப்படி சொல்கிறார்களே என்று குழந்தைதனமாக வாதாட வேண்டாம்…

    ——————————————————————-
    To இளங்கோ:
    உங்கள் விமர்சனம் வெளியாகியுள்ள சம்பந்தப்பட்ட செய்தியும் வரிகளும் Economic Times நாளிதழில் வெளியாகி அதன் மொழியாக்கம் அப்படியே தினத் தந்தியில் வெளியான ஒன்று. அதில் என் கருத்து எதுவும் இல்லை.

    To Gopi:
    மணிரத்னத்தின் அசோக வனம் / ராவன் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. (இளங்கோவும் அப்படித்தான் நினைக்கிறார் என எண்ணுகிறேன்.) ஆனால் அந்தப் படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை எந்திரன் படத்திற்கு உள்ள எதிர்ப்பார்ப்போடு ஒப்பிட்டு அதற்க்கு சரிசமமாக மேற்படி பத்தியில் Economic Times வெளியிட்டுள்ளது. அதை நானும் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் மணிரத்னம் இப்படி ஒரு படம் எடுக்கிறார் என்பதே தமிழக மக்களில் எத்துனை பேருக்கு தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எந்திரன் அப்படியல்ல. Economic Times இந்த விஷயத்தில் தெளிவாக எழுதவில்லை. இரண்டையும் சமமாக எழுதியதால் தான் இந்த விமர்சனம் எழுந்தது.

    என் தளத்தில் அளிக்கப்படும் அனைத்து கமேன்ட்டுகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிப்பது என்பதோ அல்லது கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்றோ நான் நினைப்பது இல்லை. அப்போதைய சூழல் மற்றும் என் மனநிலையை பொருத்தது அது.

    சில கமென்ட்டுகளுக்கு ‘நாம் பதிலளிக்க தேவையில்லை, மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று விட்டுருக்கிறேன். நண்பர் இளங்கோவின் இந்த கமெண்ட்டும் அப்படித்தான். சில நேரங்களில் சில இடங்களில் மெளனமாக இருந்துவிடுவது சாலச் சிறந்தது. (“பேசாத வார்த்தை உனக்கு சொந்தம்; பேசிய வார்த்தை பிறருக்கு சொந்தம்” என்ற பழமொழியை நன்கு அறிந்தவன் நான்!!)

    பெரும்பான்மையான கமெண்ட்டுகளை முதலில் அப்ரூவ் செய்துவிட்டு, பிறகு சாவகாசமாக நமது கருத்தை கூறிக்கொள்ளலாம் என்று எத்தனையோ முறை நிதானமாக பதிலளித்திருக்கிறேன்.

    எந்திரன் படப்பிடிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி பற்றிய உங்கள் கருத்திற்கு பதிலளிக்க நான் அவகாசம் எடுத்துக்கொள்வதர்க்கு காரணம், நிஜமாக என்ன அங்கு நடந்தது? பத்திரிக்கைகள் பரபரப்பிற்காக அப்படி ஒரு செய்தியை வெளியிட்டனவா அல்லது உண்மையில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதா என்று நான் அன்றைய படப்பிடிப்பை பார்த்தவர்களிடம் விசாரித்து வருகிறேன். நம் தளத்தின் வீச்சு உங்களுக்குதெரியாததல்ல. விரைவில் உங்களுக்கு பதிலளிக்கிறேன். சற்று பொறுமை ப்ளீஸ்.

    - சுந்தர்

  16. தலைவரின் ஒழுக்கத்தை நம்மைப் போலவே அமிதாப்பும் பார்த்து வியக்கிறார். தகவல் ஒவ்வொன்றும் அருமை சுந்தர். ஒழுக்கத்தை விரும்பும் ஒருவர் நிச்சயம் கண்டிப்பானவராகத்தான் இருக்க முடியும் – சரி சரி, நான் எங்கேயோ போறேன். மொதல்ல எந்திரன் வரட்டுமப்பா. அத நெனச்சாலே சிலிர்க்குதே.

  17. கல்யாண் ,
    நன்றி நானே இம்மிக்ரன்ட் கனடாவில் ! இங்கு வந்து குடியேறும அனைவரும் இம்மிக்ரன்ட் தான் இங்கு நீங்கள் குறிப்பிடும் மண்ணின் மைந்தர்கள் இன்னாட்டு பூர்வ குடிகளே !

  18. murugan murugan says:

    தலைவரைப்பார்த்து வியப்படையாதவர்கள் இருந்தால்தான் வியப்பு – தலைவர் ஒரு அதிசய பிறவி – அவரைக்கண்டு பிரமிக்காதவர்கள் இருக்கமுடியாது – அவரை வெறுப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் – அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே சிறப்பு

    ஆசை என்பது எல்லோருக்கும் உள்ளது – ஆனால் ஆண்டவன் அருள் மற்றும் முயற்சி இவையிரண்டும் தான் அந்த ஆசை நிறைவேற வழிவகுக்கும் – நடிகை தமன்னாவிற்கு நமது வாழ்த்துக்கள்

    பாபா திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் “மரியாதை தானாக கிடைப்பது பாபாவிற்கு (தலைவருக்கு) மட்டும் தான் ” எத்துணை உண்மையான வார்த்தைகள் – புகழை பின்னுக்குத்தள்ளி விருதுகளை விரட்டியடிக்கும் புனிதரை பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது – பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்குபவர்கள் தலைவரின் உயர்ந்த குணத்தை புகழும் பொது நம் உள்ளம் அடையும் ஆனந்தத்திற்கு எல்லையில்லை
    எந்திரனின் வெற்றியைப்பற்றி நாம் கூறவேண்டியதில்லை அதை காலம் எட்டுத்திக்கும் பறைசாற்றபபோகிறது

  19. dinesh dinesh says:

    தேங்க்ஸ்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates