Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

சூப்பர் ஸ்டாரின் சீற்றத்துக்கு காரணம் என்ன? – கலையுலக விழா நேரடி ரிப்போர்ட் 1

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சி பற்றிய நமது தளத்தின் FIRST PART ரிப்போர்ட் இது. நிகழ்ச்சியின் முழு தொகுப்பும் (SECOND PART) புகைப்படங்களுடன் பின்னர்  வெளியாகும்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் என்ன பேசினார் அவரின் சீற்றத்துக்கு என்ன காரணம் என்ன தான் நடந்தது என்பது பற்றிய ஒரு சிறிய ரிப்போர்ட்.

thalaivar cm function1  சூப்பர் ஸ்டாரின் சீற்றத்துக்கு காரணம் என்ன? – கலையுலக விழா நேரடி ரிப்போர்ட் 1

விழாவில் பேசிய நடிகர் அஜீத், சும்மா சும்மா சினிமாக்காரர்களை (குறிப்பாக நடிகர்களை) பிடித்து வம்புக்கிழுப்பதும், அவர்களை சீண்டிவிடுவதுமாக விளையாட்டு காட்டிவரும் அனைவரையும் பிடி பிடியென்று பிடித்துவிட்டார்.

பொதுப் பிரச்சனைகளில் நடிகர்களை இழுத்துவிடுவது, கலையுலக நிகழ்ச்சிகளுக்கு வரும்படி நடிகர்களை நிர்பந்திப்பது, மிரட்டுவது என சீன் காட்டிவரும் அனைவரையும் பெயரை சொல்லாது முதல்வரிடம் அஜீத் போட்டுக்கொடுத்துவிட்டார். பின்னர் சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக எச்சரிக்கவும் செய்தார். பார்த்துக்கொண்டிருந்த நமக்கே உடல் புல்லரித்து கைதட்டி ஆர்பரித்தோம். தொண்டனே இப்படி என்றால் அவன் தலைவன் எப்படி உணர்வான்?  இது போன்ற சீண்டல்களை, பிரச்னைகளை அடிக்கடி சந்திக்கும் சூப்பர் ஸ்டார் சும்மாயிருப்பாரா? யாருமே எதிர்பாராத வகையில் எழுந்து நின்று உற்சாகமாக கைதட்டி அஜீத்துக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். சும்மா… எல்லாரும் ஒரு நிமிஷம் மிரண்டு போய்டாங்க. தெரியுமா?

சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கைதட்டி அந்த தருணம்…..

அஜீத்தின் குமுறலை கேட்டு அனைவரும் ஒரு கணம் விக்கித்து போயினர். அவரது தைரியத்தை பார்த்து விசில் பறந்தது. முதல்வரை பார்த்து, “நிகழ்ச்சிகளுக்கு வரச் சொல்லி நடிகர்களை நிற்பந்திக்கிறாங்க ஐயா. நீங்க தான் இதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும். ஆனா நான் இங்கே வந்தது நிர்பந்தித்தினால இல்ல. உங்க மேல இருக்குற அன்பினால…” என்று அஜீத் சொன்ன அந்த தருணத்தில் தான், அனைவரும் வியக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கைதட்டினார். சூப்பர் ஸ்டாரே கைதட்ட, ஆடியன்ஸ் சும்மாயிருப்பார்களா? மேலும் பலத்த கைதட்டல்களால் ஆடிட்டோரியத்தையே அதிரவைத்துவிட்டார்கள்.

thalaivar cm function2  சூப்பர் ஸ்டாரின் சீற்றத்துக்கு காரணம் என்ன? – கலையுலக விழா நேரடி ரிப்போர்ட் 1

அஜீத் அவ்வாறு பேசியதும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓடி சென்று அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். (தலைவர் நிச்சயம் நைட் போன் பண்ணி அஜீத் கிட்டே பேசியிருப்பாரு.)

விழாவில் முக்கிய நடிகர்கள் பேசுவதற்கு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். முன்னதாக பேசிய பலர் மைக்கை முழுங்கிவிட சூப்பர் ஸ்டார் பேசும்பொழுது இரவு சுமார் 10 மணியாகி விட்டது.

பின்னர் தலைவர் தாம் பேச வந்த போது, விழாவின் நோக்கத்தை சரியாக புரிந்து, பேசவேண்டியதை அளவாக ஆனால் ஒன்றுவிடாமல் மிக அழகாக பேசினார். இது முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்பதை புரிந்துகொண்டு, அவருக்கு நன்றி தெரிவித்ததிலாகட்டும்…. எதற்காக நன்றி? தொழிலாளர்களுக்கு இலவசமாக குடியிருப்பு அமைத்திட ஆவன செய்ததற்காக அல்லவா? அந்த திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு போய் சேரவேண்டும் என்பதை வலியுறுத்தியதாகட்டும், சும்மா சும்மா ஓசி பொருளுக்காக கை நீட்டுபவர்களுக்கு அது நிலைக்காது என்பதை புரிய வைப்பதற்காக சொன்ன கதையாகட்டும், விழாவின் சிறப்பு விருந்தினர் அமிதாப் பச்சன் 60 வயதிற்கு மேல் வாழ்வில் போராடி சரிவிலிருந்து மீண்டு வந்ததை சொல்லி நெக்குருகியதாகட்டும் – விழாவிற்கு தகுந்த பேச்சை பேசி அசத்திவிட்டார் தலைவர்.

(சில பேரு மொக்கை போட்டாங்க பாருங்க… ஐயோடா சாமி… கொஞ்சம் பொறுங்க.. விழாவில் நான் விசிலடித்த தருணங்களையும் தூங்கி வழிந்த தருணங்களையும் தம்மு (அதாங்க தமன்னா), சந்தியா உள்ளிட்டவர்கள் ஆடியபோது நாம் உணர்ந்த தருணங்களையும் விரிவாக மினிட் பை மினிட் விளக்குகிறேன். அப்புறம் ஸ்டேடியத்துல இருந்து நான் மெசேஜ் மூலமா ரிப்போர்ட் கொடுத்துக்கிட்டு இருந்த நம்ம நண்பர்கள் செந்தில், மனோ, சுனில், அப்புறம் குறிப்பா இந்த பாசகி (BASAKI) இவங்கல்லாம் ஏதாவது சொன்னா அதை நம்பாதீங்க… ஹி… ஹி…!!)

உள்ளே CELL-PHONE JAMMER இன்ஸ்டால் பண்ணியிருந்ததாலே மொபைல் சரியா வேலை செய்யலே. நிறையே பேருக்கு நான் அனுப்பிய மெசேஜ் டெலிவரி ஆகலே.

thalaivar cm function3  சூப்பர் ஸ்டாரின் சீற்றத்துக்கு காரணம் என்ன? – கலையுலக விழா நேரடி ரிப்போர்ட் 1

சரி… எப்போதும் இல்லாத வகையில் தலைவர், மிக ஆவேசப்பட்டது ஏன்? “உண்மையை பேசுறதுல, சத்தியம் பேசுறதுல நான் யாருக்கும் எவனுக்கும் பயப்படமாட்டேன். என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன். என் கிட்டே வெச்சுக்காதீங்க இந்த விளையாட்டெல்லாம். நாவடக்கத்தை பத்தி எனக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்ல” என்று சீறித் தள்ள, நமது நரம்புகள் முறுக்கேறியது. எவன்டா அவன் தலைவரை மறுபடியும் சீண்டியது என்று தெரிந்துகொள்ள மனம் துடித்தது. சத்யராஜும், பாரதிராஜாவும் வழக்கம் போல தலைவரை ஜஸ்ட் சீண்டிவிட்டு போனாலும் அதை தலைவரே பொருட்படுத்தமாட்டார். அப்படியிருக்க அவர் இந்தளவு கொந்தளித்ததன் பின்னணி என்ன?

இது முழுக்க நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி சங்க பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பாலிடிக்ஸ். “அனைத்து நட்சத்திரங்கள் இந்நிகழ்ச்சியில் நிச்சயம் பங்கேற்க வேண்டும். தவறினால் அது எத்துனை பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம். அவர் மீது நடவடிக்கை எடுப்போம்.” என்ற ரீதியில் சிலர் தொடர்ந்து தொலைக்காட்சி பேட்டிகள் கொடுத்துவந்தனர். அதுமட்டுமல்ல, திரையரங்கு உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஜக்குபாய் பைரசிக்கு எதிராக சூப்பர் ஸ்டார் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த போது, ரஜினி போன்றவர்கள் நாவடக்கத்துடன் பேச கற்றுக்கொள்ளவேண்டும் என்று தலைவருக்கே அறிவுரை சொல்ல முற்பட்டனர். இவையெல்லாம் சூப்பர் ஸ்டாரை நிச்சயம் கோபப்படுத்தியிருக்ககூடும். (இது என் தனிப்பட்ட கருத்து. மற்றபடி மேல் மட்டத்தில் என்ன நடந்தது, அவர்களுக்குள் யார் என்ன பேசினார்கள் என்ற விபரங்கள் எனக்கு தெரியாது. இதுவாக இருக்ககூடும் என்று நான் நினைபப்தை தான் மேலே சொல்லியிருக்கிறேன். இருப்பினும் எரிமலை லேசாக அதிர்ந்ததர்க்கு காரணம் எனக்கு தெரியாது!).

(குறிப்பு: தலைவர் பேசும்பொழுது, நான் உட்பட சக நண்பர்கள அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்ததால் சரியாக பேசியதை RE-COLLECT செய்ய முடியவில்லை. தலைவர் மேற்சொன்ன வார்த்தைகளை கூறியதாக எனக்கு படுகிறது. ஆனால் நண்பர்கள் இப்படி கூறவில்லை என்கின்றனர். கொஞ்சம் பொறுங்கள்…. தீர விசாரித்துவிட்டு மறுபடியும் கன்பர்ம் செய்கிறேன்.)

thalaivar cm function4  சூப்பர் ஸ்டாரின் சீற்றத்துக்கு காரணம் என்ன? – கலையுலக விழா நேரடி ரிப்போர்ட் 1

ஓ..கே.. தலைவர் பேசியது என்ன?

“இந்த விழா ஒரு மகத்தான விழா. இது பாராட்டு விழா அல்ல. கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் விழா. 3 மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் நடந்த விழாவில், திரைப்பட தொழிலாளர்களுக்கு இடம் கொடுப்பதாக அறிவித்தார். அதோடு விட்டுவிடாமல், பெப்சி தலைவர் குகநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளிடம், அந்த இடத்தை பார்த்துவிட்டீர்களா, இந்த இடம் பார்த்து விட்டீர்களா என்று தொடர்ந்து கேட்டு, அதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, பணம் வழங்கி, பெப்சியோடு நடிகர் சங்கம், டி.வி.சங்க உறுப்பினர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்து முடித்திருக்கிறார்.

thalaivar cm function5 300x199  சூப்பர் ஸ்டாரின் சீற்றத்துக்கு காரணம் என்ன? – கலையுலக விழா நேரடி ரிப்போர்ட் 1இதுமட்டுமல்ல, பெப்சி தொழிலாளர்கள் அங்கு குடியிருப்பதை பார்க்கவும் போகிறார். வாழ்நாளில் மறக்க முடியாதது. அவர் சந்தோஷமாக கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே அது கஷ்டப்படும் தொழிலாளிக்கு போய்ச் சேர்ந்தால்தான், அவர் இன்னும் சந்தோஷப்படுவார். ராம நாராயணன், குகநாதன் போன்றவர்கள் இதை கவனமாக இருந்து முடிக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் கை நீட்டாமல் விலகி நில்லுங்கள்.
நான் எப்போதும் உண்மை பேசுபவன், சத்தியம் பேசுபவன், யாருக்கும், எவனுக்கும்..எவனுக்கும் பயப்பட மாட்டேன். உண்மையை சொல்லும்போது, சில பேருக்கு வருத்தம் வந்தால் அவர்களிடம் இப்போதே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இல்லாதவர்களுக்கு கிடைக்கட்டும். நாம எல்லாருக்கும் ஓசியில், வருவதுதான் தெரியும். போறது தெரியாது.

சம்பவம் ஒன்றை சொல்கிறேன்.

ஒருவன் 350 ரூபாயை வைத்துக்கொண்டு மதுரைக்கு கிளம்பினான். பஸ் டிக்கெட்டுக்கு 300 ரூபாய். 50 ரூபாய் சாப்பிடுவதற்கு என்று நினைத்துக் கொண்டான். அப்போது ஒரு ஓட்டலைப் பார்த்தான். அந்த ஹோட்டல் போர்டில், ‘நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அதற்கு உங்கள் பேரன் பணம் கொடுப்பான்’ என்று எழுதியிருந்தது. இவர், கடைக்காரரிடம் சென்று, ‘என் பையனுக்கே 4 வயதுதான் ஆகிறது. அப்படியிருக்க பேரன் எப்படி பணம் கொடுப்பான்?’ என்றார். அதற்கு கடைக்காரர், ‘அவன் வளர்வான், அவனுக்கு கல்யாணம் ஆகும். அவனுக்கு குழந்தை பிறக்கும் அல்லவா? அவன் வளர்ந்து தருவான்’ என்றார். உடனே, ஓசியில் சாப்பாடு கிடைக்கிறதே என்று உற்சாகமானார் இவர். தனது தேவைக்கும் மீறி நாலு பிளேட் பிரியாணி, பத்து புரோட்டா என்று அங்கு என்னென்ன கிடைத்ததோ, அத்தனையையும் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பினார். அப்போது கடைக்காரர், ‘பணம் கொடுங்கள்’ என்றார். ‘பேரன் தருவான் என்றீர்களே’ என்றார் இவர். அதற்கு அந்த கடைக்காரர், ‘போர்டை சரியாக கவனித்தீர்களா? நாங்கள் 200 வருடமாக இந்த சர்வீசை செய்து வருகிறோம். உங்கள் தாத்தா சாப்பிட்ட பணத்துக்கு இப்போது உங்களிடம் பணம் கேட்கிறோம்‘ என்றார்.
அவரும் வேறு வழியில்லாமல் கையிலிருந்த பணம், வாட்ச் அனைத்தையும் கொடுத்துவிட்டு திரும்பினார்.

இங்கே அமிதாப்பச்சன் அமர்ந்திருக்கிறார். அவரைப் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். அவர் எனக்கு ரோல் மாடல். எனக்கு மட்டுமல்ல, சினிமாவில் உள்ள அனைவருக்குமே ரோல் மாடல். 60 வயதுக்கு மேல் அவருக்கு பல பிரச்னைகள் வந்தது. குடியிருந்த வீடு கூட அடமானம் போனது. தனியாக நின்று ஜெயித்து, வீட்டை மீட்டதோடு, அதே ரோட்டில் 2 புது வீடுகளை வாங்கினார். அவர் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது.

இங்கு சிவாஜி நடித்த காட்சி திரையிடப்பட்டபோது, கலைஞர் என் அருகில் அமர்ந்து, அந்த காட்சியை ஒரே டேக்கில் அவர் நடித்தார் என்று நா தழுதழுக்க சொன்னார். அரசியல்வாதிகளுக்கு வைர நெஞ்சம் வேண்டும், இரும்பு நெஞ்சம் வேண்டும் என்று நினைப்பேன். இப்படி ஈர நெஞ்சத்தோடு எப்படி நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. ஹேட்ஸ் ஆப் கலைஞர்!”

(அரங்கில் என்ன நடந்தது, சூப்பர் ஸ்டார் எது எதற்கு என்ன ரீஆக்க்ஷன் செய்தார்? அவர் வரும்போது அரங்கம் எப்படி அதிர்ந்தது உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான முழு ரிப்போர்ட் விரைவில்…. சற்று பொறுமை ப்ளீஸ்..!)

PART 1  – END

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

29 Responses to “சூப்பர் ஸ்டாரின் சீற்றத்துக்கு காரணம் என்ன? – கலையுலக விழா நேரடி ரிப்போர்ட் 1”

  1. கிரி கிரி says:

    //என் கிட்டே வெச்சுக்காதீங்க இந்த விளையாட்டெல்லாம். நாவடக்கத்தை பத்தி எனக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்ல//

    சுந்தர் இது மாதிரி இந்த விழாவுல பேசினாரா!?

    // சந்தியா உள்ளிட்டவர்கள் ஆடியபோது நாம் உணர்ந்த தருணங்களையும் விரிவாக மினிட் பை மினிட் விளக்குகிறேன்.//

    சந்தியாவை பற்றி கிண்டல் செய்தால் கடும் கண்டனம் தெரிவிக்கப்படும் ;-)

    //இப்படி ஈர நெஞ்சத்தோடு எப்படி நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. ஹேட்ஸ் ஆப் கலைஞர்!//

    தலைவர் இப்படி பாராட்டுவது தான் கொஞ்சம் எரிச்சலை வரவைக்கிறது! கலைஞர் ஈர நெஞ்சம் என்றால்… என்னமோ போங்க!

    சுந்தர் ரிப்போர்ட் சூப்பர்! அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் அனைவரை போல! நீங்க கூறிய “தலைவர் நிச்சயம் நைட் போன் பண்ணி அஜீத் கிட்டே பேசியிருப்பாரு” இதை ரசித்தேன்!

    நேற்று திரையுலகில் பலரும் நேற்று இரவு செம டிஸ்கசனில் இருந்து இருப்பார்கள் ;-)

    —————————————————————————————–
    1) என்னது கிண்டலா …. ? நீங்க வேற… நான் அவங்க ரசிகனாக்கும்… ஹி…ஹி…!

    2) தலைவர் பேசும்பொழுது, நான் உட்பட சக நண்பர்கள அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்ததால் சரியாக பேசியதை RE-COLLECT செய்ய முடியவில்லை. தலைவர் மேற்சொன்ன வார்த்தைகளை கூறியதாக எனக்கு படுகிறது. ஆனால் நண்பர்கள் இப்படி கூறவில்லை என்கின்றனர். கொஞ்சம் பொறுங்கள்…. தீர விசாரித்துவிட்டு மறுபடியும் கன்பர்ம்செய்கிறேன்.

    - சுந்தர்

  2. Sharath Sharath says:

    Thanks for the first cut report.

    Hmm .. After this speech atleast I hope that people will not needle thalaivarr unnecessarily.

  3. கிரி கிரி says:

    ஹலோ! சுந்தர் இதென்ன சந்தியா என்று இருக்கு ..நான் ரீமா என்று படித்ததாக நினைவு.. ரீமா என்று குறிப்பிட்டு இருந்தேன்.. மாற்றி விட்டீர்களா!

    சந்தியா எல்லாம் ஆடினால் என்ன ஆடாட்டி என்ன.. :-D ரீமா பற்றி செய்தி இருந்தால் கூறுங்கள்.. ஆயிரத்தில் ஒருவன் பார்த்ததில் இருந்து ரீமாவிற்கு ரசிகன் ஆகிட்டேன் ;-)

    ———————————-
    ஆக்சுவலா சந்தியா என்று தான் வந்திருக்க வேண்டும். ரீமா சென் என்று தவறி எழுதிவிட்டேன். அதனால் அதை பிறகு திருத்திவிட்டேன்.
    (ஏன்னா நம்ம ஏஜுக்கு தகுந்த மாதிரி தானே தலைவா ரசிக்கணும்… என்ன சொல்றீங்க?)
    - சுந்தர்

  4. we would like to have the english transalation of the speech sir so that many more can understand more clearly….
    please post another thread along with this one with this regard.

    ——————————–
    Ok. Will do it in a day or two.

  5. kppradeep kppradeep says:

    superb narration and you are an expert in doing this for a very long time. keep it up sundarji

  6. Narayan Narayan says:

    Dear Sundar

    I just want to share this Happy moment with u as well as fans all over the world.
    This is reg 3-D in Endhiran.Dir Shankar has replied to a person in his blog which is as follows.
    ” Discussions r going on to convert a portion of endhiran movie to 3d. Today technology s grown up n such a way u can convert any 2d movie to 3d. Lot of leading vfx houses all over d world r successful in that conversion. Recently i’ve seen a demo 3d version of john travolta movie ‘Grease’.
    Today morning we had seen a test of endhiran 3d done by our own Indian artist srinivasan who had won d national award for 3d technology,it was very exciting!
    Final decision will be taken after few analysis.”
    இந்த செய்திய பார்த்த உடனே சுமா அதிருதுல

  7. bahrainbaba bahrainbaba says:

    முதன் முதல்ல தலைவர் ஒருத்தரோட பேச்சுக்கு எந்திரிச்சி நின்னு அப்ளாஸ் பண்ணி இருக்காருன்னா.. தலைவர் பேசணும்னு நினைச்சத அஜித் பேசிருக்காரு.. இந்த இந்த நேர்மைதான் எனக்கு அஜித் த ரொம்ப பிடிச்சிருக்கு… தலைவருக்கும கூட…. எது எப்படியோ.. தலைவரின் இந்த செய்கை அஜித்தின் தைரியத்தை இன்னும் பல மடங்காக்கும்.. பாராட்டுக்கள் தல…

  8. nagorebari nagorebari says:

    தலைவர் யாருக்கும் எப்போதும் பயந்தது இல்லை.. எந்த சங்கமாக இருந்தாலும் அது தலைவரை கட்டுப்படுத்த முடியாது .
    நாகூர் பாரி
    மாவட்ட தலைவர்
    நகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
    செல்:9952526675

  9. vasi.rajni vasi.rajni says:

    தலைவரின் உரை அற்புதம் . நடிகர் அஜித் பேசியது முழுக்க முழுக்க உண்மை . இதனால் , அதிகம் பதிக்க பட்டது நம் தலைவர் தான் . தலைவரே இந்த கருத்தை சென்ற ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க விழாவில் மறைமுகமாக கூறியிருப்பார் . தலைவர் எழுந்து நின்று கைதட்டியது தலைவரின் வெள்ளை மனதை பிரதி பலிகிறது .

    நேற்று அசல் படம் பார்த்தேன் , நிஜ வாழ்கையில் மிகவும் பண்பாளராக மாறியுள்ள அஜீத் அவர்கள் , தன்னுடைய சினிமாவிலும் சற்று நல்ல படைப்புகளை கொடுக்க இன்னும் முயற்சிக்க வேண்டும் . படம் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் சார்பில் நடிகர் அஜித்தையும் அவரது ரசிகர்களையும் வாழ்த்துகிறேன் .

    நல்ல மனிதர்களை (போட்டியாளராக இருந்தாலும் ) வாழ்த்துவது ரஜினியும் அவரது தொண்டர்களும் என்றும் மறக்க மாட்டார்கள் . நன்றியை மறந்தவர்களை அந்த கடவுளே பார்த்துக்கொள்வார்

    rajini will rule tamil nadu

  10. Prasath Prasath says:

    குருஷேத்ர யுத்தத்தில் நடந்தவற்றை திருதாஸ்டிரனுக்கு சஞ்சயன் கூறியதுப் போல உள்ளது உங்களது வர்ணனை! மிக அருமை ! பாகம் 2இ சீக்கிரம் போடுங்கள் …மிக ஆர்வமாய் உள்ளோம் ! சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கைதட்டிய புகைப்படம் இருந்தால் இங்கே பிரசுரிக்கவும் ! மேலும் தம்முவை பற்றி ஏதோ குறிப்பிட்டு இருந்தீர்கள் …….அதையும்…….. என்னமோ நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல….

  11. SundarJi & friends,

    Long time no see (from my side). As I was tied up with official & personal matters for the last few weeks, I could not post any comment though I used to visit the site whenever time permitted & net connection available.

    First & foremost. I want to thank SundarJi for an excellant narration of Thalaivar’s speech as also Jaggubhai movie premiere at Sathyam Cinemas & behind the scenes happenings. Both are wonderful articles which made me feel as if I was present in those functions due to Sundar’s skillful presentation plus the exclusive photographs. SundarJi – Pl keep it up & keep giving us such gems every now & then. Also, your TidBits section is long overdue, I think. Looking forward to it too in the near future.

    Narayan – Thanks for sharing such an important development reg. Endiran. 3-D graphics, if it is done in a subtle way, like it was done by James Cameron in Avatar, will surely enhance Endiran’s reach & wouldn’t it be wonderful to watch Thalaivar in 3D format walking Up, Close & Personal towards each fan thru the 3D glasses?
    நினைக்கும்போதே அதிருதே!!!! தியேட்டர்லே என்ன ஆகுமோ தெரியலையே அந்த சீன் வரும்போது.

    அன்புடன் அருண்

  12. Galeel Galeel says:

    சுந்தர், thanks for sharing..

  13. சுந்தர் சார் ,
    தலைவர் அவர்கள், ஒருவரை பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் அது எந்த இடமாக இருந்தாலும் உடனே பாராட்டும் குணம் உடைய ஒரே மனித்தநேயம். (ஒரு எடுத்து காட்டு என்னவென்றால் முதல்வர் இருக்கும் இடத்திலேயே திரையுலகத்தை சார்ந்த ஒருவர் எம்.எல்.எ ஆனதை பாராட்டினர் .)

  14. sekar sekar says:

    காத்திருக்கிறோம் சுந்தர். கலக்குங்க தலைவர் மாதிரி.

    //இப்படி ஈர நெஞ்சத்தோடு எப்படி நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. ஹேட்ஸ் ஆப் கலைஞர்!//

    தலைவர் இப்படி பாராட்டுவது தான் கொஞ்சம் எரிச்சலை வரவைக்கிறது! கலைஞர் ஈர நெஞ்சம் என்றால்… என்னமோ போங்க! // -கிரி

    பாராட்டும் போது வாய் நிறைய மனமார பாராட்டுவார் தலைவர். சிவாஜி விஷயத்தில் கலைஞர் உண்மையாகவே ஈர நெஞ்சத்துடன் இருக்க வாய்ப்புண்டு. கிரி.

    இதே கலைஞரை வைத்துக்கொண்டுதான் முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த நிலத்தை வாங்காமல் விட்டது தவறு என்று தைரியமாக சொன்னவர்தான் தலைவர்.

  15. தலைவரை தேவை இல்லாம சீண்டி வாங்கி கட்டிக்கறாங்க….இப்பெல்லாம் தலைவர் பேச்சு ரொம்ப கூர்மையா இருக்கு…

    //”என்னது கிண்டலா …. ? நீங்க வேற… நான் அவங்க ரசிகனாக்கும்… ஹி…ஹி…!

    (ஏன்னா நம்ம ஏஜுக்கு தகுந்த மாதிரி தானே தலைவா ரசிக்கணும்… என்ன சொல்றீங்க?)
    - சுந்தர் “//

    ஜி சந்தியாக்கு இந்த கமெண்ட், அப்போ மத்த நடிகைகளுக்கு?… எல்லா sms-ம் என்கிட்டே இருக்கு… பதிவா போடலாமா வேண்டாமா-னு யோசிச்சுட்டு இருக்கேன் :)

    இவரு இன்னும் யார் யாருக்கு ரசிகர் னும் சுந்தர்-ஜி யோட உண்மையான வயசு என்னனும் அறிய விரும்புவர்கள் தாராளமா என்னை தொடர்பு கொள்ளலாம், 24*7 சர்வீஸ் :)

    ————————————————
    ஹலோ… எத்தனை பேரு இப்படி கிளம்பிட்டீங்க…. ?
    தமன்னா அடிக்கடி கனவுல வர்றாங்கன்னா நம்ம வயசு என்ன இருக்கும் நண்பர்களே…
    - சுந்தர்

  16. napoleon napoleon says:

    உங்க ரிப்போர்ட் சூப்பர். இன்னும் சூப்பரான ரிப்போர்ட்டுக்களை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  17. S.Madhan Raj S.Madhan Raj says:

    அஜித் பேசியது திரை உலகில் சேர்ந்த நபர்கள் அந்த விழாவில் கண்டிப்பாக இருக்கின்றர்கள். அதனால் தான் நம் தலைவர் எயுந்து நின்று கை தட்டி இருக்கிறார்.

  18. dr suneel dr suneel says:

    உங்க message update super ..நன்றி ..
    ஆனாலும் போனோமா தலைவர பாத்தோம பேசுறத கேட்டோமா ன்னு இல்லாம, சில பல டான்ஸ் எல்லாம் கண்டு ரசித்து !! அத எங்களுக்கு SMSல எல்லாம் சொல்லி வெறுப்பேத்தனுமா?

    அஜித் தலைவர் படும் கஷ்டத்தை அப்படியே படம் பிடித்தது போல் தைரியமாக சொல்லிவிட்டார் ..ரொம்ப நன்றி அஜித் ..இதனலயே அவரு மேல ஒரு மரியாதையை வந்துருக்கு ..மற்ற சரத் அண்ட் கோஷ்டி என்ன பணங்க ன்னு சொல்லுங்க ..உங்க அடுத்த பதிவ எதிர் நோக்கி இருக்கோம்

  19. saranya saranya says:

    //இதே கலைஞரை வைத்துக்கொண்டுதான் முன்னால் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த நிலத்தை வாங்காமல் விட்டது தவறு என்று தைரியமாக சொன்னவர்தான் தலைவர்//

    அதத்தான் கலைஞர் டிவி ல கட் பண்ணிட்டாங்களே…….. அப்போ இதையும் கட் பண்ணிடுவாங்களா….

  20. karthi karthi says:

    http://starajith.com/media_display.php?id=௧௭௮௫

    On Feb 6, 2010 during the felicitation function for Tamil Nadu Chief Minister Mr.M.Karunanidhi, Ajith delivered a bold speech regarding the threats for cinema field. Superstar Rajnikanth, responded to it with standing ovation.

    STARAJITH personally thanks Superstar Rajnikanth for his open support infront of that huge crowd for Ajith’s bold speech.

  21. Vijayakumar Vijayakumar says:

    பதிவுக்கு நன்றி சுந்தர் சார்.

    திரு.ஷங்கர் ப்ளாக் ஆரம்பித்த பிறகு, நீங்கள் எந்திரனை பற்றிய செய்திகளை அளிப்பதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. ஏன்?? உங்கள் பாணியில் செய்திகள் அளிப்பதை தயவு செய்து தொடரவும். எந்திரனைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஷங்கர் சார் தனது ப்ளாக்கில் போடும் தீனி என்னை போன்றவர்களுக்கு போதவில்லை. எந்திரனை பற்றி முற்றிலும் 100% உண்மையான செய்திகளை ஷங்கரை தவிர யாராலும் அளிக்க முடியாது என்பது உண்மையாக இருப்பினும் நீங்கள் அங்கு, இங்கு என்று படிப்பவற்றை, கேள்விபடுபவற்றை தொகுத்து தந்தாலே போதும். நீங்கள் ஃபில்டர் செய்து தான் தருவீர்கள் என்பதால் சொல்கிறேன்.

    கடந்த காலங்களில் ஊடகங்களில் எந்திரனை பற்றிய எதிர்மறையான செய்திகள் வந்தபோதெல்லாம் எங்களின் உற்சாகம் குறையாமல் வைத்திருந்ததில் உங்கள் பங்கு மகத்தானது. எந்திரனை பற்றி விறுவிறுப்பான சுவையான தகவல்களை தொகுத்து பகிர்ந்து கொள்ளவேண்டியவற்றை பகிர்ந்து மறைக்கவேண்டியவற்றை மறைத்து நீங்கள் ஆற்றிய அரும்பணியை நானறிவேன். (இன்னும் இங்கு வரும் நிறைய பேர் அறிவார்கள் என்பது உறுதி.)

    எந்திரனால் கத்திப்பாராவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது என்று ஊரே நம்பியபோழுது, உண்மையில் நடந்தது என்ன என்று நீங்கள் வெளியிட்ட பதிவு என் போன்றவர்களை எத்துனை குளிர்வித்தது தெரியுமா?

    எந்திரனைப் பற்றி உங்களுக்கு தெரிந்த செய்திகளை உங்கள் பாணியில் அளியுங்கள். திரு.ஷங்கர் அவர்களே அதை விரும்புவார் என்பது உறுதி.

    நாராயணன் & அருண், எந்திரனைப் பற்றிய செய்திகளை trigger செய்தமைக்கு நன்றி.

    விஜயகுமார், பொள்ளாச்சி

    —————————————————————–
    அட ஷங்கர் சார் அவரோட ப்ளாக்ல சொல்லாதையா நான் ingae சொல்லிடப் போறேன்?

    நீங்க சொன்ன மாதிரி, அங்கே இங்கே படிக்கிறதை கேள்விப்படுறதை, இது தான் உண்மையா இருக்கும் இதெல்லாம் கப்ஸாவா இருக்கும்னு அனுமாநிச்சி சொல்றதை தான் இதுவரைக்கும் நான் செஞ்சிக்கிட்டுருந்தேன்.

    கூடியவரைக்கும் முயற்சி பண்றேன். மத்ததை ஷங்கர் சாரே சொல்வாரு. (அவரும் அப்போப்போ சொல்லிக்கிட்டு தானே இருகாரு… சூப்பர் படங்களோட…)

    - சுந்தர்

  22. harisivaji harisivaji says:

    இப்படி பேச அஜித்துக்கு தெய்ரியம் வேணும்
    அதவிட முதலமைச்சர் பக்கதுல உட்கார்ந்துகிட்டு
    எலாரும் இப்படி பேசுறாங்களே ஆச்சரியமா பார்கிறப
    அதற்கு எழுந்து நின்னு தன்னோட ஆதரவ தெரிவிக்க எவளவ் தில் வேண்டும் ….
    இப்படி மட்டும் ரஜினி செய்யாமல் இருந்துருந்தால் அதே விசயத்தை அஜித்துக்கு எதிரா திருப்பி இருப்பாங்க
    இத பார்கிறப பாஷா படத்தில அந்த முதல் சண்டை காட்சி யில்
    வரும் அந்த வசனம் தான் “உள்ளே போ ” நினைவுக்கு வருது
    அதில் வரும் ரஜினி யின் தம்பி அஜித் போல நினைத்து பார்க்க தோன்றுகிறது

    நன்றி
    ஹரி.சிவாஜி

  23. RAJA RAJA says:

    தலைவர் எப்போதும் உண்மையை பேச பயப்பட மாட்டார், இப்பொழுது அவருடன் நன்கு பழகியவுடன் திரு அஜித் அவர்களும் உண்மையை பேச தயங்கவில்லை. ஆவூன நீ தமிழன் இல்லை நு பிரச்சாரம் பண்றதுனால தலைவரோட மனசு எவ்ளோ பாதிச்ருக்கு நு அவர் எழுந்து நின்று கை தட்டிய தருணத்திலே தெரிந்துவிட்டது.

    தலைவருடைய ரசிகர்களுக்கு அடுத்த படியாக முதல் முறையாக ஒரு நடிகரின் குரல் தலைவருக்கு ஆதரவாக.நன்றி அஜித் அவர்களே .

    இதை ஏன் தலைவருக்கு ஆதரவாக என்று எடுத்து கொள்கிறேன் என்றால்,அஜித் அவர்கள் சொல்வது எல்லா நடிகர்களுக்கும் பொருந்துவது போல் இருந்தாலும்,முக்கியமாக சில விசமிகள் அடிகடி தலைவரை தான் கட்டாயபடுத்துவது போன்றவை நடக்கிறது ,வர வில்லை என்றால் தமிழன் இல்லை என்று வேற கூறி குளிர் காய வேண்டியது.

    வாழ்க தலைவர் ,வளர்க அவர் ரசிகர்கள்

  24. RAJA RAJA says:

    இப்படி மட்டும் ரஜினி செய்யாமல் இருந்துருந்தால் அதே விசயத்தை அஜித்துக்கு எதிரா திருப்பி இருப்பாங்க//////////////

    கண்டிப்பாக ,நம்ம தலைவர் எழுந்து நின்று கை தட்டியதால் தான் இது வரை திரு அஜித் அவர்களின் பேச்சுக்கு சில விசமிகள் கண்டனம் தெரிவிக்காமல் அடங்கி உள்ளனர்,இல்லை இதை வைத்தே அஜித் அவர்களுக்கு தொல்லை குடுக்க நினைத்திருபார்கள்.

    தம்பி (அஜித்) செய்த ஒரு நல்ல காரியத்துக்கு,அண்ணன் (ரஜினிகாந்த்) தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவிப்பதில் தவறில்லை

  25. B. Kannan B. Kannan says:

    டியர் சுந்தர்,
    வழக்கம் போல் மிக அருமையான பதிவு..
    இந்த விழாவின் உங்களுடைய அடுத்த பதிவிற்காக
    மிகவும் எதிர்பார்கிறோம்..
    எந்திரன் த்ரீ டியில் வந்தால் கண்டிப்பாக வசூலில் இந்திய
    சாதனைகள் எல்லாம் உடையும்..
    சீர்ஸ்..
    கோடிக்கணக்கான தலைவர் பக்தர்களில் ஒருவன்,
    பா. கண்ணன். .

  26. eagerly waiting for the following details sundar sir,
    1. தலைவர் மேற்சொன்ன வார்த்தைகளை கூறியதாக எனக்கு படுகிறது. ஆனால் நண்பர்கள் இப்படி கூறவில்லை என்கின்றனர். கொஞ்சம் பொறுங்கள்…. தீர விசாரித்துவிட்டு மறுபடியும் கன்பர்ம் செய்கிறேன்.
    2. அரங்கில் என்ன நடந்தது, சூப்பர் ஸ்டார் எது எதற்கு என்ன ரீஆக்க்ஷன் செய்தார்? அவர் வரும்போது அரங்கம் எப்படி அதிர்ந்தது உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான முழு ரிப்போர்ட் விரைவில்.

    —————————————————————-
    எனக்கு கிடைக்கும் நேரத்துல அப்பப்போ எழுதிக்கிட்டுருக்கேன் தலைவா…. முழு தொகுப்புன்றதால எழுத எழுத நீண்டுக்கிட்டே போகுது. தவிர, நம்ம வர்ணனைக்கு, சொல்ற விஷயத்துக்கு, ஏத்த போட்டோஸ் தேடி பிடிக்கணுமே… எல்லாத்துக்கும் டைம் தேவைப்படுது. கொஞ்சம் பொறுமையா இருங்க…. எல்லா விஷயத்தையும் அடி தூள் பண்ணிடலாம். ஒன்னு விடாம.

    - சுந்தர்

  27. எரிமலை இலேசாக அதிர்ந்தது ……. கலக்கல் சுந்தர்

  28. Manoharan Manoharan says:

    அருமையான பதிவு சுந்தர். நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. உங்கள் அளவுக்கு இப்படி மிகவும் பின் பாயிண்டாக யாராலும் விவரிக்க முடியாது.( நிகழ்ச்சியை மட்டுமல்ல தம்முவை பற்றியும்தான் )தம்முவை பற்றி நீங்கள் அனுப்பிய குறுந்தகவல் என் செல்போனில் உள்ளது. எனக்கும் தம்மு அடிக்கடி கனவில் வருகிறார். ஹூம்………..உங்களுக்கு ஒரு போட்டியாளன் நான். மற்றபடி தலைவரின் ரியாக்ஷனை உங்கள் கமெண்ட்டுடன் சேர்ந்து பார்க்க ஆவலாய் உள்ளது. தலைவரின் வாரிசாக அஜீத் வளர்ந்து கொண்டிருக்கிறார். ( நிஜ வாழ்க்கையில் )தலயின் தைரியமும் தலைவரின் கைதட்டலும் புல்லரிக்கவைக்கின்றன.

    —————————————-
    //எனக்கும் தம்மு அடிக்கடி கனவில் வருகிறார். ஹூம்………..உங்களுக்கு ஒரு போட்டியாளன் நான்.//

    1) நம்ம ரூட்டை இப்படி கிராஸ் செய்றது நல்லாயில்லே… சொல்லிட்டேன்.

    2) WRITE-UP கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் உள்ளது. அனேகமா இன்னைக்கோ நாளைக்கோ பப்ளிஷ் பண்ணிடுவேன்.

    - சுந்தர்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates