Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

3D யில் எந்திரன் & ரிலீஸ் எப்போது?

ங்கர் அவர் ப்ளாக்கில் (directorshankaronline.com) கூறியிருக்கும் பதில்கள் + மேலும் சில விஷயங்களை  சேர்த்து அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கிறேன்.

shankar1  3D யில் எந்திரன் & ரிலீஸ் எப்போது?

* மறைந்த காமெடி நடிகர் கொச்சின் ஹனீபா எந்திரனில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.

எந்திரனில் பணியாற்றியுள்ள நடன இயக்குனர்கள் யார் யார் தெரியுமா?

பிரபுதேவா 1 பாட்டு, ராஜூ சுந்தரம் 2 பாட்டு, தினேஷ் 1 பாட்டு (அனேகமா டைட்டில் சாங்கா இருக்கும்!!)

எந்திரனில் யார் யார் எத்துனை பாடல் எழுதியிருக்கிறார்கள்?
இதுவரை : வைரமுத்து 3, பா.விஜய் 1, மதன் கார்க்கி 1 ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

* சிவாஜியில் பல்லேலக்கா பாடலில் தலைகாட்டிய ஷங்கர், எந்திரனில் இதுவரை நடிக்கவில்லையாம். இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பே இருப்பதால் இனி சாத்தியம் குறைவு என்கிறார். (சும்மா ஜஸ்ட் வாங்க சார். நீங்க வர்ற சீன்ல பலத்த விசில் உறுதி!)

3D யில் எந்திரன்?

* இன்றைய நவீன யுகத்தில் பைரசியை ஒழிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மக்கள் பைரசியையே நாடாமல் தியேட்டருக்கு வர என்ன வழி?

இருக்கவே இருக்கிறது 3D தொழில்நுட்பம். 3D முறையில் படமெடுத்தால், அதை திரையரங்கில் தான் வந்து பார்க்க வேண்டும். டிவியிலோ மாநிட்டரிலோ பார்க்க இயலாது. எனவே 3D தொழில் நுட்பத்தில் படமெடுப்பீர்களா? என்ற கேள்விக்கு திரு.ஷங்கர் பதிலளிக்கையில், “எந்திரனின் ஒரு பகுதியை 3D யாக மாற்ற ஆலோசனை நடந்துவருகிறது. எந்த ஒரு 2D படத்தையும் 3D யாக மாற்றுமலவிர்க்கு இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்கள் இந்த பணியில் சிறந்து விளங்குகின்றன. சமீபத்தில் நான் JAAN TRAVOLTA நடித்த ‘GREASE’ படத்தின் டெமோ வெர்சனை பார்த்தேன். இன்று காலை (ஞாயிறு) திரு.ஸ்ரீனிவாசன் நம் இந்தியன் ஆர்டிஸ்ட் குழுவினர் (எந்திரனுக்கு கிராபிக்ஸ் செய்பவர்கள்) எந்திரன் படத்தின் DEMO 3D வெர்சனை எனக்கு போட்டுகாண்பித்தனர். சும்மா சொல்லாகூடாது மிகவும் அசத்தலாக இருந்தது. விரைவில் இது குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

எந்திரன் ரிலீஸ் எப்போ?

படத்தின் ரிலீஸ் பற்றி நிறைய பேர் ஷங்கரிடம் அவரது ப்ளாக்கில் கேட்கிறார்கள். அவர் அர்த்தத்துடன் மௌனம் காக்கிறார். படத்தின் தரத்தில் (Quality) எந்த காரணத்திற்காகவும் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது என்பதில் எந்திரன் குழுவினர் உறுதியாக இருக்கிறார். தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் ஷங்கருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்கள். (ஒரு படம் எப்போ வர்ரதுங்கிரதைவிட எப்படி வருது என்பது தான் முக்கியம் என்பதை அவர்களும் உணர்ந்தேயிருக்கிறார்கள்!)

மேலும் படம் வந்தவரை அனைவருக்கும் பரம திருப்தி சந்தோஷம் என்பதால் அதை மேலும் மெருகூட்ட முடியுமா என்று யோசித்து வருகிறார்கள். அதன் விளைவு தான் இந்த 3D பற்றிய முயற்சி.

படத்தின் எடிட்டிங் பணிகள் உடனுக்குடன் நடந்து வந்தாலும் பின்னணி இசை சேர்ப்பு, கிராபிக்ஸ் பணி, 3D சேர்ப்பது என்று முடிவானால் அதற்க்கு ஆகும் காலம் I மற்றும் இதர முக்கிய POST-PRODUCTION பணிகள் அனைத்திற்கும் மேலும் சில மாதங்கள் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் முடிந்தால் தான் ரிலீஸ் தேதியை பற்றி சொல்ல முடியும். அதனால் தான் ஷங்கர் அமைதி காக்கிறார் என்று எண்ணுகிறேன்.

எப்படியோ படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் சரி, ஷங்கர் நமது நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். அது வரை அவரிடம் ரிலீஸ் பற்றி கேட்டு துரிதப்படுத்தவேண்டாம் என்பது என் அபிப்ராயம். ரிலீஸ் தேதியை பற்றி அவராகவே சொல்லுவார் என்பது என் கருத்து.

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

24 Responses to “3D யில் எந்திரன் & ரிலீஸ் எப்போது?”

  1. harisivaji harisivaji says:

    ரோபோ ரஜினி வரும் காட்சிகள் 3D ஆகா மாற்றினால் நன்றாக இருக்கும்

    ஒரு பக்கம் அனிமேஷன் ரஜினி யின் 3D இன்னொருபக்கம் ரியல் ரஜினி

    இனி அந்த 3 Dku பெருமை

  2. nagorebari nagorebari says:

    லேட்டா வந்தாலும் கண்டிப்பா லேட்டஸ்டா வரும் .
    நாகூர் பாரி
    மாவட்ட தலைவர்
    நாகை(தெற்கு)மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
    செல்:9952526675

  3. sundar sir
    padam eppa vanthalum vetri than thalaivanukku correcta sir

  4. antony antony says:

    vaa thalaiva vaa un varugaiai nokki ullom…

  5. சுந்தர்ஜி,

    Thanks for your fantastic TidBits on Endiran. Pardon me for a lengthy comment here.

    I think I read somewhere that there are 6 songs in Endiran. So, if you can try to get some info on the remaining 1 song & its lyricist & remaining 2 songs for which who are the dancer masters, it would be nice.

    “Which portions of Endiran, which director Shankar is trying to convert into 3D format?” Don’t you think this is an interesting sub-plot in finding out about Endiran news & behind-the-scenes happenings? I pray & hope, based on the initial favourable response of Shankar to Indian Artistes’ demo attempts to convert a portion of Endiran into 3D, that, ultimately, he & the producers decide to convert the whole movie into 3-D and that will be really good for the viewing public to experience the Ultimate Entertainer that is Thalaivar Rajini in double action in 3D. WOW!!!

    I personally favour that the entire movie of Endiran is converted into 3D form for one more reason, which is that Endiran’s main targeted audience group is CHILDREN. If Endiran has enough ammunition for 3D viewing & enjoyment, especially by children, then that, I am sure, will be one of the biggest reasons for its worldwide success. After all, which child will not enjoy such fun & adventure with a charismatic actor like Rajini – provided Endiran is marketed & promoted well & creates awareness all across the world.

    Regarding its release date, if Shankar is already contemplating converting a portion of Endiran into 3D, then along with the pending works of graphics, BGM, re-recording & final cut editing, etc., it will be months before Endiran is ready for commercial release. So, though Thalaivar has mentioned sometime back that it will likely release in July, 2010, with the changed circumstance due to 3D conversion, I feel Endiran can be expected to be a Deepavali 2010 extravaganza. How izz it, friends?

    But, if Sun Pictures puts their hearts & mind into planning a proper marketing blitzkrieg in promoting Endiran worldwide, they can really do wonders, with the amount of cash pile they seem to be sitting on and their political & business connections to add muscle to their strategy. Sun Pictures must have a marketing tie-up with one of the Hollywood studios like Fox Star or Sony or Warner Bros., etc. to promote Endiran on a worldwide scale.

    It is NOT ENOUGH for SunPic to simply bombard the Endiran adverts in its channells every alternate minute like they used to do for all their distributed movies till now. Ther is no need to promote a Rajini film in TN because the entire population of TN knows about Endiran & is eagerly awaiting its release.

    Instead, SunPic should concentrate their financial and marketing muzzle to focus their promos in markets other than TN, particularly outside India. They should create awareness about the movie Endiran and its USPs like 3D, Rajini, former Miss world Aishwarya Rai, Academy Award Winning MD A.R.Rahman, etc. so that some basic awareness about Endiran gets created among the developed world audience.

    SunPic and Shankar can learn a thing or two from the way Fox Star and James Cameron marketed their film “Avatar”. During the times when only franchised movies like “Spiderman”, “Batman”, “Superman” or “Harry Potter” or “Terminator” or ‘Indiana Jones” or the like franchises have assured opening & BO hit, AVATAR, about whose plot no audience had any clue before, was promoted almost 6 months before it hit the silver screens worldwide. They released a 15 minute snapshot trailer along with 3D Glasses, et all, in many screens all across the world including in India. Many of us will remember how the invited audience to Satyam cinemas crooned about it in Sep.’09 itself after watching that 15 minute promo trailer.

    So, Endiran’s awareness too can be promoted by SunPic say, during IPL 3 for eg. in March to April, 2010, as also during the ICC World T20 in West indies in April – May, 2010. This can be followed up with promos in the World Cup Soccer in South Africa in June – July, 2010. All these tournaments attract eye balls & spectators worldwide & hence advertising Endiran during these tourney will sure create the awareness about a “3D Movie from Bollywood” in the audience’s minds.

    I have only given a few examples here. SunPic will surely get more opportunities to promote Endiran to a worldwide audience. If they utilise it properly & do a professional job by spending enough money, I am sure Endiran will be able to sustain its grand opening for weeks on end like Avatar & 3 Idiots have been doing for the last 50 days or so.

    அன்புடன் அருண்

    ————————————————————————
    Arunji, A very good analysis. i feel there’s no enough time to convert entire movie into 3D. But a part can be done.

    And regarding marketing and promo, as you say, SUN pictures should DEFINITELY exercise a distinct and unusual promo unlike their usual releaseS. Am tired off SUN pictures’ repeated promos in tv channels of some movies they release(d).

    - Sundar

  6. prakash prakash says:

    Hi Sundar,
    Thanks for the super article. After seeing the tremendous success of Avatar, I was thinking abt 3D version of Robo(Robo 3d lae iruntha nalla irrukumae). Athae polavae aagi irrukku. Hope the 3D version goes on board. If it happens even partially it would be super blockbuster all over India provided movie is very good.

  7. சுந்தர் நீங்க சொல்றது சரிதான். ஆனால் பொறுமை காக்க இயல வில்லையே…… நல்லா மேருகு ஏற்றி எந்திரன் வரும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

  8. harisivaji harisivaji says:

    அருண் உங்களுக்கு சன் டிவி ல இருந்து அழைப்பு வரும்னு நினைக்கிறன்
    இல்ல
    எந்திரன் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் வேலைல சேர்ந்துடலாம்
    superb analysis

  9. S.Madhan Raj S.Madhan Raj says:

    படம் எப்ப வந்தாலும் இது போல் ஒரு படம் இனி இந்திய திரை உலகில் வந்ததில்லை என்று இருக்க வேண்டும். அந்த பெருமை நம் தலைவருக்கும் திரு ஷங்கர் அவர்குளுகும் சேரவேண்டும்.

  10. tveraajesh tveraajesh says:

    எந்திரன் தமிழ் சினிமாவின் ஒரு கலசமாக விளங்க ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

  11. dr suneel dr suneel says:

    அருண் ஜி , நல்ல analysis, full film 3d ஆகா மாற்ற budget நெறைய ஆகும் என்று தோன்றுகிறது ..avatar பார்த்த பின்பு , மக்கள் expectation ரொம்ப ஜாஸ்தி ஆய்டுச்சு , அந்த அளவுக்கு மார்க்கெட்டிங் செய்றத இருந்தா , இன்னும் budget 200 கோடி selavu பண்ணும் . என் எதிர் பார்ப்பு எல்லாம் குறைந்த பட்சமாக robo thalaivar வரும் காட்சிகள் மட்டுமாவது 3dla எடுக்கலாம் .

  12. vasi.rajni vasi.rajni says:

    அருண்ஜி நீங்கள் எழுதுயிருப்பதை ஒரு பதிவாகவே போடலாம் . எனக்கு தெரிந்து ஜூலையில் படம் வெளியாகும் சாத்தியம் குறைவுதான் . உலக கிண்ண காற்பந்து போட்டி உலகம் முழுவதும் திருவிழா போல நடை பெரும் . அப்பொழுது எந்திரனை ரிலிஸ் செய்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது . தீபவளியன்று படம் வெளியாகும் சாத்தியம் தான் அதிகம் .

    ஒரு பக்கம் மிக மிக வேதனையாக உள்ளது . இருந்தாலும் அந்த ஆண்டவனின் சித்தம் இது வென்றால் எவரால் மற்ற முடியும். நடப்பது அனைத்தும் ஆண்டவனின் அருளால் நடக்கும் .

    rajini will rule tamil nadu

  13. Srinivas Srinivas says:

    // ஷங்கர், எந்திரனில் இதுவரை நடிக்கவில்லையாம். இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பே இருப்பதால் இனி சாத்தியம் குறைவு என்கிறார். (சும்மா ஜஸ்ட் வாங்க சார். நீங்க வர்ற சீன்ல பலத்த விசில் உறுதி!)
    //

    ஆஆகா …நன்றி சுந்தர் …இப்போது தான் பார்த்தேன்…ஷங்கர் எனக்கும் reply செய்து விட்டார் :)

    Srinivas Says:
    January 31st, 2010 at 12:13 AM
    Hello Sir,

    Endhiran la thalaivar oda neenga nadikkareengala???? (atleast small guest role)??

    Director Shankar Reply:
    February 7th, 2010 at 4:54 PM

    idhuvaraikkum illa.. baakki irukkaradhum konjamthan.. saatthiyam romba kuraivu srinivas

  14. Sharath Sharath says:

    Arun, good points you have brought out.

    I would like to add that if possible they should bring out n English version of the movie without the songs and nicely edited version to bring it down to <2hr viewing time of English movies.

  15. Friends,

    A follow-up and (as usual) a detailed comment from my side.

    Just to see things in perspective, I am giving below the financials regarding James Cameron’s Hollywood blockbuster “Avatar”, which has become the highest BO grossing movie of all time in the world. It will be better for all of us, Rajini fans, to understand how these things work before we start analysing or discussing about Endiran and how it should be produced or marketed.

    Avatar’s cost of production: $ 310 Mn. ($ 1 Mn. rouhgly equals to Rs. 5 crore at a conversion of Rs. 50 per USD). In INR it is Rs. 1550 crore.

    Fox Star Studios roped in two Private Equity firms to spread their risks in producing ‘Avatar’, which did not have any franchise advantage typical of a normal Hollywood blockbuster these days. So, each of these PE parters, roughly contributed around $ 100 Mn. (Rs. 500 crore) with the balance $ 110 Mn. coming from FoxStar (Rs. 550 crore).

    Since the majority work of graphics, perforamance capture & VFX portions for “Avatar” were done in a studio in New Zealand and NOT Hollywood, they got some tax credits from NZ Govt. worth $ 30 Mn. (Rs. 150 crore). Net to net, the total cost of producing “Avatar” worked out to a mammoth $ 280 Mn. (Rs. 1400 crore).

    Over and above this, FoxStar spent a massive $ 150 Mn. (Rs. 750 crore) towards worldwide marketing & promotion efforts for “Avatar”. As mentioned earlier, since “Avatar” did not have any of the advantages normal Hollywood blockbusters have, FoxStar AND James Cameron had to think of ingenious ways of marketing the movie & create awareness to a worldwide audience. Thus, Cameron came out with a never before tried marketing ploy of a 15 minute special trailer/screening in 3D format in theatres across the world. Both Fox & Cameron even went to the extent of promoting the trailer/sccreening of Avatar by having road shows/ press conferences across the globe.

    First they determined the release date for “Avatar”, which is to be mid-Dec., 2009, just before the Christmas holiday season starts, to ensure a big opening. Then, they organised such special trailer/screening in USA in July, 2009, itself, a full 5 months before the movie was to hit the market in December, 2009.

    They also had series of meetings with Theatre Associations in USA and other countries to goad & help them convert their screens from 2D to 3D screens. Since it involved a heavy initial cost, they had to face stiff resistance and by hindsight one can say they were only partially successful. But, because of the fantastic reception 3D screens got from viewing public for “Avatar” than the 2D screens – more than 70% of Avatar’s total BO collections came from 3D screens – now many theatre owners are rushing to convert to 3D and the beneficiaries will be the huge number of 3D Hollywood films waiting in queue for release in the months to come.

    Such a special trailer screening happened in India too in September, 2009, in Mumbai & Chennai for invited guests. In Satyam cinemas, where it was screened in Chennai, many Kollywood celebrities like director Murugadoss etc. attended & came out quite impressed.

    With such mammoth marketing budget spent for Avatar, its total cost (both production and marketing) came to $ 430 Mn. (Rs. 2,150 crore). The bottom-line is clear for Avatar – it sure shot has to have a mega block-buster opening – just to recover its cost.

    As we all now know, “Avatar” had a huge opening worldwide and went on to overtake the “Titanic” in highest BO collections and has now crossed $ 2 Bn. (Rs. 10,000 crore) and is expected to cross $ 2.50 Bn. (Rs. 12,500 crore), if not $ 3 Bn. (Rs. 15,000 crore), provided other 3 D Hollywood movies don’t take away 3D theatres from “Avatar” from March, 2010, onwards.

    Thus, “Avatar”, which is the costliest movie ever produced in Hollywood, has ALSO become the highest grossing movie ever in the history of world cinema. As the above figures indicate, even though “Avatar” had cost a bomb to produce & market for its producers, it is likely to collect 6 to 7 times its cost and give its producers an unimaginable return on investment in the shortest span of time.

    Rupert Murdoch, the owner of Star Group & FoxStar Studios, in a recent analyst conference has acknowledged that, thanks to “Avatar”, his media conglomerate has posted positive results in the last quarter & arrested the slump due to recession. He has also indicated that they are in preliminary discussion already with James Cameron regarding the sequel to “Avatar”.

    Two things we can understand from the above analysis:
    1. Marketing/promotion cost of a movie is roughly around 30% to 35% of its total cost or say, one-third.
    2. Even if a movie costs a bomb to produce and market, with proper promotion & marketing strategy, it can be made to become a huge block-buster, provided however, the movie should be basically good & resonate with the audience.

    So, the bottom-line, my friends, is that, even thoguh Endiran is rumoured to cost around Rs. 150 crore (I presume it includes marketing/promo too), if SunPic spends at least around Rs. 50 crore to properly promote & market it, it sure has the potential to become an all-time hit from India on a world scale.

    Thanks for reading.

    அன்புடன் அருண்

  16. சண்டை காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் இவற்றுக்கு மட்டுமாவது 3 டி எபக்ட் கொடுக்கலாம்

    லேட் ஆக வந்தாலும் இந்தியாவிலேயே லேட்டஸ்ட் ஆக வரவேண்டும்

    ஸ்ரீநிவாஸ் சார் வாழ்த்துக்கள் ஷங்கர் சார் கிட்டே பதில் வந்திருச்சே உங்களுக்கு

    தேங்க்ஸ் சுந்தர்

  17. Vijayakumar Vijayakumar says:

    நன்றி சுந்தர் சார். சொன்ன அடுத்த நாளே அசத்தலான செய்தி தந்தைமைக்கு. (ஷங்கர் சாருக்கும் தான்).

    இன்னொரு விஷயம் என்னை போன்ற ரசிகர்களுக்கு ஆங்கிலம் சரிவர புரிவதில்லை. உங்கள் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகிறது.

    - விஜயகுமார், பொள்ளாச்சி

  18. Manoharan Manoharan says:

    Arun’s observation and informations are just amazing. Sundar, we can wait even for another year if Endhiran will come out in 3D version. Becoz it will double the returns if it got released in 3D. Also as arun quotes marketing should not be like other SUN movies. Its has to be in world class. Already we heared that SUN has been established a tie up with HBO for marketing. I m sure there wont be any stone left if it comes to marketing as SUN is the king of marketing. But for all this to happen the end product should be really brilliant and world class. For that i think it will take another year for Shankar to finish the end product. As the film contains its main portion in the form of Animatronics, it has to be done very very professionally like Terminator and Avatar which will surely consumes time. Also as the shooting itself has not been completed and it may take another 2 months to complete the shooting and BGM, Animation and editing will take minimum of atleast 6 months and after the songs should get released. This itself will take all this year. So i predicts that Endhiran may be for 2011 Pongal or 2011 April.

  19. Srinivas Srinivas says:

    //r.v.saravanan
    February 10, 2010 | Permalink |
    ஸ்ரீநிவாஸ் சார் வாழ்த்துக்கள் ஷங்கர் சார் கிட்டே பதில் வந்திருச்சே //

    நன்றி…நான் சின்ன பையன் …சார் லாம் இல்லைங்க :)

  20. Rajagopalan Rajagopalan says:

    Sundar,
    Feb 9, Tuesday, MAALAI MALAR has published this news; and it looks like they have taken the extract from our site’s artlcle. Thats Great !!!!
    Can’t wait to watch thalaivar in this movie of the era !!

  21. kppradeep kppradeep says:

    Sundarji,
    Good one as usual and Arun sir fantastic and by your presentation you can make any one understand movie marketing. The so called Gnani’s arrogance during kuselan release speaks volumes about his ignorance regarding this

  22. balaji balaji says:

    Thanks for the updation of endhiran movie news ……sundarji…
    Really super observation Mr. Arun also…

  23. தலைவர் எப்போ வந்தாலும் கலக்க தயாரா இருக்கும் தமிழகம்.
    வருக எந்திரன்…
    திரை சிற்பி ரஜினி நற்பணி மன்றம்.. தூத்துக்குடி..

    ராமர்….

  24. எந்திரனுக்கு பிறகுதான் சில பேருக்கு இருக்கு (ஜககுவார் தங்கமா அல்லது பிட்டலய என்று )கிளம்பிட்டார் அடுத்த ராம்டாஸ்

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates