Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

இந்திய அளவில் சக்திமிக்க பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

மது டென்ஷனை எல்லாம் சற்று ஓரங்கட்டிவிட்டு, ஒரு மாற்றத்திற்காக இந்த சந்தோஷமான செய்தியை தருகிறேன். பிற முக்கிய UPDATES விரைவில் தனித்தனி பதிவாக. (அன்பு அரண் , நீங்கள் கேட்டது விரைவில். ஓகே?).

வட இந்தியாவில் மிகப் பெரிய மீடியா சக்தியான இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஆண்டுதோறும் ‘Most Powerful Indians of the Year”‘ என்று 100 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுவருகிறது. (இங்கு வெளியாவது ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’. இரண்டும் வேறு வேறு.)

powerful indians j2 794x1024  இந்திய அளவில் சக்திமிக்க பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!2010 ஆம் ஆண்டுக்கான ‘Most Powerful Indians of the Year’ பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. நாமெல்லாம் பெருமைகொள்ளும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இந்தப் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது.

அகில இந்தியா அளவில் பிரபலமாக உள்ள – அரசியலின் அதிகார மையப்புள்ளிகள், மத்திய மாநில அமைச்சர்கள, பிராந்திய அரசியலில் மிகப்பெரும் சக்தியாக விளங்குபவர்கள், பெரும் தொழிலதிபர்கள், மீடியா முதலாளிகள், பத்திரிகை அதிபர்கள், பொருளாதார வல்லுனர்கள், ஆன்மீக தலைவர்கள், குருக்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டாருக்கும் இடம் கிடைத்திருக்கிறதென்றால் சும்மாவா?

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் எந்த காரணத்துக்காக இடம்பெற்றிருக்கிறார்கள் மற்றும் அவர்களின் அடுத்த நிலை என்ன ஆகியவற்றையெல்லாம் அலசி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாயிண்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீங்கள் காணும் இந்த 100 பேர் பட்டியல், இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் தனி தனி முகவரியில் கிடைத்தது. அவற்றையெல்லாம் ஒவ்வொரு URL க்கும் சென்று தனித் தனியாக இந்த பட்டியலை பெற்றோம். பிறகு அதை ஒரே படத்தில் கொண்டுவந்தோம்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர்: அம்பானி சகோதரர்கள், இன்போசிஸ் நந்தன் நீல்கேணி, சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாருக் கான், நேர்ந்திர மோடி, விஜய் மல்லையா… போன்ற பல பிரபலங்கள்.  தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், அப்போல்லோ பிரதாப் ரெட்டி, மாறன் சகோதரர்கள், ஹிந்து என்.ராம் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

“வானம் உனக்கு; பூமியும் உனக்கு; வரப்புகளோடு சண்டைகள் எதற்கு?” என்று தலைவர் முத்து படத்துல பாடியதுபோல, நம்மே ரேன்ஜ் எங்கேயோ போய்கிட்டுருக்கு. நம்ம கூட மோதக்கூட தகுதி வேண்டும். அதுகூட இல்லாத சில ஜென்மங்களை பற்றி இங்கே பேசி என்ன பிரயோஜனம். என்ன… நான் சொல்றது சரி தானுங்களே..?

தற்போது அரசியலிலிருந்து சூப்பர் ஸ்டார் முழுக்க விலகியிருக்கும் சூழ்நிலையில் அவர் நடிகர் என்ற அளவில் தான் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். அரசியல் சக்தியாக அவர் மாறும் பட்சத்தில் பட்டியலில் நல்லதொரு இடத்தை பிடிப்பார் என்பது உறுதி.

சரி, சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் இடம்பெற்றது பற்றி எக்ஸ்பிரஸ் கூறுவது :

ஏன்?
சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் இடம்பெற்றது ஏனென்றால், அவரது சமீபத்திய படமான குசேலனின் சுமாரான performance மற்றும் அதன் மீதான விமர்சனம் அவரது ரசிகர் பலத்தை செல்வாக்கை சிறிது கூட அசைக்கவில்லை. வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரையுலகில், கேமிராவுக்கு பின்னே மேக்கப் போட மறுக்கும் ஒரே நடிகர் அவர் தான். பொது விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த வித மேக்கப் இல்லாமல் வருகிஆர் ரஜினி.

Power பன்ச்
தனது செல்வாக்கை அரசியல்  லாபத்துக்காக அவர் பயன்படுத்தியதில்லை. ஆனால் அதே சமயம் வீடியோ பைரசியிளிருந்து நடிகையர் மீடியாவில் தவறாக சித்தரிக்கப்பட்டது வரை அவர் கலந்துகொள்ளும் போராட்டங்களுக்கு உடனடி பலன் கிடைத்துவிடுகிறது. அந்த பிரச்னையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடுத்து என்ன?
இந்தியா திரையுலக வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் எந்திரன் படத்தில் எந்திர மனிதனாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராய் இதில் இவருக்கு ஜோடி. இவ்வாண்டின் அதிக எதிர்பார்க்கப்படும் படம் இது.

powerful indians j 1024x885  இந்திய அளவில் சக்திமிக்க பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!

96. RAJNIKANTH, 60
Actor

Why
The superstar of Tamil film industry stays put in our list because his fan following hasn’t shrunk even the tiniest bit even after the rather average box office performance of his last film Kuselan. In an industry obsessed with appearances, he is the only actor who refuses to use make-up when not facing the camera.

Power punch
He hasn’t cashed in on his political quotient. But whenever he takes up an issue, from video piracy to portrayal of film stars in the media, the authorities take notice and act promptly. He is a recluse who no one wants to rub the wrong way.

What next
Enthiran,the most expensive Indian film with him as an android and Aishwarya Rai as his love interest, is an eagerly awaited Tamil film.

http://www.indianexpress.com/news/the-most-powerful-indians-in-2010-no.-91100/575671/0

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

27 Responses to “இந்திய அளவில் சக்திமிக்க பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார்!”

  1. dr.naren dr.naren says:

    சூப்பர் சுந்தர்

  2. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது நம்ம தலைவர் அந்த லிஸ்டில் இடம்பெற்றிருப்பது மேலேவுள்ள ஸ்டில்லை பார்த்தால் முதல்வர் போல இருக்கிறது அந்த தோற்றம் !! மீசை வைத்தால் இன்னும் கம்பீரமாக இருக்கும் நன்றி ஸ்ரீமணிகண்டன் கோவை

  3. k.gopi k.gopi says:

    சூப்பர் தலைவா

  4. ponraj ponraj says:

    சத்தம் இல்லாமல் ஒரு சரித்திரம் உருவாகும் நேரம் வரும், பொறுத்திரு மனமே….

  5. Prasad Prasad says:

    Apt still you have chosen.Great news.

  6. kppradeep kppradeep says:

    My view is the other 99 must feel honoured to find their name along side Rajini. Rajini is a actor by profession but he is much more than that. He is such a wonderful humanbeing and a noble soul. i want to recall some of the words of CHO Ramasamy during book releae(The name is Rajinikanth).
    He is in show business but he is not a show man
    He is not in politics but the TN politics revolves around him
    He is a spiritual man but he is not a Saint.
    Over all he is the best example for us to how to live this life.
    Cho also recalled how during Sivaji silver jublee function he said all credit goes to Shankar and also he thanked AVM for giving him the “chance” to act in Sivaji. Such a humble human can you see any where else or atleast have you read about such a celebrity in any part of the world.
    proud to be one among the many fanatics of super star

  7. dr suneel dr suneel says:

    95 ஆவது எடமா?? முதல் 30 தான் சரி ..நீங்க என்ன சொல்லுரிங்க ஜி ?

  8. nagorebari nagorebari says:

    வெத்து அறிக்கை விடும் டுபாக்கூர்களே …எங்கள் தலைவர் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
    நாகூர் பாரி

  9. Venky Venky says:

    BTW..Where is Sachin Tendulkar in the list????
    See 39th Amir khan…95th place is Priyanka chopra..n 96th our Thalaivar????

    I am happy that Thalaivar in top 100 list..but not happy abt the place he is in the list…

    ——————————–
    Sachin Tendulkar is in 52nd position. And regarding the position of Superstar in the list, this is the first time of his entry in the powerlist. Pls wait. He will soon become one among the top 10. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அனைவரிடமும் ஒரு திறமை இருக்கும். அதை மதிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    - Sundar

  10. harisivaji harisivaji says:

    guys dont worry about the place; we need to accept certain things its fact we cannot deny it..
    But just have a deep analysis in this list.
    All the persons in above mention list are somehow related to North region through their business or Bollywood or Politics think about rajini what is his role in northern region
    Does he acted in any direct films in Hindi recently ? no
    Anywhere near to politics recently ? no…
    Business Man – no
    Nothing like any of these…then how he can be
    Addind more to Cho ; though he is not a business men, when his films starts think about the Businees revenue created starting from Tea boy to Multi millionnaire

    Yes he is not a business man, but without him there wont be any business for many mens

    Can u imagine a single Election after 1996 without rajini name in newspapers.
    Even his silence will become news.

  11. Mahesh Mahesh says:

    Thanks for Posting.
    Great to see Thalaivar in the list. Thalaivar is the only non-Bollywood actor in the list. And there are only few actors in the list and thalaivar is alongside the likes of Amitabh, Aamir and SRK. I feel they could have given better ranking to Thalaivar but I presume that they might used several parameters to give this ranking which is ok. But among all of these actors, Rajini and Amitabh deserve special mention because they are well past their prime and still able to weild so much influence which is an amazing feat and more so for Thalaivar because its been nearly 2 years his film was released and still he commands so much respect. Kudos to our Thala.

  12. tveraajesh tveraajesh says:

    தலைவர் இந்திய அளவில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடிகர் என்பதற்கு இதுவே ஒரு நற்சான்று. சுந்தர் குறிபிட்டது போல தலைவர் ஒரு நடிகர் அந்தஸ்து முலமே நூறு பேர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தலைவரின் சாதனை. தலைவர் ஒரு நிறைகுடம் அவரை பற்றி சதாரண மனிதர்களுக்கு புரியாது மேலும் நம் தலைவர் ரேங்க் எங்கேயோ சென்று விட்டது. எனவே சில வேலை இல்லாத அரவேகடுங்க பேசறது, போலம்பரதேஎல்லாம் சட்ட பண்ண வேண்டிய அவசியம் இல்ல என்ன தலைவர் இவங்கள பார்த்து சிரிக்கத்தான் செய்வாரு நாமும் சிரிச்சிட்டு மறந்து நம் தலைவரை பத்தின பாசிடிவ் விழயங்கள கேட்டு சந்தோஷப்படுவோம். என்ன நான் சொல்றது!

  13. saranya saranya says:

    96th place ah? chance eh illa. mk stalin elam avruku munnadi ya…. enna koduma sir ithu???

  14. வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரையுலகில், கேமிராவுக்கு பின்னே மேக்கப் போட மறுக்கும் ஒரே நடிகர் அவர் தான். பொது விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த வித மேக்கப் இல்லாமல் வருகிஆர் ரஜினி.

    Man of simplicity

  15. சுந்தர் முதல்வர் அறிக்கை பார்த்தீர்களா…?

    ———————————–
    Yes… But it was too late from his side to issue such a statement.
    - Sundar

  16. dr suneel dr suneel says:

    may be after endhiran ..the position will change

  17. anbuaran anbuaran says:

    “வானம் உனக்கு; பூமியும் உனக்கு; வரப்புகளோடு சண்டைகள் எதற்கு?” என்று தலைவர் முத்து படத்துல பாடியதுபோல, நம்மே ரேன்ஜ் எங்கேயோ போய்கிட்டுருக்கு. நம்ம கூட மோதக்கூட தகுதி வேண்டும். அதுகூட இல்லாத சில ஜென்மங்களை பற்றி இங்கே பேசி என்ன பிரயோஜனம். என்ன… நான் சொல்றது சரி தானுங்களே..?

    அட்ராசக்கை! அட்ராசக்கை! அட்ராசக்கை! அட்ராசக்கை! அட்ராசக்கை! அட்ராசக்கை! அட்ராசக்கை! அட்ராசக்கை!
    ரிப்பீட்டு!

  18. anbuaran anbuaran says:

    சுந்தர்ஜி நன்றி என்பது சிறிய வார்த்தை தங்களின் அர்ப்பணிப்புக்கு முன்.

  19. தன்னடக்கத்தின் தலை மகன்

  20. Deeraj Deeraj says:

    Thalivar is always the number one. If they rank him in 96th place also he is god in our hearts. In that other 99 people who has got die hard fans like our thalivar

  21. napoleon napoleon says:

    முதல்வர் அறிக்கை எப்படி இருக்கிறது என்றால், குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்.

  22. murugan murugan says:

    தலைவர் கோடானு கோடி மக்கள் உள்ளத்தில் நிலையான இடைத்தைப்பிடித்து பல ஆண்டுகள் ஆகிறது – அந்த இடத்தை பிடிக்கும் ஏன் பிடிக்க நினைத்துப்பார்க்கும் சக்தி இது வரை பிறந்ததில்லை இனியும் பிறக்கப்போவதுமில்லை – இறைவன் ஒருவர் தான் அதுபோல நம் தலைவரும் ஒருவர் தான் – தனது மௌனத்தால் பல நூறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் நமது தலைவரை என்ன வென்று போற்றுவது.
    ———————————
    Welcome back Murugan.
    - Sundar

  23. DEAR SUNDAR SIR,

    VERY GOOD NEWS FOR ALL RAJINI FANS,
    THALAIVAR THALAIVAR THAN……….

  24. சுந்தர்ஜி எனக்கு இந்த பட்டியலில் உடன்பாடு இல்லை. தலைவருக்கு 96 வது இடம் என்பதை ஏற்று கொள்ள முடியாது. அமீர் கான், ஷாருக் கான், பிரியங்கா சோப்ரா இவர்களுக்கு பின்பு தலைவரா ???? மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. முதல் 30 குள் ஒரு இடம் என்றால் சரியான பட்டியலாக இருந்திருக்கும்.

  25. நான் சமீபத்தில் ஒரு வலை தலத்தில் படித்த ஒரு தொகுப்பை இங்கே கொடுக்கிறேன்.. இதன் முதல் பத்தியை படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.. தலைவர் போல் என்றும் அமைதிகாத்து நடப்பதை பாப்போம்.. இத்தருணத்தில் விவேகானந்தரின் பொன்மொழி ” உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு, உன்னை உயர்த்தி பேசும் போது செவிடனாய் இரு வாழ்வில் எளிதில் வெற்றி பெறுவாய்” என்பதுதான் நியாபகம் வருகிறது .. இனி அந்த தொகுப்பு..

    எதிர்வரும் 27 ஆம் திகதி நடிகர் சங்கம் சார்பாக ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விசாரணை கமிசன் கூடி இறுதியாக என்ன தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் ‘வண்டு முருகன்’ sorry ‘பூச்சி முருகன்’ மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங்.

    இந்த கமிஷன் தமது விசாரணைகளை முடித்து அறிக்கையை பாரத பிரதமர் சரத்குமாரிடமும், ஜனாதிபதி ராதாரவியிடமும் ஒப்படைப்பார்கள், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள். அதிகமாக ரஜினி, அஜித் மற்றும் இவ்விருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் சொத்துக்கள் புடுங்கப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே நாடுகடத்தப்படுவார்கள் என்று இந்த கமிசனின் முக்கிய புள்ளி ஒருவர் ‘ஒன்பது ரூபாய் நோட்டை’ லஞ்சமாக வாங்கிவிட்டு எமக்கு கூறியுள்ளார் , அதுதவிர எங்களது சில சந்தேகங்களையும் அவர் தீர்த்துவைத்தார்

    வேற்று நாட்டுக்கு நாடு கடத்தாமல் எதுக்கு இந்தியாவிற்குள்ளேயே நாடு கடத்தப் படவேண்டும் என்று கேட்டதற்கு,

    “அப்பதானே நடிகர் சங்கம் பிச்சை எடுக்கும் விழாக்களுக்கும், தமது படங்களை திருட்டு vcd யில் வெளியிட்டுள்ளார்கள் என அழுவதற்கும் மற்றும் பல விழாக்களுக்கும் மிரட்டியோ காலில் விழுந்தோ அழைக்கமுடியும், இவர்கள் இல்லாவிட்டால் குறிப்பாக ரஜினி இல்லாவிட்டால் கூட்டம் சேராது என்பதற்காவே இந்த ஏற்பாடு” என்றவரிடம்

    அதுசரி எதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே நாடு கடத்தப்பட வேண்டும் என்றுகேட்டதற்கு

    தமிழ் நாட்டுக்குள் இருந்தால் ஒருவேளை நாளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது ? அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே ? நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும்? எனவேதான் இந்த தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிற்கு உள்ளே நாடுகடத்தும் திட்டம்” என்றார்.

    இருந்தாலும் 27 ஆம் திகதிதான் உண்மையான தீர்ப்பு வெளியாகும் என்பதால் இந்த இருவரது ரசிகர்களும் மிகுந்த கலக்கத்தில் மணிக்கொருதடவை சத்தியராஜ்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எங்கள் தலைவரையும் தலையையும் மன்னித்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களாம், ஆனால் சத்தியராஜ் ” அவர்களை மன்னிக்கணும் என்று ஒரு நிலை வந்தால் நாக்கை புடுங்கிட்டு சாவனே தவிர மன்னிக்கவே மாட்டன்” ஒகேனக்கல் (எழுத்துப் பிழையில்லை ) வசனத்தை உல்டாப் பண்ணி மீண்டும் மீண்டும் கூறுகிறாராம். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்களாம்

    வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் சினிமா, வாழ்க சினிமா சங்கங்கள். இவற்றுக்கு முன்னர் ‘நன்றிகெட்டதனத்துடன்’ என்னும் வாசகத்தை சேர்க்க மறந்திட்டனே!

  26. வாழ்க! தலைவர்

  27. Sharath Sharath says:

    I do not consider this list to be of any worth. Its not accurate. Imagine MS Dhoni is considered more powerfull than Sachin !!! Its outright ridiculous.

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates