Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

இக்கட்டான நேரத்தில் நீண்ட சூப்பர் ஸ்டாரின் உதவிக்கரம் – காஃபி வித் அணுவில் ராதிகா உருக்கம்!

ம்முடன் சிரிக்க சிரிக்க பேசுபவர்களோ, நம்முடன் ஊர் சுற்றுபவர்களோ, அல்லது ஏதோ ஒரு வித நிர்பந்தத்தினாலோ நம்முடன் பழகுபவர்களோ -  இவர்களெல்லாம் நண்பர்கள் அல்ல. நமக்கொரு இக்கட்டான சூழ்நிலை என்றால் ஓடி வந்து நம்மை காப்பற்றுகிறார்களே அவர்கள் தான் ‘நண்பன்’ என்ற சொல்லுக்கு தகுதியானவர்கள்.

“உடுக்கை இழந்தவன் கைப் போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” என்று வள்ளுவர் கூறுவது இதைத் தான்.

சுருங்க சொன்னால் ‘ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை’. இதை இப்போது முழுதும் உணர்ந்திருக்கிறார்கள் சரத்குமார் – ராதிகா தம்பதியினர்.

dsc 0446  இக்கட்டான நேரத்தில் நீண்ட சூப்பர் ஸ்டாரின் உதவிக்கரம் – காஃபி வித் அணுவில் ராதிகா உருக்கம்!

‘ஜக்குபாய்’ படத்தை பெரும் பொருட்செலவில் எடுத்து, அதை ரிலீஸ் செய்ய எத்தனிக்கையில் இணையத்தில் முழு படமும் வெளியானது சரத்-ராதிகா தம்பதியினரை நிலை குலையச் செய்துவிட்டது. செய்வதறியாது இருவரும் திகைத்து முடங்கியிருந்த நேரத்தில் திரையுலகிலிருந்து இருவருக்கும் ஆதரவாக சில குரல்கள் எழுந்தன. அவர்களில் சூப்பர் ஸ்டாரும் ஒருவர். சூப்பர் ஸ்டார் குரல் கொடுத்தது அனைவருக்கும்  தெரியும். ஆனால் இவர்கள் கண்ணீரையும் துடைக்க முன்வந்த கதை தெரியுமா?

dsc 0453  இக்கட்டான நேரத்தில் நீண்ட சூப்பர் ஸ்டாரின் உதவிக்கரம் – காஃபி வித் அணுவில் ராதிகா உருக்கம்!

சென்ற வாரம் ஒளிபரப்பான காபி வித் அணுவில் ராதிகா பங்கு பெற்றார். அப்போது, தமது சோதனையான ஒரு தருணத்தில் சூப்பர் ஸ்டார் உதவிக்கரம் நீட்டிய விபரத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

koffee with anu 2 300x212  இக்கட்டான நேரத்தில் நீண்ட சூப்பர் ஸ்டாரின் உதவிக்கரம் – காஃபி வித் அணுவில் ராதிகா உருக்கம்!“என்னுடைய கேரியரில் நான் பார்க்காத சோதனைகள் இல்லை. ஆனாலும் இந்த ஜக்குபாய் பிரச்னை என்னை ரொம்பவே நிலைகுலையச் செய்துவிட்டது. இத்துனை வருடங்களாக இண்டஸ்ட்ரியில் இருக்கோம். யாரோ சர்வ சாதரணமாக திருடி இப்படி செய்துவிட்டார்களே என்று வேதனைப்பட்டேன். நடிகர் சூர்யா நூறு தடவையாவது போன் செய்து விசாரித்திருப்பார். கமல் இந்த பிரச்னை தனக்கு ஏற்பட்டதைப் போலவே உணர்ந்தார். ஒரு குழந்தையை கழுத்தை நெரித்து கொள்வதற்கு சமம் இது என்று ஆவேசப்பட்டார்.”

“சூப்பர் ஸ்டார்…. அவர் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் தான். எனக்கு போன் செய்து, என்ன என்ன பண்ணப்போறீங்க. படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க.  ஆட் (AD) எல்லாம் இப்படி பண்ணுங்க. பிரீமியர் வைங்க. இது போன்ற யோசனைகள் சொன்னாரு. சொல்லிட்டு போனை வெச்சிட்டாரு. திரும்பவும் கொஞ்ச நேரம் கழித்து போன் செய்து, என்ன உங்களுக்கு படத்தை ரிலீஸ் பண்ண ஏதாவது பணம் வேணும்னா சொல்லுங்க…. எவ்வளவா இருந்தாலும் நான் கொடுக்குறேன். கவலைப் படாதீங்கன்னு சொன்னாரு. எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு. சரத் கண்கலங்கிட்டார். “நீங்க இப்படி கேட்டதே போதும்  சார். எங்களுக்கு பணமெல்லாம் ஒன்னும் வேண்டம்னார்.” ரஜினி சார் அந்த வார்த்தை சொன்னது – இண்டஸ்ட்ரியில் இத்தனைக் காலம் நான் இருந்ததுக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்துச்சு.”

இவ்வாறு ராதிகா கூறினார்.

மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே…!!

ராதிகாவின் உரையாடலுக்கு இணைக்கப்பட்டுள்ள வீடியோ க்ளிப்பை  பாருங்கள்.

[CLIP COURTESY : CHIKUBUKU.COM]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

3 Responses to “இக்கட்டான நேரத்தில் நீண்ட சூப்பர் ஸ்டாரின் உதவிக்கரம் – காஃபி வித் அணுவில் ராதிகா உருக்கம்!”

  1. kppradeep kppradeep says:

    Super news sundarji. Thanks to radhika for bringing this out in the open

  2. Rama Rama says:

    THALAIVAR always great. Sundar sir ENDHIRAN audio release eppo?

  3. nagorebari nagorebari says:

    தலைவரின் தங்க மனசை “நாட்டாம்மை”(ஹி…ஹி) இப்பவாவது புரிந்து கொள்ளட்டும் .
    நாகூர் பாரி
    மாவட்ட தலைவர்
    நாகை(தெற்கு) மாவட்ட ரஜினி நற்பணி மன்றம்
    செல்:9952526675

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates