Flash Update: Special coverage on Soundharya's wedding - "Rajinikanth Calling" (Sunday September 5th) in NDTV-HINDU channel tonight 8.00 pm. NDTV-Hindu is available in SCV and Reliance Big.

“எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

ந்திரன் ஆடியோ போஸ்டர்கள் தயாராகி ஆடியோ WHOLESALE மார்க்கெட்டான ரிச்சி தெருவிற்கு வந்து இறங்கியவுடன் அடுத்த நொடி நமக்கு அது குறித்து தகவல் வந்துவிட்டது. நமது தளத்திற்காக அந்த போஸ்டர்களை புகைப்படமெடுத்துவிட்டு
அப்படியே முக்கிய ஆடியோ டீலர்களையும்  பார்த்து பேசிவிட்டு வரலாம் என்று திட்டமிட்டோம்.

நாம் போகும்போது மாலை 7.00 / 7.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பகலில் நேரமிருக்காது. ஈவ்னிங் ஆயிடுச்சுன்னாலே போட்டோ எடுக்க சவாலான நேரம் தான். காரணம் கேமிராவிலிருந்து வெளிவரும் FLASH வெளிச்சம் போஸ்டர்கள் மீது பட்டு REFLECT ஆகி படத்தை சரியாக பிரதிபலிக்காது. இருப்பினும் நம்பிக்கையுடன் களமிறங்கினோம்.

IMG 4638 640x480  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

——————————————————-
ரிச்சி தெருவில் நாம் முதலில் சந்தித்தது, சூப்பர் ட்ராக்ஸ் என்னும் கடையை தான். ஆடியோ WHOLE SALE DEALER களில் முக்கியமான கடை இது. கடையின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அசத்தலான போஸ்டரை போவோர் வருவோர் அனைவரும் ஒரு கணம் நின்று ரசித்து பார்த்துவிட்டு சென்றனர். பலர், ஆர்வமுடன் விசாரித்த வண்ணமிருந்தனர்.

நாம் கடையின் உரிமையாளர் திரு.கிஷோரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு உரையாடினோம். போஸ்டர் ஒட்டப்பட்டதிலிருந்து நல்ல ENQUIRY வருவதாகவும், பொதுமக்கள் பலர் விசாரித்துவிட்டு செல்வதாகவும் கூறினார். நாளிதழ்களில் விளம்பரம் வெளியானால் அதன் பிறகு  ENQUIRY க்கள் அதிகரிக்கும் எனவும் ஆகவே விளம்பரத்தை எதிர்பார்த்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.

IMG 4620 640x480  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பொதுவாக அதிகமாக விற்கும் படங்கள் எது?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படங்களின் ஆடியோ விற்பனை தான் எப்போதும் முன்னணியில் இருக்கும். தவிர அந்த காலகட்டங்களுக்கேற்ப ஹிட்டாகும் சில படங்களின் ஆடியோ சி.டி.க்களும் அதிகம் விற்கும். உதாரணத்திற்கு சுப்ரமணியபுரம், விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை.

சமீப காலங்களில் அதிகம் விற்கும் ஆடியோ எது?
மதராசப்பட்டினம், பையா, நான் மகான் அல்ல.

கடைசியாக உங்கள் கடையில் அதிகபட்சம் விற்ற ஆடியோ எது?
சிவாஜி

ஒரு அளவுகோலுக்காக கேட்கிறேன்… மற்ற படங்களின் ஆடியோவுக்கும் சூப்பர் ஸ்டாரின் படங்களின் ஆடியோவுக்கும் விறபனையில் உள்ள வித்தியாசம் என்ன?
அதன் விற்பனையுடன் எதையும் ஒப்பிட முடியாது. நீங்க கேக்குறதால சொல்றேன். சூப்பர் ஸ்டாரின் படங்களின் ஆடியோ மூன்று மடங்கு அதிகம் விற்கும்.

IMG 4629 640x480  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

எந்திரனுக்கு ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சிவாஜியின் சாதனையை முறியடிக்கும் வகையில் இருக்கும்.
கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உற்சாகமாக பதில் சொன்ன திரு.கிஷோரும் அவரது பணியாளர்களும், நாம் போஸ் கொடுக்குமாறு கேட்டவுடன் உற்சாகமாக கட்டை விரலை காண்பித்து போஸ்கொடுத்தனர்.

நாம் புகைப்படமெடுக்க எடுக்க அந்த சூழ்நிலையே பரபரப்பானது.

——————————————————-
டுத்தது நாம் சென்றது, New DiscWorld என்ற கடைக்கு. Raheja Complex க்கு எதிரில் உள்ள சிறிய கடை.

அங்கு அப்துல் ரஹ்மான் என்பவரிடம் நாம் பேசியதிலிருந்து:

எந்திரன் ஆடியோ எப்போங்க கிடைககும்?
“சனிக்கிழமை காலைல”

போஸ்டரை பார்த்து யாராவது கேக்குறாங்களா?
அட… பதில் சொல்லி சொல்லி எனக்கு சலிச்சிபோச்சு சார். அந்தளவு கேக்குறாங்க.

உங்க கடையில் நல்லா இப்போ விக்கிற ஆடியோ எது?
பையா, சிங்கம், மதராசப்பட்டினம், அங்காடி தெரு, விண்ணை தாண்டி வருவாயா

New Disc WorldJ 640x853  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

உங்க கடையில அதிகபட்சம் சேல்ஸ் ஆன ஆடியோ எது?
சிவாஜி, சந்திரமுகி

சரி.. மத்தது எவ்ளோ விக்கும் ரஜினி படங்கள் எவ்ளோ விக்கும்?
(அங்கேயிருந்த கஸ்டமர் ஒருவர் நம்மை முறைத்து… “அவர் படங்களோட தயவு செய்து எதையும் கம்பேர் பண்ணாதீங்க சார். அது கடைசி வரைக்கும் மூவ் ஆயிட்டேயிருக்கும். மத்ததெல்லாம் அப்படி கிடையாது” என்றார் சூடாக.)

அப்துல் ரஹ்மான் தொடர்கிறார் – “மத்தது 100 போச்சுனா  ரஜினி படம் 300 இல்ல 400 போகும். அவர் படமெல்லாம் கேசட்/சி.டி. வந்தா பேலன்ஸ் ஒன்னு கூட தங்காது. முழுசா வித்துடுவோம். ஸ்டாக் ஃ ஃபுல்லா காலியாகி, ரெண்டாவது, மூணாவது லாட் வரைக்கும் ஆர்டர் செய்வோம்”.

சிவாஜிலாம் பார்த்தீங்கன்னா கடைசி வரைக்கும் போய்கிட்டே இருந்துச்சு. படம் ரிலீசான பிறகு கூட சி.டி. வித்துகிட்டே இருந்தச்சு.

எந்திரன் எப்படி………..?
அதெல்லாம் சாலிட்டா போகும். ரஹ்மான் ம்யூசிக் வேற. கேட்கணுமா என்ன… நாங்க எல்லாம் interestaa  வெயிட் பண்ணிகிட்டுருக்கோம்.

நம் கேட்டதும் வெற்றி என்பது போல கட்டை விரலை காட்டி போட்டோவுக்கு உற்சாக போஸ் கொடுத்தார் ரஹ்மான்.

——————————————————-

டுத்து நாம் சென்றது: மென்சி எலெக்ட்ரானிக்ஸ். உரிமையாளர் திரு.சந்திரசேகர். இவர்களும் ஒரு WHOLESALE டீலர் தான். நம்மிடம் அதிக நேரம் உற்சாகமாக பேசினார் இவர். இவரிடம் பல தகவல்களை பெற முடிந்தது.

IMG 4643 640x480  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

என்ன சார்… எந்திரன் ஆடியோவுக்கு என்கொயரி எப்படி இருக்கு? நல்ல இருக்கா?
நிறைய பேர் வந்து கேட்டுட்டு போறாங்க. இன்னும் ரெண்டு நாள் போகணும்.

எந்திரன் படம் எப்படி போகும்னு நினைக்கிறீங்க?
அவர் படமெல்லாம் எப்பவுமே டாப் தான். நாங்க தைரியமா லாட் ஆர்டர் பண்றது அவர் படம் மட்டும் தான். அதுவும் ஆடியோ ரிலீசுக்கு முன்னாடியோ பாட்டு எப்படி இருக்கும்னு தெரியாமலே ஆர்டர் பண்றோம்னா அது அவர் ஒருத்தரு படத்துக்கு மட்டும்தான். மத்ததுக்கெல்லாம் பாட்டு ரிலீசான பிறகு தான்.

தலைவர் படம் எப்படி போகும்? அந்த ட்ரெண்டை பத்தி சொல்ல முடியுமா?
அவர் படம் வந்தா அந்த ஸ்டாக் முழுசும் கம்ப்ளீட்டா வித்துடும்.  சிவாஜில்லாம் சிங்கிள் சி.டி. கூட நிக்கலே.

ரெண்டாவது அவர் படம் மட்டும் எங்களுக்கெல்லாம் CASH & CARRY பிசினஸ் தான். “காசை வெச்சிட்டு சி.டி.யை எடுத்துகிட்டு போ” ன்னு ம்யூசிக் ரைட்ஸ் வாங்குறவங்க சொல்வாங்க. சிவாஜியை பொறுத்தவரை ஏ.வி.எம்.ல அவங்களே வெளியிட்டதனால நல்ல லாபம் பார்த்தாங்க. ஒரு சி.டி. விடாம எல்லாத்தையும் பிசினஸ் பண்ணி ஸ்டாக்சை ஜீரோ பண்ணிட்டாங்க. மிகப் பெரிய விஷயம் அது. நாங்களும் திரும்ப திரும்ப வாங்கி வந்து வாங்கி வந்து வித்துகிட்டே இருந்தோம்.

சிவாஜி மட்டுமில்லே… அவர் படம் எல்லாம் BEYOND COMPARABLE SALES தான்.

இதோ பாருங்க… இங்கேயும் இருக்கே ஒரு படம்… வாங்கி வெச்சு… படம் அவுட்டனாதும் அப்படியே நின்னு போச்சு…  ஒன்னும் வேலைக்காகலை… என்று தாம் நொந்துபோன கதை ஒன்றை சொன்னார். அவர் மட்டுமல்ல, ரிச்சி தெருவில் நிறைய பேர் நொந்த கதை அது.

பெரும்பாலான கடைக்காரர்கள் நம்மிடம் ‘படையப்பா’ படத்தின் சாதனை பற்றி சிலாகித்து பேசினார்கள். கிட்டத்தட்ட நாம் சந்தித்த அனைத்து கடைகளிலும் இதை சொன்னார்கள்.

IMG 4633 640x480  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

திரு.சந்திர சேகர் தொடர்கையில்:  “வெளியூர்ல இருந்தெல்லாம் வந்து க்யூ கட்டி நின்னு வாங்குனாங்க சார் படையப்பா கேசட்ஸை. போலீஸ் ப்ரொடெக்க்ஷன் எல்லாம் கொடுத்து தான் வெளியூருக்கு வாங்கிட்டு போறவங்களை அனுப்புவோம். பாக்ஸ் பாக்ஸா வாங்கிட்டு போவாங்க. அப்போல்லாம் இப்போ மாதிரி FM சேனல்ஸ் கிடயாது. ஆன்லைன்ல பாட்டு கேக்குற வசதி கிடையாது.”

“இப்போல்லாம் இன்டர்நெட் டவுன்லோட் வந்ததுலேயிருந்து ஆடியோ பிசினசே கேள்வி குறியாயிருச்சு. ஏகப்பட்ட வெப்சைட்ஸ் வேற அப்படியே சாங்க்சை எடுத்து போட்டுடுறாங்க. FM சேனல்ஸ் வேற 24 மணிநேரமும் பாட்டு போட்டுடுறாங்க. அதுவும் கிட்டத்தட்ட பத்து பன்னெண்டு stations  இருக்கு. பாட்டு ரிலீஸ் அன்னிக்கே FM ல வருது. இதுல நாங்க எங்கே சி.டி. விக்கிறது?

ஆனா இது எல்லாத்தையும் மீறி சி.டி. விக்குது, நாங்களும் லாட் லாட்டா வாங்குறோம், பாட்டு வர்றதுக்கு முன்னாடியே நிறைய புக்கிங் நடக்குதுன்னா – அது சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருத்தருக்கு தான். அவர் ஆடியோ ரிலீசாகுற அன்னிக்கு ரேடியோ மார்கெட்டே திருவிழா மாதிரி இருக்கும். அதுபோலல்லாம் யாருக்கும் வராது. எல்லோரும் அவங்க கடைங்களுக்கு அந்த டயத்துல மட்டும் வேலை செய்ய கூட ஆளுங்களை வெச்சிக்குவோம். ஆடியோ வரலாற்றுல அவர் படங்களுக்கு மட்டும் எப்போதும் தனி இடம் – உயர்ந்த இடம் உண்டு. அவர் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.

நாம் மேற்படி கடைகளில் போட்டோ எடுக்கும்போதே, பலர் வந்து விசாரித்த வண்ணமிருந்தனர்.

IMG 4618 640x480  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!

நாம் அடித்த ரவுண்ட்சில் கவனித்த சில சுவையான விஷயங்கள் கவனிக்க முடிந்தது:

1) எந்திரன் ஆடியோ சி.டி. 31 ஆம் தேதி காலையே கிடைக்கும் என பெரும்பாலான கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
2) இரண்டொரு நாளில் மேலும் சில எந்திரன் போஸ்டர் டிசைன்கள் வரவிருக்கின்றன.
3) எந்திரனின் ஆடியோ விற்பனை குறித்து விளம்பரம் வந்தால் ENQUIRY பன்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
4) புதிய தலைமுறை ஹீரோக்களில் ஹாட் ஹீரோ கார்த்தி & தனுஷ்  தான்.
5) என்ன தான் இன்டர்நெட், FM என்று வந்தாலும் சி.டி. வாங்குவதற்க்கென ஒரு பிரிவினர் இருக்கிறார்கள்.
6) சூப்பர் ஸ்டாரின் படங்களின் ஆடியோ விற்பனை மற்ற படங்களை விட பன்மடங்கு அதிகம். ஒப்பிட முடியாதது.
7) சில படங்களின் ஆடியோ சி.டி. விற்பனை சில கடைகளில் சிங்கிள் டிஜிட் விற்பனையை கூட தாண்டவில்லை.
icon cool  “எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்! சில படங்களின் பாடல்கள் லேட் பிக்கப் ஆகி, படம் ரிலீசாகி ஹிட்டான பிறகு பிறகு நன்கு விற்கும். (உ.ம்: சுப்ரமணியபுரம், யாரடி நீ மோகினி)
9) எந்திரனை பொறுத்தவரை இது வரை வெளியான அனைத்து ஆடியோ சாதனைகளையும் முறியடிக்கும் என்று ரேடியோ மார்க்கெட் நம்புகிறது.

OnlySuperstar.com in twitter

Friends, as our next phase of improvement , OnlySuperstar.com steps into twitter.

Follow us on twitter.com/thalaivarfans for flash updates & tweets on thalaivar and our articles.

———————————————————————-

OnlySuperstar.com in facebook

Join us with facebook

http://www.facebook.com/pages/OnlySuperStar-Fans/284274509690

[END]

Share and Enjoy:
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
You can leave a response, or trackback from your own site.

75 Responses to ““எந்திரன் ஆடியோ சாதனை படைக்கும்!” – ரிச்சி தெரு டீலர்கள் நம்பிக்கை – ஒரு நேரடி ரிப்போர்ட்!”

  1. Sathiya Sathiya says:

    Nice job compiling this Sundar. It is apparent that a tremendous effort has gone in to compile the same. Awesome. Thanks.

  2. GokulDass GokulDass says:

    சூப்பர் அப்டேட் வாழ்துக்கள்

  3. M. Predeep M. Predeep says:

    சூப்பர் சூப்பர் சூப்பர்… Its true….

  4. Kamesh (Botswana) Kamesh (Botswana) says:

    Sundar

    Nice post. Happy to hear about the shopowners confidence. SS Movies turns new leaves for them in their profession. Hope this catches up with the Entire Nation with Hindi / Telugu Versions. Let them make money.( In todays’ world of piracy SS Music releases alone brings back the smile in their faces) A new point tobe noted it creates employement for some during the initial days too… what a man. Let Enthiran Create all the records which are to be unbreakable in the near future.

    When I talk piracy I too download songs (only songs) for I do not have the facility to buy it even though I buy it will not reach me until a fortnight so please guys forgive me.

    Kamesh
    Botswana

  5. Antony prabu Antony prabu says:

    It is really amazing news…we no need any media to get the news about our SS as you are with us,thanks a lot to u ji…..
    புதிய தலைமுறை ஹீரோக்களில் ஹாட் ஹீரோ கார்த்தி & தனுஷ் தான். it is correct ji……“
    இப்போல்லாம் இன்டர்நெட் டவுன்லோட் வந்ததுலேயிருந்து ஆடியோ பிசினசே கேள்வி குறியாயிருச்சு. ஏகப்பட்ட வெப்சைட்ஸ் வேற அப்படியே சாங்க்சை எடுத்து போட்டுடுறாங்க. FM சேனல்ஸ் வேற 24 மணிநேரமும் பாட்டு போட்டுடுறாங்க. அதுவும் கிட்டத்தட்ட பத்து பன்னெண்டு stations இருக்கு. பாட்டு ரிலீஸ் அன்னிக்கே FM ல வருது. இதுல நாங்க எங்கே சி.டி. விக்கிறது?

    ஆனா இது எல்லாத்தையும் மீறி சி.டி. விக்குது, நாங்களும் லாட் லாட்டா வாங்குறோம், பாட்டு வர்றதுக்கு முன்னாடியே நிறைய புக்கிங் நடக்குதுன்னா – அது சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருத்தருக்கு தான். அவர் ஆடியோ ரிலீசாகுற அன்னிக்கு ரேடியோ மார்கெட்டே திருவிழா மாதிரி இருக்கும். அதுபோலல்லாம் யாருக்கும் வராது. எல்லோரும் அவங்க கடைங்களுக்கு அந்த டயத்துல மட்டும் வேலை செய்ய கூட ஆளுங்களை வெச்சிக்குவோம். ஆடியோ வரலாற்றுல அவர் படங்களுக்கு மட்டும் எப்போதும் தனி இடம் – உயர்ந்த இடம் உண்டு. அவர் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.
    aani adicha mathiri sonnenga…
    “மத்தது 100 போச்சுனா ரஜினி படம் 300 இல்ல 400 போகும். அவர் படமெல்லாம் கேசட்/சி.டி. வந்தா பேலன்ஸ் ஒன்னு கூட தங்காது. முழுசா வித்துடுவோம். ஸ்டாக் ஃ ஃபுல்லா காலியாகி, ரெண்டாவது, மூணாவது லாட் வரைக்கும் ஆர்டர் செய்வோம்”.

    சிவாஜிலாம் பார்த்தீங்கன்னா கடைசி வரைக்கும் போய்கிட்டே இருந்துச்சு. படம் ரிலீசான பிறகு கூட சி.டி. வித்துகிட்டே இருந்தச்சு
    ennatha solrathu,en rasikarkalai pathi naan solrathu nalla irukathu entru thalaivar sonnar….en thalaivarai pathi naan solrathu mattumilai intha bussiness panra makkale solrathu santhosama irukku..atha engalukku eduthu sonna ji kku nantrikal pala….

  6. sriram sriram says:

    ஸ்டைலேயும் சரி வசூலையும் சரி தலைவருக்கு நிகர் அவரே ,அவர் ஒரு சினிமா சக்கரவர்த்தி !

  7. Lings Lings says:

    சுந்தர் ஜி,

    Grt work sundar ji…..

  8. R.Gopi R.Gopi says:

    சுந்தர் ………….

    கலக்கல் கவரேஜ்….

    நேத்திக்கு தான் நீங்க ரிச்சி தெரு போறத பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் , நண்பர் ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தேன்…

    பட்…. நீங்க படு ஃபாஸ்ட்… நான் சொன்னது, நீங்க ஆடியோ ரிலீஸப்போ, சிவாஜிக்கு பண்ணின மாதிரி கவரேஜ்…. ஆனா, நீங்க அதை விட படு ஃபாஸ்டா, ஆடியோ ரிலீஸுக்கு முன்னாடியே ஒரு கவரேஜ் போட்டு அசத்திட்டீங்க…

    பாஸ் ஈஸ் ஆல்வேஸ் பாஸ் & மாஸ்ஸ்ஸ்….

    நோ டவுட் ஜி….

  9. selva selva says:

    chanceless job sundar anna….Hatts off

  10. mrs.krishnan mrs.krishnan says:

    Suuuppper anna. Idhukudan neenga venumkaradhu. Ungalal mattume idhu saadhiyam.

    Article padika padika ennala excitementa control pannave mudila. Ippavum, Eapavum thalaivardhan top. Avar sambalatha pathi silar vimarsipadu undu. Aana avaroda oru padam vandha adhanala vazhpavargal kanaku parthadan therium. Itthanai per vazhthum avarai innum valamudanum nalamudanum vaazha vaikum.

  11. thiru thiru says:

    நீங்கள் செய்யும் வேலை எங்களை மகிழ்விக்கிறது. பதிலுக்கு நான் சொல்வதெல்லாம் சின்ன நன்றி தான். அவர் புகழுரைகளை பிறர் சொல்ல கேட்பதே நம் காதுகளுக்கு பேரின்பமாய் இருக்கும். அந்த இன்பம் எனக்கு இப்போது இருக்கிறது.

  12. yesosuresh yesosuresh says:

    sundar ji..

    kalakal post. excellent compilation.. thank you very much for your effort.

  13. ELANGO ELANGO says:

    நன்றி சுந்தர் சார் .. ரிச்சி ஸ்ட்ரீட் டூர் சூப்பர்..சனி கிழமை காலைல திருவிழா தான்…

  14. Prasad Prasad says:

    Sundar,
    Fantastic coverage…Really superb. Is it going to be available on the stores from 31st or 1st?

  15. சுந்தர்ஜி..!
    ஒரு நாளைக்கு குறைந்தது 20 தடவையாவது உங்க சைட் வந்துடுறேன்..!! அதிலும்..நான் சிஸ்டம் use பண்ணும்போது வேற எந்த வேலைல இருந்தாலும், 10 நிமிசத்துக்கு ஒரு தடவையாவது நமது தளத்துக்கு வந்துடறேன்..!!(so இந்த கணக்கு 50 ,100 clicks மேல போகும்.!) எல்லாமே usefull .! இன்னிக்கு மட்டுமே 3 article படிச்சுட்டேன் !! ஒவ்வொரு விசிட்டுக்கும் ஒவ்வொரு gr8 article .! உங்களது உழைப்பு சாதாரணமானது அல்ல..உங்கள் ritchie street விசிட் என்னை சென்னை கொண்டு வந்து விட்டது..!2000 -ல் அங்கு நிறைய தடவை சுற்றி இருக்கேன்..! மலரும் நினைவுகள் !!!
    உங்க article படிக்கும்போது எனக்கும் அங்கு இருந்த feeling இருந்தது.thnx 4 da gr8 article ..

  16. R O S H A N R O S H A N says:

    superb coverage ji…..i was very worried about the promotions of sun pics which is a big let down for think music….but ur coverage has given some hope…..

  17. cd கடைல எடுத்த போட்டோக்களில் நீங்களும் நின்று ஒரு போட்டோ எடுத்து இருக்கலாமே சுந்தர்ஜி..? நாங்களும் உங்களை பார்த்து இருப்போமில்லையா?

  18. கிரி கிரி says:

    சுந்தர் செம ரிப்போர்ட் :-)

  19. devraj devraj says:

    Fantastic coverage. Thanks aTon.
    cheers
    dev,

  20. DARWIN DARWIN says:

    thank you sundar sir good updates… naalu aaga aaga thrillinga irukuthu.

  21. சுந்தர்ஜி,

    நேத்து சச்சின் டெண்டுல்கர் 48 ஆவது செஞ்சுரி அடிச்சார். எப்படி? இந்திய டீம் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போது ஒரு பக்கம் தன் விக்கெட்டையும் பறிகொடுக்காமல் மற்றொரு பக்கம் டீமுக்கு ரன்களும் குவித்து இந்தியா follow-on செய்வதை தவிர்க்கவேண்டிய மிகவும் pressure மற்றும் பொறுப்புடன் ஆட வேண்டிய தருணத்தில், மிகவும் பிரமாதமாக ஆடி இந்தியாவை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார்.

    அதே போன்று, இன்று, ரஜினி ரசிகர்களுக்கு நீங்கள் சச்சின் டெண்டுல்கர் போன்றே, சன் மற்றும் ஷங்கரின் எந்திரன் படத்தின் “சத்தமில்லா விளம்பரத்தினால்” சோர்வுற்று இருந்த பல்லாயிரக்கணக்கான என்போன்ற ரசிகர்களை, உங்களுக்கு இருக்கும் மனச்சோர்வை வெளிக்காட்டிகொள்ளாமல், ஒன்றன்பின் ஒன்றாக எந்திரன் படத்தை பற்றிய செய்திகளை மற்றும் படங்களை தந்து கொண்டே இருந்து, இப்போது ரிச்சி தெருவுக்கே சென்று இந்த மாதிரி ஒரு மிக உயர்ந்த தரத்தில் ஆடியோ கடைக்காரர்களை பேட்டி கண்டு, மிகவும் பிரமாதமான ஒரு செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்களே, இது டெண்டுல்கரின் செஞ்சுரிக்கு சமம்.

    Hats Off to You Boss. With this fantastic post, YOU ARE BACK IN FORM. This is the SundarJi I have been familiar with since the days of மி membership in Rajinifans website. SundarJi, We want more such reports from you often. I am sure you are struggling for time management between your personal, official & passionate lives. But, at least till Enthiran’s release, request you to give us Richie Street kind of posts once in a while.

    BRILLIANT. I have no other words to describe.

    அன்புடன் அருண்

  22. dr suneel dr suneel says:

    ஜி , அருமையான பதிவு , நான் மீண்டும் மீண்டும் இதை தான் சொல்லுவேன் , எவளவோ பேரு தலைவரை பத்தி எழுதுகிறார்கள் அனால் உங்கள் எழுத்தில் இருக்கும் சிறப்பம்சம் இல்லை ..அது என்னவென்றால் .தலைவரை ஒரு ரசிகனின் பார்வையில் எப்போதுமே நிறுத்துவீர்கள் ..ஒரு ரசிகனுக்கு எத்தகைய பேச்சு , காட்சி மகிழ்ச்சி அளிக்குமோ அதை கொடுப்பீர்கள் . மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் . நிச்சயம் எந்திரன் இமாலய வெற்றிகளை குவிப்பார் .(உங்கள் எழுத்து அளவுக்கு என்னால் மொழி பெயர்க்க முடிமா என்று தெரியவில்லை முயற்சிக்கிறேன் )

  23. murugan murugan says:

    சுந்தர் எப்படி இப்படியெல்லாம் பின்றீங்க – உங்களோட இந்த article படிச்சதுக்கப்பரம் தான் கொஞ்சம் relaxaa பீல் பண்றேன் – நண்பர்கள் டிவி யில் தலைவரின் விளம்பரம் வந்தவுடன் உடனே பகிர்ந்துகொள்ளவும் – கண்ட்ரோல் ………

  24. napoleon napoleon says:

    திரு.அருணாசலம் அவர்களின் கமெண்ட் சூப்பராக இருக்கிறது. என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதி இருக்கிறார். ரொம்ப நன்றி திரு.அருணாசலம் அவர்களே. சுந்தர்ஜி! எங்களுக்காக நீங்கள் ரொம்பவும் உழைக்கிறீர்கள். Hats off to you .

  25. dr suneel dr suneel says:

    enthiran will create history- a live report from the audio dealers of richie street
    translation
    as soon as i recieved the information that enthiran’s audio posters are out i planned to visit richie street to take the photographs of poster and also planned for interviews with leading dealers in the richie street.unfortunately the time i reached was arround 7-7.30 , it is very difficult to take photographs in this time because of the reflection du to flash, anyways with confidence entered the street for the infos.
    inside the street, the first shop we entered is SUPER TRACKS , a key audio delaer in the area, lot of people curiously watched the posters and there were enquiries too.
    i spoke with mr.kishore , the owner of the shop. he said after pasting the posters they are getting lot of enquiries and with paper ads the response will increase .
    q;genrally , for which films there will be great sales?
    always our thalaivar’s films had agreat response, apart from those periodically some hits will also have a decent sale e.g subramaniapuram, vinnai thaandi varuvaya
    q:what are the recent hits?
    madarasa patinam, baiya, nan magaan alla
    q:which is the last film which recorded highest sales
    shivaji
    q:just for a comparison, what is the difference between thalaivars films audio sales and other actors?
    there cant be any comparison, since you ask i tell, thalaivars films sales will be atleast 3 times more than others.
    q:what do u think of enthiran’s audio response?
    definitly will break the sivaji’s records for sure.
    our next destination is new disc world a small shop opp to raheja complex..
    we spoke to mr.abdul rahman there
    q:when will we get enthiran audio?
    saturday morning
    q:is there any response on seeing the posters?
    oh..i am fed up answering them..so much of queries..
    q:what are the films having good response in your shop currently?
    bhaiyaa,singam,madarasa patinam,angadi theru, vtv
    q:which is the film which had record sales in your shop?
    sivaji and chandramuki
    q:comparison between other films and thalaivars films in audio sales?
    (a customer gazed angrily there itself plz dont compare any other films with his, his films will be moving till last date , but others are not like that)
    abdul rahman continued, if other films sales goes up to 100 thalaivars film will go up to 300 400, we will buy 2 or 3 lots and there wont be a single cd in stock,for sivaji there were sales even after release of the film too.
    q:how about enthiran
    that will go definitly well, also arr s music is there, we are all awaiting interstingly.

    next we met mesi electronics owner mr.chandrasekar, who enthisastically shared a lot of things with us.
    q:sir how is the enquiry for enthiran audio?
    lot of response, still it should take 2 more days.
    q:how do you think enthiran will fare?
    always top, for his films only without even listening to the songs we will order the lot,with so much of confidence, for other films only afer song release we order.
    q:how will thalaivars film fare? could you share on the trend?
    for his films , we will be running out of stock, for sivaji there was not even a single cd remaining.secondly for his films, we have cash and carry business only, first we have to pay the cash then only we will be allowed to take the stock, for sivaji avm itself released the audio hence they had a great profit, they zeroed the stock without any cd remaining , thats a big achievement, we all repeatedly bought and sold.not just sivaji all his films re having beyond comparable sales.see this film which i bought, after films failure i am not able to move this, he told with frustration, sevral dealers also expressed the same sentiments.most people we met spoke about padaiyappa’s record.mr chandra sekhar also spoke about the same,”even people from other places stood in que to get padaiyappa cd, infact we gave police protection for them, bought in bundles. during those periods there wont be online availability of songs, fm channels were not there,but now a days ebtire songs can be downloaded from internet, also 10-12 fm stations telecasting the songs repeatedly on the release date, so these are affecting audio sales greatly.but inspite of these hurdles, if still there is a great market, and we order audio in lots that too before the release it is only for thalaivar, no other will get such a response, on that day the radio market will have a total festive mood, infact some appoint men to work during such times exclusively for thalaivars films.he has a great history in audio field and no one can ever shake his fort.

  26. dr suneel dr suneel says:

    some observations during my visit
    1.most of the store keepers were confident that audio will be available from 31st morning itself.
    2.in coming days new enthiran posters are expected
    3.the enquiries on audio of enthiran will increase many folds after add about audio release
    4.in gen next- hot heroes are dhanush and kaarthi
    5.even though internet, fm is there , there are still people who are ready to buy cds
    6,the audio sales of thalaivars films exceeds many folda and cant be compared to any others film.
    7.for some films- the audio response is so poor not even crossed single digit in sales.
    8.some films have late pick up , after the audio release and become a great hit- e.g subramaniapuram
    9.all the dealers are hope ful that enthiran will re write the record of sivaji

  27. M. Predeep M. Predeep says:

    I am a big fan of Super star and onlysuperstar.com… Everyday I am searching this website because recent news about Rajinikanth is updated in this webiste. I really congrates and thank to the concern persons of onlysuperstar.com…

  28. kppradeep kppradeep says:

    The person who breathes and thinks about rajini sir all the time only can give such a fantastic report and rest what i had to say Arun sir had already said. kudos to you for your wonderful work

  29. v.sekar v.sekar says:

    ஒவ்வொரு முறையும் உங்கள் செய்தி தரும் வேகம் பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த செய்தி நிறுவனங்கள் கூட இந்த அளவிற்கு செய்திகள் தருமா என்பது சந்தேகம்தான். தலைவர் மீது உங்களுக்கு இருக்கும் பற்று இந்த அளவு உத்வேகத்தை தருகிறது என்று நினைக்கிறேன்.

  30. ganesh ganesh says:

    hi ji… thanks a lot……

    thikn u have taken a lot of strain and pain to carry this news…
    we wil always be indebted to u and ur site…..

  31. mrs.krishnan mrs.krishnan says:

    onlysuperstar.com paarpadhu oru anichai seyalaga maari vitadhu. Thavirkave mudiadhu.

  32. Prad - Syd Prad - Syd says:

    சுந்தர்ஜி,
    Fantastic news. Hats off to the way you had gathered this news. Nice to read and by your posts, you have increased the tempo of Enthiran.

    Best wishes to our Thalaivar & the Enthiran team for the Audio launch

    Cheers
    Prad

  33. Satish Satish says:

    Hi Sundar
    I’m thinking that Sun will market this movie only as a Tamil/Telugu language movie and not as a Hindi movie. Except for movies like Roja, we haven’t seen many movies that was accepted by both Hindi and south audience together (in spite of dubbing). There are lot of cultural differences. Given this fact, Sun might have strategized to focus on tamil/south indian diaspora. Further Hindi media might pull this movie down like they did for Raavan. SRK has a strong backing within Northern media.

    Around 2 Million tamils live in Malaysia (next only to Sri Lanka) per Wikipedia ( http://en.wikipedia.org/wiki/Tamil_diaspora )
    Further, Malaysia is near to other asian countries like Japan/Singapore/China/Thailand. So, Malaysia is an ideal launch pad at an international level. Assuming Japanese and Chinese will also like Enthiran music, we can easily assume Enthiran audio CD/internet purchase will be done by at least 10% of the above population. Assuming the cost is around USD 5 (which is too low), we are talking about at least USD 1 Million or Rs. 4.6 crore from the audio sales in that region alone. This then leaves them to sell another 5 lakhs CDs in India or other regions to make another 5 crores, which total Rs. 10 crores from audio sales (conservative estimate).

    Sun being a media empire, will run promotion after the Malaysian launch. The show itself will be telecasted multiple times on various south indian media. There is an adage “A picture is worth a thousand words!” – so far none of Rajini sir movie’s audio release had even had a function. There were no video associated with his previous films. Now, think of the audio launch function video (including interviews) as the promotion vehicle for Sun from now on until the movie release date. THIS IS POWERFUL MARKETING TOOL. Given these facts, Sun might be underplaying now…

    PS: I’m reposting this since the earlier comment was truncated and I believe it is yet to be approved by you.

  34. Satish Satish says:

    Hi Sundar
    Did you notice that you are SUPERFAST than any other internet website or magazines that is carrying details on Enthiran!! Kudos!! You rock!! btw whenever I google (news section) Enthiran or Endhiran, why is your website not coming up on the top of the search list? Did you investigate it. Some junk websites are appearing on top of the list, which generally carry Enthiran news only many days after it is published in your blog.

  35. kalidass kalidass says:

    நன்றி சுந்தர். இதைத்தவிர வேறேதும் சொல்ல தெரியல. படையப்பா காசெட், அதிகாலையில் சிவகாசியில் ( என்னுடைய ஊர் 13 கிமீ தள்ளி உள்ள கிராமம் )போய் வாங்கினது இன்னும் நினைவிருக்கு.

  36. ராஜகோபாலன் ராஜகோபாலன் says:

    Fantastic Work Sundar. தலைவர் style ல சொல்லனும்னா hats-off.

    குறிப்பு : அந்த விக்காத படத்தின் CD … விக்காத so called நாயகன் நீங்க சொல்லித்தான் தெரியனுமா ? :) :)

  37. v.sekar v.sekar says:

    பாராட்டுகளை பெற்றுக் கொள்வதிலும் அளவுகோல் வைத்திருக்கறீர்கள் என்று புரிகிறது. அதுவே உங்கள் கூடுதல் தகுதி.

    உங்கள் உழைப்புக்கு மறுபடியும் என் வாழ்த்துக்கள்.

  38. ELANGO ELANGO says:

    Sundar Sir, Just heard a new song..new promo in Suryan fm..they also said like they are airing all songs tomorrow exclusive on Suryan Fm..Could you confirm..if so also the timing please…Thanks..

  39. ELANGO ELANGO says:

    Yes..Heard it again..They say tomorrow.no time mentioned..looks like we need to listen 24 hrs …!!

  40. friend_star07 friend_star07 says:

    Listen here Suryan FM’s 3rd ENDHIRAN Promo with FEW MORE LINES of Hariharan’s Yenthraaa Song…
    http://www.entertonement.com/clips/ynnbtrjhvc–Endhiran-3rd-Promo-in-Suryan-FM
    They are telling can enjoy Endhiran songs tomorrow in Suryan FM only…
    Is it true…

  41. friend_star07 friend_star07 says:

    Lines from that song…
    Yendiraa…
    Ivan peru sonnathum perumai sonnathum kadal kadal kai thattum…
    Ivan ulagam thaandiya uyaram kondathu….

  42. ROBOsathya ROBOsathya says:

    // சில படங்களின் ஆடியோ சி.டி. விற்பனை சில கடைகளில் சிங்கிள் டிஜிட் விற்பனையை கூட தாண்டவில்லை.//

    Paavam Andha Padatha PUTTU pannitaanga sir. hope u understood…

    btw., neenga ivlo kashtapattu news collect pannirkeenga. oru oru photo vum super super super…

    hats off sir

  43. ஆனந்த் ஆனந்த் says:

    நானும் உங்கள் சைட்-ஐ/ப்ளாக்-ஐ கடந்த சில வருடங்களாக படித்து வருகிறேன். உங்கள் consistent உழைப்பு என்னை ஆச்சர்ய படுத்துகிறது. நாங்களும் தலைவரின் சசிகர்கள்தான் அனால் இந்த அளவிற்கு உழைக்க உண்மையிலேயே ஒரு dedication வேண்டும். எல்லாவற்றையும் மீறி தலைவர் மீது அளவு கடந்த நேசம் வேண்டும்.

    வாழ்துக்கள்!!!!

    ——————————————–
    பாஸ் நான் ஒரு சாதாரண ரசிகன். பெரிய வார்த்தைகள் வேண்டாம்.
    என்னை ஒரு சிறந்த ரசிகன் என்று நான் என்றைக்குமே நினைத்துகொண்டதில்லை.
    என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், மதிப்பிற்கும் என் பணிவான நன்றி.
    - சுந்தர்

  44. Balasubramanian Balasubramanian says:

    Tentative Track List

    Naan Kandadhu… Singers : S.P.Balasubramanyam Backing Vocals : A.R.Rahman
    Kilimanjaro… Singers: Javed Ali, Sujatha
    Irumbile Oru… Singers: A.R.Rahman, Madhushree
    Kadal Anukkal… Singers: Karthik, Shreya Ghoshal Backing Vocals :Tanvi Shah
    Arimaa Oru Arimaa… Singers: Madhumitha, Kunal Ganjawala, Bhagyaraj
    Ennai Neeye…. Singers: Andrea Jeremiah
    O Enthiraaa…..Singers : Hariharan, Reena Bhardwaj, Yogi B
    Robot Theme… Instrumental

  45. Leo Leo says:

    Given Informations are rocking. இந்த பதிவை படிக்கும் போது நீங்கள் தலைவரை எந்த அளவு நேசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    குசேலன் படத்தில் சொல்லற மாதிரி “தலைவர் படம் வருதுன்னா அது திருவிழா தான். அந்த திருவிழாக்கு முன் நடக்கும் நிகழ்வுகளை மிக மிக வேகமாக எங்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இருந்தாலும் என் மனமார்ந்த நன்றி.

  46. Prasath Prasath says:

    Thanks for your great article….No words to describe…you have shown the “MadarasaPattinam” before our eyes….as usual you are the best back from the Rajinfans days…..Can you please tell.. how to get endhiran audio tamil cd in hyderabad on saturday…..plssssssssssssssssssssssssss

    —————————————
    Sure. Will tell tomorrow.
    - Sundar

  47. RaJni.AnsAri RaJni.AnsAri says:

    Enthiran pathi Ovvoru muraiyum pudhu pudhu seidhigal ketkum podhu “idhayam vegama thudikku”
    “moolaiku oru vidhamana puthunarchi kedaikudhu”
    “adikkadi peru moochi vida vendi iruku”….
    Idhellam thalaivarukagavum, avar padathukagavum mattum than. . . Enna nanbargale naan soldradhu right dhane. . ? Sundhar ungala madhiri yarum eppadi information kudukka mudiyadhu..! Thanx ji.

  48. ELANGO ELANGO says:

    Friends Audio Release VIP Invitation card Check http://bit.ly/bl1srI

  49. ELANGO ELANGO says:

    AR Rahman releases Enthiran Track List in his site Check http://bit.ly/9qCgz9
    Sundar sir sorry for posting back to back !!

    ——————————–
    No probs. I don’t have any problems since it is official.
    - Sundar

  50. rajini ramachandran rajini ramachandran says:

    கலக்கிட்டீங்க தலைவா , சென்னையில் இருந்திருந்தால் நான் தினமும் ரிச்சி தெருவுக்கு போய் பார்த்திருப்பேன், பெங்களூரில் இருப்பதால் மனம் துடித்துக்கொண்டே இருந்தது. தங்கள் பதிவைப்பார்த்தபின் மன நிறைவு அடைந்தேன். சூப்பர் சூப்பர் சூப்பர். பாராட்டுக்கள். நன்றி.
    வாழ்க தலைவர் சூப்பர் ஸ்டார், வெல்க எந்திரன்.

  51. venkatesan venkatesan says:

    no chance sundar anna ur really great by diehard தலைவர் fan

  52. vasi.rajni vasi.rajni says:

    எந்திரனின் பாடல் வெளியித்து விழ இனிதே நடைபெற இறைவனை பிரதிப்போம். சுந்தர்ஜி எந்திரனின் promition குறித்து தங்கள் செயல்படும் விதம் எங்களை பிரமிக்க வைக்கிறது. ஆடியோ விற்பனயலர்களின் தகவல்கள் சற்று இதமாக உள்ளது. சுந்தர்ஜி நாளை எந்திரனின் படங்களை நிச்சயம் upload செய்வீர்கள் அதற்க்கு இப்பொழுதே விண்ணப்பம் வைக்கின்றேன். நன்றி சுந்தர்ஜி

    rajni will rule tamil nadu

  53. தலைவர் ஆடியோ ரிலீஸ் லைவ் (31ST OF THIS MONTH AT 7.30 p.m)மலேசியாவில் மட்டுமே ஒளிபரப்பப்படும். தமிழ்நாட்டில் AUG 15 -ல் சன்டிவியில் ஸ்பெஷல் ஆக எடிட் செய்யப்பட்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும்.(இதை நமது சைட்-ல் சுந்தர்ஜி ஏற்கனவே கணித்து சொல்லி விட்டார்கள்!)..இந்த செய்தியை ஒரு சைட்-ல் படித்தேன்.எனவே,நண்பர்களே நமது நாட்டில் லைவாக ஒளிபரப்புவார்கள் என நினைத்து மனதில் ஆசை வளர்த்து ஏமாற வேண்டாம்..
    அதுவரை தலைவரின் அதிரடி பாடல்களையாவது கேட்டு அனுபவிப்போம்! இன்னும் ரெண்டே நாளில் நமது குடும்பத்துக்கு(தலைவர் ரசிகர்கள்) பண்டிகை ஸ்டார்ட்..!

  54. Ganesh P Ganesh P says:

    Sundar,

    Excellent work..Kudos to you..

    Have your read Vairamuthu’s interview to Kumudham on how he conceived songs in Enthiran?

    ——————————————
    I saw it morning itself. But had no time except to upload shankar interview.
    Just returned from office. Doing it. Will upload shortly.
    thanks.
    - Sundar

  55. Ji I’ve no words to appreciate your passion towards thalaivar.. you’re rocking. Hats off ji!

    And Thalaivar king of all the records, always.

  56. Sakthivel Sakthivel says:

    Excellent work Sundhar.

  57. Arun Ambrose Arun Ambrose says:

    Puthiya Manidha
    Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
    Lyrics: Vairamuthu

    Kadal Anukkal
    Singers: Vijay Prakash, Shreya Ghoshal
    Lyrics: Vairamuthu

    Irumbile Oru Idhaiyam
    Singers: A. R. Rahman, Kash’n'Krissy
    Lyrics: Kaarki
    English lyrics: Kash’n'Krissy

    Chitti Dance Showcase
    Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
    Additional Arrangements and Programming: Pravin Mani

    Arima Arima
    Singers: Hariharan, Sadhana Sargam
    Additional Vocals: Benny Dayal, Naresh Iyer
    Lyrics: Vairamuthu

    Kilimanjaro
    Singers: Javed Ali, Chinmayi
    Lyrics: P. Vijay
    Additional Vocal Arrangements: Clinton Cerejo

    Boom Boom Robo Da
    Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah
    Lyrics: Kaarki

  58. Rahul Rahul says:

    Hey guys from tomorrow onwards ENDHIRAN songs ll be out in suriyan fm 93.5…. Listen to sun music they r playin a song 4 ten seconds n it was just mindblowing….

  59. kogulan kogulan says:

    இவன் பெயரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்.
    அழகே உலக அழகே இந்த எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்.
    வாவ் வாவ் என்ன அதிரடி இசையும் வரிகளும்!

  60. nw nw says:

    எந்திரன் பாடல் வெளியீட்டு விழா நுழைவுசீட்டு

    http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs220.snc4/39351_420949928362_549743362_4491566_6739188_n.jpg

    Courtesy – Joshua

    நமது மலேசிய நண்பர்கள் யாரவது தொலைகாட்சி நிகழ்ச்சியை பதிவு செய்ய முன்வந்துள்ளனரா? இப்போதைக்கு நமக்கு இந்த ஒரு வழி தான் மிஞ்சுகிறது,

  61. Manikandan Bose Manikandan Bose says:

    Thank you Sundarji…

    Happy to read your article..

  62. harisivaji harisivaji says:

    அதுவும் ஆடியோ ரிலீசுக்கு முன்னாடியோ பாட்டு எப்படி இருக்கும்னு தெரியாமலே ஆர்டர் பண்றோம்னா அது அவர் ஒருத்தரு படத்துக்கு மட்டும்தான். மத்ததுக்கெல்லாம் பாட்டு ரிலீசான பிறகு தான்.

    இதுக்கு மேல வேற என்ன வேண்டும்

  63. balaji balaji says:

    Dear Sundarji,

    Excellent job sundarji……All updates and stills are marvellous……

    Thanks,
    Balaji,
    dubai

  64. swami swami says:

    Awesome! Awesome! Awesome!

  65. suresh suresh says:

    I’m really frustrated that this is a close door event and it is seriously not fair that it has to be done such way…We will never have another opp to meet all the superstars under one roof and thanks to the organisers to make it a private event so call..We FANS are freaking disappointed with this move as only the VVIPS, stars are getting the invitation for this event. There are thousands of Rajini, Ash, ARR and Shankar fan in Malaysia and this is certainly NOT a way to treat ur fans! No point of having an audio launch here in Malaysia when it is not open for the public..!

  66. mrs.krishnan mrs.krishnan says:

    Good morning everybody.
    Eallarum dinakaran vangiacha…?

  67. jay jay says:

    Great work , Sundar. Hats off.

  68. D.R. Prabhu D.R. Prabhu says:

    No words to appreciate your hard work and sincerity for thalaivar. We will support you in all possible ways.

  69. Sathiya Sathiya says:

    Folks,
    Sun Pictures have invested a lot of money on this project (highest for an Indian movie as you all know. We are talking of abour 20- 35 Million $ which is much higher that even films from the west like Slumdog Millionaire which was made at only 15 Million $) and they are are looking at multilple channels to recoup the costs and make a profit. Print media is one which explains why there are slowly releasing the stills in Dinakaran that they own to increase circulation while concurrently serving as a promotional activity. The audio release function is not only a promotional activity but a way to generate content that they can air on their TV channels for premium advertising. That’s why they are doing it behind closed doors. This a smart and novel way of marketing not only the movie but also associated brand and content. Brand Rajini combined with AR Rahman, Aiswarya Rai and Shankar is pretty powerful and Kalanidi Maran and Sun pictures are capitalizing on the same.

  70. Ashwin Ashwin says:

    Excellent work Sundar. Thanks for spending ur valuable time for us again.

  71. thalaivar always rockzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz.thalaivar name equals only 4r rajini.none other man in the world

  72. k s amarnath k s amarnath says:

    sir amazing report I can’t wait for a second to listen to the songs my god thalaivar is unshakeable even in audio history coooooool

  73. RAMS RAMS says:

    //பாஸ் நான் ஒரு சாதாரண ரசிகன். பெரிய வார்த்தைகள் வேண்டாம்.
    என்னை ஒரு சிறந்த ரசிகன் என்று நான் என்றைக்குமே நினைத்துகொண்டதில்லை.
    என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், மதிப்பிற்கும் என் பணிவான நன்றி.//

    சூப்பர் – சுந்தர்

  74. tveraajesh tveraajesh says:

    சுந்தர் உங்கள் விடாமுயற்சியை பாராட்டாமல் இருக்கமுடியாது. நிச்சயம் உங்களை ரஜினி ரசிகர்களின் அம்பாசிடோர் என்றே சொல்லலாம். நான் ரிச்சி தெருவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டிருகிறது.

    நன்றி

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)
Lingual Support by India Fascinates